32. என் பெயர் கவின்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எழுத்து பிழைகள் இருந்தால் அந்த அந்த இடத்திலேயே குறிப்பிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

கவின் தனது பள்ளி நண்பர்களுக்கு அர்ஜுன் மற்றும் ஷங்கரை அறிமுகம் செய்து வைத்து அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தனர்.... என்ன தான் போட்டியில் அவர்கள் அர்ஜுனை வெறுத்தாலும் நண்பர்களுடன் இருக்கும் சமயத்தில் அவ்வாறு இல்லை.... ஏனென்றால் போட்டி என்றால் நாம் ஒருவருக்கு மட்டுமே சாதகமாக இருக்க முடியும்... அது அவரவர் உடன் இருப்பவர்களுக்காகவே இருக்கும்..... அர்ஜுனும் ஷங்கரும் கவினுடன் பேச நினைத்து காத்துகொண்டு இருந்தனர்....

இங்கு வனிதா ஷங்கர் மீது தனது கோபத்தை காட்டிவிட்டனே என்று மனதில் வருத்தத்துடன் மரத்தின் கீழே உள்ள இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தால்.... அவள் அருகே சென்ற சிந்து மற்றும் மீனா இருவரும் அவளது இரண்டு பக்கமும் சென்று அமர்ந்து கொண்டனர்.... அப்போது மீனாவிடம் வனிதா

வனிதா: "சாரி மீனா நான் ஷங்கரை அடிச்சுட்டேன்..." என்று வருத்தத்துடன் கூறினால்

மீனா: "விடு விடு அதுலாம் அந்த எருமைக்கு வலிக்காது.... நீ ஒரு அடி தான அடிச்சு இருக்க, ஆனா என் கிட்டயும் சிந்து கிட்டயும் நிறைய அடி வாங்கி இருக்கான்.... அதுலாம் அவன் பெருசா எடுத்துகிட்டதே இல்லை... நீ வருத்தம் படாத வனிதா......."

சிந்து: "ஆமா வனிதா, ஷங்கர் அண்ணா அதற்க்கெல்லாம் அசரவங்க இல்ல, எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க... நீ வேணும்னா நான் வர சொல்றேன் ரெண்டு அடி அடிச்சு பாரேன் ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க டான்ஸ் தான் பண்ணுவாங்க..." என்று கூற வனிதா கவலையை விடுத்து புன்னகைத்தாள்

அவளுடன் சேர்ந்து மற்ற இரு பெண்களும் சிரித்து கொண்டு இருந்தனர்....

இங்கு கவின் நண்பர்கள் வீட்டிற்கு செல்லவே கவின் அண்ணா அவனை அழைத்து செல்ல வருவதாக கூறி இருந்த காரணத்தினால் அர்ஜுன் ஷங்கருடன் இருந்தான்....

அப்போது கவினுடன் அர்ஜுன் அவன் முன்பு இருந்த வீட்டின் அருகே இருந்தவர்களை பற்றி கேட்டு விட்டு

அர்ஜுன்: "கவின்..."

கவின்: "சொல்லு அர்ஜுன்"

அர்ஜுன்: "என்னடா கன்னத்துல ஏதோ ஒரு மாதிரி இருக்கு... என்ன அது..."

(எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டே இவன் கேக்கறான் பாருங்க இவனை என்ன பண்ணலாம்... சரி எதுக்கு அப்படி கேக்கறான்னு பார்ப்போம்... சார் தான் எது பண்ணாலும் ஒரு பிளான் ஓட தான பண்ணுவாரு... சரி என்னானு கேப்போம்....)

கவின்: "அது ஒன்னும் இல்ல டா... அத விடு..." என்று முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ள

ஷங்கர்: "என்னடா அர்ஜுன் சொல்ற, என்ன இருக்கு அவன் கன்னத்துல... எங்க காட்டு கவின் பாக்கறேன்..."

இவன் அவனை விட பெரிய நடிகனா வருவான் போலயே... ஷங்கர் அவனது கன்னத்தை பார்த்து விட்டு...

ஷங்கர்: "என்னடா விளையாட தான வந்த, மேக்கப் போட்டா இப்படி தான் ஒரு பக்கம் போட்டுட்டு இன்னொரு பக்கம் போடாம இருப்பாங்களா.... அது என்னடா 4 கோடு மாறி போட்டு இருக்க.... புது ஸ்டைல் ஆ கவின்...." என்று மேலும் கவினை ஒருவழி பண்ணிட.... அர்ஜுன் திருட்டு தனமாக சிரித்து கொண்டு இருந்தான்.....

கவின் ஷங்கரை பார்த்து...

கவின்: "மரத்துக்கு கீழ நடந்துட்டு இருக்கும் போது கிளை இடிச்சுடுச்சு ஷங்கர்... அதான்...."

அர்ஜுன்: "கவின் கிளை இடிச்சுதுனால வந்ததா, இல்லை உருட்டு கட்டை அடிச்சுதுனால வந்ததா...." என்று நக்கலாக கேக்க கவினோ அர்ஜுனிற்க்கு தெரிந்து தான் இப்படி கேக்கிறான் என்று புரிந்து கொண்டு தலையை கீழே குனிந்துகொண்டான்....

அர்ஜுன்: "ஏன்டா அது தான் பார்த்தாலே தெரியுதே யாரோ அடிச்சு இருக்காங்கனு... என் ஷங்கர் வாங்காத அடியா நீ வாங்கி இருக்க போற.... இப்போ கூட சார் வாங்கிட்டு தான் வந்தாரு,..." என்று அர்ஜுன் கூற ஷங்கர் முறைப்புடன்

ஷங்கர்: "டேய் இப்போ அவன் கேட்டானா என்ன பத்தி... நீ இன்னும் வாங்கலைனு நினைக்கறேன்... இரு இரு சிந்து கிட்ட ஏதாச்சும் சொல்லி உன்னையும் அடிக்க வைக்கிறேன்..." என்று கூற

அர்ஜுன்: "டேய் டேய் நீ பாட்டுக்கு ஏதாச்சும் பண்ணி சண்டை பண்ணி வச்சுடாத டா.... உனக்கு பிடிச்ச ஸ்னாக்ஸ் லாம் பேக் ல இருக்கு அம்மா கொடுத்து விட்டது... அது எல்லாமே நீயே சாப்பிடு டா... இத மட்டும் பண்ணிடாத..." என்று கெஞ்சாத குறையாக கூறினான் அர்ஜுன்

ஷங்கர்: "அது...." என்று அர்ஜுன் முன்பு அவனிடம் கூறிய வார்த்தையை கூறினான்....

அர்ஜுன் கூறியது போலவே ஷங்கர் கூற... அர்ஜுன் ஷங்கரை மேலும் கீழும் பார்த்தான்.... "எல்லாம் என் நேரம்டா...." என்று மனதில் நினைத்து கொண்டான்....

கவினோ இவர்களின் பேச்சு புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான்.. கவின் தங்களை பார்த்து கொண்டே இருப்பதை பார்த்து இருவரும்... அவனிடம் பேச ஆரம்பித்தனர்....

அர்ஜுன்: "ஏன்டா என்ன பாக்க வந்த அப்போ அவ தான் உன்ன அடிச்சானு என் கிட்ட சொல்லலை...."

கவின்: "நான் உன்ன பாக்க தான் டா வந்தேன், வந்த அப்புறம் தான் தெரிஞ்சது என்ன அடிச்ச அந்த பொண்ணு உனக்கு தெரிஞ்சவங்க னு... அதான் தள்ளி நின்னு உன்ன கூப்பிட்டு பேசிட்டு வந்தேன்...."

ஷங்கர்: "ஏன் அவ்ளோ பயமா அவ மேல..."

கவின்: "பயம் லாம் இல்லை அவங்க நான் அங்க வந்தா கோபம் பாடுவாங்க னு தான் நான் வரலை..."

அர்ஜுன்: "சாரி டா... அவ ஏதோ அவசரத்துல என்னனு தெரியாம உன்ன அடிச்சுட்டா.... அப்புறம் தான் நாங்க என்னன்னு கேட்ட அப்புறம் வேற ஒருத்தன் தான் அவளை இடிச்சு இருக்கான் என்று தெரிஞ்சதும் வருத்தம்பட்டா.... நீ ஒன்னும் கவலை படாத நீயும் இனி எங்கள்ல ஒருத்தன் ஆகிட்டா அவ சகஜம் ஆகிடுவா..."

ஷங்கர்: "டேய் அர்ஜுன், பேசாம நாம கவின் ஐ அவ கிட்ட கூட்டிட்டு போய் விட்டுட்டா என்ன...." என்று வில்லங்கமான பார்வையில் கூற

கவின்: "அய்யயோ நான் வரலை டா... மறுபடியும் அந்த இடியை தாங்கிக்க முடியாது.... நீங்க போயிட்டு வாங்க டா... அண்ணா வரேன்னு சொல்லி இருக்காங்க... நான் இங்கயே இருக்கேன்...."

அர்ஜுன்: "என்னது இடி ஆ... அப்போ கண்டிப்பா உன்ன கூட்டிட்டு போயே ஆகணும்... நீ இப்போ வர.... வா..." என்று அவனை இருவரும் வில்லங்கமாக புன்னகைத்துக்கொண்டே இழுத்து சென்றனர்....

அவர்கள் இருக்கும் இடம் அறிந்து அங்கே ஒரு ஓரமாக இருந்து கொண்டனர் ஆடவர் மூவரும்... கவின் யை மரத்தின் அருகேயே இருக்க சொல்லி விட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றனர் இருவரும்... போகும் வழியில் அர்ஜுன் ஷங்கர் இருவரும் பேசிவைத்து கொண்டு சென்றனர்....

ஷங்கர்: "வனிதா...."

அவனை நிமிர்ந்து பார்த்து பொய்யாக முறைப்பது போல கண்களை கூர்மையாக வைத்துக்கொண்டு மனதிலே புன்னகைத்து கொண்டு இருந்தால்....

ஷங்கர் மனதில்: "இவ என்ன பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே முறைக்கறா, அர்ஜுன் சொன்ன மாறி நான் செஞ்சுட்டா அவ்ளோ தானே... என்ன நடக்க போகுதோ...." என்று நினைத்து விட்டு....

ஷங்கர்: "மாமா வந்துட்டாரு அவரு நண்பர் கூட அந்த மரத்துக்கு பின்னாடி பேசிட்டு இருக்காரு... உன்ன வர சொன்னாரு போய் பாரு..." என்று கூற

தனது அப்பா என்றதும் அவள் எதை பற்றியும் கேக்காமல் யோசிக்காமல் கிளம்பி மூன்று பெண்களும் எழுந்தனர்... வனிதா முன்பு செல்ல மீனா சிந்துவும் வனிதா பின்னே வந்தனர்... வனிதா அர்ஜுனை தாண்டி சென்றதும் மற்ற இருவரையும் அர்ஜுன் ஷங்கர் தடுத்தனர்....

ஷங்கர் மீனாவின் கையை பிடித்து அவள் பின்னல் செல்லாமல் தடுத்து அவள் ஏதோ பேச வர வாய் மீது விரல் வைத்து தடுத்தான்....

அர்ஜுனோ ஷங்கர் செய்தது போல செய்ய ஆசைகொண்டாலும் அவன் அவ்வாறு அவளது தோழி முன்பும் தோழன் முன்பும் செய்ய மனம் இல்லாமல் அவள் முன்பு கையை நீட்டி அவள் செல்லாமல் தடுத்து கண்களாலே அவளது கண்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்.... சிந்துவோ அவனது கண்களை உதட்டினில் புன்னகையுடன் கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தால்... அர்ஜுனும் அவளை ஏக்கத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்.....

ஒரு புறம் ஷங்கர் மீனாவை பேசவே விடாமலும் ஒரு புறம் அர்ஜுன் பேச மாட்டாயா என்பது போலவும் இருவரையும் நிறுத்தி வைத்து கொண்டு இருந்தனர்.....

இதை அறியாமல் சென்று கொண்டு இருந்தது ஒரு ஜீவன்....

மரத்தின் பின்பு இருந்த உருவத்தை கண்டு அப்பா என்று கூப்பிட்டு கொண்டே கவின் அருகே சென்றால் ஏதோ உணர்வு அவளை தடுத்து நிறுத்த நின்று அவனை கண்டால்....

வனிதாவின் அப்பா என்று அழைத்த சத்தம் கேட்ட கவின் திரும்ப அங்கே வனிதாவை கண்டான்.... அவனும் அவளும் இருவரும் நேருக்கு நேர் கண்களை கண்டு கொண்டனர் இரண்டு நொடிகள்... உடனே வனிதா தனது முகத்தை திருப்பி கொண்டு அங்கேயே திரும்பி நின்றாள்.... அவளது மனத்திலோ தவறு செய்ததினால் அவனை நேருக்கு நேர் காண முடியவில்லை....

இவனோ ஏனென்று தெரியாமல் அவளது செய்கைகளை பார்த்து கொண்டு இருந்தான்.....

சில நொடிகள் அவனும் அவளும் பேசிக்கொள்ளாமல் நின்றனர், பின் என்ன செய்வது என்று தெரியாமல் வனிதா அங்கிருந்து செல்ல முயற்சிக்க அதை கண்டு கவின்....

கவின்: "நில்லுங்க...."

அவள் எடுத்து வைத்த கால்கள் அவனது குரல் இசையினால் அசையாமல் நின்றது.... ஆனாலும் அவள் திரும்பவில்லை....

கவின்: "ஐயம் சாரி" என்று கூறினான்

அவன் செய்யாத தவறிற்காக அவன் மன்னிப்பு கேட்பது அவளிற்கு ஒரு வித உணர்வை ஏற்படுத்தவே திரும்பினாள்....

அவன் புறமாக திரும்பி நின்று தலைகுனிந்து கீழே பார்த்து

வனிதா: "நீங்க ஏன் மன்னிப்பு கேக்கறீங்க, நான் தானே என்ன நடந்ததுன்னு யோசிக்காமல் உங்களை அடிச்சுட்டேன்..... நான் தான் உங்க கிட்ட சாரி சொல்லணும்.... ஐயம் சாரிங்க...." என்று சொல்ல

கவின்: "சரி பரவால்ல விடுங்க தெரியாமல் தானே செய்தீங்க, இதுனால ஒன்னும் ஆகலை விடுங்க...."

வனிதா: "ஒன்னும் ஆகலைனு பொய் சொல்லாதீங்க...."

கவின்: "ஆமாங்க பொய் தாங்க சொன்னேன்.... நீங்க என்ன மாதிரி சாப்பாடு சாப்பிடுவீங்க...." என்று கேக்க

அவளோ அவன் கேட்க்கும் கேள்வியின் அர்த்தம் புரியாமல் முழித்துக்கொண்டு

வனிதா: "என்ன... என்ன கேட்டீங்க..."

கவின்: "என்ன மாதிரியான சாப்பாடு சாப்பிடுறீங்க, நீங்க அடிச்சதுல எனக்கு 5 நொடி நீங்க என்னை என்ன சொன்னீங்கன்னு கூட தெரியலே... தலையே சுத்திடுச்சு... அடியா இல்லை இடியா னு யோசிச்சேன் நீங்க போனதும்.." என்று புன்னகைத்து கொண்டே கூறினான் அவளை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்....

அவளோ அவனது கேள்வி புரிந்து கொண்டு

வனிதா: "ஹேய்ய்ய்ய்ய..." என்றால் சிரித்து கொண்டே

கவின்: "அப்பாடா சிரிச்சுடீங்க... இது போதும்.... உங்க முகம் சோகமா இருந்த நல்லாவே இல்லை.... இப்போ தான் நல்லா இருக்கு..." என்று வெளிப்படையாக கூற....

வனிதா: அவனை கூர்மையாக கோபமாக இருப்பது போல பார்த்து கொண்டு ஒரு புருவத்தை மேலே உயர்த்தி "என்னஆஆ...." என்று கேட்டால்... அப்போது தான் அவன் கூறிய வார்த்தை யோசித்து

கவின் 32 பற்கள் மட்டுமே தெரியும் அளவிற்கு சிரித்தான்....

வனிதா: "போதும் போதும் சிரிக்காதீங்க பயமா இருக்கு...."

கவின்: "ஆனா நீங்க சிரிச்சா அழகா இருக்கே...."

மீண்டும் முறைப்பை பதிலாக கொடுத்தால்....

வனிதா மனதில்: "இதுக்கு மேல இங்க இருந்த சரி வராது போலயே.... பேசாம அவங்க இருக்க இடத்துக்கே போய்டலாம்... ஆமா என் பின்னாடி வந்த சிந்து மீனா எங்க ஆளையே காணோம்....." என்று அவர்கள் இருக்கும் இடத்தை பார்த்தால்... அவர்களோ அர்ஜுன் ஷங்கரிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.... "என்ன போக வச்சுட்டு நீங்க அங்க இருக்கீங்களா... இருங்க இருங்க எனக்கும் ஒரு நாள் வாய்ப்பு கிடைக்காமலா போகும்... அப்போ பாத்துக்கறேன்... முதல்ல இங்க இருந்து கிளம்புவோம்..."

வனிதா: "சரி வாங்க அவங்க இருக்க இடத்துக்கு போகலாம்..." என்று சொல்லி நகர முயற்சி பண்ண

கவின்: "ஏங்க..." என்று அவன் திரும்பவும் கூப்பிட

வனிதா: "இப்போ என்ன... என்று கேள்வியாக பார்க்க...."

கவின்: "உங்க பெயர் என்னனு தெரிஞ்சுக்கலாமா..."

வனிதா சிறிது புன்னகைத்து விட்டு

வனிதா: "வனிதா...." என்றால்

கவின்: "என் பெயர் கவின்...." என்றபோது

வனிதா: "அது இருக்கட்டும் இப்போ வாங்க அவங்க இருக்க இடத்துக்கு போகலாம்..."

(இப்படி ஒரு பல்பு உனக்கு தேவையான்னு எல்லாரும் கவின் ஐ கேளுங்க.... நல்ல கேளுங்க....)

வனிதா அவர்கள் அருகே செல்லும் பொது ஷங்கர் அவளிற்கு முதுகு தெரியும்படி நின்று கொண்டு இருந்தான்... அர்ஜுனோ வனிதா வருவதை பார்த்து விட்டு பின்னால் அடி எடுத்து வைத்து நடந்து கொண்டு இருந்தான்... ஏன் அவன் அவ்வாறு செல்கிறான் என்று சிந்து யோசித்துக்கொண்டே திரும்ப வனிதா வந்து கொண்டு இருந்தால் பின்னால் கவினும் வந்து கொண்டு இருந்தான்.... அதை கண்டு அர்த்தம் புரிந்தவளாய் புன்னகைத்தாள்... ஷங்கர் அருகே சென்ற வனிதா அவனது தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்தால்...

அவளது கோட்டில் கதிகலங்கியவன் திரும்பி பார்க்க அவளோ கோபப்பார்வையில் அவனை பார்த்து கொண்டு இருந்தால்....

ஷங்கர் மனதில்: "அய்யயோ சிக்கிட்டனே...." என்று நினைக்க

வனிதா: "என்ன அய்யயோ சிக்கிட்டனே னு யோசிக்கறயா..." என்று கேக்க ஷங்கர் மேலும் கீழும் தலையை இரண்டு முறை மெதுவாக ஆட்டியவன், வலதும் இடதுமாக வேகமாக ஆட்டினான் பலமுறை.....

வனிதா அவனை அடிக்க எத்தனிக்கையில் அவன் கீழே குனிந்து கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடினான்.... அவன் ஓடும் திசையிலே அர்ஜுனும் மெதுவாக பின்னே சென்று கொண்டு இருந்தான்.... அப்போது ஷங்கர்....

"சோலைமுத்தா ஓடிடுடா ஓடிடு...." என்பது போல

ஷங்கர்: "டேய் அர்ஜுன் ஓடிடுடா ஓடிடு... மாட்டினோம் சின்னாபின்னம் ஆகிடுவோம்...." என்று சொல்ல மூன்று பெண்களும் அவ்விருவரை அந்த மைதானத்தின் ஒரு பகுதியிலே ஓடி பிடித்து கொண்டு இருந்தனர்.... இவ்வாறே அன்றைய நாள் இனிதாக முடிந்தது அவர்கள் பெற்றோரும் கவினின் அண்ணன் வரும் வரையிலே.... 

அடுத்த பதிவில் இருந்து சில சுவாரசியமான சில நிகழ்வுகளை பார்க்கலாம்... இதுவரை பொதுவாகவே பயணித்த வாழ்க்கையை சிறு சிறு புது புது உணர்வுகள் கொண்டு பயணிக்கலாம் என்று உள்ளேன்.... தங்களது கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro