1- திக்ஷிதா லட்சுமி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

1. திக்ஷிதா லட்சுமி

அடர்ந்த காட்டுப் பகுதி அதற்கென்று முழுவதும் காட்டுப் பகுதி என்றும் சொல்லிட முடியாது. ஆங்காங்கே வீடுகளும் இருந்தன. அந்த ராத்திரியின் நடுஜாமத்தில் ஐம்பத்தெட்டு வயதான ஒரு பாட்டி அந்த இரவு ஜாமத்தில் கையில் இரண்டு தூக்குவாளியுடன் வேகநடைப் போட்டு நடந்து கொண்டு சென்றாள்.

வழக்கமாகப் போகும் வழி தான் என்றாலும் இன்று ஏனோ அவள் மனதில் அப்படி ஒரு பயம். பயத்தில் பதற்றம் அதிகரிக்க, அந்த பதற்றத்தில் ஏனோ தானோ என்று நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

திடீரென்று தூரத்தில் ஓநாய்கள் கத்தும் சத்தம் கேட்டவளுக்கு மேலும் பயம் ஏற்பட, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்தாள்.

இம்புட்டு பயத்தோடு நடந்து கொண்டு இருக்கும் பாட்டியின் பெயர் அன்னம்மாள். அன்னம்மாள் பெயருக்கு ஏற்றோர் போல் அவளின் கைத்தொழிலும்.

மாலை சிற்றுண்டியாக அதிரசம், முறுக்கு, எள்ளடை என்று பல வகை பலகாரங்களைச் சுட்டு எடுத்துக் கொண்டு பல இடங்களில் சென்று விற்பவர். இன்றும் அதே போல் விற்று விட்டு வீடு திரும்புகையில் அவருக்குத் தன்னை சுற்றி ஏதோ ஒரு அமானுஷ்யம் நடப்பது போல் தோன்றியது. எவ்வளவு வேகநடை போட முடியுமோ அந்த அளவிற்கு வேகமாக விரைந்தாள்.

மனதிற்குள் வேண்டாத தெய்வங்களே இல்லை. "கடவுளே என்னை எப்படியாவது இந்த இரவிலிருந்து காப்பாற்றி விடு. உனக்குக் கோடி புண்ணியமாகும் "என்று வேண்டிக் கொண்டே நடந்தவள் வேகமாக நடந்ததில் கால் இடுக்கில் தடுமாறி தொப்பென்று கீழே விழுந்தாள்.

கையில் வைத்து இருந்த பாத்திரங்கள் ஆங்காங்கே சிதறிப் போக. கையில் சிறிய சிராய்ப்புடன் முந்தானையை எடுத்து இரத்தம் கசிந்த இடத்தில் வைத்து அழுத்திக் கொண்டு மெல்ல எழுந்து நின்றவள் முன் தோன்றியது ஒரு கருப்பு உருவம்.

அவ்வளவு தான் அதைப் பார்த்த அன்னம்மாளின் உயிர் பயம் ஏற்பட. சட்டெனக் கண்களை இறுக்கி மூடியவள் "இது நெசம் இல்லை. என் கற்பனை" என்று முழு மனதோடு நம்ப முயற்சி செய்தாள்.

பயத்தின் உச்சியிலிருந்தவள் மெல்லக் கண்களைத் திறந்து பார்க்க, அந்த கருப்பு உருவம் மறைந்து போனது. அவளுக்கோ அப்பாடா என்று பெரும் மூச்சு ஒன்றை உதிக்க. தூரத்தில் நாய் அழுவும் சத்தம் கேட்டது. "ஏனோ இன்று நடக்கும் அனைத்தும் விசித்திரமாக இருக்கே. தினமும் வந்து போகும் பாதை தான் என்றாலும் இன்று ஏதோ சரியில்லாத மாறி இருக்கு. முதல இங்கே இருந்து கிளம்பிடவேண்டும். ஆத்தா கண்ணியமா நீ தான்த்தா எனக்கு துணையா இருக்கணும். வீட்ல புள்ளை குட்டிங்களாம் இருக்குதுங்க. அதுங்கள காப்பாற்ற நான் இருந்தே ஆகணும். உலகம் தெரியாத புள்ளைங்க. நீ கொஞ்சம் பெரிய மனசு வச்சி என்னை வீடுவரைக்கும் கூட்டிட்டு போய்விடு ஆத்தா". என்று அன்னம்மாள் மனதிற்குள் வேண்டியவாறு சிதறிக் கிடந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு இருந்தாள்.

பாத்திரங்களை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தபோதோ தீஞ்ச வாசம் வர மூக்கை பொற்றிக் கொண்டு நடந்தாள். அச்சமயம் அவளின் கூந்தலை யாரோ வருடுவது போல் உணர்வு ஏற்பட தன் சிகையை வாரி குண்டைப் போட்டபடி மீண்டும் நடந்தாள். ஆனால் அவளின் பின்னாலே அந்த கருப்பு உருவம் அன்னம்மாளை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்க. இந்த கும்மிருட்டில் எப்படியோ தட்டுத்தடுமாறி தன் இல்லம் வரை வந்தவள் நான்காவது தளத்தில் உள்ள தன் வீட்டிற்கு மாடிப்படி ஏற எத்தனித்த நேரம் அவளை ஏற விடாமல் பிடித்துக் கொண்டு நிற்க. அவளோ தன் முயற்சியைக் கைவிடாமல் அது கிட்ட இருந்து தப்பித்து மேல் ஏறினாள்.

முச்சி வாங்க ஏறி வந்தவள் கடைசி படிகளில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு கணம் நின்று விட. இது தான் சந்தர்ப்பம் என்று அந்த உருவம் அவளின் காலை பிடித்து தரதரவென கீழே இழுத்துச் சென்றது.

மூன்றாம் தளத்திலிருந்து படிக்கட்டுகளில் இழுத்துக் கொண்டு போக, அவளுக்கோ முகமும் கைகால்களும் வயிறும் மிகவும் அடிப்பட. ஆங்காங்கே இரத்தம் வழியத் தொடங்கியது.

அவள் மேனியிலிருந்து வழிந்த இரத்தத்தை அந்த கருப்பு உருவம் நக்கிக் குடிக்க அதில் பதறியவள் அருகில் அவளின் காம்பவுண்ட் ஒட்டி இருந்த கண்ணியம்மன் கோவிலுக்குப் போகத் தரையிலே தவழ்ந்தபடி முன்னேறினாள்.

ஆனால் அவளைக் கோவிலுக்குள் போக விடாமல் அவள் காலை பிடித்துக் கொண்டு வழியும் இரத்தத்தை உறியத் தொடங்கிய நேரம்.

யாரோ ஒரு பெண்ணின் குரல் "ஏய் அனு! அனு! ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ஒன்னும் இல்லை. பதற்றம் ஆகாத. இந்தா முதல இந்த தண்ணீரைக் குடி. "என்று தன் அருகிலிருந்த தண்ணீரைப் பருக கொடுத்தாள் புதியவள்.

பின் அனுவின் முகத்தில் படர்ந்த வியர்வைகளை தன் கையிலிருந்த துண்டால் துடைத்து விட்டபடி. "இதுக்கு தான் சொன்னேன் அனு. நான் கதையெல்லாம் சொல்ல மாட்டேன். நீ கேட்டா ரொம்ப பயப்புடுவனு. சொன்னா எங்க கேட்கிற. ஒரே அடம்பிடிக்கிற. இருபது வயசு பொண்ணு மாதிரியா இருக்க. ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையைக் கேட்டு இப்படிப் பதற. என்னவோ நடந்ததை நேரில் பார்த்தா மாதிரி.

நேரில் பார்த்த நானே இம்புட்டு பயப்புடல நீ என்னடான கண்ணு முழியெல்லாம் பிதுங்கி வர அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்தே போய்ட்ட" என்று கேட்டுக் கொண்டே அவள் முகத்தைத் துடைத்து முடிக்கும் சமயம் அனு பயத்தின் உச்சிற்கே சென்று மயங்கிப் போனாள்.

அனுவின் பயத்தைப் பார்த்த அந்த புதியவள் சற்று பதறித் தான் போனாள். பயத்தில் மயங்கியவளை அருகிலிருந்தவனிடம் கண்சாடை காட்டி தூக்கிக் கொண்டு போகச் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று ஊசி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து அனுவிற்கு போட்டு விட்டாள்.

"என்னம்மா நீ ஏன் முடிந்து போன கதையெல்லாம் சொல்லி அனுவை பயப்பட வைக்கிற. நீ சொல்லிவிட்டு இருந்தப்ப எனக்கே பயம் தலைக்கேறியது".

"டேய் நானா கதை சொல்றனு சொன்னேன். அவளே வந்து ஆண்டி ஆண்டி தூக்கமே வர மாட்டிக்கிது ஒரு கதை சொல்லுங்க சொன்னா. எனக்கு தெரிஞ்ச கதையை நான் சொன்னேன். அதை கேட்டுட்டு இப்படி பயப்புடுவானு எனக்கு எப்படித் தெரியும்" என்று அவள் கூறிவிட்டுச் சென்று விட. அவனோ அனுவின் அருகில் அமர்ந்து.,

"இன்னும் சின்ன பிள்ளை கணக்கா இருக்க அனு. அம்மா சொன்னது உண்மையா நடந்துச்சோ இல்லையோ ஆனா அதைக் கேட்டு நீ பயந்ததைப் பார்த்தா எனக்கே பயம் வந்துடுச்சி. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு அனு" என்று அவளின் கூந்தலை வருடிக் கொடுத்தான்.

ஏனோ அனுவின் கூந்தலை வருடும் போது அவனுக்குள் ஒரு வித பரவசம் உணர்வு தோன்றச் சட்டென தன் கையை விலக்கியவன் அங்கே ஒரு நிமிடம் கூட நிற்காமல் தனது அறைக்குள் நுழைந்தவன் வாஷ் ரூம் சென்று முகத்தை அலும்பிக் கொண்டு கண்ணாடி முன்னாடி நின்று தன் முகத்தைத் துண்டால் துடைத்தவன் கண்ணாடியில் தன் திரையைக் காண அருகிலிருந்த பூச்சாடியை தூக்கி எறிந்தான்.

"என்ன மகேஷ் ரொம்ப அக்கறை உள்ளவன் மாதிரி அந்த அனுகிட்ட நடிக்கிற" என்று கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து அவனே கேட்டுக் கொள்ள.

நிஜ உருவமோ "நான் நடிக்கலாம் இல்ல. எனக்கு உண்மையாவே அனு மேல அக்கறை இருக்கு. இப்போ எதுக்கு நீ இங்க வந்த" என்றான் கோபத்துடன்.

"ஓ உண்மையா அக்கறை உள்ளவர் தான் அவளை என்னிடம் பலி கொடுக்க. யாரென்றே தெரியாத அனு கிட்ட ஆறுமாசமா நடித்து என்னிடம் அழைத்து வந்தாயா?" என்று அந்த பிம்பம் வினவ,

மகேஷ்க்கோ கோபம் தலைக்கேறியது "என்னை இப்படியெல்லாம் செய்ய வைத்ததே நீ தானே. நீ சொன்னதை நம்பி பாவம் ஒரு பொண்ணை ஏமாத்திட்டோமேனு குற்றவுணர்வா இருக்கு. இங்கே பாரு இப்போவும் நேரம் இருக்கு. பாவம் அனு அவளுக்கு ஒன்னுமே தெரியாது. நீ பெரிய மனசு வச்சி அவளை மன்னிச்சி விட்டுவிடு. நீயும் என்னை விட்டு போய்விடு" என்று தன் பிம்பத்தைப் பார்த்து இருகரம் கூப்பி மகி வேண்ட, அந்த பிம்பமோ,

"என்னது அவளை விடனுமா. அவளை விடுகிறதுக்காகவா ஐம்பது வருசமா தவம் கிடக்கிறேன். அன்னிக்கு அவளோட மூதாட்டி செய்த காரியத்தால் என்னால என் உலகத்திற்குப் போக முடியாமல் ஐம்பது வருஷமா தவித்துக்கொண்டு இருக்கேன். நான் என் உலகத்துக்கு போகணும்னா அதுக்கு அந்த குடும்பத்தோடா வாரிசு அனுவால மட்டும் தான் முடியும். அது மட்டும் இல்ல எனக்கு உதவி செய்ய உன்னுடைய உதவியும் இந்த அனுவோட உதவியும் மட்டும் இல்ல. இன்னும் நான் சொல்ற அந்த இரண்டு பேரை இதே மாதிரி ஏமாற்றி என் கிட்ட அழைச்சிட்டு வா. உங்க நான்கு பேரால தான் நான் என் உலகத்துக்குப் போக முடியும். நான் சொல்கிறதை நீ கேட்கல வெட்சிக்கோ அடுத்து நான் என்ன செய்வேன் தெரியும்ல" என்று அந்த கண்ணாடியில் அவனின் தாயின் கழுத்தை மகியின் உருவமே கடிச்சி கொதறி தின்பது போல் காட்சிகள் தோன்ற... மகியோ,

"நோ,நோ, நோ எங்க அம்மாவை ஒன்னும் செய்யாத. நீ சொல்கிறபடியே நான் நடந்துக்கிறேன்" என்று பிம்பத்திடம் கதறி அழுதான். நிஜமான உருவமோ கதறி அழுக. பிம்பமோ ஆக்ரோஷமாகச் சிரித்துக் கொண்டு இருந்தது.

"இந்த பயம் எப்போவும் உன் மனசில் இருக்கவேண்டும் மகேஷ்" என்று கூறிவிட்டு இல்லை இல்லை மகியை எச்சரிக்கை அளித்து விட்டு மறைந்து போனது அந்த பிம்பம்.

பாவம் மகிக்குத் தான் அடுத்து என்ன செய்வது எப்படி நடக்கப் போகும் விபரீதத்தைத் தடுப்பது. யார் தனக்கு உதவி செய்வார்கள் என்று பெரும் குழப்பத்திற்கு தள்ளப்பட்டான்.

யார் இந்த உருவத்தின் பிம்பம்?
அனு யாராக இருக்கும்?
எதற்காக மகியைத் தேர்ந்தெடுத்தது அந்த உருவம்?
மீதி இருக்கும் அந்த இரண்டு பேர் யார்?
யார், யார் மகிக்கு உதவி செய்யப் போவது?
மகியின் அம்மாவிற்கு எப்படி ஐம்பது வருடத்திற்கு முன் நடந்தது தெரியும்?
அன்று அன்னம்மாவிற்கு நடந்தது என்ன?

இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில்களை இனி வரும் அத்தியாத்தில் காணலாம்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro