39

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

5 வருடங்களின் பின்...

" ஏய் காவியா, காவி குட்டி" என்று தன் தங்கையை ஏலம் விட்டுகொண்டிருந்தான் அவினாஷ்.

தன்னை பாசமாக கூப்பிடும் தன் அண்ணனை ஏதோ வேற்றுக்கிரக ஜந்துவை பார்ப்பது போல பார்த்தவள் " என்ன பாசம் ரொம்ப பொங்குது. எப்ப பாத்தாலும் சோத்து மூட்டைன்னு திட்டுவ. அதென்ன புதுசா இப்ப காவி குட்டி"

தன் தங்கையின் அருகில் வந்தவன்," அப்படி எல்லாம் இல்ல குட்டிமா. உன்மேல அண்ணனுக்கு எப்பவுமே பாசம் இருக்கு. அதுக்குன்னு எப்ப பார்த்தாலும் மானே, தேனே, பொண் மானேன்னு சொல்ல முடியுமா?" என்றவனை அவள் நம்பாமல் பார்த்தாள்.

' இவன நம்பலாமா? இவன் நல்லவந்தான். ஆனா நம்ம விசயத்துல இவன் எதிரி. நம்ம கஞ்சப்பிசினாரி அம்மா எது கேட்டாலும் இவன் யூஸ் பண்ணதயே கொடுக்கும். லாப்டாப் வேணும்னா "அண்ணன் புதுசு வாங்கிட்டான் அவனோட பழச யூஸ் பண்ணிக்க". மொபைல் வேணும்னாலும் இதேதான். இந்த பண்ணாட மட்டும் ஒவ்வொரு வருசமும் ரிலீஸ் ஆகுற புது மாடல் வாங்கிடுறான். அப்பா எனக்கு புதுசு வாங்கி கொடுக்க வந்தாலும் இந்த அம்மா பண்ற அலும்பு இருக்கே... சரி முதல்ல இவன் எதுக்கு இப்படி நம்மகிட்ட பம்முறான்னு பார்க்கலாம்' என மனதுக்குள் நினைத்தாள்.

" என்ன மேட்டர் மிஸ்டர் அவினாஷ்"

" காவிம்மா அன்னைக்கு உனக்கு தெரிஞ்சவங்கன்னு ஒருத்தங்க கல்யாணத்துக்கு போனியே. அவங்க பேரு கூட ஆனந்தி. அந்த ஹாலி ஏஞ்சல்ஸ் பீடி சார் தங்கச்சி. அதுல ஒரு பொண்ணு துருதுருன்னு உன்கிட்ட பேசிகிட்டு இருந்தாலே அவ பேரு என்ன?" என்றான். ஜனனி என்றால் தன் அண்ணனுக்கு தெரிந்திருக்கும். ஒருவேலை இவன் சங்கவி பற்றி கேட்கின்றானோ என யோசித்தவள் " யார சொல்ற" என்று கேட்க அவளின் மொபைலை எடுத்து பச்சை நிற லெஹங்காவில் ஜொலித்தவளை காட்டினான்.

' அடப்பாபி, உன் தங்கச்சிய அடிச்சி அவ இடுப்பை ஒடிச்சி ஹாஸ்பிடல்ல போட்டவள உனக்கு தெரியலயா. நாயே நீயெல்லாம் ஒரு அண்ணன். இருடா உனக்கு இருக்கு' என மனதுக்கு கருவினாள்.

" ஆமா இவள உனக்கு தெரியாதா?"

" இல்லடா யாரிந்த பொண்ணு. கொஞ்சம் டீடைல்ஸ் வேணுமே"

" உனக்கு எதுக்கு இவ டீடைல்ஸ்" என்று சந்தேகமாக கேட்க அவினாஷ் வெட்கப்பட்டான்.

" டேய் என்ன கருமத்த பண்ற. தயவு செய்து வெட்கப்படாத. நான் அவ டீடைல்ஸ் கொடுக்குறேன். அவ எங்க காலேஜ்லதான் படிக்கிறா. ஆனா என்ன மேட்டர்னு சொல்லு"

" காவி குட்டி,எப்படி சொல்றது ஹெள டு ஐ டெல் யூ" என்று வடிவேல் பாணியில் கூற அவனை முறைத்தாள்.

" வாயாலதான் சொல்லு"

" இல்லடா எனக்கு அந்த பொண்ண பார்த்ததும் புடிச்சிடிச்சி. அம்மா மொபைல்லதான் பார்த்தேன். ரொம்ப அழகா இருக்கா. அவ கமிட்டட்டா?" என்று கேட்க அவளுக்கு புரிந்தது. தன்னை தன் அன்பு அண்ணன் மாமா வேலை பார்க்க கூறுகின்றான் என்று.

" அவ கம்மிட்டட்டா இருந்தா என்ன. இல்லைன்னா உனக்கென்ன?" என்று கேட்க பாவமாக முகத்தை வைத்துக்கொண்டவன்,

" இல்லடா எனக்கு அவகூட பேசனும். அவ கம்மிட்டட் இல்லைன்னா மட்டும்தான். அவ ஆல்ரெடி கமிட்டட்னா வேணாம்" என்று கூற அவள் தன் தலையில் அடித்து

" அட நல்லவனே. சரி ஏற்பாடு பண்றேன்" என்றால்.

மறு நாள் காலேஜில் ஜனனியிடம் தன் அண்ணன் அவளுடன் பேச வேண்டும் என்று கூறியதை காவியா அவளிடம் தெரிவித்தாள். அதே நேரம் அவனின் நோக்கத்தையும் கூறியவள் " உனக்கு என்ன தோனுதோ பேசு ஜனனி. எனக்காக எந்த முடிவும் எடுக்காத. அதே நேரம் இவனால நம்ம ப்ரெண்ட்சிப்புக்குள்ள எந்த சங்கடமும் வந்திடக் கூடாது" என்று முடிவாக கூறினாள்.

மறு நாளே அவினாஷும் ஜனனியும் சந்திக்க காலேஜ் கேன்டீனிலேயே ஏற்பாடானாது. அவினாஷ தனது காரில் கம்பீரமாக வந்திறங்கினான். அங்கிருந்த எல்லா பெண்களும் அவனை பார்த்து ஜொல்லாக ஊற்றினர். ஜனனியும் தன்னை மறந்து அவனை ரசிக்காமல் இல்லை. ஜனனியின் முகத்தை பார்த்தே காவியாவுக்கு புரிந்தது. 'எங்கண்ணன் வேணாம்னு சொன்னாலும் இவ விடமாட்டா போலிருக்கே. பாவம் எங்கண்ணன். இவளோட வாயாடித்தனம் தெரியாம இவகிட்ட மாட்டிக்க போறான்' என நினைத்தாள்.

" ஜனனி இது எங்க அண்ணன். அண்ணா இது ஜனனி" என்று இருவரையும் காவியா அறிமுகம் செய்ய அவினாஷ் கண்களால் அவளை அங்கிருந்து போகும் படி கூறினான். ஆனால் காவியாவோ மாட்டேன் என்று விடாப்பிடியாக அங்கேயே இருந்தாள்.அவினாஷ் பேச ஆரம்பிக்கும் முன் ஜனனி, " காவி, சீஸ் பாஸ்ட்டா வாங்கிட்டு வரியா. சாப்பிடலாம்" என்றாள். காவியாவுக்கு புரிந்தது. அவர்கள் கேன்டீனில் தயாரிக்க அதிக நேரம் எடுக்கும் பொருள் சீஸ் பஸ்ட்டாதான். ஜனனி தன் அண்ணனுடன் தனியாக பேச விரும்புகிறாள் என்பதை புரிந்தவள் " சரி வாங்கிட்டு வரேன்" என்று கிளம்பினாள்.

" அவினாஷ், காவியா என்கிட்ட சொன்னா. நீங்க என்ன ஆனந்தி அக்கா கல்யாணத்துல பார்த்து, புடிச்சி போய் என்கிட்ட பேசனும்னு சொன்னீங்கன்னு. எனக்கு தெரியும் நீங்க என்ன பேச போறீங்கன்னு. எனக்கு சம்மதம்தான். ஆனா அதுக்கு முன்னாடி நான் சில விசயங்கள் உங்ககிட்ட பேசனும். அத பேச முதல்ல உங்களால் இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிக்க முடியுமா?" என்று கேட்க அவினாஷுக்கு தலை சுற்றியது. ஜனனி வெட்கப்படு, நானி, கோனி பேசுவாள் என்று பார்த்தால் அவள் எடுத்த எடுப்பில் ஆறு மாத்ததுக்குள் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்பது ஆச்சரியப்படுத்தியது. அவள் கேட்ட கேள்விக்கு பூம் பூம் மாடு போல ' முடியும்' என தலையாட்டியவன் " ஆனா உங்களுக்கு இப்போதானே 19 வயசு" என்றான்.

" ஏன் இப்போ அதுல என்ன. திருமண வயசு இருபத்தொன்னு. அதுவா இப்ப ப்ராப்ளம்" என்று கூற அவன் ஆமாம் என்று தலை அசைத்தான்." உங்கப்பா முன்னாள் அமைச்சர்தானே. முன்னாள் அமைச்சரோட பையனால இது கூட பண்ண முடியாதா?" என்று கேட்க அவனும் 'அதானே' என்பது போல யோசித்தான்.

" இதுக்கு உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க மேற்கொண்டு பேசலாம்" என்றாள். அவனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தன் காதலை எப்படி ஜனனியிடம் சொல்லலாம் என்று வந்தவனுக்கு அவள் அவகாசமே கொடுக்காமல் இப்படி சிக்சர் மேல் சிக்சராக அடிக்க அவன் செய்வது அறியாது ஸ்தம்பித்து நின்றவன் " ஆமா சம்மதம்தான்" என்றான்.

" எங்க பேசிலி சாதாரண பேமிலி கிடையாது" என்று ஆரம்பித்தவள் தன்னை திருமணம் செய்து கொண்டாள் அவனுக்கு அவள் குடும்பத்தால் ஏற்படப்போகும் சங்கடங்கள் பற்றி கூறினாள். அவளின் முழுக்கதையையும் கேட்டவனுக்கு கண்கள் கலங்கியது. பணத்திலே உருண்டு பிரண்டவனுக்கு வாழ்வில் கஷ்டத்தை மட்டுமே பார்த்த சாரதாவின் கதை மிகப் பெரிய இன்ஸ்பிரேசனாக இருந்தது. முழுக் கதையையும் கேட்டவன் கடைசியாக பேசினான்.

" ஜனனி உன்ன கல்யாணம் பண்ணிக்க போறோம் என்பத விட இப்படி ஒரு க்ரேட் அத்தை எனக்கு கிடைக்க போறாங்கன்னு சந்தோசமா இருக்கு. எங்க வீட்டுல எந்த ப்ராப்ளமும் வராது. எங்கம்மாவுக்கு நான்னா உயிர். நான் எது சொன்னாலும் கேட்பாங்க. எங்கப்பாவுக்கு காவியாதான் எல்லாமே. அவ ஓக்கே சொல்லிட்டா எந்த ப்ராப்ளமும் எங்க பேமிலிக்குள்ள இருந்து வராது. அப்புறம் எங்க சைட் சொந்தக்காரங்க எல்லாம் எங்கம்மாவ மீறி எதுவுமே பேச மாட்டாங்க. பேசினாங்க... அவ்ளோதான். சோ அந்த ப்ராப்ளமும் இல்லை. என் சைட் க்ளியர்" என்றான்.

கையில் பாஸ்த்தாவுடன் வந்த காவியா " என்ன க்ளியர்" என்று கேட்க ஜனனி நடந்தவற்றை சுருக்கமாக கூறினாள். நடந்ததே சுருக்கம்தான் இதில் அதையும் சுருக்கமாக கூறி இருந்தாள் எப்படி இருக்கும். மனிரத்னம் பட வசனம் போல இருந்திருக்கும். காவியாவுக்கு தன் அண்ணனை கலாய்க்க வேண்டும் போல இருந்தது.

" சரி, அப்பாகிட்ட நான் பேசனும்னா எனக்கு நீ ஒரு பேவர் பண்ணனும்" என்க அவினாஷ் என்னவென்று கேட்டான்.

" உனக்கு ஞாபகம் இருக்கா, ஐந்து வருசம் முன்னாடி என்ன ஒருத்தி பாக்சிங்க்ல அடிச்சி ஹாஸ்பிடல்ல படுக்க வெச்சா. அவள பழிவாங்கனும்" என்றால். உண்மையில் கூறப்போனால் அவினாஷுக்கு காவியா அடி வாங்கியது தெரியும். கிக்பாக்சிங்கில் அவ்வப்போது நடப்பது தானே. ஆனால் அது ஜனனிதான் என்பது அவனுக்கு தெரியாது.

" அவ யாருன்னு சொல்லு காவிமா. அவ கைய உடைக்கனுமா? பாவம். இப்போ கைய உடைச்சா அவளுக்கு யாரு மாப்பிள்ளை கொடுப்பா. வேணும்னா அவள உன்கிட்ட மன்னிப்பு கேட்க வைக்கலாம்" என்று கூற காவியா கொல்லென சிரிக்க ஜனனி அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro