12. புரிதல் இரண்டு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

(உங்களுடைய உணர்வுகளை அந்த தருணத்தில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.... நன்றி)

சிந்து தனது அறைக்கு சென்று தனது தாய் தந்தையின் அன்பை ஒன்றாக கிடைத்ததையும், தனது ஏக்கங்களை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டதையும் எண்ணி படுக்கையிலே உருண்டு பிரண்டு கொண்டு இருந்தால்.... சிறிது நேர மகிழ்விற்கு பிறகு அர்ஜுனின் நினைவு வர அமைதியாக எழுந்து அமர்ந்தாள்.....

ஏன் இந்த அமைதி என்று தானே நினைக்கின்றீர்கள் சொல்கிறேன்....

சிந்துவின் இந்த தைரியமான வெளிப்படையான பேச்சிற்கு, அர்ஜுனின் ஆதரவும் அவன் தனக்கு கொடுத்த தைரியமும் தானே... அர்ஜுன் அவ்வளவு தைரியம் கொடுத்தானா என்று தெரியவில்லை, அனால் அவனின் அந்த அன்பான வார்த்தைகள் தான் சிந்துவிற்கு ஒரு ஊக்கத்தையும் தைரியத்தையும் கொடுத்தது....

தான் அன்பு கொண்டு இருக்கும் ஒருவர் வார்த்தைகளால் தரும் ஆதரவும் அன்பும் தைரியமும் ஒரு ஆண் ஆகட்டும் அல்லது பெண் ஆகட்டும் அது அவர்களுக்கு அளவில்லா தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கும் என்பது உண்மை... காதலில் கூட இப்படி ஒரு ஊக்கம் வருமா என்பது சந்தேகம் தான்.... ஆனால் அளவுகடந்த அல்லது எதிர்பார்ப்பின்றி ஏற்படும் அன்பிற்கு அந்த சக்தி கண்டிப்பாக உண்டு என்பதை மறுக்க இயலாது....

அது போலவே அர்ஜுனின் அன்பு சிந்துவை தனது அன்னையிடம் பேச வைத்தது... அர்ஜுன் சொன்ன வார்த்தைகளால் தனது குடும்பம் இன்று ஆனந்தம் கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மகிழ்வுடன் தற்பொழுது இருக்க செய்து உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட சிந்து மனதிலே அர்ஜுனை நினைத்து புன்முறுவல் செய்தால்.... 

அவளுள் ஏதோ ஒரு சொல்ல இயலாத ஓர் உணர்வு படிந்திருந்தது அவளை சுற்றிலும்....

அர்ஜுனும் தனது தந்தையிடம் பேச போகின்றேன் என்று கூறியதை அப்போது தான் நினைவில் கொண்டால்... அப்பொழுது மனதில்

சிந்து மனதில்: "ஐயோ அர்ஜுன், உங்க அப்பா கிட்ட பேசுறேன்னு சொன்னிங்களே என்ன பண்றிங்கனு தெரியல... கடவுளே தவறாகவோ இல்ல கஷ்டம் தர மாதிரியோ அர்ஜுனுக்கு ஏதும் நடக்க கூடாது" என்று அர்ஜுனிற்காக கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டு அவனின் நினைவுகளாலேயே நித்திரையில் ஆழ்ந்தாள்....

சில மணி நேரங்களுக்கு முன்பு அர்ஜுனின் வீட்டில்:

சிந்து அர்ஜுனிடம் உரிமையுடன் மனதிலே உள்ளவற்றை பகிர்ந்து கொண்டது அவனை ஆனந்தத்தில் இருக்க வைத்தது...

மீனா, ஷங்கர் ஆகியோருடன் கிண்டலுடன் பேசிவிட்டு சிந்துவையும் அவளது துள்ளலையும் கண்ட அர்ஜுன் மகிழ்வுடன் பிரிய மனம் இல்லாமல் சிந்துவிடம் கண்களால் விடைபெற்றுக்கொண்டு தன்னுடைய இல்லத்திற்கு சென்றான்....

மாலை தனது அன்னையிடம் பேசிவிட்டு சென்ற பிறகு அர்ஜுனின் அப்பா வீட்டிற்க்கு வந்து குளித்து விட்டு தனது மனைவியிடம் கேட்டார்....

அர்ஜுன் அப்பா: "எங்க அர்ஜுனை காணோம் எப்போதும் இந்த நேரத்துல வீட்ல தான இருப்பான், கடைக்கு அனுப்பி இருக்கயா என்ன" என்று கேட்க

அம்மா: "இல்லைங்க அவன் அவனுடைய நண்பனை பார்க்க போயிருக்கான்" என்று கூற

அப்பா: "எதுக்கு போயிருக்கானு சொன்னானா"

அம்மா: "அவங்க School ல நடக்குற விளையாட்டு போட்டிகள்ல கலந்துக்க போறேன், அது பத்தி அவன் கிட்ட பேசிட்டி வரேன்னு சொன்னாங்க"

அப்பா: "அவனை நான் விளையாட கூடாது படிக்கறதுல மட்டும் கவனம் செலுத்தணும்னு சொல்லி இருக்கனே. அவனுக்கும் தெரியும்ல அதையும் மீறி எதுக்கு போனான். வரட்டும் அவனுக்கு இருக்கு" என்று அர்ஜுன் கோபத்துடன் தந்தை கூறும் போதே அவனின் அம்மா சிறிது நடுங்கி தான் போனார்....

அவனின் அன்னை அதன் பிறகு பேசவே இல்லை அவரிடம். அவருக்கு தன்னுடைய மகனை அடித்து விடுவாரோ என்ற பயத்தில் செய்வதறியாது அமைதியை கடைபிடித்தார்...

சில நிமிடங்களுக்கு பிறகு தன்னுடைய தந்தையின் வண்டி நிற்பதை பார்த்தவுடன் வெளியே அர்ஜுன் வந்து நின்று "இன்னைக்கு என்ன நடக்க போகுதோ தெரியல" என்று நினைத்து கொண்டே வீட்டினுள் நுழைத்தான்...

அவன் தனது தந்தை இருப்பதை கண்டும் காணாமல் உள்ளே சென்றவனை அவனது தந்தையின் குரல் நிறுத்தியது...

அப்பா: "எங்கடா போயிட்டு வர"

அர்ஜுன்: "ஷங்கர் வீட்டுக்கு போயிட்டு வரேன்பா"

அப்பா: "யார் அது எங்க இருக்கு அவங்க வீடு"

அர்ஜுன்: "நம்ம வீட்டுக்கு பின்னாடி இருக்க தெருவில் தான் இருக்கு. அவன் அப்பா கூட உங்களுக்கு தெரிச்சவங்கபா"

அப்பா: "சரி அது இருக்கட்டும், ஏதோ School Games ல கலந்துக்க போறேன்னு சொன்னதா உன் அம்மா சொன்னா. அப்படியா"

அர்ஜுன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்... அவனது சில நொடிகளை கூட பொறுக்க இயலாதவர் அவனிடம்

அப்பா: "உன் கிட்ட தான கேட்டுட்டு இருக்கேன், உனக்கு காது கேக்கல" என்று கத்தினார் பக்கத்து வீட்டிற்கு கேட்குமளவிற்கு...

அர்ஜுன்: அவரது கத்தலில் நிமிர்ந்தவன், ஒரு நொடி மூச்சு வாங்கிக்கொண்டு சிந்து அவனிடம் கூறியதை நினைத்துக் கொண்டான்...

சிந்து கூறியது "அப்பா கிட்ட உங்க விருப்பதை நேரடியா பேசுங்க அர்ஜுன்" என்று அவள் சாதாரணமாகவே கூறி இருந்திருந்தாலும் அவனிற்கு அது அதிக தைரியம் ஏற்பட்டது... ஏனென்று தெரியவில்லை ஒரு நொடி மூச்சு வாங்கிய பின்பு தனது தந்தையை நேருக்கு நேர் பார்த்தான்...

அர்ஜுன் தனது பேச்சை ஆரம்பித்தான்

அர்ஜுன்: "ஆமாப்பா நான் Inter School Games ல கலந்துக்க போறேன்" என்று கண்களில் எந்த வித துடிப்பும் இல்லாமல் தனது தந்தையிடம் கூறினான்...

முதன் முறையாக இத்தனை வருட காலங்களில் தனது தந்தையை நேருக்கு நேர் எதிர்கொள்ளாதவன், இன்றோ நேர்கொண்ட பார்வையிலே எந்த வித உணர்வுகளும் இல்லாமல் தைரியத்துடன் பேசுகிறான்...

இந்த பேச்சு அவனின் அம்மாவிற்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், இனிமேல் இருவரும் எவ்வாறு பேசிக்கொள்ள போகிறார்கள் என்று தான் வருத்தமாக இருந்தது...

அர்ஜுனின் பார்வையும் அவன் தனக்கு பதில் அளித்த வார்த்தையும் அவருக்கு ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தியது... 

ஏனென்றால் இத்தனை வருட காலத்தில் அர்ஜுன் தன்னிடம் எதிர்த்து பேசியது இல்லை, அதுமட்டுமில்லாமல் தனது பேச்சை அவன் மீறியதும் கிடையாது அவருக்கு ஏனோ அவனின் இந்த பார்வை வேறு எதோ ஒரு உணர்வை ஏற்படுத்தியது...

அப்பா: "நான் தான் உன்ன படிக்கற வேலைய மட்டும் தான் பாக்கணும் வேற ஏதும் பண்ண கூடாதுனு சொன்னேன்ல"

அர்ஜுன்: "நீங்க சொன்னிங்கனு தான் நான் இதுநாள் வரையும் என்னோட சின்ன சின்ன ஆசைகளையும் விட்டுக்கொடுத்துட்டு இருந்தேன். இனிமேலும் என்னால அப்படி இருக்க முடியாது" என்று தீர்க்கமாக கூற அர்ஜுனின் தந்தை ஏனோ கோவம்படாமல் அமைதியாக அவனிடம் விடைகளை அறிய கேள்விகளை தொடுத்தார்....

அப்பா: "ஆசைகளா என்ன ஆசைகள்னு சொல்லு"

அர்ஜுன்: "வீட்டு பக்கத்துல இருக்க என் கூட படிக்கற பசங்கள்லாம் Cricket, Shuttlecock னு விளையாடும் பொது நான் தூரத்துல நின்னு வேடிக்கை மட்டும் தான் பாத்து இருக்கேன், ஏனா நீங்க என்ன அவங்க கூட பாத்தா அத பாக்க கூட விட மாட்டிங்கனு தான்..... ஏன் தம்பி கூட விளையாட போறான் அவனை நீங்க ஏதும் சொல்றது இல்ல. அவன் எப்போ போனாலும் எப்போ எந்த நேரத்துல வந்தாலும் அவனை நீங்க கண்டுக்கறது கூட இல்ல. நான் மட்டும் என்ன பண்ணேன். எனக்கும் Shuttlecock விளையாடனும் Baseball விளையாடனும் னு லாம் ஆசை இருக்கு. School ல எல்லாரும் Sports ல கலந்துக்கும் போது PET Class ல நல்ல விளையாடுனேயே நீயும் கலந்துக்கோ னு Sir லாம் கூப்பிடுவாங்க. அப்போ லாம் நீங்க என்ன படிக்கற வேலைய மட்டும் தான் பாக்கணும்னு சொல்லி சொல்லி மிரட்டுனதுலாம் நியாபகம் வந்து நான் கலந்துக்கலைனு சொல்லிடுவேன்"

உங்களுக்கு படிக்க வாய்ப்பு இருந்தும் அத படிக்க முடியாம போய்டுச்சு படிக்க முடியலன்னு தான் நீங்க என்ன படிக்க சொல்றிங்கனு எனக்கு தெரியும் புரியுது. ஆனா அதுக்காக நான் படிப்பை மட்டும் தான் எப்போதும் பாக்கணும் செய்யணும்னு சொல்றது எந்த விதத்துல என்னால ஏத்துக்க முடியும். நான் படிக்கலைனு சொல்லல எனக்கும் சின்ன சின்ன ஆசைகள் இருக்கு அதையும் நான் பண்ணனும்னு தான் ஆசைப்படுறேன்.

எத்தனையோ தடவை என்ன அடிச்சு இருக்கீங்க, சில நேரத்துல ரத்தம் கூட வந்து இருக்கு அப்போல்லாம் நானும் மத்தவங்க மாறி இருக்க நினைச்சது தப்போன்னு கூட நினைச்சது உண்டு. நீங்க அடிச்சதுக்கு அப்புறம் என்ன கூப்டு பாசமா பேசுவீங்களே தவிர அன்பா இருந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது இல்ல.

நீங்க என்னோட திறமைகளை குறைக்கற மாறி தான் என் கிட்ட சொல்லிட்டு என்ன எதுலயும் சேராம பன்றிகளோனு நான் நிறையா நேரத்துல நினச்சு இருக்கேன்.

எனக்கும் சின்ன சின்ன ஆசைகள் இருக்குப்பா, நான் படிக்காமலாம் போக மாட்டேன் ஆனாலும் எனக்கும் கொஞ்சம் தம்பி அளவுல இல்லனாலும் என்னையும் சில விஷயங்கள்ல விடுங்கனு தான் சொல்றேன்" என்று தனது மனதில் இருந்ததை கூறி முடித்தான்...

அவனது தந்தை இதுநாள் வரையில் தான் செய்வது சரி என்று தானே நினைத்து செய்து கொண்டு இருந்தேன். ஆனால் அது என் மகனை எந்த அளவுக்கு கஷடம் அடைய செய்துள்ளது என்று இப்போதான் தெரியுது.

தன்னால படிக்க முடியலன்னு அவன்மீது அந்த படிப்பை திணிச்சு இருக்கேன்னு நினைக்கற அப்போ தான் நான் செஞ்சது பெரிய தப்புனு தெரியுது... என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டு அவனிடம் கூறினார்...

அப்பா: "அர்ஜுன் நீ இந்த அளவுக்கு வருந்துற மாறி நான் நடந்து இருக்கேனா. நான் படிக்காத நால தான் என்னோட இருந்த எல்லாரும் நல்ல இடத்துல வேலைல இருக்கும் பொது நான் இன்னும் முன்னேறாமல் இருந்து இருக்கேன்னு தோணிட்டே இருக்கும் அதுனால தான் என்னோட பசங்களும் அந்த மாறி ஒரு என்னத்துக்கு வரக்கூடாதுன்னு நினச்சேன். நீ விளையாட்டுல அதிக கவனம் செலுத்துனா படிப்பு பாதிக்கும்னு தான் நான் அப்படிலாம் சொன்னேன் அர்ஜுன்"

"நான் உன்ன அடிக்கும் போதுலாம் ரொம்ப வருத்தம்பட்டு இருக்கேன் அது உன் அம்மாக்கு மட்டும் தான் தெரியும். உன்ன அடிச்சதுலாம் நீ பொறுப்பா இருக்கணும் நல்ல படிச்சு நல்ல வேலைக்கு போகணும்னு தானே தவிர, உன் மேல அன்பு இல்லாமல் லாம் இல்ல... உன்னோட தம்பி சின்ன வயசுலயே Operation பண்ணி இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிடு இருக்கான். அதுனால தான் அவனோட வளர்ச்சியை தடுக்க கூடாதுனு அவனை ஏதும் கேக்குறது இல்ல... ஆனா அது உன்ன இந்த அளவுக்கு பாதிக்கும் னு யோசிக்காம விட்டுட்டேன். உன்னையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அர்ஜுன் உன் தம்பி மட்டும் தான் எனக்கு பிடிக்கும்னு நினைக்காத. நீயும் அவனும் எனக்கு ஒன்னு தான்" என்று கூறிவிட்டு அவனது கன்னத்தில் முத்தமிட்டார்....

அவரது பேச்சில் தான் அவன் இதுநாள் வரையிலும் தவறாக புரிந்து கொண்டு உள்ளோம் என்று உணர்ந்துகொண்டு சிறிது கண்ணீர் வந்தது.... அவர்களது பேச்சை கேட்டுக்கொண்டு இருந்த அர்ஜுனின் அம்மா அங்கே வந்து "போதும் போதும் கொஞ்சம் நானும் என் அன்பை காட்டிக்கொள்கிறேன்" என்று அர்ஜுனின் மற்றொரு கன்னத்தில் முத்தமிட்டார் அவனது அன்னை....

இருவரின் பாசத்தையும் அன்பையும் இன்று தான் அர்ஜுன் முழுமையாக உணர்ந்தான் அர்ஜுன்... அதன் பிறகு...

அப்பா: "உனக்கு எந்த Games la கலந்துக்கணுமோ கலந்துக்கோடா, எந்த சந்தேகம்னாலும் கேளு நான் சொல்லித்தரேன்... Shuttlecock நான் விளையாட போகும் போது கூட வா. நிறைய சொல்லி தரேன்" என்று சொன்னதும் அர்ஜுனின் முகத்திலே ஆனந்தம் அதிகமானது...

பிறகு தனது தம்பி வந்ததும் நால்வரும் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டு தன்னுடைய அறைகளுக்கு சென்றனர்....

இன்று அவன் மனம் ஆனது மகிழ்வுடன் இருந்தது. அவனும் சிந்துவை போல தனது படுக்கையிலே சுழன்று கொண்டு இருந்தான்.... அப்போது தான் சிந்துவின் நியாபகம் வந்து சிந்துவை போலவே அவனும் எழுந்து அவளை பற்றிய நினைவுகள் ஆனது அவள் மைதானத்தை விட்டு வீட்டிற்கு செல்லும் போது அவள் பார்த்த அவளின் பார்வை அவனை இன்னும் ஆனந்தம் கொள்ளவே செய்தது....

பின் நித்திரையின் பிடியில் வீழ்ந்தான் நம் அர்ஜுன்....

நாளைய விடியல் ஆனது அவர்களுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை அடுத்த பதிவிலே காண்போம்....

---------------------------------------------------------------

தங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..........

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro