23.வளர்ச்சி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சுவாசிக்கும் காற்றை தரும்
மரங்களையும்
விவசாய நிலங்களையும் அழித்து கட்டிடம் கட்டியும்
சாலைகளை அமைதிட்டும்
பின் காற்றுமாசு
ஈரப்பதம் குறைவுஎன்று
பிராணவாயுவை
செயற்கையாய் விற்பதில்
வளர்ச்சியடைந்ததிலா?

பெண்மைக்குரிய கருத்தரிப்பை
சானிட்டரி நாப்கின் மூலமும்
உண்ணும் உணவின் யூரியா மூலமும்
ஒருபடி மேலே போய்
குழந்தைகளின் பேம்பர்ஸ் மூலமும்
மலடாக்கிய பின்
கருத்தரிப்பு மையங்கள் வளர்ந்ததிலா?

கூட்டுக்குடும்பத்தின் ஆண்மகன்கள்
பணிக்குச்சென்று ஒன்றாய்
வீடுதிரும்பி குடும்பத்தோடு
கூடி சிரித்து, உண்டு,
விட்டுக்கொடுத்து உறவாடி  மகிழ்ந்தகாலம் போய்
இன்று கைநிறைய சம்பளம்
ஆனால் குடும்பங்களும் பிரச்சனைகளும் வளர்ந்ததிலா?

பெரியவர்கள் முன் நாவடக்கம் முதல் அமருவது வரை பணிவுடன்
நடக்கவேண்டும் என்பது
மறைந்து இன்று
முதியோர் இல்லம் வளர்ந்ததிலா?

தாரத்தை தவிர மற்றவளை
தமக்கை தாயாய் கண்டமனம்
இன்று சிசுவையே சூறையாடும்
மிருகமனங்கள் வளர்ந்ததிலா?

குடிப்பழக்கம் உடலுக்கு கேடு
என்று புட்டியில் சிறியதாகி
மதுக்கடைகள் வளர்ந்ததிலா?

புகைபிடித்தால் நுரையீரல்
பாதிக்குமென்று குறிப்பிட்டு
புகையிலை உற்பத்தியில் வளர்ந்ததிலா?

இன்னும் இன்னும் நிறைய வளர்த்திருக்கிறோம்
நம் வருங்கால சமுதாயம் அழிய...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro