1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

❤️கதிர் அவன் குடும்பத்தாருடன் அஸ்வினியின் வருகைக்காக காத்திருக்க,அவன் நண்பர்கள் அவனை கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர்....

நான் இவ்வளவு பொறுமையா வேற யாருக்காகவும் இருந்தது இல்லைடா...என்றவன் தான் அஸ்வினியை சந்தித்தலிருந்து இன்று நிச்சயம் வரை எவ்வளவு பொறுமையாக இருந்தான் என்பதை சுட்டிக் காட்டினான்...

(💕அஸ்வினியை முதல் முறையாக சந்தையில் பார்த்தவன் தான் அங்கு வந்த காரணத்தையே மறந்து அவள் பின்னே சுற்றி திரிந்தான்...

தன் சகோதரனின் மூலம் அவள் இவனுக்கு தூரத்து சொந்தம் என்றும் ஒரு வகையில் தனக்கு முறை பெண் என்பதையும் அறிந்தான்...

அதன் பின் அவளை சந்தித்து காதலை சொன்னவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.... தன் பெற்றோர் பார்க்கும் ஆடவனை தான் திருமணம் செய்வேன் என்றவள் அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்....

அதன் பின்னும் அமைதிக்காப்பது  சரி வராது என்று அறிந்தவன்....தன் தாய்,தந்தையிடம் காதலை சொல்லி இப்பொழுது நிச்சயம் வரைக் கொண்டு வந்திருக்கிறான்....)

அஸ்வினி தன் தோழிகளுடன் வெளியே வந்து பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றபின் மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த நிச்சய பட்டை உடுத்தி வர மீண்டும் உள்ளே சென்றால்...

அவளுக்காக பல கடைகளில் தேடி இளநீலமும் இளம் சிவப்பும்(பிங்க்)கலந்த புடவையை எடுத்த கதிர் அதில் அவளை காண வேண்டி அவள் சென்ற திசையையே பார்த்தபடி இருந்தான்...

அவனின் ஆவலை வீணடிக்காமல்,அந்த பட்டுபுடவையில் அழகான பதுமையை வந்து நின்றாள்...

மூகூர்த்த பத்திரிக்கை படிக்க,தன் முன் அமர்ந்திருக்கும் கதிரை நிமிர்ந்த பார்த்தவள்..அவன் கவனம் முழுவதும் தன் மேல் இருப்பதை உணர்ந்து மீண்டும் தலை குனிந்து அமர்ந்தாள்...

என் கண்ணை பார்க்கவே இவளுக்கு நிச்சயதார்த்தம் தேவைப்படுது என்று எண்ணியவனாய் கதிர் பெருமூச்சி விட்டான்....

💕💕💕💕💕💕💕

அந்த தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் அனைவரும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தனர்...

மீட்டிங் நடக்கும் அறையில்,அந்த தொலைக்காட்சி சி.இ.ஓ பொங்கல் அன்று போடப் போகும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு,கிராமிய கலைகளை படம்பிடித்து காண்பிக்க 2,3 நபர்களை வேறு வேறு ஊர்களுக்கு செல்லும்படி உத்தரவிட்டார்...

அதில் தமிழ்நாட்டில் பிரம்மாண்டாமாக மஞ்சு விரட்டு போட்டி நடைப்பெறும் அலங்காநல்லூருக்கு அர்ஜீன் மற்றும் மித்ராவை புறப்பட சொன்னார்...

அங்கு காளைகளை தயார் படுத்துவதில் இருந்து அனைத்தையும் படம் பிடிக்க அவர்களை 15நாட்களுக்கு முன்பே அங்கு செல்ல சொன்னார்....

மீட்டிங் முடித்து வெளியே வந்த அர்ஜீன்..ம்ம் நமக்கு தலப் பொங்கல் அலங்காநல்லூருலதா போல இருக்கே பேபி😋என்றபடி மித்ராவின் தோள்களில் கைப்போட்டு அவளை தன்னுடன் இறுக்கினான்...

அவனை பார்த்து அழகாக முறைத்த மித்ரா...ப்ரண்ட்ஸ்லாம் தலப் பொங்கல் கொண்டாடுவாங்களாடா???ஏதும் அறியாததுப் போல் அவள் கேட்க

இந்த ப்ரண்ட்ஸ் ப்ரண்ட்ஸ்னு சொல்லுற அந்த உதடடட...அவளின் முகத்தை கையில் ஏந்தியபடி அர்ஜீன் கூற அவன் நெஞ்சில் வலிக்காமல் குத்தியவள்,"போடா பொறுக்கி"என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்...

வேறு பக்கம் திரும்பியவள் சிரித்ததை அறிய அவனுக்கு வாய்பில்லை...

பொறுக்கி என்ன பண்ணுவானு மதுரைல காட்ற வாடி..என்று எண்ணியவனாய் தன் வேலையில் கவனம் செலுத்தினான்....

அன்றைய நாள் இரவு மதுரைக்கு செல்ல இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்...

பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்தவள்,தண்ணீர் வாங்க சென்ற அர்ஜீனை பார்த்து...என்னை காதலை சொல்ல வெக்க இன்னும் என்னென்னதாடா செய்ய போற??என்று அவன் இதுவரை செய்தவை அனைத்தையும் எண்ணியவளாய் சிரித்தால்...

அவள் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் ஒரு பெண்மணி அமர..அம்மா!!என் ஹஸ்பன்ட் வருவாரு என்றாள்....

விடியற்காலை மதுரையை அடைந்தனர்...

அலங்காநல்லூரில்...

உடற்பயிற்சி செய்ய தன் வீட்டு மொட்டை மாடியை அடைந்த கதிருக்கு....மைக் செட்டில் ஒலித்த அந்த அறிவிப்பு கேட்டது....

மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துக் கொள்ள பெயர் இணைக்க நாளையே இறுதி நாள் என்று!!

கடந்த முறை வெற்றிப் பெற்ற கதிரின் கைகள் கர்வத்துடன் தன் மீசையை முறுக்கியது...😎

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro