5. ரம்யா செல்லம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

5. ரம்யா சந்திரன்..

   தன்னையும் அறியாமல் ஏதோ ஒரு உந்து சக்தி தன்னை இங்கு அழைத்து வந்து விட்டதைப் போல் சூழ்நிலை மறந்து, சுற்றம் மறந்து, தன் வேலையை அவளைத் தேடி கடற்கரை வந்த சேர்ந்து விட்டான். வழக்கம் போல் தன் விண்ணுலகில் ஒய்யாரமாய் துயில் களைந்தெழுந்த வெண்மதியவள், தன் நட்சத்திர பரிபாளங்களோடு இந்த பெண்நிலவின் அழகை சிறு பொறாமையோடு பார்த்திருக்க,  கடல்தேவதையோ தன்னை விட அதிக அழகில் மிளிர்ந்தவளைக் கண்டு தன் குளிர்காற்றை தூதனுப்பி அவள் உள்ளத்தின் ரகசிய நாயகனை அழைத்து வந்து விட்டாள். அப்போதேனும் அவளை அவன் அழைத்து செல்வானோ என்ற நப்பாசையில்..

இங்கே அவனது டீமில் இருந்த காவலாளி யாருக்கோ செய்தி அனுப்பிவிட்டு பவ்யமாக நின்றிருக்க, இவனோ தன்னையுமறியாமல் மிருணாளினியைத் தொட தன் கரங்களை நீட்டி இருந்தான். ஆனால் முன் பின் தெரியாத ஒரு பெண்ணை தொட நினைக்கிறோமே என்ற எண்ணம் மேலிட, நீட்டிய தன் கரங்களை சட்டென்று பின்னிழுத்துக் கொண்டவன் தன்னைத்தானே, மனதிற்குள் திட்டிக் கொண்டு அங்கிருந்து நகர முற்பட்டான்.
அவ்வேளையில் தன் பின்னே எவரோ வந்து நிற்பது போலவும், தன்னை அறியாமல் அவள் மனம் எதையோ அவளுக்கு உணர்த்த சட்டென்று பின்னால் திரும்பி இருந்தாள் மிருணாளினி. ஆனால் அவள் திரும்பிய அதேவேளையில் தன் முதுகுப்பக்கம் மட்டும் அவளுக்கு தெரியும்படி திரும்பியிருந்த மகேந்திர வர்மன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்திருந்தான்.  அவனது உருவம் நேற்றிரவு அவளது உறக்கத்தை கெடுத்தவனது பிம்ப அம்சத்தை ஒத்திருக்க அவன் பின்னால் இவளும் நடக்க ஆரம்பித்தாள் அதை அவன் கவனிக்கவில்லை.

நேற்று போல் இன்றும் கடற்கரை சாலையில் அனைத்து இடங்களையும் சோதித்து முடித்தவன் எதுவும் வித்யாசமாக தென்படுகிறதா என்று பார்த்து விட்டு நகர்கையில் நேற்று அந்த குழந்தையைக் காப்பாற்றிய இடம் வந்தது. தான் அந்த குழந்தையை காப்பாற்றியதை விட, அழகுப் பெண்ணொருத்தி அக்குழந்தையை சமாதானப்படுத்திய காட்சிகள் தான் பிம்ப நிகழ்வுகளாய் அவனுக்கு நினைவு வர மீண்டும் அவளை பார்க்கும் ஆவலும், உந்துதலும் அவன் உள்ளத்தில் அதிகரித்தது. சட்டென்று அவளைப் பார்த்து விடும் ஆவலில் அவன் திரும்பிப் பார்த்த வேளையில் கிட்டத்தட்ட அவனை இடிப்பது போல் வந்து நின்றிருந்தாள் மிருணாளினி.
அதை எதிர்பார்த்திராதவனாய் மகேந்திர வர்மன் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகுகையில், அவளோ கீழே கிடந்த ஏதோ ஒன்றை குனிந்து எடுத்தவள், “இது உங்களோடதா சார்?” என்று கேட்டிருந்தாள்.

அவள் கையிலிருந்ததை கூர்ந்து பார்த்தவன் தங்கச் சங்கிலி போல் இருக்கவும், “இது என்னோடது இல்ல மேடம், ஆனா இங்க வந்தவங்க யாராவது மிஸ் பண்ணிட்டு போயிருப்பாங்க. இதை  குடுங்க நான் ஸ்டேஷன் கொண்டுட்டு போறேன், உரிமைப்பட்டவங்க யாரோ அவங்க அங்க வந்து வாங்கிக்கட்டும்” என்று சொல்ல, சரியென சிறுபிள்ளை போல் தலையாட்டியவள் அந்த தங்கச்சங்கிலியை அவன் கையில் கொடுத்தாள்.

அதை கொடுக்கையில் இருவரது விரல்களும் பட்டும் படாமலும் உரசிக்கொள்ள, இருவருள்ளும் புதியதொரு மின்னல் பளிச்சென்று உடலில் பயிற்சி மின்சாரத்தை கடத்துவது போல் இருந்தது அந்த உணர்ந்தது. இருவரது மேனிலும் சிலிர்த்தது, மகேந்திர வர்மனுக்கோ உடலெங்கும் ஒரு அதிர்வலையே தோன்றியது. அதை உணர்ந்த இருவரும் சட்டென்று தங்களது கரங்களை விலக்கிக் கொண்டனர்..

ஏனோ அவன் முகம் காண தயக்கம் மேலிட அங்கிருந்து நகர முற்பட்டாள் மிருணாளினி.  ஆனால் அவளிடம் ஒரிரு வார்த்தை பேசி விட்ட மகிழ்வைக் கூட கொண்டாட விடாமல் இம்சித்தது அவனது மனம். அவளிடம் இன்னும் ஏதேனும் பேச சொல்லி அவனது ஆவலைத் தூண்டி விட்டது அவனது மனம்.‌ அவன் அவளை அழைக்க இதழ் பிரித்த அதே வேளையில் அவன் பின்மண்டையில் பலமாக தாக்கியது ஓர் இரும்புக் குழாய்.
நான்கடி நடந்திருந்த மிருணாளினி ஏதோ சத்தத்தில் சட்டென்று திரும்பி பார்த்தாள்.

கடற்கரை மணலில் ரத்த வெள்ளம் பரவியிருக்க, அதில் பாதி உடல் நனைய அரை மயக்கத்தில் கிடந்தான் மகேந்திர வர்மன். அதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றவள் அடுத்த நிமிடமே, “அய்யோ!”  என்ற அறைகூவலோடு அவனை நோக்கி ஓடிவந்தாள். அவனது தலையைத் தூக்கி தன் மடி தாங்கியவள், “, உங்களுக்கு என்ன ஆச்சு, ப்ளீஸ் கண்ணைத் திறந்து பாருங்க” என்று கேட்டவாறு அவன் கன்னத்தில் தன் பிஞ்சு விரல்களால் தட்டி, அவன் விழிகளை திறக்க வைத்தாள்.  முழுதாய் விழிகளைத் திறந்து அவள் முகம் பார்த்தவன், அவளது முகத்தை தன்னுள் நிறைத்து கொண்டு பட்டென்று  விழிகளை மூடிக் கொண்டான்.

கண்ணியமிக்க ஆண்மகன்
இவன் கடமை மறந்து கயல்விழியாளைக் காண
கடல் நாடி வந்தேனடி..
கன்னியிவளைக் கண்டதும்
கடமைதனை தவற விட்டவன்
அறிமுகமின்றி கன்னியிவளின்
கரம் தொட்டு கடமைக்கென பேசியவன் இறுதியில் மங்கையிவளின் மடிதாங்கி
மரணித்திடுவேனோ?

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro