7

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வனிதாவின் பார்வையில் (தொடர்ச்சி)

நாட்கள் மெதுவாக நகரத்தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஸ்பெஷல் கிளாஸ் என்றானது. அந்த ஸ்பெசல் கிளாஸ் எனக்கும் ராஜாவுக்குமானது. வாரா வாரம் அந்த பண்ணை வீடு எங்களை அன்போடு வரவேற்றது. எனக்கு அந்த வீட்டுக்குள் செல்லும் நாட்களில் ஏதோ புகுந்த வீட்டுக்கு செல்லும் நினைப்பு என் மனதில் வந்துவிடும். இதில் வேடிக்கை என்னவென்றால் நான் இன்னும் என் காதலை ராஜாவிடம் கூறவில்லை.

டி. ராஜேந்திரனின் விசிறியான நான் இப்பொழுதெல்லாம் மணிரத்னம் படங்களையும் பார்க்கின்றேன். ரோஜாவில் அரவிந்த் சாமி மதுபாலாவின் மேல் ஆடைக்குள் ஐஸ் கட்டிகளை போட்டு அவளை சீண்டுவது எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று. எங்களின் சனிக்கிழமை சந்திப்பானது ஒரு திட்டமிடப்பட்டதை போன்று இருக்கும். காலேஜ் பஸ் ஸ்டான்டில் ராஜா என்னை ஏற்றிக்கொள்வான். பண்ணை வீட்டில் காலை உணவு. டீவியில் ஏதும் திரைப்படம். அதுவும் நான் விரும்பும் தமிழ் திரைப்படங்கள்தான் ஓடும். மதியம் ஆனதும் வீட்டிற்கு வந்து விடுவேன். இதுதான் எங்களின் ரொட்டின்.

இந்த நாட்களில் நாங்கள் அதிகம் பேசிக்கொண்டதில்லை. ராஜாவும் என்னை பேச சொல்லி எல்லாம் கஷ்டப்படுத்த மாட்டான். அவனுக்கு தெரியாதா என் மனதில் என்ன இருக்கும் இன்று. எங்களின் எட்டாவது சந்திப்பில் ராஜா அவன் ஆசை ஒன்றை கூறினான்.

"வனிதா இன்னைக்கு இங்க்லீஷ் படம் பார்க்கலாமா?"

நான் அவனை முறைத்து "நான் வீட்டுக்கு கிளம்புறேன்" என்றேன்.

"ஏன் வனிதா என் மேல நம்பிக்கை இல்லையா? எனக்குன்னு சில ஆசைகள் இருக்கு. உங்கூட ரெஸ்ட்டாரன்ட், சினிமான்னு ஊர் சுத்தனும்னு. ஆனா உங்க வீட்ல உனக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாதுன்னுதான் அமைதியா இருக்கேன். டைட்டானிக்னு ஒரு படம் வந்திருக்காம். ரொம்ப அழகான காதல் படமாம். தமிழ் டப்பிங்க் கூட இருக்கு. உன்கூட பார்க்க ஆசைப்படறேன். வேற எந்த உள் நோக்கமும் இல்லை. ஆனா நீ என்ன சந்தேகப்படுறது என்னை ரொம்ப வருத்துது" என்றான்.

அவன் பக்க நியாயங்களை அவன் கூறிய விதம் என்னை அவன் பக்கம் விழ வைத்தது. நானும் இதுவரை எந்த ஒரு ஆங்கிலப்படமும் பார்த்ததில்லை. என் தோழிகள் எல்லாம் டேர்மினேட்டர்-2 பார்த்துவிட்டு ஆகா ஓகோ என புகழ்வார்கள். ஆர்னல்ட் ஸ்வாஸ்னேகர் மிகவும் கம்பீரமாக இருப்பாராம். அப்படி ஒரு கம்பீரமான ஹீரோ இந்திய சினிமாவிலேயே கிடையாதாம். தொண்ணூறுகளில் இந்தியாவில் இருந்த எந்த ஹீரோவுக்கும் சிக்ஸ் பேக்கோ அல்லது ஜிம் பாடியோ கிடையாது. எல்லோரும் அமுல் பேபி போலவே இருப்பாரர்கள்.

"சரி ரொம்ப கெஞ்சாதீங்க. போடுங்க பார்க்கலாம்" என்றேன். அவனும் ஆர்வமாக படத்தை போட்டு பார்க்க ஆரம்பித்தான். ஆரம்பத்தில் படம் நல்ல விறு விறுப்பாக போனது. அதுவும் அந்த நாயகி அணிந்து வரும் ஆடைகள் எல்லாமே மிக அழகாக இருந்தது. நான் படத்தில் லயிக்க ஆரம்பித்தேன். காதல் காட்சிகள், நாயகனும் நாயகியும் செய்யும் சேட்டைகள் மிகவும் சுவாரசியமாக இருந்தது.

ஒரு காட்சியில் ஹீரோ ஹீரோயினியை நிர்வாணமாக வரையும் காட்சி வந்தது. அதை கூட நான் படம் ஏற்படுத்திய ஆர்வத்தில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன் பின் வரும் கலவி காட்சி என்னை உலுக்கியது. வாழ்வில் முதன் முறையாக இப்படி ஒரு காட்சியை காண்கின்றேன். ராஜாவும் இந்த காட்சியை எதிர்பார்த்திருக்க மாட்டான் போலும். உடனே டீவியை அணைத்துவிட்டான். இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.

"வனிதா கிளம்பு போகலாம்" என்றான். அவனின் பயம் எனக்கு புரிந்தது. இப்படி ஒரு காட்சி படத்தில் வரும் என்று அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். எங்கே அவனை நான் தப்பாக நினைத்துவிடுவேனோ என்ற பயம் அவனுக்கு.

நான் எதுவுமே பேசவில்லை. அவனுடன் பைக்கில் ஏறி வழமையாக நான் பஸ் எடுக்கும் இடத்தில் இறங்கி கொண்டேன். அவன் சாரி என்று ஒற்றை வார்த்தையை கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

சாரியாம் பெரிய சாரி. யாருக்கு வேணும் இவனது சாரி. நான் அணிந்திருக்கும் சாரியை கேட்டால் கூட அவனுக்கு கொடுக்க கூடிய நிலையில் அல்லவா நான் இருக்கின்றேன்.

ச்சே! என்ன என் சிந்தனை இப்படி மட்டமாக போகின்றது. இப்படி யோசிக்கும் ஆள் நான் இல்லையே. இந்த படுபாவி ராஜா என்னை அவனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான். இனி இவனுடன் தனிமையில் இருக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். பயம் ராஜாவை நினைத்தல்ல. என்னை நினைத்தே. எங்கே நான் ராஜாவை கெடுத்துவிடுவேனோ என்று.

அடுத்த வாரம் என்னை அழைத்துச் செல்ல வந்த ராஜா சற்று மெதுவான குரலில் பேசினான்.

"என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் ஏறுங்க வனிதா. இல்லைன்னா வேணா" என்றான். எவ்வளவு நல்லவன். ஏறு என்றிருந்தது இப்போது ஏறுங்க என்றானது. எனக்கு இந்த மாற்றம் உள்ளுக்குள் வலித்தது. மறுபடி மறுபடி தன்னை நல்லவன் என்று நிரூபிக்கின்றாராம்.

"சாரிங்க, போனவாரம் சத்தியாம அப்படி ஆகும்னு நினைக்கல்ல. எங்க நீங்க என்ன கேவலமா நினைச்சிடுவீங்களோன்னு பயமா இருந்தது. சத்தியமா நான் கெட்டவன் இல்லைங்க" என்றான். அவனது செயல் ஸ்கூல் மிஸ் முன்பு கைகட்டி தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்கும் பிள்ளை போல இருந்தது. நான் சிரித்துவிட்டேன். என் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் ராஜா முழித்தான். நான் தான் அவனை இப்போது தேற்ற வேண்டும்.

"அய்யோ ராஜா விடுங்க. நமக்கு எப்படி தெரியும் அந்த படத்துல அப்படி ஒரு காட்சி வரும்னு. என் தலைவன் டி.ஆர்ரோட எந்த படத்துலயும் இப்படி வந்ததே இல்லை. நீங்க என்ன தெரிஞ்சா பண்ணீங்க. அப்புறம் என்ன எப்பவும் போல நீ என்றே கூப்பிடுங்க. உங்க வீட்டுக்காரிய நீங்க, வாங்கன்னு மரியாதையாவா கூப்பிடுவீங்க" என்றேன்.

என் காதலை நான் சொல்லிவிட்டேன். ஐ லவ் யூ என்றோ அல்லது நான் உன்னை காதலிக்கின்றேன் என்றோ கூறவில்லை. ஆனால் எங்களின் மனதில் இருக்கும் அன்பை, காதலை நாங்கள் இருவருமே கூறி விட்டோம்.

அன்று ராஜா என்னிடம் கேட்டது "நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா" என்று. இன்று எனது பதில் "உங்கள் வீட்டுக்காரி" என்று ஆரம்பித்ததில் அவனுக்கு புரிந்திருக்கும். முரடனுக்கு சந்தோசத்தில் எதுவுமே புரியவில்லை. உடனே என் கையை பிடித்துக்கொண்டான். நான் கொஞ்சம் தடுமாற உடனே அவனது கைகளை வெடுக்கென்று எடுத்துக்கொண்டு "சாரி" என்றான்.

இவன் ஒரு முட்டாள்தான். வீட்டுக்காரியின் கையை பிடித்தால் எந்த ஆம்படையான் மன்னிப்பு கேட்பான். நான் புன்னகை மாறாமல் அவனின் கைகளுக்குள் என் கைகைளை புதைத்துக் கொண்டேன்.

அவன் என் கையை பிடித்து என் காலடியில் அமர்ந்திருந்தான். அப்போதுதான் என் மனதில் ஒரு விபரீதமான எண்ணம் உதித்தது. ராஜா இருந்த விதம் மகாராணிகளின் முன் அடிமைகள் இருப்பது போல இருந்தது. என்னை நான் மகாராணியாக உணர்ந்தேன். ராஜாவை என் அடிமையாக நினைக்க ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் இதை மிஸ்ட்றஸ் என்று கூறுவார்கள். என் தந்தை மீதிருந்த அளவுக்கதிகமான வெறுப்பு, ராஜாவை இப்படி பார்க்க தோன்றியது. அதற்காக நான் அவனை கேவலப்படுத்த போவதில்லை. என் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க உதவ போகும் தேவதூதன் அவன். நான் கூறுவதை முழுமையாக கேட்கும் ஆணாக அவனை மாற்ற வேண்டும். இதற்கு நான் ரொம்பவும் கஷ்டப்படத் தேவையில்லை. என் அன்பை கொடுத்தாலே போதும். ஆனால் அந்த அன்பை வெளிக்காட்டும் விதம் கொஞ்சம் கடுமையாக இருக்க வேண்டும். எல்லாமே ஏவலாக இருக்க வேண்டும். எந்த செயலிலும் முதல் அடி என்னுடையதாக இருக்க வேண்டும்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro