19. சிந்துமா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

(உங்களுடைய உணர்வுகளை அந்த தருணத்தில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.... நன்றி..

Please make your comments for every paragraph... That will very useful to me... )

மீனா வருவதற்கு முன்பு சிந்துவுடன் பேசிக்கொண்டு இருந்ததை பற்றி அர்ஜுன் அவளிடம் கேட்டான்... அவள் அவனிடம் மனம் விட்டு இனி பொய் சொன்னா கண்டு புடிச்சுடுவாருனு உண்மையை மனம் விட்டு சொல்லி விட்டு, பின் அவனிடம் "நான் பொய் சொல்கிறேன்னு எப்படி கண்டு பிடிசீங்க" என்று கேக்கும் பொது... "சொல்லமாட்டேனே" என்று விட்டு அர்ஜுன் ஓட அவனை துரத்தி சென்றால் சிந்து... சிந்துவிடம் வார்த்தைகளால் விளையாடிக்கொண்டு இருந்தான் அர்ஜுன்....

சிந்துவும் அவனிடம் சகஜமாக மாறி அவனிடம் விளையாடிக்கொண்டு இருந்தாள் அவனை மிரட்டுவது போல சைகை செய்து கொண்டும் பேசிக்கொண்டும்....

சிந்து: "இப்போ சொல்லமாட்டேன்னு சொல்லுங்க பாப்போம் அர்ஜுன்ன்ன்ன்ன்" என்று மிரட்டுவது போல கூறினால்....

அவள் விளையாடுகிறாள் என்று தெரிந்து கொண்டு,

அர்ஜுன்: "சரி சரி சொல்றேன் சொல்றேன்" என்று சொல்லி "அந்த குச்சியை கொஞ்சம் ஓரமாக வச்சா நான் பயமில்லாம சொல்வேன்ல" என்று பயந்தவன் போல நடித்து சொல்லவும் சிந்து வாயில் கையை வைத்து கொண்டு சிரித்தாள்....

அவள் சிரிப்பதை கண்டு மகிழ்ந்தவன் சிந்துவின் அருகே சென்று

அர்ஜுன்: "பாத்து சிந்து பள்ளு கொட்டிட போகுது" என்று சொல்லி மீண்டும் ஓடினான்.......

இப்போ செம்மையா கோபம் வந்தது போல பார்த்த சிந்து "இனி விளையாண்டா வேலைக்கு ஆகாது" என்று மீண்டும் துரத்தி சென்று இப்போது அவனின் கையை பிடித்தால் சிந்து....

(Background BGM song -

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது...)

சிந்து சும்மா பார்த்தாலே சிலை ஆகிடுவான் நம்ம அர்ஜுன், கையை பிடிச்ச என்ன ஆகுவான்னு நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க... கையை பிடித்த சிந்து அவனை பார்க்க, அவன் சிரித்து கொண்டே அவளை பார்த்தான்.... அவன் பார்வை அவளை ஏதோ செய்ய அவன் கண்களை காணாது வெட்கத்துடன் அவனை ஒரு புள் மேட்டில் இருந்த அமரும் இடத்தில அமர வைத்தால்...

அமர வைத்தவள் கையில் இருந்த குச்சியால் ஒரு அடி அவனிற்கு வலிக்காமல் அடித்தால்....

சிந்து: "இது வெறும் sample தான், இப்போ நீங்க சொல்லல அடி இன்னும் நல்ல விழும்" என்று முகத்தினில் முறைப்பது போல செய்து விட்டு, மனதிலே அவனின் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தாள் ஆவலுடன்........

அர்ஜுன்: "சரி சொல்றேன் சிந்து" என்று அவளது கையை பிடித்து அமர வைத்தான்... அவளின் உள்ளங்கையை பிடித்து கொண்டு இருந்த அர்ஜுன் அதை விடவே இல்லை...

அவளோ அவனின் மிருதுவான கை பிடியில் அகப்பட்டு கையை விளக்கி விடாமல் அமர்ந்தாள் விளக்கி விடவும் முடியாமல் "விலகிக்கொள்ளடா" என்று கூற இயலாமலும் இருந்தால் சிந்து...

சிந்து தனது தலையை குனிந்து கொண்டு அவனின் செயல்களை கவனித்துக்கொண்டு அவனை ஆராய்ந்தால்....

அர்ஜுன் அவளது கையை ஏன் அவ்வளவு உரிமையுடன் பிடித்தான் என்று அவனிற்கு தெரியவில்லை ஆனாலும் அவளது கையை விலக்கிக்கொள்ள மனம் இல்லை... சிந்து தன்னை விளக்கிவிடாததை நினைத்து கொண்டு அவ்வாறே அவளது உள்ளங்கைகளை பிடித்து தாங்கிகொண்டு இருந்தான்.... அவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்....

அர்ஜுன்: "சிந்து"

சிந்து: "சொல்லுக அர்ஜுன்" என்று கூறினாலே தவிர வார்த்தை வரவில்லை காத்து தான் வந்தது.... அதை அறிந்த அவள் இரும்புவது போல செய்து விட்டு "சொல்லுக அர்ஜுன்" 😀😀😀😀😀

அர்ஜுன்: "நான் நீ எப்படி பொய் சொன்னேன்னு சொல்லியே ஆகணுமா"...

சிந்து: "ஏன் அர்ஜுன் சொல்ல விருப்பம் இல்லையா"

அர்ஜுன்: "சே சே, அப்படிலாம் இல்லடா சிந்து"

சிந்து: "அப்புறம் ஏன் சொல்ல மாட்டேன்னு சொல்றிங்க"

அர்ஜுன்: "சொல்லமாட்டேன்னு நான் எப்போடா சொன்னேன்"

சிந்து: "பின்ன சொல்லியே ஆகணுமான்னு கேட்ட வேற என்ன பதிலா இருக்கும், விருப்பம் இல்லைனா தான சொல்லாம இருப்பீங்க..."

அர்ஜுன்: "அத பத்தி இப்போவே சொல்லனுமா, இல்ல இன்னொரு நாள் சொல்லட்டுமான்னு கூட பதில் இருக்கலாம்ல சிந்து..."

சிந்து: "அப்படி ஒன்னு இருக்கோ" என்று சிரித்தாள்

அர்ஜுன் அவளது சிரிப்பினால் புன்னகைத்து கொண்டே

அர்ஜுன்: "ஆமா ஆமா" என்றான்

சிந்து: "எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும், சொல்லிடுங்க... இல்லைனா எனக்கு தூக்கமே வராது" என்று கூற

அர்ஜுன்: "சரி சொல்றேன், ஆனா ஒரு condition" என்று அவள் கண்களை பார்த்தான்...

சிந்து: "அவனின் பேச்சு புரியாமல், கண்களை விரித்து யோசித்த்தால் மனதிலே "என்ன இப்படிலாம் சொல்றாரு என்ன சொல்ல போறாரு, எப்படி கண்டுபிடிசீங்கனு தானே கேட்டான்... சரி OK சொல்லிடலாம்...." என்று நினைத்தால்.........

சிந்து: "சரி என்ன கண்டிஷன் சொல்லுக"

அர்ஜுன்: "நான் உன் கிட்ட அது எப்படினு சொல்லிட்டா என் கூட நீ trekking கண்டிப்பா வரணும் நான் போகும் போது, நீ வரேன்னு சொல்லு நான் சொல்றேன்"

சிந்து யோசித்து விட்டு "அது நடந்த பாத்துக்கலாம்" என்று நினைத்துவிட்டு, "அர்ஜுன் கிட்ட ஓகே சொல்லிட்டு வரலன்னு சொன்ன வருத்தம்படுவாரே, எனக்கும் போகணும்னு ஆசைதான் ஆனா அப்பா விடுவாரான்னு தெரியலையே" என்று மனதில் நினைத்து கொண்டே "அதான் அப்பாவும் அம்மாவும் எனக்கு பிடிச்ச மாறி இருக்கேன்னு சொல்லி இருக்காங்களே, சோ ஓகே சொல்லிடலாம்" என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக்கொண்டு பதிலையும் சிந்தித்தால்... பின்

சிந்து: "சரி அர்ஜுன் கண்டிப்பா வரேன், இப்போ சொல்லுக எப்படினு"... என்று சொல்லி விட்டு அர்ஜுனை பார்த்தால்

அர்ஜுன் புன்னகைத்து கொண்டு அவளது கையை சிறிது இறுக்கினான்... பின்

அர்ஜுன்: "சிந்து, உன் கிட்ட எனக்கு பிடிச்சதே உன்னோட கண்கள் தான்... நான் ஒரு ஒரு நேரமும் உன்ன பாக்கும் போது உன் கண்களை பாத்து தானே பேசுவேன்... அப்போல்லாம் உன் கண்கள் உன்னோட கவலைகள் அப்புறம் உன் சந்தோசங்கள் லாம் எனக்கு ஏதோ சொல்ற மரியே இருக்கும்... அதே சமயம் நீ பொய் சொல்லும் போதுலாம் உன்னோட கண்கள் நிலையா இருக்காது துடிக்கும்... And உனக்கு பொய் கூட சொல்லவரல ஹாஹாஹா அத வச்சு தான் கண்டுபுடிச்சேன்" என்று கூறி விட்டு சிந்துவின் கண்களை பார்த்தான்...

அவளோ அர்ஜுனின் கண்களை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தால்... பின்

அர்ஜுன்: "உன் கண்கள் எப்போதும் நீ சொல்ல நினைக்கறதா என் கிட்ட சொல்றமாரியே ஒரு உணர்வு இருக்கு சிந்து" என்று கைகளை பிரித்து விட்டான்...

அவன் அவளது கைகளை விட்டதும் அவள் கண்கள் ஏங்கியது "ஏனடா விட்டுவிட்டாய் எனது கரங்களை" என்று கண்கள் சில நொடி சோக பார்வையை அவனிடம் வீசியது... அனால் அவன் கவனிக்காமல் வேறு பக்கம் திரும்பி இருந்தான்....

பிறகு சகஜம் அடைந்த சிந்து அவனது கைகளை "நீ விட்டுவிட்டால் என்னடா நான் பிடிப்பேன் உனது கரங்களை உரிமையுடன்" என்பது போல அவனது இடது கையை அவளது இடது கையின் மேலே வைத்து வலது கையால் அவனது கையை மூடினாள்....

அவளது ஸ்பரிசத்தை உணர்ந்த அர்ஜுன் அவன் கை இருந்த இடத்தை பார்த்தான்.... அவனது கை அவளது கைகளுக்குள் அகப்பட்டு விட்டது.... அப்போது அர்ஜுன்

அர்ஜுன் மனதிலே....

"கைகள் அகப்பட்டது என்னவோ

உனது கரங்களுக்குள்ளே

ஆனால் நான் உணர்வது என்னவோ

உன் இதயத்தின் உள்ளே தான்

விட்டுவிடாதே என் கண்மணியே

நான் மடிந்துவிடுவேன் உனது

கரங்களுக்குள்

நான் வாழவேண்டுமடி உனது

அன்பில் மூழ்கிடவே"

என்று கவிதையே அவனிற்கு வந்து விடும் அளவிற்கு அவளது அன்பை உணர்ந்தான் அவளது ஸ்பரிசத்தில்....

அவன் அவளது கண்களை நிமிர்ந்து பார்த்தான்....

சிந்து: "அர்ஜுன்ன்ன்ன்ன்....."

அர்ஜுன்: "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....."

சிந்து: "என்ன உனக்கு அவளோ பிடிக்குமாடாடாடாடா....." என்றால் அவளது கைகளை சிறிது இறுக்கிக்கொண்டு அவனது கை வெளியே வந்துவிடாத வாறு பிடித்துகொண்டாள்....

அவள் அவ்வாறு பிடித்து கொண்டதற்கு காரணம் அவளது மனதின் ஓசை என்னவென்றால்....

சிந்து மனதில்: "நீ இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதடா அர்ஜுன், நீ இல்லை என்று மட்டும் சொல்லி கையை பிரித்து விடக்கூடாது அர்ஜுன்.... அதனாலே உனது கைகளை இறுக்கி கொண்டேனடா...."

சிந்துவின் கண்களை ஆசையுடன் பார்த்தவன் அவளின் முன்பு என்ன சொல்வதென்று தெரியாமல் இருப்பது போல முழித்தான்.... உடலிலே மனம் குளிர்ந்து சிலிர்த்து போனது போல ஒரு நடுக்கம்....

அந்த நடுக்கத்தை சிந்துவும் உணர்ந்து

சிந்து: "உனது நடுக்கத்தின் காரணம் என்னடா அர்ஜுன், ஏன் இன்னும் பதில் கூறாமல் இருக்கிறாயடா...."

என்று ஏக்கத்துடனேயே அவனுடைய பதிலுக்காக காத்து கொண்டு இருந்தால்...  

அப்போது அவன் அவளது கண்களை கூர்ந்து பார்த்து கொண்டு அவளது முகம் ஆனது சோகத்தினில் இருப்பதை கண்டு அதிர்ந்தான்... உடனே அவன் அவளது பக்கமாக திரும்பி அவளது கைகளின் மேல் தனது வலது கரத்தினை வைத்தான்.... பின்

அர்ஜுன்: "சிந்துமா...."

அவன் அவளை அவ்வாறு அழைத்ததும் தான் அவளுக்கு உயிரே வந்தது போல முகத்தில் அவ்வளவு மலர்ச்சி தெரிந்தது...

அவனும் அவளது மலர்ச்சியை கண்டதும் தான் உதட்டில் அவ்வளவு புன்னகை வந்தது அவனிற்கு.... அப்போது அர்ஜுன் மனதிலே

அர்ஜுன் மனதில்: "அப்பாடா இப்போ தான் சிந்து எனக்கு நிம்மதியா இருக்கு, உன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்றால் என் விழிகள் உயிரற்றது போல மாறிவிடுகிறது சிந்து.... இந்த மீனா வரதுக்குள்ள சொல்லிடலாம்...."

சிந்து: மெல்லிய புன்னகையுடன் உதடுகள் விரிந்தாலும் மனதிலே பதில் என்னவாக இருக்கும் என்று பதறிக்கொண்டு இருந்ததுடன் "ம்" என்று மட்டும் மெல்லியதாக சொன்னால்....

அர்ஜுன்: "உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் டி சிந்து..." என்று மனதில் உள்ளவற்றை நீரோட்டம் போல சொல்லி முடித்தான்...

சிந்துவுக்கு அளவில்லா ஆனந்தம், முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் அந்த மாலை பொழுதிலும்.... அப்போது

மீனா: "டேய் அர்ஜுன் ஷங்கரை பிடிடா" என்று கத்தவும்... இவர்கள் இருவரும் தங்களது கைகளை பிரித்து கொண்டார்கள்.....

வழக்கம் போல நம்ம மீனா கரடி வேலைய சரியா ஆனா ஒரு சில நொடி தாமதமா செஞ்சுட்டா.... இவளை வச்சுட்டு அர்ஜுன் தான் படாத பாடு படுகிறான்.... 

அதன் பிறகு என்ன நடந்தது என்று அடுத்த பதிவில் காண்போமே....

(உங்களுடைய உணர்வுகளை அந்த தருணத்தில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.... நன்றி)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro