எபி லாக்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஐந்து வருடங்கள் கழித்து

காபியை அருந்தியப்படி ஏதோ யோசனையில் இருந்தான் மகேஷ். சிறிது தூரம் தள்ளி வீட்டின் பூங்காவில் மகேஷ் அமிர்தா மகனும் விக்ரம் அனுவின் மகளும் விளையாடிக் கொண்டு இருப்பதை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து காபியை பருகினான்.

தன் அருகில் இருக்கும் கணவன் பலத்த யோசனையில் இருப்பதை பார்த்த அமிர்தா " என்ன பலத்த யோசனையில் இருக்கிங்க போல " என கேட்டபடி அவளும் மாலை சிற்றுண்டியை பொறித்துக் கொண்டு இருந்தாள்.

" ம்ம்ம் ஆமா, " என மகேஷ் வார்த்தையில் உணர்ச்சியே இல்லாமல் கூற. அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள்,

"அப்படி என்ன யோசனை? " என்று கேட்டாள்.

அப்போது தான் அருகில் இருந்த விக்ரம் அனு மாதவி மகேஷின் வளர்ப்பு அம்மா என அனைவரும் இருவரின் பேச்சி சத்தம் கேட்டு மகேஷை திரும்பி பார்த்தனர்.

மகேஷிம் ஒரு பெருமூச்சி விட்டு திரும்பி இவர்களை பார்த்தவன் " என்னால இன்னும் நடந்ததை முழுசா மறக்க முடில. " என்றான்.

" அதான் ஐந்து வருஷமாகிடுச்சே இன்னுமும் அதையே நினைச்சிட்டு இருக்க போறீயா? "என விக்ரம் கேட்டான்.

" உனக்கு புரியாது விக்ரம், அப்போ நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும். "

"டேய் இது என்ன டா புது கதையா இருக்கு. நாங்களும் தான டா உன் கூட கஷ்டத்தை அனுபவிச்சோம். என்னவோ நீ மட்டும் தான் தனியா கஷ்டப்பட்ட மாதிரி பேசுற?"

விக்ரம் சொன்னதை கேட்ட மற்றவரும் அதனா என ஒன்றாக கூற. மகேஷ் மெல்ல எழுந்து இரண்டு அடி எடுத்து வைத்து விளையாடிக் கொண்டு இருக்கும் பிள்ளைகளை பார்த்து பெருமூச்சுடன்,

"அந்த மிருதன் என் மூலமா தான் டா உங்களை அழிக்க நினைச்சது. என் மூலமா தான் உங்களை இங்க கொண்டு வந்து சேர்த்து நம்மளை ஒன்னாக்கியது. " என்று கூற. அனைவரும் அதிர்ந்தனர்.

அனுவோ " என்ன மகேஷ் சொல்ற? "என்று அதிர்ச்சியோடு கேட்க.

மகேஷோ " ம்ம் ஆமா, இதை இத்தனை வருஷமா சொல்ல முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன் மனசுக்குள்ள நினைச்சி நினைச்சி ரொம்ப துடிச்சிட்டேன். முதல் முதல அந்த மிருதன் என்னை மிரட்ட ஆரம்பிச்சிது. என் அம்மாவை வச்சி என்னை பயம் காட்டிச்சி. அது சொல்றபடி நடக்கலனா என் அம்மாவை கொன்னுடும்னு மிரட்டல். என்ன தான் அது சொல்ற மாதிரி நான் நடந்தாலும். நீங்க மூன்னு பேரும் வந்ததும் கதையே அப்படியே மாற ஆரம்பிச்சிது. நம்ம ஒன்னா இருக்கும் போது நம்மளையே அறியாம ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருந்தோம். அப்புறம் தான் மாதவி அம்மா வந்து எல்லாமே நல்லப்படியா முடிஞ்சிது. ரொம்ப நாளா சொல்லனும் மனசை போட்டு அரிச்சிட்டே இருந்த விசியம் அதான் இதுக்கு மேலயும் மறைக்க வேணாம் சொல்லிட்டேன்ன் " என்று நடந்ததை கூறியவனை பார்த்த விக்ரம் அனு அமிர்தா மூவரும் முறைத்துக் கொண்டடு இருக்க. மகேஷின் அம்மாவோ கண்கலங்கி விட்டார்.

மாதவியோ " விடுங்கப்பா அதான் எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சில. " என்று பேச்சை மாற்றினார்.

அப்போது தான் விக்ரம் மாதவியை பார்த்தவன் கேள்வியாக " ஆமா ம்மா உங்களுக்கு எப்படி எங்களை தெரிஞ்சது. எப்படி இந்த விசியம்ல தெரியும். சரியா எப்படி அங்கே வந்திங்க. " என்று கேட்டான்.

மாதவியோ அவர்களை பார்த்து மென்மையாக புன்னகைத்து " உங்களை தொலைச்சிட்டு பைத்தியக்காரி மாதிரி ரோடுல திரிஞ்சிட்டு இருந்தேன் ப்பா. எங்கே எங்கேயோ உங்களை தேடிக்கிட்டு இருந்தேன். அப்போ தான் ஒரு ஊருல பாயை பார்த்தேன், அவர் என்னை உற்று பார்த்து யோசித்தவர் அன்னம்மா பொன்னுதாயி  சன்னதினு தெரிஞ்சிக்கிட்டாரு. அப்புறம் என்னை அழைச்சிட்டு போய் நடந்ததை எல்லாத்தையும் சொன்னாரு. கண்டிப்பா ஒரு நாள் அந்த மிருதா தன்னோட பசியை தீர்த்துக்க வரும் அப்போ என் உதவி உங்களுக்கு கண்டிப்ப தேவைப்படனும். அந்த உதவியை எப்படி செய்யனும் வழியையும் சொன்னாரு. அதையெல்லாம் கேட்டு நான் ரொம்ப பயந்துட்டேன். அப்புறம் உங்களை தேடி ஊர், ஊர் அலைந்தேன். அப்படியே காலமும் உருண்டோடிச்சி. கடைசியா உங்களையும் அந்த கோவில பார்த்தேன். " என அவர் தனக்கு தெரிந்ததை கூற. மற்றவர்களுக்கோ மனம் பாரமாகி போனது.

ஒருவருக்கு ஒருவர் எதுவும் பேசிக் கொள்ளாமல் மௌனமாக இருக்க. அனுவோ தீவிர யோசனையாக மகேஷின் அம்மாவை பார்த்தவள் " அம்மா அன்னிக்கு நீங்க ஒன்னு சொன்னீக ஞாபகம் இருக்கா? "என்று கேட்டாள்.

அவரோ யோசனையோடு " என்ன சொன்னேன்? எப்போ சொன்னேன்? "என்றார் கேள்வியோடு.

" அதான் ம்மா, அன்னிக்கு கதையை சொன்னிங்கல அப்போ, நேரில் பார்த்த நானே பயப்புடல கதையை கேட்ட நீ ஏன் அப்படி பயப்புறனு? அப்போ நீங்க அன்னமா பாட்டிக்கு நடந்த சம்பவத்தை நேரில் பார்த்திங்களா? "என்று கேட்க. அனுவின் கேள்வியில் மற்றவர்கள் அதிர்ச்சியோடு அவரை காண,

அவரோ " ம்ம் ஆமா " என்று கூறியவர் நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.

"அப்போ நான் சின்ன பொண்ணு எங்க வீடும் அன்னமா வீடும் எதிர் எதிர் காம்பவுண்ட் தான். நாலுமாடி குடியிருப்பு அது, அன்னிக்கு இரவு எனக்கு தண்ணீ தாகம் எடுத்துச்சி, எழுந்து போய் சமையல் ரூம்ல தண்ணீ குடிச்சிட்டு திரும்பி வந்து படுக்கலாம் பார்த்தப்ப கீழே யாரோ கத்துர சத்தம். என்னனு மேல இருந்த எங்க வீட்ல இருந்து பார்த்தேன் அப்போ தான் அந்த மிருதா அன்னமாவை துரத்திட்டு வந்து கோவிலுள்ள போக விடாம தடுத்து சித்திரவதை செய்ய ஆரம்பிச்சது. எனக்கு ரொம்ப பயம் எடுத்துக்கிச்சு. உடனே சாமி ரூமுக்கு போய் விபூதி பூசிக்கிட்டு வந்து எங்க அம்மா பக்கத்துல படுத்துக்கிட்டேன். அப்புறம் விடிஞ்சதும் அன்னம்மா வீட்டுக்கு பயத்தோடு போய் பார்த்தா அன்னம்மா தலைவெறி கோலமா இருந்தாங்க. நான் அப்படியே பயந்து ஓடிவந்துட்டேன். " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

இதையெல்லாம் கேட்ட அனைவருக்கும் மனம் திரும்ப சலனம்ப்பட. மாதவி தான்,

"இனி முடிஞ்சதை பத்தி எதுவும் பேச வேணாம் " என்று உறுதியாக சொல்லியவர் எழுந்து வீட்டிற்குள் சென்று விட்டார். அவரை தொடர்ந்து மகேஷின் வளர்ப்பு அம்மாவும் சென்று விட. மற்ற இரு ஜோடிகளும் தங்கள் பிள்ளைகளை ஆழ்ந்துப் பார்த்துக்   கொண்டு நின்றனர்.

ஆம் மகிழனும் மயில்விழியும் இப்பிறவிலும் ஒற்றுமையாக மிகுந்த அன்போடு ஒருத்தருக்கு ஒருத்தர் துணையோடு விளையாடிக் கொண்டு இருந்தனர்.

இனி இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும்...

முற்றும்..

நன்றிகள் பல.



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro