6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இதுவரை: குணால் , ஸ்ரேயா தாங்கள் நடத்தி வைக்க போகும் அடுத்த திருமண ஏற்பாடுகளை பார்க்கின்றனர்.. இதற்கிடையே சிந்து ஒரு இளைஞனை சந்திக்கிறாள்.

______________________________________

சிந்து: ஹலோ மிஸ்டர்.

அந்த இளைஞன் திரும்பினான்.

இளைஞன்: என்ன சொல்லுங்க மிஸ்.

சிந்து: நீங்க உண்மையிலேயே great. இந்த காலத்துல பெத்த அம்மா அப்பாவுக்கே அக்கறை படாம முதியோர் இல்லத்துல சேர்த்திட்டிருக்காங்க..ஆனா நீங்க வாயில்லா ஜீவன் மேல அக்கறை காட்டறீங்க..☺இந்த தலைமுறைல இப்படிபட்ட நல்லவங்களை பாக்கறதே அபூர்வமாயிடுச்சு😊அப்படிபட்டவங்களை பாராட்டியே ஆகனும்.. அதான் கூப்பிட்டேன்😊 well done

இளைஞன்: நான் இப்படி வளர முக்கிய காரணம் நான் சின்ன வயசுல இருந்தே என் தாத்தா,பாட்டி அரவணைப்புல , இராமாயணம் & மகாபாரதம் போன்ற இதிகாசங்களை கேட்டு படிச்சு வளர்ந்தது தான்.. ☺ anyway பாராட்டறதுக்கு யாருமே யோசிக்கிற இந்த காலத்துல நீங்க என்னை பாராட்டறீங்க..நீங்களும் great தான்😊 ஜ ஆம் ருத்ரா☺

சிந்து: என் பேர் சிந்து.☺

ருத்ரா: சிந்து மழை ரொம்ப பெய்யுது. நீங்க எங்க இருக்கீங்க னு சொன்னா நான் உங்களை என் கார்ல உங்களை டிராப் பண்வேன். கையில காய்கறி கூடையை வைச்சுகிட்டு நீங்க எப்படி மழையில போவீங்க? இல்லைனா உங்க வீட்டுக்கு பக்கத்துல விடறேன்.

சிந்து: ருத்ரா நீங்க எப்ப இதிகாசம் கேட்டு பாட்டி தாத்தா வளர்ப்புல வளர்ந்தேன் னு சொன்னீங்களோ அப்பவே நீங்க ஜென்டில்மேன் னு நம்ப ஆரம்பிச்சிட்டேன்☺மிஸ்டர் ருத்ரா என்னை என் வீட்ல டிராப் பண்வீங்களா?😇

ருத்ரா: கண்டிப்பா மிஸ் சிந்து☺

சிந்து: ருத்ரா உங்களுக்கு அஜித் னா ரொம்ப பிடிக்குமா?

ருத்ரா: ஹை ஆமா எப்படி சிந்து சரியா கண்டுபிடிச்சீங்க?

சிந்து: கார்ல நான் ஏறினதுல இருந்து அஜித் பாட்டா போட்டுட்டிருக்கீங்களே😁அத வைச்சு தான் கண்டுபிடிச்சேன்..
யு know something?

ருத்ரா: என்ன சிந்து?

சிந்து: எனக்கும் அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும்😊

ருத்ரா: ஹீரோயின்ல அனுஷ்கா பிடிக்கும்னா நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே likes தான் ங்க😊

சிந்து: ஹை ஆமா ருத்ரா😍எனக்கும் அனுஷ்கா தாங்க பிடிக்கும்..சரி அந்த left எடுத்தா முதல் வீடே என் வீடு தான் ருத்ரா😊

காரிலிருந்து இறங்கிய சிந்து,

சிந்து: ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் ருத்ரா..வீட்டுக்கு வாங்க.. மழையில நனைஞ்சிருக்கீங்க.. இப்படியே இருந்தா காய்ச்சல் வந்துடும்.. டவல் தரேன் துடைச்சிக்குவீங்க..

ருத்ரா: ஜயோ சிந்து வேணாங்க..நம்ம உப்புறம் சந்திக்கலாம்..நான் கிளம்பறேன்..

சிந்து: இப்படி சொன்னா நீங்க கேக்க மாட்டிங்க..

காரிலிருந்து சாவியை எடுத்தாள் சிந்து.

சிந்து: மிஸ்டர் ருத்ரா.. எனக்கு உங்களை பத்தி தெரியும்..எந்த தயக்கமும் வேணாம்.. உள்ளே வாங்க..☺

ருத்ரா: விட மாட்டீங்க போல😂இதோ வரேன்.

வீட்டிற்குள் சென்ற ருத்ரா, வீட்டை பார்த்து வியந்தான்..

ருத்ரா: சிந்து வீட்டை எப்படி இவ்ளோ சுத்தமா வெச்சிருக்கீங்க? சூப்பர்ங்க.

சிந்து: நான் என்ன வேலைக்கா போறேன்..எப்பவும் வீட்ல தான ங்க இருக்கேன்.. அதான் வீடு இவ்ளோ சுத்தமா இருக்கு😂 சரி நீங்க தலையை துவட்டுங்க..நான் உங்களுக்கு சூடா டீ போட்டு எடுத்திட்டு வரேன்😊

ருத்ரா: ஜயோ டீ லாம் வேணாங்க..

சிந்து: வீட்டுக்கு வந்தவங்களை வெறுமனே அனுப்பறது நல்ல பழக்கம் இல்லை ங்க😊 அதுவும் நீங்க நல்லா நனைஞ்சிட்டிங்க.. சூடா டீ குடிச்சா தான் காய்ச்சல் வராம இருக்கும்.. ஒரு ஜந்து நிமிஷம் பொறுங்க.. டீ யோட வரேன்☺

ருத்ரா: சரி சிந்து☺

ஹாலில் showcase இல் இருந்த photos ஜ பார்த்து கொண்டிருந்தான் ருத்ரா..

சிறிது நேரத்தில் டீ யோடு வந்தாள் சிந்து..

ருத்ரா: ஆஹா டீ யோட வாசனை யே செம்மயா இருக்கேங்க.. தேங்கஸ்

சிந்து: ☺☺ அது என்னோட தங்கச்சி😊 பேரு ஸ்ரேயா.. இது அம்மா அப்பா☺
காசிக்கு போயிருக்காங்க.. தங்கச்சி மாங்கல்யம் தந்து னானேனா னு wedding planning agency நடத்தறா..

ருத்ரா: மாங்கல்யம் தந்து னானேனா வா😯 ஏங்க என் பிரெண்ட்ஸ் மூனு பேருக்கு அந்த agency மூலமா தாங்க நடந்துச்சு..உங்க தங்கச்சி அப்ப ரொம்ப பிரபலம் போலயே😊

சிந்து: ஆமா.. ரொம்ப தைரியசாலி😊 எந்த விஷயமா இருந்தாலும் சீக்கிரமா சரியா முடிவெடுப்பா..😊 அவளை மாதிரி இருக்கனும்னு நான் நிறைய தடவை நினைச்சிருக்கேன்.😊 ஆனா முடியல..

ருத்ரா: சிந்து, அதுக்கு ஏன் feel பண்றீங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி திறமை, தனித்துவம் இருக்கும்.. ஸ்ரேயா ஒரு விஷயத்துல unique ஆ இருந்தா நீங்களும் வேற விஷயத்துல இருப்பீங்க😊 அது உங்களுக்கே தெரியாம இருக்கலாம்.. ஆனா நீங்க அத கண்டுபிடிக்கனும்.don't worry.

சிந்து: எனக்கு புரியுது ருத்ரா😊 நானும் நான் எதுல தனித்துவம் வாய்ந்தவ னு கண்டுபிடிக்க இனிமே டிரை பண்றேன்.😊

ருத்ரா: சரி சிந்து நான் கிளம்பறேன்.. நேரமாயிடுச்சு.☺

சிந்து: சரி ருத்ரா..take care..😊

ருத்ரா கிளம்பும் போது, திரும்பி பார்த்தான்..

சிந்து புன்னகைத்தாள்..

"Bye" என கையசைத்தான்.. அவளும் கையசைத்தாள்..

காரில் ஏறி கிளம்பினான்..

சிந்து "ஹம்ம்ம்" என பெருமூச்சு விட்டபடி உள்ளே சென்றாள்..

ஸ்ரேயா: குணால் உன் பேச்சை கேட்டு காத்திருந்ததால இப்ப பாரு மழை நல்லா ஆரம்பிச்சிடுச்சு..

குணால்:  நீ சொன்ன மாதிரி கிளம்பிருந்தா இந்நேரம் எருமை நனையற மாதிரி முழுசா நனைஞ்சிட்டு நின்னிருப்போம்😏

ஸ்ரேயா: ம்க்க்கும்😏

ரேவதி: ஏய்ய் ஸ்ரேயா... இங்க என்னடி பண்ற? எப்படி இருக்க?

ஸ்ரேயா:(மனதிற்குள்) ஐயோ இந்த கிறுக்கியா? போச்சு.. திரும்ப என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கோ, அவன மாதிரி உத்தமன் உலகத்துலயே இல்லைனு ஆரம்பிச்சிடுவாளே!!

ரேவதி: என்னடி என்னை பாத்த ஆனந்தத்துல திகைச்சு நின்னுட்டியா?

ஸ்ரேயா: ஹா ஆமாடி.. எவ்ளோ நாளாச்சு உன்னை பாத்து..நான் நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க..

ரேவதி: எனக்கென்னடி.. நான் நல்லா இருக்கேன்.. என் அண்ணனுக்கு தான் பொண்ணு பாத்திட்டிருக்காங்கடி... நான் தான் உன்னை பத்தி சொல்லி வைச்சிருக்கேன் வீட்ல..

ஸ்ரேயா: ஏன்டி, 1 வருஷம் கழிச்சு பாக்கற.. இத தவிர என்கிட்ட பேச வேற எதுவுமே இல்லையாடி உனக்கு.. எப்ப பாத்தாலும் ஏன் கல்யாணத்த பத்தி பேசற.. வேற வேலையே இல்லையா?

ரேவதி: ஏய் இல்லடி.. உன்கூட படிச்ச
எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. ஆனா உனக்கு இன்னும் ஆகல.. இந்த காலத்துல நல்ல பையன் கிடைக்கறது ரொம்ப கஷ்டம்டி.. என் அண்ணன் ரொம்ப நல்லவன்.. உன்னை நல்லா பாத்துப்பான்.. அவன மிஸ் பண்ணா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்காதுடி.. வேற நல்ல பையன் கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்டி..

குணால்:(மனதிற்குள்) ஐய்யய்ய என்ன இந்த பொண்ணு அண்ணனுக்கு இப்படி marketing பண்ணுது!! 😂😂ஸ்ரேயா கடுப்பாகறது சிரிப்பா இருக்கு..

ஸ்ரேயா: நல்ல பையன் ஏற்கனவே கிடைச்சாச்சுடி.. அதனால நீ கவலைப்படாத..

குணால்:(மனதிற்குள்) இது என்ன புது திருப்பமா இருக்கு?🤔 யார் அவன்?!!! ஹ்ம்ம்ம்..

ரேவதி: என்னடி சொல்ற? யாரது? வாய்ப்பே இல்லை..

ஸ்ரேயா: இதோ குணாலை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்... இவன் தான் அந்த பையன்..

குணாலினால் தான் கேட்டதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..

குணால்:(மனதிற்குள்) ஆஹா இத கேக்கறதுக்கு நெஞ்சோரத்தில சந்தோஷமா இருக்கு😍 அவ பொய் சொன்னாலும் கேக்கறதுக்கு நல்லா தான் பா இருக்கு😍

ரேவதி: ஏய் ஒரு நிமிஷம் தனியா வாடி.. மிஸ்டர் நான் அவகிட்ட தனியா பேசனும்..

ஹ்ம்ம் என தலையசைத்தான் குணால்..

ஸ்ரேயா: என்ன டி இப்ப என்ன சொல்ல போற?

ரேவதி: ஏய் அவனை பாத்தாலே வேற ஊர்க்காரனா தெரியுது.. நீ அவசரப்படற டி.. வடமாநில காரங்களை நம்பவே கூடாதூடி..ஏற்கனவே கல்யாணம் ஆனவனா கூட இருக்கலாம்.. அவங்கலாம் உண்மையான பாசத்தோட பழக மாட்டாங்க.. மூனு நாலு தடவை யோசி...

ஸ்ரேயா: அதெல்லாம் தெரியும்டி.. குணால் கூட எத்தனை நாளா பழகறேன்.. எனக்கு தெரியும் அவன் எப்படி பட்டவன்னு.. அவன் மத்த பசங்க மாதிரி இல்லை.. அதனால நீ அவன பத்தி எதுவும் சொல்லாத.. உன் அண்ணணுக்கு ஒரு குடும்ப குத்துவிளக்கா பாத்து கல்யாணம் கட்டி வைடி..☺

ரேவதி: அப்புறம் உன் இஷ்டம்டி..உன் நல்லதுக்கு தான் நான் சொன்னேன்..

ஸ்ரேயா: ஏய் போடி போடி டுபுக்கு.😏 நாங்க பாத்துக்கறோம்.. முடியை கட்டு.. இல்லைனா தேங்காய் நார் தொடப்பம்னு நினைச்சு யாராச்சு ரோடு கூட்ட தூக்கிட போறாங்க..😏 பப

ரேவதி கிளம்பினாள் ஒருவழியாக😂

ஸ்ரேயா: ஏய் என்ன சிரிப்பு உனக்கு?

குணால்: 😂😂 அவங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கலாம்ல

ஸ்ரேயா அவன் தலையில் ஓங்கி கொட்டினாள்.

குணால்: ஆஆஆ😯 அடிப்பாவி ரொம்ப வலிக்குதுடி.

ஸ்ரேயா: அதுக்கு நீ மூடிட்டு இருக்கனும்.. இனிமே இப்படி சொன்ன உனக்கு ஏதாச்சு அருக்காணியை கட்டி வைச்சிருவேன் நானே😏

குணால்: ஜயோ நான் எதுவும் சொல்ல😥 கிளம்புவோமா? மழை விட்ருச்சு.

ஸ்ரேயா: ஏய் நான் அவளுக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறதா பொய் சொன்னேன்.. சாரி..

குணால்: ஜயோ இதுல என்ன இருக்கு.. அதுவும் கேக்கறதுக்கு நல்லா தான் இருந்துச்சு😍

ஸ்ரேயா: என்னது?🤔 இப்ப என்ன சொன்ன?

குணால்: அது எப்படி தான் ஹீரோயின்களுக்கு இந்த டைம்ல லாம் மட்டும் காது கேக்காதோ!!

ஸ்ரேயா: போதும் உளறினது வா😏

குணால்: ஸ்ரேயா அங்க பாரேன்..

ஸ்ரேயா: எங்க?

குணால்: நிலாவை பாரேன்😍 பௌர்ணமிக்கு அடுத்த நாள் நிலவோட அழகே தனி ல😍

ஸ்ரேயா: ஆமா உண்மை தான்😍😍 ரொம்ப அழகா இருக்கு.. மழைமேகமெல்லாம் போனதால பளிச்சுனு தெரியுது😍😍

குணால்: என் பாட்டி எப்பவும் ஒண்ணு சொல்வாங்கலாம்..

ஸ்ரேயா: என்ன சொல்வாங்க?

குணால்: முழு நிலவு தெரியுற அன்னிக்கு நம்ம 1 நிமிஷம் கண்ணை மூடிட்டு கண்திறந்து நிலாவை பாத்தா நமக்கு ரொம்ப பிடிச்சவங்க முகம் அதுல தெரியும்னு சொல்வாங்க.. நான் நிறைய தடவை முயற்சி பண்ணேன்.. நிலாவுல வடை சுடற பாட்டி தான் தெரிஞ்சாங்க!😥

ஸ்ரேயா: 😂😂 ரொம்ப திமிரு டா உனக்கு.. இரு நான் ஒரு தடவை try பண்றேன்..

ஸ்ரேயா கண்களை மூடிக்கொண்டாள்..

குணால்: போதும் போதும் கண்ணை திற , 1 நிமிஷம் ஆயிடுச்சு..

ஸ்ரேயா கண்களை திறந்து நிலவை பார்த்தாள்..

குணாலை கண்ணாடியில் பார்ப்பதுபோல உணர்ந்தாள்..

நிலாவில் குணாலின் முகம் தெரிந்தது😍

ஸ்ரேயா:(மனதிற்குள்) எப்படி😯 எனக்கு மட்டும் முகம் தெரியுது.. குணாலோட முகம் தெரியுது.. அப்படினா நான் அவனை காதலிக்கறேனா?? 😯

குணால்: என்னாச்சு ஸ்ரேயா? உனக்கு யாராச்சு தெரியுறாங்களா?

ஸ்ரேயா: ம்க்கும் அதெல்லாம் இல்லை.. யாரும் தெரியல.. சரி போதும் உன் அலப்பறை.. வா போலாம் 😑 நேரமாச்சு...



அடுத்த பகுதியில் சந்திப்போம்☺














Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro