முள்ளும் மலரும் 11

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கனவுலகத்தில் இருந்தவளை உலுக்கினான் ராம் " அக்கா நாம அங்க போக வேணாம் "என்றான் கோபமாக,
" சரி நீ வராத.. நானும் மீராவும் போய் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரோம். இந்த நிலாவுக்கு ஏத்த சூரியன் அங்க கிடைக்காமலா போவான் " என்று சிரித்துக் கொண்டு கூறியதும் திடுக்கிட்டவன் " அடிச்சேனா பல்லெலாம் தெரிச்சிடும்.. பார்த்து பேசு நிலா.. அக்கா நீ என்னக்கா பண்ற. இவ பேசறத கூடக் கேட்காம.. என்னமோ பண்ணித் தொலைங்க " என்று கத்திவிட்டுச் சென்றான்..

நாம விளையாட்டா சொன்னதுக்கு இவ ஏன் இந்த குதி குதிக்குறான். எரும.. கடவுளே.. முதல்ல இவனுக்கு ஜோடி சேர்த்து விடனும்.அப்போதான் மீராவ தொல்லை பண்ணமாட்டான் என மனதில் நினைத்த நிலா அதை சத்தமாக சொல்லிவிட,

அவள்மீது கொலைவெறியில் இருந்தவன் இதைக்கேட்டு ஓடிவந்து நங்கு நங்கென்று தனது கோபம் தீரும் வரை கொட்டிச் சென்றான்.
பாவம் மீராவிற்கு இது எதுவும் தெரிய வாய்ப்பில்லை..
"""""""""""""""""""""""""""""""""""""""""""
" மம்மி கண்டிப்பா மீரா வருவால்ல... எங்காவது சொதப்புனா அவ்ளோதான். கடைசி வரைக்கும் உன்பையன் தேவதாஸ் தான் " என்று வாசலைப் பார்த்தபடியே கீதாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான் கிருஷ்.

" ஏன்டா அவ்ளோ அக்கறை இருக்கறவன் அவள வீட்டுக்கு போய் அழைச்சிட்டு வரவேண்டியது தான " என சளித்துக் கொண்டவரிடம்

" ஆமா உம்மருமக அப்டியே நான் கூப்ட உடனே ஓடி வந்திடப் போறா.. போ மம்மி கடுப்ப கிளப்பிக்கிட்டு " என்றான்.

" இப்பவே அப்படினா கல்யாணத்துக்கு எப்படி சம்மதிக்க வைப்பிங்க தம்பி " என்று கேட்ட தனது அண்ணியிடம்

" அதுக்குத்தான இங்க வரவெச்சிருக்கோம்.. அவ சாமி கும்பிட எப்படினாலும் கண்ண மூடுவா.. அந்த சமயத்துல நான் தாலி கட்டிடரேன்.. எனக்கும் நம்ப குடும்பம் முன்னாடி என் கல்யாணம் நடந்துச்சுனு ஒரு திருப்தி இருக்கும்ல " என்று புன்னகையுடன் சொன்னவனின் காதைத் திருகிய தனது பாட்டி ரங்கம்மாவிடம் " ஐயோ சும்மா சொன்னேன் ரங்ஸ்.. நான் மட்டும் அப்படி பண்ணா என்மேல கேஷ்  கூட அந்த ராட்சசி போட்ருவா. அவள இங்க வரவெக்கிறதுக்கு உண்மையான காரணம் இன்னைக்கே
அவளுக்கு தெரியாத எல்லா உண்மையும் எடுத்துச் சொல்லி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற மிஸ்அன்டர்ஷ்டேன்டிங்க தீர்க்கனும்னு தான்..
இன்னைக்கு என்னோட டே.. சோ நான் நினைச்சது நடக்கும்னு நினைக்கிறேன் " என்று காதைத் தடவியபடியே கூறி முடித்தான்.

அவனது மொத்த குடும்பமும் கிருஷ்ண ஜெயந்தி என்ற பெயரில் மீராவின் பிரவேசத்திற்கு காத்திருந்தது.

கிருஷுன் நண்பர்களானஆரவ், மகேஷ் மற்றும் மேகாவும் வந்துவிட, மகேஷிடம் " எல்லாம் ரெடி தானா " என்று உறுதி்ப் படுத்திக் கொண்டான் கிருஷ்..

பூஜை துவங்க சிறிது நேரமே இருக்க, மீராவைக் காணாது தவித்துக் கொண்டிருந்தான் கிருஷ்..
" டேய் மச்சான் சிஸ்டர் வந்துடுவாங்கடா " என்று மகேஷ் சொல்லும்போதே வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது.
பின்பக்கம் வழியாக ராமும் நிலாவும் இறங்குவதைப் பார்த்ததும்
மீரா வந்துவிட்டாள் என சந்தோசத்தில் மொத்த குடும்பமும் திளைத்தது..

ஆனால் அவர்களது சிரித்த முகம் மீராவுடன் உதயாவும் ஒன்றாக கைக்கோர்த்து வருவதைப் பார்த்தவுடனே மாறியது. இருந்தும் கீதா " வாம்மா மீரா உனக்காகத் தான் காத்திட்டு இருந்தோம்.. உள்ளவாங்க எல்லாரும் " என்று புன்னகையை  வரவழைத்துக் கொண்டு கூறினார். அனைவரிடமும் உதயாவின் கைக்கோர்த்தபடியே பேசி முடித்தாள்.

ஊதா வண்ண நிறத்தில் அவளைத் தழுவியிருந்த புடவை அவளை தேவதை போலக் காட்டியது கிருஷிற்கு.
" ஹாய் மீரா " எனக் கிருஷ் கைநீட்ட, அதற்கு மீரா பதில் சொல்லுமுன்பே அவனது கைகளில் தனது கையைக் கொடுத்த ராம் " ஹாய் " என்றான் கடுப்பாக..

அவன் சிறுபிள்ளை போல் அதை செய்தாலும் மீராவிற்கு தன் தம்பியை நினைத்து பெருமையாக இருந்தது..
' இவன என்னதான் பண்றதோ ' என நிலா பொருமிக் கொண்டாள்.
அந்த நேரம் பார்த்து அவளது வகுப்புத் தோழி தனுஷியா அவர்களையே பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவள் மூளையில் பல்ப் எரிந்தது..

' சாரி தனு... என்னை மன்னிச்சிடு. இந்த சிடுமூஞ்சிய உங்கோட சேர்த்து வெச்சு உன் வாழ்க்கைய பாழாக்கிறனு தெரியும்.. இருந்தாலும் இந்த அழுக்குப் பையன் மேல உனக்கும் ஒரு அதுனு தெரியும். தயவு செஞ்சு உன் நாத்தனார மன்னிச்சிடு.. கல்யாணத்துக்கு அப்ரோ உன்னை இவங்கிட்ட இருந்து காப்பாத்துறது என் பொறுப்பு ' என்று நினைத்தவள் தனுவைப் பார்த்து சிரிக்க,
அவ்வளவு தான் தனுவும் ஒரு கையில் நிலாவையும் மறுகையால் ராமையும் இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்..

அந்த நேரம் பார்த்து உதயாவிற்கு போன் வர,  அவனும் சற்று தூரம் தள்ளி சென்றிட ,
" என்ன மீரா. அவங்கோட வந்து என்னை வெறுப்பேத்தறியா " என சற்று குரலில் எரி்ச்சலுடன் கூற

"  லுக்..நான் ஒன்னும் உன் இஷ்டத்துக்கு ஆடற பாப்பா இல்ல.. அது என் இஷ்டம் என்ன வேணா பண்ணுவேன்.." என்றவள் அங்கு நிற்கப் பிடிக்காமல் பெண்கள் கூட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அங்கிருந்த அனைவரும் ' இவதான் இந்த வீட்டுக்கு மருமகளாகப் போறவ ' என்று மீராவின் காதில் படும்படியாகவே பேசிக் கொண்டிருந்தனர்.. அது மீராவுக்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்தியது

இங்கு மீராவின் நிலை இப்படி என்றால் ராமின் நிலையோ பரிதாபம்.
" அம்மா நான் சொல்லுவேன்ல எங்க கிளாஸ் டாப்பர் ராம்.. அது இவன் தான்.. பொண்ணுங்க பக்கம் திரும்பக்கூட மாட்டான்மா.. ஆனா யாருக்காவது எதாவதுனா ஓடிப் போய் ஹெல்ப் பண்ணுவான்மா " என்று அடுக்கிக் கொண்டே போனாள் கிருஷின் சிற்றன்னையின் மகளான தனு.

' ஆஹா இந்த அயர்ன் மேன் குள்ளயும் ஒரு ரோமியோ ஒளிஞ்சிருக்கிறது தெரியாம போச்சே ' என தனக்குள்ளே சிரித்துக் கொண்டிருந்தாள் நிலா.

ராமோ கிருஷுன் மீது ஒரு கண்ணையும் மீராவின் மீது ஒரு கண்ணையும் வைத்துக் கொண்டே இந்த அறுவையை வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro