தென்றல் 6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

திவ்யாவுக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை, எதற்காக ஷாக்சி இப்படி பயந்து ஓடுகிறாள் என்பது.ஏனென்றால் அவள் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பான்மை கொண்டவள்.பிரச்சனையை கண்டு ஓடி ஒளிபவள் கிடையாது.அதற்காக பாரதி கண்ட புதுமைப்பெண்ணும் அல்ல.தைரியம் கொஞ்சம் அதிகமாக உள்ள சராசரி பெண்.

ஷாக்சியின் மனநிலையோ தனக்கு இப்படி ஒரு அநீதி நடந்தது அவள் வேலை செய்யும் கம்பனியில் ஒருத்தருக்கு அல்லது சிலருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.அப்படி இருக்க பார்க்கும் ஆண்களை எல்லாம் தப்பான கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டும்.எவனோ ஒருத்தன் செய்த ஒரு நாசகார செயலுக்காக எதற்கு எல்லோரையும் சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டும் என நினைத்து அவள் இந்த ஊரை விட்டே செல்ல நினைத்தாள்.அதைவிட இனி அவளுக்கு IT இல் வேலை செய்ய விருப்பமில்லை.பொதுவாக எல்லா IT கம்பனிகளிலும் இதே நிலமைதான் என்பது அவளது நிலைப்பாடு.அவளது நிலைப்பாடு இது  ,ஆனால் அது தவறாக கூட இருக்கலாம்.

---------

சென்னை வந்து இறங்கியவள் திவ்யா கொடுத்தனுப்பிய வேர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல்லுக்கு அட்றசுக்கு சென்றவள் அங்கு தனது பேக் எல்லாவற்றையும் வைத்து ப்ரெஷ் ஆகி வந்தாள்.ஷாக்சி யாருடனும் தனது அறையை செயார் செய்து கொள்ள பிடிக்காமல் தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தாள்.

இரண்டு நாட்களின் திவ்யா கூறிய அவளுடைய ப்ரெண்டின் அப்பாவுடைய கம்பனிக்கு சென்றவள் MD ஐ சந்திப்பதற்காக ரிசப்சனில் காத்துக்கொண்டிருந்த வேலை ரிசப்சனில் இருந்த பெண்

"மேம் உங்கள சார் கூப்பிர்ராரு"என்றாள். MD யின் அறையை அடைந்த ஷாக்சி கதவை தட்டி

"மேய் ஐ கம் இன் சார்"என்று கேட்க உள்ளிருந்து ஒரு கம்பீரமான குரல்

"யெஸ் கம் இன்"என்றது.கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற ஷாக்சிக்கு ஒரே அதிர்ச்சி.அங்கு உள்ளே இருந்த நபர்

"நீதான் திவ்யா பொண்ணோட ப்ரெண்டா.ஹஹா..சூப்பர்"என்று கூற அவர் நக்கலாக கூறுகிறாரா இல்லை பாராட்டி கூறுகிறாரா என்பதை அறிய முடியாமல் தினறிக்கொண்டிருக்க அவரோ

"டேக் யுவர் சீட்"என்றார்.அவளின் பைலை முழுமையாக பார்த்தவர்

"அம்மாடி தப்பா எடுத்துக்காத, நீ படிச்சிருக்குற படிப்புக்கு நல்ல சம்பளத்துல பெரிய கம்பனி ஒன்னுல வேலை பார்த்திருக்கலாம்.ஆனா நீ ஏன் இப்படி உனக்கு சம்பந்தமில்லாத வேலைகளுக்கு அப்ளை பண்ணிருக்கன்னு புரியல"என்றவளை

"சார், தட்ஸ் மை பெர்சனல்.உங்களுக்கு வேலை கொடுக்க முடியும்னா கொடுங்க.இல்லயா நான் வேற இடத்துல பார்த்துக்கிறேன்"என்றவளை

"ஏம்மா என்கிட்ட எகிர்ர.நீ அன்னைக்கு நடந்தத இன்னும் மறக்கலயா"என்று கேட்க

"நீங்க மறக்குர மாதிரி நடந்துக்கல்லயே சார்"என்றால்

------------------

(அன்றைக்கு நடந்தது)

"டேய் மச்சி கலர் கலரா பிகர்லாம் வருதுடா.ரொம்ப நாளா நம்ம பேட்ச் மங்கி பேஸ்லாம் ரொம்ப ஓவரா சீன போட்டாலுங்க.இப்ப பாரு விதம் விதமா, வகை வகையா பிகர்ஸ்டா"என்ற தன் நண்பன் சதீஸை

பளார் என்று பிடறியில் அறைந்த அவனது நண்பன்

"டேய் ஓவரா பேசாத"என்றவனை சதீஸ்

"சரி பேசல விடு ,ஆனா இன்னைக்கு ஒரு ரெண்டு சூப்பர் பிகரயாச்சும் ரேக்கிங்க் பண்ணனும்டா"என்று கூற அதற்கு அவன் நண்பன்

"என்னமோ பண்ணு" பண்ணு எண்றதும் அவ்விடத்துக்கு அழகான ஒரு பெண் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து வந்து சதீஸின் நண்பனிடம்

"அண்ணா இந்த பர்ஸ்ட் இயர் MBA க்ளாசஸ் எங்க இருக்கு "என்ற கேட்க ஒரு அழகான பெண் தன் நண்பனை அண்ணானு கூப்பிட்டதை வைத்து சதீஸ் கலாய்க்க தொடங்க

"மச்சான்,சொல்லுங்க மச்சான்.. பர்ஸ்ட் இயர் MBA க்ளாஸ் எங்க இருக்குன்னு.உங்க தங்கச்சிதான் கேட்குறாங்கலே மச்சான்"என்று கூற கோவம் வந்த அவனின் நண்பன் பளார் என்று எல்லோர் முன்னிலையும் சதீஸை அறைய எல்லோருடைய கவனமும் இவர்கள் மூன்று பேரை நோக்கி இருக்க அந்த பெண்ணை பார்த்து அவன்

"ஏண்டி ,நீ எங்கம்மாக்கு பொறந்தியா, இல்ல நான் உங்கம்மாக்கு பொறந்தனா.இல்ல உங்கம்மா...."என்று ஏதோ மோசமாக பேச வந்தவனை பேச விடாமல் பளார் என அறை விழுந்தது.உடனே அவன் கோவத்தில் திரும்ப அங்கு ஷாக்சி

"என்னடா பேசுர.பணக்கார திமிரா.இதுக்கு மேல ஒரு வார்த்த பேசின செருப்பால அடிப்பேன்"என்று கோவமாக கூறியவளை அடிப்பதற்கு அவன் கையை ஓங்க அங்க வந்த லெக்சரர் இங்கு ஏதோ பிரச்சினை என்பதை புரிந்து அவர்கள் மூவரையும் ஸ்டூடண்ட் கவுன்சிலர் அறைக்கு அழைத்து சென்றார்.

அங்கு நடந்தவற்றை விசாரித்த அவர்களின் ஸ்டூடண்ட் கவுன்சிலர் உடனே சதீஸின் நண்பனின் தந்தைக்கு கால் செய்து

"மிஸ்டர் விஷ்வனாத்,நீங்க கொஞ்சம் அவசரமா காலேஜ் கு வாங்க.இங்க ஒரு சின்ன ப்ராப்ளம்"என்று கூற அவரும் சரியாக 30 நிமிடத்தில் காலேஜில் இருந்தார்.இங்கு சதீஸின் நண்பனான மித்ரன் கொலைவெறி பார்வையுடன் ஷாக்சியை முறைத்துக்கொண்டிருக்க அந்த அழகிய பதுமையான திவ்யா என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக்கொண்டிருந்தால்.

மித்ரனின் தந்தையிடம் பேசிய லெக்சரர்

"லுக் மிஸ்டர் விஷ்வனாத், இது ஒன்னும் ஸ்கூல் கிடையாது பேரன்ட்ஸ் கிட்ட பசங்கள பத்தி கம்ப்ளைண்ட் பண்ண.ஆனா உங்க பையனுக்கு பொண்ணுங்க எண்டாலே பிடிக்க மாட்டேங்குது.டெய்லி ஏதாவது ஒரு பொண்ண திட்டிகிட்டே இருக்காரு"என்றதற்கு விஷ்வனாதன்

"என்ன சார் காலேஜ்னா பசங்க பொண்ணுங்கள டீஸ் பண்ணிகிட்டுதான் இருப்பாங்க இதுக்கு போய்"என்று கூற

"சார் அப்படி பண்ணா பரவாயில்லையே.உங்க பையன் ரொம்ப மோசமா இல்ல நடந்துக்கிறாரு.ரொம்ப ரூட் ஆஹ் பேசுராரு.அன்னைக்கு இப்படித்தான் ஒரு பொண்ணு யாரோ ஒரு பையன பார்த்து 'செம்மயா இருக்காண்டி' னு சொன்னதுக்கு உங்க பையன் அவகிட்ட நீ இங்க படிக்க வந்தியா இல்ல ப்ராத்தல் செய்ய வந்தியான்னு கேட்டிருக்காரு.அந்த பொண்ணு அழுதுகிட்டே எங்க கிட்ட சொல்ரா.இன்னைக்கு அது போலதான் இந்த பொண்ணுகிட்ட மோசமா பேச பார்த்திருக்காரு.இப்படித்தான் டெய்லி ஏதாச்சும் ஒரு பொண்ணுகிட்ட ரூட் ஆஹ் பிஹேவ் பண்றாரு.இப்ப சொல்லுங்க உங்க பையன என்ன பண்ணலாம்னு"என்று கேட்க என்ன கூறுவது என்று தெரியாத விஷ்வனாதன்

"சரி சார், இதுக்கெல்லாம் ரிட்டன் கம்ப்ளைண்ட் இருக்கா? இருந்தா சொல்லுங்க,நீங்க என்ன ஆக்சன் எடுத்தாலும் நான் அதுக்கு கட்டுப்படுறேன்"என்றவரை

"பொண்ணுங்க எப்படி சார் இதுக்கெல்லாம் கம்ப்ளைண்ட் கொடுப்பாங்க"என்றதற்கு ஷாக்சி

"சார் இந்த பொறுக்கி மேல நான் கம்ப்ளைண்ட் கொடுக்கிறேன்"என்று கூற விஷ்வனாதனுக்கு கோவம் வந்து

"இங்க பாருமா, கம்ப்ளைண்ட் கொடுக்கிறதுன்னா கொடு.அத விட்டுட்டு என் பையன பொறுக்கின்னு சொல்ர வேலை எல்லாம் வெச்சிக்காத"என்று கோவமாக பேச ஷாக்சியோ உடனடியாக அவ்விடத்திலேயே பேபரை எடுத்து கம்ப்ளைண்ட் எழுதி திவ்யாவிடம் கை எழுத்த கேட்க அவளோ

"இல்லக்கா அண்ணா வேற ஏதோ கேட்க வந்தாங்க.நீங்கதான் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.அண்ணா மேல எந்த தப்பும் இல்ல"என்று கூற திவ்யாவை எரிப்பது போல பார்த்த ஷாக்சி அவ்விடத்தை விட்டு சென்றாள்.அவள் சென்றதும் மித்ரனின் தந்தை

"அப்புறம் என்ன சார் ,இந்த பொண்ணே ஒன்னுமில்லைன்னு சொல்லிடுச்சு.பிறகு என்ன நான் போகவா, இல்ல இன்னும் வேற ஏதும் கேஸ் இருக்கா "என்று கேட்க ,லெக்சரர் என்ன கூறுவது என்று புரியாமல் முழித்துக்கொண்டிருந்தார்.

மித்ரனின் தந்தை சென்றதும் திவ்யா ஏன் இப்படி மாற்றி பேசினால் என்று யோசித்துக்கொண்டே இருந்தான்.வெளியில் வந்த திவ்யாவின் கையை இழுத்து சென்ற ஷாக்சி

"என்னடி வந்ததுமே பணக்காரனா பார்த்து வலைச்சு போடலாம்னு பார்க்குறியா?"என்று கேட்க

"ஐயோ அக்கா ,அப்படிலாம் இல்லக்கா.நிஜமாவ அந்த அண்ணாவ பார்த்ததும் அண்ணானு கூப்டனும்னு தோனிச்சு.அதான் கூப்பிட்டேன்.அதுக்கு பக்கத்துல இருந்த சீனியர் அவங்கள கலாய்க்க போய் இப்படி ஆகிடிச்சி"என்று கூறியவளை

"ஓஹ் அண்ணாவா,இப்படி எத்தனை அண்ணன் தங்கச்சிய நாங்க பார்த்திருக்கோம் தெரியுமா"என்று நக்கலாக கூறியவளை

"அக்கா அப்படி சொல்லாதீங்கக்கா.நான் ஒரு ஹோம்ல இருந்து வர்ரேன்.சின்ன வயசுலேயே அம்மா,அப்பாவ இழந்துட்டேன்.அவங்க முகம் கூட ஞாபகம் இல்ல.எந்த ஆம்பள கிட்டயும் இது வரைக்கும் தேவை இல்லாம பேசினதும் இல்ல.அந்த அண்ணாவ பார்த்ததும் நிஜமாவே ஒரு அண்ணன் என்ற பீல் வந்திச்சுக்கா.எல்லோரும் என்ன வெறிக்க வெறிக்க பார்த்தப்போ அவங்க மட்டும்தான் என்ன கண்டுக்கவே இல்ல"என்று கூறியவளை ஷாக்சி

"ஹேய் சாரிடா.உன்னோட நிலமை தெரியாம அப்படி பேசிட்டேன் சாரிடா"என்றவளை

"பரவாலக்கா,விடுங்க"என்றவளை

"என்னது அக்காவா,உன்ன விட ஒரு வயசுதானே அதிகம் .நீ என்ன ஷாக்சின்னே கூப்பிடு.இந்த அக்காலாம் வேணாம்"என்றவளை

"அதெப்படி.சரி அக்கான்னு சொல்லல.இனிமே சீனியர்னு சொல்ரேன்"என்று கூறி சிரித்தவளை

"அக்காக்கு சீனியர் எவ்வளவோ பரவாயில்லை"என்று அவளுக்கு தோழமையாக கையை நீட்டினால் ஷாக்சி.இவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை கண்ணீருடன் மித்ரன் கேட்டுக்கொண்டு அவ்விடத்தை விட்டு சென்றான்.

------+++++

என்னுடைய முந்திய கதைகளவிட இந்தக் கதையில் ஏதோ ஒன்று குறைவதாக எல்லோருமே சொல்ராங்க.என்னவென்று எனக்கு புரியல.யாருக்கும் சரியாக தெரிந்தால் சொல்லவும்.திருத்திக்கொள்ளலாம்.

வாசகர்கள் மிகவுனம் குறைவாக இருக்கின்றது.வோட்சும் ரொம்ப குறைவா இருக்கு.இப்படில்லாம் சொல்லவே மாட்டேன்.நான் ஏதோ மொக்கயா எழுதுறேன் அதுதான் வாசகர்களின் எண்ணிக்கை குறைய காரணம்.கண்டிப்பாக தவறுகளை திருத்திக்கொண்டு என் கதையை மெருகூட்ட முயற்சிப்பேன்.

அப்பவும் வாசகர்கள் குறைவாக இருந்தால், கவலையே இல்ல.நான் எவ்வளவு மொக்கயா எழுதினாலும் அதை வாசிக்க என்று ஒரு சின்ன கூட்டம் இருக்கு.அவர்கள் வாசிக்காவிட்டாலும் வாசிக்க சொல்லி டார்ச்சர் செய்து வாசிக்க வைத்து விடுவேன்.
10 வாசகர்கள் இருக்கும்வரை கதை தொடரும்...
10 ஐ விட குறைந்தால் மிகுதியாக உள்ள வாசகர்களுக்கு கதை இன்பாக்ஸ் செய்யப்படும்.

----
புதிய கதை அறிமுகம்
ShameemBanuAN வின்

" உன் கோபத்தை கூட ரசித்தேனடி"
நன்றாக இருப்பதாக ஒரு பெரிய ஆதர் சொன்னங்க.நான் இன்னும் படிக்கல.கண்டிப்பா படிக்கனும்.நீங்களும் படிச்சிட்டு சப்போர்ட் பண்ணுங்கப்பா.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro