5. அர்ஜுன்ன்ன்ன்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

(உங்களுடைய உணர்வுகளை அந்த அந்த தருணத்தில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.... நன்றி)

சிந்து எழுந்து அவனருகில் வந்தால். அர்ஜுனிற்கோ யாரிடமும் ஏற்படாத பதற்றம் மற்றும் திணறல் அவளின் அருகாமையில் வந்தது.

அருகினில் வந்த சிந்து..............

சிந்து: "எனக்கு shuttlecock play பன்ன ரொம்ப பிடிக்கும் ஆனா ஏனோ அத எனக்கு கற்றுக்கொடுக்க யாருமே interest எடுத்துக்களை, நீ சொல்லி தரியா அர்ஜுன்" என்று கேட்டால்........

ஆனால் அவனின் காதினுள் "அர்ஜுன்ன்ன்ன்ன்ன்" என்று ரீங்காரமிட்டு கொண்டு இருந்தது சில நொடிகளுக்கு. அவனோ "எனது பெயர் இவ்ளோ அழகா கூட கூப்பிடலாமா" என்று நினைத்தான். Something something ல் சந்தோஷ் என்று அவள் கூப்பிடுவது போல அவனுக்கு கேட்டது. திரும்ப அவள் "அர்ஜுன்" என்று அழைத்த பொது தான் நினைவிற்கு வந்தான்.......

தன்னிலை வந்தவன் 

அர்ஜுன்: "என்ன சிந்து" என்று சிறிது தடுமாற்றத்துடன் கேட்டான். 

சிந்து: "எனக்கு shuttle விளையாட சொல்லி தரியா" என்று உதட்டினில் அவளது அழகிய சிறு புன்னகையுடன் கண்களில் ஆசையுடன் கேட்டால். 

அவளது மயில் போன்ற கண்களில் ஆசையுடன் கேட்டது என்னவோ shuttle விளையாட சொல்லி தருமாறு கேட்டு தான், ஆனால் அவனோ அவனையே கேட்டது போல மகிழ்ச்சி கொண்டான் அர்ஜுன்..........

(அர்ஜுன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்............)

அர்ஜுன் அவளிற்கு மட்டும் மற்ற இருவருக்கும் சொல்லி கொடுத்ததை விட அதிகமாக கற்று தர வேண்டும் என்று நினைத்தான். அவன் மனதில் "நீ எப்பவும் மற்றவர்களை விட சிறந்ததாக இருக்க வேண்டும் சிந்து" என்று நினைத்து சொல்லி தர ஆரம்பித்தான்......

அவனின் ஆசை நிறைவேற போகின்றது என்று என்னி மனதினில் பேரானந்தம் கொண்டான் செல்வன் அர்ஜுன். "சிந்து நீ என்றும் மற்றவர்களை விட சிறந்தவளாக இருக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறேன். என்னால் முடிந்தவரை உன்னுடைய ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைத்தே தீருவேன் சிந்து" என்று மனதில் உறுதி கொண்டான்.....

இருவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர், விளையாட்டின் போது ஒரு ஒரு நுணுக்கங்களையும் சொல்லி கொடுத்தான். அவளுக்கு கற்றுத்தரும் போது மற்ற நண்பர்களையும் இதையும் தெரிந்து கொள்ளுமாறு கூறினான். (ஏனென்றால் தான் அவள் மீது கொண்ட தனிப்பட்ட அன்பு மற்றவர்க்கு சந்தேகத்தை தர கூடாது என்று எண்ணிக்கொண்டான்)...........

சிந்துவுக்கு Shuttlecock விளையாட அதிக ஆர்வம் விருப்பத்தை கண்டு ஆவலுடன் சற்று கூடுதலாகவே நேரம் எடுத்து கொண்டான். மீனாவோ ஷங்கர் மற்றும் நவீன் உடன் பேசிக்கொண்டு இருந்ததால் இவர்களை யாரும் கவனிக்கவில்லை. இதன் காரணமாக கொண்டு அர்ஜுன் ன் பார்வை சிறிது மாற்றத்துடன் அவளை காண ஆரமித்தது. (அதாவது அவள் விளையாடும் அழகை ரசிக்கத் துவங்கினான்) அவளின் ஒரு ஒரு சைகைகளிலும் அவனுடன் பேசுகையில் சிறு சிறு மாற்றங்கள் இருக்கத்தான் செய்தது.....

அவள் அவனை "தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைக்கிறான், ஆனாலும் அவனுடன் இன்னும் பேசி பழக வேண்டும்" என அவளின் மனம் ஆசை கொள்கிறது......

முதன் முறையாக சிந்துவிற்கு அர்ஜுன் மீது ஒரு சிறு விருப்பம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் விளையாடி முடித்து விட்டு அவர்கள் இருவரும் அருகினில் மற்றவர்களுடன் ஒன்றாக அமர்ந்தனர். அர்ஜுன் மனதில் "என்னுடைய ஆசை நிறைவேறியது இறைவா மிக்க நன்றி, ஆவலுடன் விளையாடிய நிமிடங்கள் ஒவ்வொன்றும் என்னை மேலும் மேலும் சந்தோசம் கொள்ள செய்கின்றதே" என்று நினைத்து கொண்டான்..........

சிந்துவோ "அர்ஜுன் என் மீது தனி அக்கறை கொள்கின்றானா என்ன, அவனது கண்களோ என்னை பார்த்த விதத்தில் ஏதோ வித்யாசம் தெரிகிறதே. அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்ன, நான் அவனிடம் நிறைய பேச வேண்டும் என்று என்னுள்ளே தோன்ற காரணம் என்ன" என்று தனக்குள் கேள்வியை கேட்டுக்கொண்டாள்.....

ஐவரும் சேர்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு மத்திய உணவிற்காக விடைபெற்று கொள்ள முடிவு செய்தனர், அப்பொழுது இரு ஜோடி கண்கள் மட்டும் ஒரு நொடி எதிர் எதிரே ஒரு சிறு ஏக்கத்துடன் பார்த்தன. மற்ற மூவர்களை போல அல்லாமல் ஏதோ புதிதான ஒரு உணர்வை சிந்து மற்றும் அர்ஜுன் உணர்ந்தனர். 

(பிரிவு என்பது ஒரு நொடியேனும் அதற்க்கு பல வலிகளை ஏற்படுத்தி சென்று விடும் அல்லவா - அதுபோலவே சிறிதாக மனம் வலிப்பதை போன்று இவர்கள் உணர்கின்றனர்)........

அர்ஜுன் மனதில் "இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் நானும் சிந்துவிடம், நான் கற்று கொடுத்தது நன்றாக இருந்ததா உனக்கு பிடித்ததா என்று கேட்டு இருப்பேனே" அவளது எண்ணங்களை அவன் அறிந்திருக்கலாம்.....

சிந்து மனதில் "எனக்கு ஏன் மற்றவர்களை விட்டு செல்வது பற்றி எந்த உணர்வும் ஏற்படவில்லை, அர்ஜுன் செல்கிறாயா என்று என் மனம் ஏன் அப்போது சொல்லியது" என்று அவளுள் கேட்டு கொண்டு விடை தெரியாமல் சென்றால்....

இருவருக்குள்ளும் சிறு சிறு எதிர்பார்ப்புகள் அவர்கள் வீட்டிற்கு சென்ற பொது ஏற்பட்டிருந்தது.......

வீட்டிற்கு சென்று இருவரும் யோசனையுடனே தங்களது உணவுகளை சாப்பிட மனமில்லாமல் சாப்பிட்டு முடித்தனர். அதன் பிறகு அர்ஜுன் தனது அறைக்கு சென்று விட்டத்தை பார்த்து கொண்டு காலை நடந்ததை எண்ணி கொண்டு இருக்கிறான். 

"இந்த புது வித உணர்வுகள் என்ன, ஏன் என்னை இவைகள் மகிழ்வடைய செய்கின்றன. இதன் காரணம் என்ன" என்று தனது மனதிற்குள் மூளையிடம் கேட்டுக்கொண்டு இருந்தான்...... 

(தனது மனம் சரியான பதில் அளிக்காத காரணத்தினால், தனது அறிவிற்கு தெரிகிறதா என்று அறிந்து கொள்ள கேட்டான்)..........

சிந்து தனது தாயிற்கு சிறு சிறு உதவிகள் செய்துவிட்டு தானும் சிந்தனையிலே சாப்பிட முடியாமல் தாயின் கட்டளையினால் சாப்பிட்டு விட்டு தனது அறையில் வந்து சிறிது நேரம் நடந்து கொண்டு யோசனையில் மூழ்கிப்போனால்....

அந்த சிந்தனைகள் அவளை மிகவும் குழப்பம் அடைய செய்து இருந்தது. 

(தங்களால் அந்த குழப்பத்தை தீர்த்து வைக்க இயலுமா நண்பர்களே)....

ஒன்றும் இல்லை அவளுள் ஏற்பட்ட புது உணர்வுகள் ஏன் ஏற்பட்டது எதனால் என்று தான், ஆனால் இவளது வயதிற்க்கோ புரியாமல் குழம்பி போக தானே செய்வாள்.....

Friends ithu konjam small update thaan adjust panikoga........  

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro