தென்றல் 12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"ஹல்லோ சார், நீங்க எப்படி இங்க, ஒரே சர்ப்ரைஸா இருக்கு" என்றவளை அவன்

"அய்யோ அக்கா, ஏன் இப்படி சார்னு சொல்ரீங்க.கால் மை நேம் ,இல்லைன்னா அழகு தமிழ்ழ தம்பின்னு சொல்லுங்க"என்றவனை முறைத்தவள்

"உங்க பெயரு மறந்துடிச்சி, ஆமா உங்க பெயரு என்ன?"என்று கேட்க நிஜமாகவே ஒரு கணம் அவன் கண்களில் ஒரு வலி தோன்றியதை கண்ட திவ்யா இதுக்குமேலும் அவனிடம் விளையாடாமல் இருக்க எண்ணி

"ஹேய் சாரி அர்ஜுன்.அன்னைக்கு ஹாஸ்ப்பிடல்ல உங்க கிட்டபேசினதுக்கு அப்புறம் 2 வாட்டி கால் பண்ணி பேசினதோட சரி.எனக்கு டைம்மே கிடைக்கல.சும்மா உங்கள கலாய்ச்சேன்"என்றவளை

"நல்லா கலாய்ச்சிங்க திவ்யா.நான் வேற உங்களுக்கு ஏதும் அம்னீசியாவோன்னு நினைச்சிட்டேன். இல்லன்னா முதல்ல இருந்து இல்ல எல்லாம் ஆரம்பிக்கனும் "என்று புன்னகைக்க இருவரும் சேர்ந்து அவர்களின் பிக்னிக்கிற்கு தேவையான ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கினர்.

இந்த நாட்களில் மித்ரனுக்கு வருகின்ற பொக்கோ மட்டும் நாள் தவறாமல் அவனது மேசைக்கு கூரியரில் வந்து கொண்டே இருந்தது.ஆரம்பத்தில் கொஞ்சம் எரிச்சலுற்றவனாக இருந்தாலும் போகப் போக யாராக இருக்கும் என்ற ஆவள் அவன் மனதை கொஞ்சம் அந்த பெண்ணுக்காக ஏங்க வைத்தது.

இரண்டு நாட்களின் பின் மித்ரன் ஷாக்சியிடம் வந்து

" ஷாக்சி உன் அக்கவுன்டுக்கு நான் 15 லட்சம் போட்டிருக்கேன்.மீதிய அடுத்த வாரம் போடுறேன்" என்றவனை அவள்

" மித்ரன் திடீரென இப்படி 15 லட்சம் எடுத்தா அப்பா எதுக்குனு கேட்கமாட்டாங்களா?" என்று கேள்வியுடன் நிற்க அவனோ சாதாரணமாக

" அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்ல ஷாக்சி.சின்ன வயசில இருந்தே அப்பா என்னோட அக்கவுன்ட்கு மன்த்லி பணம்
டெபாசிட் ஆகுற மாதிரி அர்ரேஞ்ச் பண்ணிருக்காரு.இப்போ அது ஒரு 25 லட்சம் தேறும்.அதான் மொத்தமா எடுக்காம கொஞ்சம் கொஞ்சமா எடுக்க போறேன்.அப்புறம் அப்பா இப்படி ஒரு மேட்டர் இருக்குறதையே மறந்திருப்பாரு" என்று கூற ஷாக்சி கொஞ்சம் கவலையுடன்

" எனக்கு ஒரு மாதிரி உறுத்தலா இருக்கு மித்ரன்.இப்படி பணத்த வாங்குறது சரியா இருக்குமான்னு நினைக்க தோனுது" என்று கவலையாக கூறியவளை

" அட லூசு,என்ன உன்னோட ப்ரெண்டா நினைச்சிக்க.நீ எனக்கு ஹெல்ப் பண்ண ஒத்துக்கள்ளன்னாலும் நான் உனக்கு பண உதவி பண்ணிருப்பேன்.ஏன்னா என் மனசுல பொண்ணுங்க பத்தி இருந்த தப்பான எண்ணத்த மாத்தினது நீயும் திவ்யாவும்தா.திவ்யாவ ஆபீஸ்யலா தங்கச்சி ஆக்கியாச்சி.உனக்கு ஏதும் ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கும் போது கடவுளா பார்த்து ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்காரு" என்றவனை ஷாக்சி

" கடைசில நானும் சாதாரண பொண்ணு மாதிரி பணத்துக்காக எந்த பொண்ணும் பண்ணாத ஒரு வேலய பண்ண போறேன்ல" என்றவளை முறைத்த மித்ரன்

" இன்னொரு வாட்டி அப்படி பேசின செவிலு பிஞ்சிடும்.நீ என்ன...." என்று திட்ட ஆரம்பித்தவனை கை எடுத்து கும்பிட்ட ஷாக்சி

" ஐய்யா சாமி, ஆள விட்று.நான் நல்ல பொண்ணுதான் ஒக்கேயா" என்றாள்.

பிக்னிக் செல்லும் நாளும் வர கம்பனியில் வேலை செய்கின்ற ஹெட் ஆபீஸ் ஸ்டாப் எல்லோரும் தயாராகி இருந்தனர்.அது ஒரு 2 நாள் பிக்னிக்.மலை ஏறுதல், நீரோடையில் படகு மூலம் பயனித்தல் என பல சாகசங்கள் நிறைந்த ஒரு ஏற்பாடாக இருந்தது.ஸ்டாப் 25 பேருடன் சேர்த்து மித்ரன் மற்றும் அர்ஜுனும் சேர்ந்து கொள்ள இன்னும் பஸ், பயணத்தை ஆரம்பிக்காமல் இருக்க மித்ரன் அர்ஜுனை பார்த்து

"என்ன அர்ஜுன்,வேற யாரும் வரனுமா?"என்று கேட்க அவனோ

"இல்ல என் தங்கச்சி வர்ரேன்னு சொன்னா. 2 மாசம் முன்னாடிதான் யூஎஸ் ல இருந்து வந்தா.அவளுக்கும் அட்வன்ஞ்சர் ட்ரிப் போகனும்னு ஆசையாம்.ஆனா மத்த கம்பனிஸ்ல லேடீஸ் வரமாட்டாங்க.ஆனா உங்க கம்பனில நிறைய லேடீஸ் வர்ராங்களா,அதான் அவளயும் ஜாயின் பண்ணிக்க சொன்னேன்.பக்கி இப்படி லேட் பண்ணுது"என்று கூறியவனை

"அதோ அந்த ப்ளாக் கலர் சல்வார் போட்டு ஒரு பொண்ணு ஓடி வருதே அதுவா உங்க தங்கச்சி"என்று தூரத்தில் இருந்து ஓடி வரும் ஒரு பெண்ணை காட்டி கேட்க அர்ஜுனும்

"ஹப்பாடி ,ஒரு மாதிரி வந்துட்டா"என்று கூறியவன் அவளை பஸ்ஸில் ஏற்றியதும் அவளோ எங்கே அர்ஜுன் அவளை திட்டிவிடுவான் என்று எண்ணி அவனை பார்த்து பாவமாக ஒரு பார்வை பார்க்க அவன் அவளை எதுவும் திட்டாமல் விட்டுவிட்டான்.மித்ரனுக்கோ ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்.

" அர்ஜுன் இதுவா உங்க தங்கச்சி " என்று கேட்க

" ஆமா ப்ரோ , உங்களுக்கு முதல்லயே தெரியுமா அவள" என்று கேட்டான்.அவன் பதில் கூற முன்

உள்ளே வந்து இருக்கையில் அமர போனவள்

"ஹேய் திவ்யா எப்படி இருக்க.சீனியர் வாட் அ சர்ப்ரைஸ் நீங்களும் இங்கதான் வேர்க் பண்றீங்களா?"என்று கேட்க திவ்யாவும் ஷாக்சியும் இன்ப அதிர்ச்சியில்

"ஹேய் ஜானவி நீ எங்கடி இங்க?ஆமா நீதான் அர்ஜுனோட தங்கச்சியா?"என்று கேட்க அவளோ ஆம் என்று தலையசைத்தாள்.

தோழிகள் மூவரும் அரட்டை அடித்துக்கொண்டிருக்க அவ்விடமே ஒரு கலகலப்பாக மாறியது.மித்ரனுக்கு இது புரிந்தாலும் அர்ஜுனுக்கு இது புதிது என்பதால் மித்ரனை அர்ஜுன் பார்க்க அவனோ

"ப்ரோ ,கூல் ஆஹ் இருங்க.இதுங்க மூணும் காலேஜ்லயே இப்படித்தான்.ஒன்னு சேர்ந்தா எல்லோரையும் காலி பண்ணிடுங்க. ஹ்ம்ம் இன்னைக்கு எவன் எவன் தலை உருள போகுதோ?"என்று போலியாக சலித்துக்கொண்டான். உருளப்போவது அவன் தலை என்பது கொஞ்சமும் அறியாமல் அவன் அவனது மொபைலில் ஏதோ நோன்டிக்கொன்டிருந்தான்.

முதல் நாள் இவர்கள் ஒரு ரிசார்ட்டை அடைந்ததும் அன்று இரவு ரெஸ்ட் எடுத்துவிட்டு அடுத்த நாள் காலை எல்லோரும் மலை ஏறுவதற்கு செல்வதென முடிவாகியது.

அன்று இரவு உணவு உண்ண எல்லோரும் ஒன்று சேர்ந்த வேலை திவ்யா ஒரு வெள்ளை நிற சல்வார் அணிந்து மிகவும் அழகாக வந்தாள்.அது போலவே ஜானவியும் இள நீல நிற குர்தி அணிந்து வந்தவளை அங்கிருந்த எல்லா ஆண்களும் கண் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.இவர்கள் இருவரையும் மிஞ்சும் அளவிற்கு ஷாக்சியே பிங்க் கலரில் ஒரு சாரி அணிந்து வந்தாள். ஷாக்சியை பற்றி கூறுவதென்றால் அவள் கண்டவரை உடனே மயங்கச்செய்யும் அழகி கிடையாது.ஆனால அவளது ஆடை மற்றும் அணிகலன்களின் உதவியுடன் தன்னை எப்படி அழகாக மாற்ற வேண்டும் என்ற கலை தெரிந்தவள்.அதனாலேயே அவள் கொஞ்சம் சிரத்தை எடுத்து ஆடை உடுத்தினால் காண்பவர் கண் எல்லாம் அவள் மேலேயே இருக்கும்.

இவர்கள் மூவரும் சாப்பிட அமர அவர்களுடன் மித்ரனும் ,அர்ஜுனும் சேர்ந்துகொண்டனர்.திவ்யா மெதுவாக ஷாக்சியிடம்

"எப்படி ஷாக்சி நீ இவ்வளவு அழகா டிறஸ் பண்ற.உன் டிறஸ்ஸிங்க் சென்ஸ்தான்டி உனக்கு ப்ளஸ் பாயின்ட்.நாங்களும்தான் இருக்கமே"என்று ஜானவிக்கும் கேட்குமாறு கூற அவளும்

"ஆமா சீனியர்.."என்றாள்.உடனே ஷாக்சி

"ஓய் இது என்ன காலேஜா. சீனீயர் கூனியர்னு சொல்லிகிட்டு...ஷாக்சின்னே கூப்பிடு ஓக்கே."

எல்லோரும் ஜாலியாக சாப்பிட்டு முடிக்க திவ்யாவோ

"சும்மா போய் தூங்குறதுகு பதிலா இன்னைக்கி எல்லோரும் ஒரு கேம் விளையாடலாமா " என்று கேட்க எல்லோரும் அசதியாக இருப்பதாக கூறி தூங்க சென்றனர்.எல்லோருக்கும் நாளைக்கு அவரவருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்து விட்டு அர்ஜுன் வந்து சேர
இவர்கள் ஐவருமே மிஞ்சினர்.இவர்களுடன் கீர்த்தியும் வந்து சேர்ந்து கொண்டால்.அவளை கண்டதும் மித்ரன்

" என்ன கீர்த்தி நீ தூங்க போகல " என்று கேட்க அவளோ பயத்தில்

" இல்ல சார்..." என்று இழுத்தவளை

" இந்த சார்,மோர்லாம் ஆபீஸோட வெச்சிக்க.இப்போ ஜாலியா பிக்னிக் வந்திருக்கோம் .சோ கால் மீ மித்ரன்" என்றதும் அவள் முகம் பிரகாசமடைந்ததை மித்ரன் கண்டானோ தெரியவில்லை ஆனால் திவ்யாவும் இன்னொரு ஜீவனும் நன்றாக கவணித்துக்கொண்டனர். உடனே இதில் உள்ள மர்மத்தை வெளி கொணர திவ்யா

" சரி, நம்ம ஆறு பேரு இருக்கோம்.ட்ரூத் ஆர் டெயார் விளையாடலாம்" என்று கூற மித்ரனும் அதுக்கு சரி என்ற தலை அசைத்த வேலை மற்ற எல்லோரும் முடியாது என்று கூறிவிட்டு அவரவர் அறைக்குள் சென்று விட்டனர்.

இவர்கள் எல்லோரின் செயற்பாடுகளையும் கவணித்த திவ்யாவுக்கு தன்னையும் மித்ரனையும் தவிர மற்ற எல்லோருல் ஏதோ ஒன்றை மறைக்கின்றார்கள் என்று புரிய அர்ஜுன் எதை மறைக்க பார்க்கின்றான் என்று புரியாமல் தவித்தவளின் மனதுக்கு தான் ஏன் அர்ஜுனை பற்றி ஸ்பெசலால நினைக்கிறோம் என்பது தெரியாமல் போனது.

காலையில் எல்லோரும் சீக்கிரம் எழும்பி Mountain Climbing செல்ல தயாராகினர்.
எல்லோரும் டிராக் சூட்டில் இருக்க மலை ஏறுவதற்கு தேவையான எல்லா பாதுகாப்பு சாதனங்களையும் எடுத்தவர்கள் ஆண்கள் முதலில் ஏறுவது என்று முடிவானது.

---
AngelShaju வின் "விழியில் வானவில்" நன்றாக இருப்பதாக Nivethamagathi கூறினார்.நான் அவருடைய எந்த கதையும் படிப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.காரணம் இதற்கு முதல் ஆரம்பிக்கப்பட்ட கதை இன்னமும் முடியடையவில்லை.அந்த கதையை நான் அறிமுகம் செய்யும் போதே அவரிடம் 'இந்த கதையை முழுமைப்படுத்துவீர்களா' என்று கேட்டுத்தான் அறிமுகம் செய்தேன்.ஆனால் அது இடையில் விடப்பட்டது.
என்னடா இவன் இப்படி ஓபனா சொல்ரானேன்னு யாரும் யோசிக்க வேண்டாம்.

ஷாஜு வும் Farmila_M வும் தான் என்னுடைய "என் உயிரினில் நீ" இற்கு முதல் வோட் அண்ட் காமண்ட்ஸ் போட்டவங்க.
நாங்க எப்பவுமே சண்டை போட்டுகிட்டே இருப்போம்.இந்த தடவை அக்கா கதைய பாதியில் நிறுத்தினா யாரும் விடாதீங்க..
அப்டேட் கேட்டு தொல்லை பண்ணுங்க...

AngelShaju இந்த கதையும் பாதியில நின்னா அதுக்கு பிறகு நடக்கிற எதுக்குமே நான் பொறுப்பில்ல....😓😓😓

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro