பாகம் 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மது ஆபீஸ் விட்டு வீட்டுக்குள் நுழைவதற்கும் தரகர் சுந்தரம் வீட்டை விட்டு வெளியேறுவதற்கும் சரியாக இருந்தது. மதுவைக் கண்டு சற்றே விழிப்பிதுங்கினாலும் அதை தன் வெற்றிலைக் குதப்பிய வாய்ச் சிரிப்பால் வெளிக்காட்டாது மறைத்து தப்பித்தோம் பிழைத்தோமென அவசர அவசரமாக முன் நோக்கி நடந்தார் தரகர் சுந்தரம். வேலை முடிந்து அரக்கப் பறக்க ஓடி வந்து கடைசி பஸ்சைப் பிடித்து, கூட்ட நெறிசலில் நின்று கொண்டே பயணம் செய்து மீதி தூரத்தை தெருவுக்குள் ஆள் நாடமாட்டம் இருக்கும் பொழுதே கடந்து விட வேண்டும் என்று ஓட்டமும் நடையுமாய் வீட்டு வாசலை வந்தடைந்த போது வாசலிலேயே அந்த தரகர் இடைப்பட்டதும் மதுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மதுவின் வாயில் விழாமல் தப்பித்தது தம்பிராண் புண்ணியமென எண்ணிக் கொண்டு தரகர் ஓட்டம் பிடிக்க கோபம் தலைக்கேற வீட்டுக்குள் நுழைந்து கைப்பையை சோபாவின் மீது விசிரியடித்து விட்டு தானும் அமர்ந்து கொண்டாள் மது. அவள் உள்ளே வந்ததை கண்டும் காணாதது போல தந்தை சிவராமன் சாய்வு நாற்காலியில் சாய்ந்த படியே கண் அயர்ந்தது போல பாவனை செய்தார். அம்மா ரேணுகா சமையல் கட்டை விட்டு எட்டியும் பார்க்கவில்லை. இது எப்போதும் நடப்பது தான் என்றாலும் கோபத்தை கட்டுப்ப்படுத்துவதற்காக கண்களை மூடி ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டால் மது. பின்,

"ஓஹோ... நீ கிச்சன்ல ரொம்ப பிசியா வேலை பார்த்துட்டிருக்க நான் வந்ததை கூட  கவனிக்கலை. பாவம் உன் புருஷன் டயர்ட்ல அப்டியே கண் அசந்துட்டாரு. நம்ம வீட்டுக்கு ஜாதகத்தை தூக்கிட்டு எந்த அயோக்கியப் பயலும் வரவே இல்லை அப்டி தானே? ரைட் அப்டியே இருங்க!" என்று விட்டு கைப்பையை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தால் மதுரதி.

மது அறைக்குள் சென்று விட்டாள் என்பதை நிச்சயித்துக் கொண்டு அம்மா ரேணுகா மெதுவாக சமையலறையில் இருந்து முன்னறையை எட்டிப் பார்த்தாள். படுத்திருப்பதைப் போல பாசாங்கு செய்த தந்தையும் கண் திறந்து அசட்டுத் தனமாய் மனைவியைப் பார்த்தார். தரகர் சுந்தரமும் கடந்த சில வருடங்களாக கையில் கிடைக்கும் எல்லா ஜாதகங்களையும் முதலில் எடுத்து வருவது இந்த வீட்டுக்குத் தான். ஆனால் வயது முப்பது ஆகியும் மதுரதிக்குத் தான் இதுவரை எந்த வரணும் சரிப்பட்டு வரவே இல்லை. மதுவுக்கு ஜாதகத்தில் ஒன்றும் தோஷம் கிடையாது. நல்ல மாங்கல்ய பாக்கியம் நிறைந்த ஜாதகம் தான். தந்தை சிவராமனுக்குப் பின்னர் கொஞ்சம் பொருளாதார ரீதியில் பின்னடைவில் இருந்தாலும் நல்ல பெரிய குடும்பப் பின்புலன் தான். பின்பு என்ன தான் பிரச்சினை என்கிறீர்களா??

சிவராமன் ரேணுகா தம்பதிகளுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். சிவராமன் ஒரு அரசு வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். மூத்த பெண் மது என்கிற மதுரதி வயது 30. இப்பொழுது அதே வங்கியில் மது பணியாற்றுகிறாள். இரண்டாவது விது என்கிற வித்யா வயது 27. சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு இதே தரகர் சுந்தரம் அழைத்துக் கொண்டு வந்த மாப்பிள்ளை தான் பெண் பார்க்கும் படலத்தின் போது மதுவை பார்க்கவென வந்து விட்டு விதுவைக் கட்டிக் கொள்வதாகக் கூற. மது எதிர்ப்புத் தெரிவிக்காததாலும் விதுவும் சம்மதம் தெரிவித்ததினாலும் வேறு வழி அறியாத சிவராமன் தம்பதிகள் மதுவுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு விதுவின் திருமணத்தை நடத்தி வைத்து ஒரு சுமையை இறக்கி வைத்தனர். மூன்றாவது மகன் சத்யா. வயது 25. இரண்டு வருடங்களாக IT கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான். சிவராமன், ரேணுகா, வித்யா மற்றும் சத்யா நான்கு பேரும் நல்ல சிவப்பு நிறம். மது மாத்திரம் அந்த குடும்பத்திற்கு கொஞ்சமும் ஒட்டாதது போல கருப்பான தேகம் கொண்டவள். கருப்பாய் பிறந்த ஒரே காரணத்துக்காக கல்யாண சந்தையில் அவள் பல முறை நிராகரிக்கப் பட்டிருக்கிறாள். பல அவமானங்களுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறாள், கிட்டத்தட்ட அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த எல்லா வீட்டுக்கும் அவள் புகைப்படம் காட்டப்பட்டிருக்கும். அனேகமாக புகைப்படத்தை பார்த்ததுமே பெண் என்ன இத்தனை கருப்பாக இருக்கிறாள் என்று சொல்லி நிராகரித்து விடுவார்கள் அதையும் தாண்டி ஒரு வரண் வீடு வரை வந்து விட்டதென்றாள் ஒன்று வரதற்சணை என்ற பேரில் உள்ளது முதல் இல்லாதது வரை தலையையே அடகு வைத்தாலும் கிடைக்காத தொகையை ரொக்கமாக கேட்பார்கள் அல்லது அது நிச்சயம் நொட்டையும் சொத்தையுமாயான ஒரு வரணாய் தான் இருக்கும். அவளை இரண்டாம் தாரமாய் கேட்டோரும், தன் நாற்பதுகளின் முடிவில் அவளை கட்டிக் கொள்ள விரும்பியோரும், வேலை வட்டி இல்லாத ஆண் சிங்கங்களும் கூட இந்த லிஸ்ட்டில் அடக்கம். வீடு வரை வந்த முதலும் கடைசியுமான நல்ல வரண் என்றாள் அது அந்த கோவை சம்பந்தம் தான். மாப்பிள்ளை நல்ல உயரம் நல்ல கலர் கொஞ்சம் பூசினாற் போல உடம்பு, கருப்புக் கண்ணாடி. ஒரு தனியார் நிறுவணத்தில் சீனியர் அக்கவுட்டண்ட்டாக பணி. இவர்கள் குடும்பத்தோடு ஒப்பிட்டால்  நல்ல வசதியான குடும்பமும் தான். ஆனால் அவனும் தான் அக்காவை பார்க்க வந்து விட்டு தங்கையை செய்து கொள்கிறேன் என்று விட்டானே. மாப்பிள்ளை அப்படி சொன்ன போது என்னவோ எல்லோருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. வந்தவர்கள் சென்றவுடன் ரேணுகா கொஞ்சம் கோபப்பட்டு மாப்பிள்ளையை மரியாதை தெரியாத ஜென்மம் என்று கன்னா பின்னாவெனத் திட்டி தன் மனப்பாரத்தை குறைத்துக் கொண்டதும் வாஸ்தவம் தான். அதிர்ச்சியில் இருந்து முதலில் வெளி வந்தது மதுரதி தான். ஏனெனில் இந்த மூன்று வருட வரண் தேடும் படலத்தில் நிறைய புண்பட்டதும் பண்பட்டதும் கூட அவள் தான். நேராக தங்கையப் பார்த்து உனக்கு சம்மதமா என்றாள் மது. விதுவுக்கு அப்பொழுது 26 வயது. அக்காவின் நிலை இப்படியிருக்க அக்காவைத் தாண்டி தனக்கு கல்யாணமே நடக்காது போல என நினைத்துக் கொண்டிருந்தவள் வந்த வாய்ப்பை விட்டுத்தர ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை உடனடியாக சம்மதம் என்றாள். தாய்க்கும் தந்தைக்கும் தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால் அதன் பின்னர் மதுவின் முனைப்பினால் அந்த திருமணம் சீக்கிரமே நல்ல படியாக நடந்து முடிந்தது. தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததை ஒட்டி மதுவுக்கு கொஞ்சம் கூட மனக்குறை கிடையாது. அவளது ஆத்திரம் பூராகாவும் எவ்வளவு கேவலமாக திட்டி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் கொஞ்சம் கூட மான ரோஷம் இல்லாமல் வத்தலும் சொத்தலுமான வரண்களை தூக்கிக் கொண்டு மறுபடி மறுபடி வந்து தன்னை அவமானப் படுத்தும் அந்தத் தரகரின் மீது தான். சிவராமனோ ரேணுகாவோ முடிவாக வேண்டாம் என மறுத்து விட்டாள் தரகர் சுந்தரமும் அங்கு வருவதை நிறுத்திக் கொள்வார் தான். ஆனால் பெற்ற மனம் அள்ளவா? எப்படி அவளை அப்படியே அவள் போக்கிற்கு விட்டு விடுவது? அவள் எத்தனை கோபித்துக் கொண்டாலும் ஏதாவது ஒரு அதிசயம் ஏதாவது ஒரு நல்ல வரண் தங்கள் மகளுக்கு அமைந்து விடாதாவென அந்த பெற்றோரும் வேண்டாத தெய்வம் இல்லை வரண் தேடுவதையும் நிறுத்தவில்லை. இது தான் மதுவின் முன்கதை சுருக்கம்.

அறைக்குள் சென்றவள் வெளியே வரவில்லை. குளித்து உடை மாற்றிக் கொண்டு அப்படியே கட்டிலில் புரண்டு விட்டத்தைப் பார்த்து கண் மூடிக் கொண்டாள். கோபமும், இயலாமையும், அவமானமும் என்னவென்று சரிவர சொல்ல முடியாத அனேக உணர்ர்சிகள் அவளை ஒரு சேர வந்து தாக்கியது போல இருந்தது. அவள் தன்னை எவ்வளவு சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தாலும் இந்த திருமணம் என்ற ஒற்றை வார்த்தை அவளை மறுபடி மறுபடி மன அழுத்தத்திற்குள்ளேயே கொண்டுத் தள்ளியது. எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே வரத் துடித்துக் கொண்டு இருந்த கண்ணீரை வைராக்கியமாக வெளியே சிந்தாமல் தடுத்துக் கொண்டு இருந்தாள் மது. அப்பொழுது தான் ஒரு கையில் காபியும் மறு கையில் ஒரு பையுமாக தம்பி சத்யா உள்ளே நுழைந்தான்.

"என்ன வீட்டுக்குள்ள வரயிலேயே உன்னை டென்ஷன் பண்ணீட்டானா அந்த ஆளு" என்று சொல்லி சிரித்தபடி மதுவிடம் காபியை நீட்ட தம்பியை கண்ட மாத்திரத்தில் மனதின் ஒரு மூலையில் குதூகலம் எட்டிப் பார்க்க முகத்தில் சிறு புன்னகையுடன் கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டாள் மது.

சத்யா பெங்களூரில் வேலை பார்த்தான். அனேகமாக மாதக் கடைசியில் வீட்டுக்கு வருவான். சில நேரங்களில் அதுவும் இல்லை. வந்தால் முழுதாக 2 நாள் தங்குவான். மறு நாள் அதிகாலையே கிளம்பி விடுவான். அவன் வீடு வரும் நாளுக்காக அந்த வீடே காத்திருக்கும். மது அவன் கொடுத்த காபியை வாங்கிக் கொள்ள, கட்டிலோரத்தில் அமர்ந்து கொண்டான் சத்யா.

"என்னடா சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க" என்றாள் மது.

"எல்லாம் உன்னை பார்க்கத் தான்" என்றான் இளையவன்.

"என்னைப் பார்க்கவா? ஏன் என்ன விஷயம்?" புருவம் சுளித்தாள் அவள்.

"ஏன் விஷயம் இருந்தா தான் உன்னை பார்க்க வரணுமா???" இருவரும் கண்ணாலேயே ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

"டேய் ஓவரா பண்ணாம சொல்லுடா என்ன மேட்டர்? முதல்ல அந்த ஆளு வந்தான். பின்னாடியே நீ வர.. என்ன எதுனா வரண் வந்திருக்கா??"

"ஐயே... எனக்கு வேற வேலை இல்லை. இந்தா புடி" என்று சொல்லி அவள் தலையில் தட்டி கையில் வைத்திருந்த பையை அவளிடம் நீட்டினான்.

இன்னும் சஸ்பென்ஸ் தீராத புருவம் முடிச்சிட்ட முகத்துடன் பையைத் திறந்தவள் உள்ளே இருந்த புடவையைக் கண்டதும் தான் அவளுக்கே நினைவு வந்தது அவளுக்கு நாளை முப்பதாவது பிறந்த நாளென்று. புடவையை கையில் எடுத்து தடவிப் பார்க்கையில் அவள் உதடுகளில் தவழ்ந்தது சந்தோஷப் புன்னகையா இல்லை விரக்திப் புன்னகையா என்பதை சரிவர சொல்லத் தெரியவில்லை. புடவை மடியில் கிடக்க தம்பியை அமர்ந்த படியே அணைத்துக் கொண்டு "Thank youடா..." என்றாள்.

அது அவனுக்கும் நெகிழ்ச்சியை தந்த போதும் அந்த தருணத்தை சந்தோஷமானதாகவே வைத்துக் கொள்ள எண்ணி "புடவை புடிச்சிருக்கா? உனக்கு புடிச்ச மஞ்சள் கலர்லயே வாங்கிறணும்னு நாலு கடை ஏறி இறங்கி தேடி தேடி வாங்கினேனாக்கும்" என்றான்.

"ம்ம்ம்??? நிஜமாவே சூப்பரா இருக்கு"

"Happy??" என்றான் சத்யா thumbs up காமித்து.

பதிலுக்கு "very very happy" என்றாள் அவளும் thumbs up உடன்.

"சரி அப்போ நல்ல பொண்ணாட்டம் காலங்காத்தால வந்து என் தூக்கத்தை கெடுக்காமல் இந்த புடவையை கட்டிட்டு நீ மட்டும் கோயிலுக்கு போய்ட்டு வந்துரு" என்றவனைப் பார்த்து இம்முறை நிஜமான சந்தோஷப் புன்னகையுடன் தலை ஆட்டினாள் மது. பின்னர் இருவரும் நெடு நேரம் அங்கு அமர்ந்து அரட்டை அடித்து விட்டு நேரம் 10 மணிக்கு மேல் ஆகி விட்டது வந்து சாப்பிடுமாறு அம்மாவாகவே வந்து அழைத்துக் கொண்டு செல்லும் வரை அங்கேயே அமர்ந்து இருந்தனர். அதன் பின்னர் தரகர் வந்து சென்ற சமாச்சாரம் பற்றி அந்த வீட்டில் யாரும் பேசவில்லை. நான்கு பேரும் ஒன்றாய் அமர்ந்து பேசிச் சிரித்தவாறு சாப்பிட்டு முடிக்க மது எதிர்பார்த்ததை விடவும் அந்த நாள் கொஞ்சம் நல்லதாகவே முடிந்தது!

மேகமோ அவள்
மாயப்பூ திரள்
தேனலை சுழல்
தேவதை நிழல்
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ உளரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாதச் சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
♥️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro