செவிலி தாய்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தொலைவிலோ அருகிலோ
உன் முகம் கண்ட நொடி
வானில் மிதக்கிறேன் நான்

எனக்கு உரிமை இல்லாதவன்
என தெரிந்தும்
நேசிக்கிறேன் உன்னை

உன் மழலை மொழி கேட்க
தவம் செய்கின்றன
என் செவிகள்

இவ்வுலகம் என்னை மலடி
என ஏசும் பொழுது
அம்மா என அழைத்தாய்

என் கண்ணிர் வடிந்தன
உன்னை போல் பிள்ளைகளின்
செவிலி தாய் ஆனேன்.

(குழந்தை இல்லை என ஒருவரை காயப்படுத்தும் முன் நம் சந்ததியினரும் அந்த துன்பத்தை அனுபவிக்க கூடும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்...
குழந்தை உள்ளவர்களுக்கு தன் குழந்தை மட்டுமே குழந்தை.. மற்றவருக்கு எல்லா குழந்தைகளும் தன் குழந்தையே .... முடிந்தாவரை அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro