பாகம் 10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

விடிந்தாள் தீபாவளி யார் முகத்திலும் பொட்டு சந்தோஷம் இல்லை. அம்மாவானால் மதுவிடம் முகம் கொடுத்துப் பேசுவது கூட இல்லை. சத்யா தீபாவளிக்காக வீட்டுக்கு வந்திருந்தான் ஆனால் அவன் முகத்திலும் எந்த சந்தோஷமும் இல்லை. அம்மா அப்பா புத்தாடை கூட வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்கள். இத்தனைக்கும் காரணம் அவள் என்று எண்ணிய போது மனம் வலித்தது. ஆனால் நிஜத்தில் இத்தனைக்கும் காரணம் அவன் தான். அவன் தான் பணத்தைக் காட்டி இந்த குடும்பத்தையே விலைக்கு வாங்கி விட்டான். இல்லாவிட்டால் எப்படி நேற்று பார்த்த ஒருவனுக்காக தன் குடும்பமே தன்னை எதிர்க்கும்! அத்தனை தூரம் போய் சொல்லியும் இது வரை இந்த திருமணத்தை நிறுத்த ஒரு முயற்சி எடுக்கவில்ல அவன். அவன் ஒன்றை நினைத்து விட்டாள் அதை அடைந்தே தான் தீருவான் போல என நினைத்த போது அவன் மீது ஆத்திரமாக வந்தது அவளுக்கு. ஆனால் தன் விருப்பு வெறுப்புக்கு இங்கு என்ன மரியாதை. ஆளாளுக்கு emotional black mail செய்து கொண்டு இருந்தனர் அவளை.

"இங்க பாரு மது. உன்னை பெத்தவ நான் சொல்றேன். உனக்கு ஒரு நல்லது நடந்தாலும் சரி கெட்டது நடந்தாலும் சரி அது இந்த அம்மாவை தாண்டி தான் வரணும். இந்த வரன் உனக்கு நல்லது. நீ பயப்படற மாதிரிலாம் ஒன்னும் நடக்காது. தயவு செய்து இதை பண்ணிக்கோ. அம்மா இவ்வளவு சொல்லியும் நீ உன் இஷ்ட்டப்படி தான் பண்ணுவேன்னா அப்பறம் உன் இஷ்ட்டம்" என்றாள் அம்மா கடைசியாக.

"எதையுமே யோசிச்சு முடிவு எடுக்கறது நல்ல பழக்கம் தான். ஆனா அதுக்காக இப்படி எல்லாத்துலயுமே நெகட்டிவ்ஸ்சை மட்டுமே நிட் பிக் பண்ணக் கூடாது. இது வரை உன் வாழ்க்கைல எல்லா முடிவையுமே நீ தான் எடுத்திருக்க. நாங்க உங்க சுதந்திரத்துல என்னைக்கிமே தலையிட்டதில்லை. இப்போ தலையிடுறோம்னா நீ உன் லைஃப்ல முதல் முறையா ஒரு தப்பான டிசிஷன் எடுக்கப் போறன்னு அர்த்தம். அந்த தப்பை நீ பண்ணாம தடுக்க் தான் நாங்க இவ்வளவு முயற்சி பண்றோம். புரிஞ்சிக்கறதும் புரிஞ்சிக்காததும் உன் கைல தான் இருக்கு" என்றார் அப்பா.

"உன் லைஃபுக்காக நான் நிறைய பேசிட்டேன். ஆனால் நீ தான் பிடிவாதமா இருக்க. இப்போ நான் என் லைஃபுக்காக பேசப் போறேன். நான் வேலை பார்க்கற இடத்துல ஒரு பொண்ணை லவ் பண்றேன்க்கா. பேர் ஷ்ரதா. சேம் ஏஜ். இந்த வருஷ கடைசில அவளுக்கு கல்யாணம் பண்ணியே ஆகணும்னு அவங்க வீட்ல force பண்றாங்க. உனக்கு கல்யாணம் நடந்தா தான் எனக்கு கல்யாணம் நடக்கும். உனக்காக இல்லைனாலும் எனக்காக இதை பண்ணிக்கோ மது ப்ளீஸ்" இது தம்பி சத்யா.

ஆளாளுக்கு நாலா புறம் இருந்தும் அம்பு தொடுக்க ஒவ்வொருவர் தொடுத்த அம்பும் நேராய் அவள் நெஞ்சுக் கூட்டுக்குள் சென்று பாய இத்தனை நாள் வரை தன் குடும்பத்துக்காகவே வாழ்ந்தவள் தன் குடும்பத்திற்காகவே இரண்டு மனதாக அந்த முடிவை எடுத்தாள். மது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்த கணமே அந்த வீடு கல்யாணக் கலை பூசிக் கொண்டது. அப்பாவும் சத்யாவும் பொழுது சாய்ந்ததைக் கூட பொருட்படுத்தாமல் அந்த நேரத்தில் கிளம்பி கடைக்கு சென்று தேவையான அனைத்தையும் வாங்கிக் கொண்டு வந்தார்கள், அம்மா அன்று இரவு ஒரு மணி நேரமேனும் தூங்குவாளா என்பதே சந்தேகம் போல தடல்புடலாக அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு பார்த்தாள். இடையில் சாரதா அம்மாவுக்கும் வித்யாவுக்கும் அம்மா அழைப்பெடுத்து அந்த நல்ல சேதியைக் கூற சாரதா அம்மாவுக்கோ நிஜமான சந்தோஷம், வித்யாவுக்கானால் அதிர்ச்சி. ஆனால் இதற்கு மேல் இத்தனை தொலைவில் இருந்து கொண்டு அவளால் எதுவும் செய்ய முடியாது என தோணவே பண்டிகை முடிந்து சில நாட்களில் அவள் நேரில் வருவகாக மட்டும் கூறிவிட்டு வைத்தாள் வித்யா.

ஏதாவது உதவி வேண்டுமா என மது அம்மாவை கேட்க எல்லாவற்றையும் அவள் பார்த்துக் கொள்வதாகக் கூறி அம்மா அவளை சற்று நேரம் தூங்கி எழுமாறு கேட்டுக் கொள்ள மதுவும் சரியென உரங்கச் சென்றாள். யாரும் வெளிப்படையாக அவளிடம் சொல்லாவிட்டாலும் திருமணத்துக்கு அவள் சம்மதம் தெரிவித்ததால் இந்த வீட்டில் அவள் கொண்டாடப் போகும் கடைசி தீபாவளி அது. அடுத்த தீபாவளிக்கு தலை தீபாவளிக்காகத் தான் அவள் இந்த வீட்டுக்கு வரவேண்டியதிருக்கும். ஆகவே தான் இந்த தடல் புடல். அது சரியோ தவறோ அவளுக்காக இப்படி பார்த்துப் பார்த்து செய்யும் இந்த குடும்பத்திற்காய் என்ன வேணுமானாலும் செய்யலாம் என நினைத்தவாறு தூங்கிப் போனாள் மதுரதி.

நேரமே தூங்கியதால் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கொண்டாள் மது. வீட்டில் மற்றைய மூவரும் தூங்கினார்களா என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம் மூன்று பேருமே குளித்து மதன் வீட்டில் இருந்து கொடுத்து அனுப்பப்பட்ட ஆடைகள் அணிந்து அதிகாலையிலேயே ஜம்மென்று இருந்தனர். இன்று அவள் கோலம் போடுவதாகக் கூறி விட்டு சென்று வாசல் தெளித்து ஒரு பெரிய கலர் கோலம் வரைந்தாள் மது. ஏனோ இந்த வீட்டில் அவள் கொண்டாடப் போகும் கடைசி பண்டிகை அது என்பது அவள் மனதிலும் ஒரு சலனத்தை ஏற்படுத்தி இருந்தது. கோலம் போட்டு விட்டு வந்தவளுக்கு அம்மா கையால் ஆவி பறக்க ஃபில்டர் காபி போட்டுத் தந்தாள்.

"சாரதாம்மா கூப்பிட்டாங்க. பண்டிகை நாளும் அதுமா கோயில்ல ரொம்ப கூட்டமா இருக்கும். மாப்பிளையால அந்த கூட்டத்துல கோயிலுக்கு போக முடியாதுல்ல. அதுனால உன்னை குளிச்சு ரெடியாகி இருக்க சொன்னாங்க. அவங்க கூட கோயிலுக்கு போய்ட்டு வரதுக்கு" என்றாள் அம்மா நாசூக்காக.

"சரிம்மா. நான் குளிச்சுட்டு ரெடி ஆகுறேன்" என்று விட்டு சிரித்த முகமாக காபியைக் குடித்து முடித்து விட்டு குளிக்கச் சென்றவளைப் பார்த்த போது அம்மாவுக்கு மிகவும் மன நிறைவாக இருந்தது.

மது குளித்து விட்டு வந்ததும் சாமி முன்னாள் வைக்கப்பட்டிருந்த சாரதா அம்மா வாங்கி அனுப்பி இருந்த உடையையும் அப்பாவும் சத்யாவும் நேற்று அவசர அவசரமாக சென்று வாங்கி வந்த உடையையும் அம்மாவும் அப்பாவும் கூடி நின்று மதுவுக்கு வழங்க அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டு அதை வாங்கிக் கொண்டவள் மதன் வீட்டில் இருந்து வாங்கி அனுப்பி இருந்த புடவையை கட்டிக் கொண்டு அவர்கள் கொடுத்திருந்த வளையலை கையில் அணிந்து கொண்டு வெளியே வந்த போது அம்மாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இதில் முக்கியமான ஆனால் அந்த வீட்டிலுள்ளோர் யாரும் கவனிக்கத் தவறிய இன்னொரு விஷயம் என்னவென்றாள் மது மதனை கோயிலில் சந்தித்த அன்று அதை பற்றி எதுவும் தெரியாத மதுவின் தோழி சாரு அன்று மது மிகவும் அழகாக இருப்பதாயும் லூஸ் ஹேரும் புடவை தலைப்பை ப்ளீட் செய்யாமல் லூசாக விடுவதும் மதுவுக்கு மிக அழகாக இருப்பதாகவும் கூறி இருந்தாள். அப்பொழுது அதை மது சுத்தமாக மதிக்கவில்லை என்றாலும் மதன் அவளை முதன்முதலில் கண்டது அந்த தோற்றத்தில் தான் என்பதால் அதன் பின்னர் மது தனது தலைமுடியை லூசாக விட்டு ஒரு சிறு க்ளிப் மட்டும் குத்திக் கொள்வதை வழமையாக்கிக் கொண்டு இருந்தாள். இப்பொழுது ஒரு லிட்டர் எண்ணெயை தலையில் இட்டுக் கொள்வதோ தலையை இறுக்கிப் பிண்ணுவதோ இல்லை.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் சாரதா அம்மா வந்து அவளை கோயிலுக்கு அழைத்துச் சென்று விட்டு வந்தாள். ரேணுகா மிகவும் ஆசையாகக் கேட்டதால் அன்றைய காலை உணவை அவர்கள் வீட்டில் அவர்களோடு அமர்ந்து உண்டு விட்டு சென்றாள் சாரதா. மதன் அன்றைய நாள் முழுவதும் ஒரு தீபாவளி ஷூட்டில் பிசியாக இருக்க மதனிடம் இருந்து இது வரை எந்தத் தகவலும் இல்லை. தீபாவளி எப்படிப் போனாலும் மது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததை முன்னிட்டேணும் அவன் அவளை தொடர்பு கொள்ளாதது மதுவுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. ஒரு வேலை விது கூறியது போல அவன் பேருக்கென்று செய்கிற திருமணம் ஆதலால் அவனுக்கு அக்கறை இல்லையா அவனை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள் அவள். ஆனால் சராதா அம்மாவானால் அவளை தான் பெற்ற பெண்ணுக்கும் மேலாக பாசமாக நடத்தினாள். அவரது எளிமை அந்த குடும்பத்தில் அனைவருக்குமே மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது.

அந்த வீட்டில் சினிமா சீரியல் எல்லாம் பார்க்கும் வழக்கமே கிடையாது. அதனால் தான் அவர்கள் மதனை அறிந்திருக்கவும் கிடையாது. அன்று ஏனோ ரிமோட்டை கையில் எடுத்து சோபாவில் அமர்ந்தவள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டாள். ஒரு சேனலில் மதனின் interview போய்க் கொண்டிருக்க ஆர்வமாக அதை பார்வையிட்டாள் மது.

Interviewer - Chennai's most handsome bachelor நு உங்களை தெரிவு செய்திருக்கதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க்க?

மதன் - ரொம்ப சந்தோஷமா இருக்கு. மக்களோட votes இன் அடிப்படைல தெரிவு செய்யப்பட்டு இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.

Interviewer - ஆனால் நம்ம most eligible bachelor கூடிய சீக்கிரமே family man ஆ மாறப் போறார்னு பேசிக்கிறாங்களே. அதைப் பத்தி என்ன சொல்ல விரும்புறீங்க?

மதன் - அது பத்தின Official statement சீக்கிரமே வரும்.

Interviewer - நம்ம most handsome bachelor மனசை கொள்ளை கொண்ட அந்த most prettiest princess யாருனு தெரிஞ்சிக்க நாங்க ரொம்ப ஆவலா இருக்கோம்.

அதற்கு மேல் பார்க்கப் பிடிக்கவில்லை மதுரதிக்கு. அந்த கேள்விக்கான மதனின் பதிலை கேட்கவும் பிடிக்காமல் Tv ஐ அணைத்தாள் மது. Chennai's most HANDSOME bachelor ஆகத் தெரிவு செய்யப்பட்டவனின் வாழ்க்கைத் துணை இவள் என்று நினைத்த போதே அவமானமாக இருந்தது மதுரதிக்கு. அவனுக்கு அவள் எந்த விதத்திலும் பொருத்தமானவள் அல்ல என்பது அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும் ஊர்ஜிதமானது அவளுக்கு. இந்த திருமணம் சினிமா உலகத்துக்கும் அதை ரசிக்கும் கோடான கோடி மக்களுக்கும் ஒரு கேலி செய்தியாகவே இருக்கப் போகிறது. சுற்றம் முற்றம் அனைத்துக்கும் ஒரு கேலிப் பொருளாக அவள் மாறப் போகிறாள். கொஞ்சம் விலை ஜாஸ்தியான புடவையோ நகையோ அணிந்தால் கூட 'இப்ப இவ தகுதிக்கு இவளுக்கு இது தேவையா' என கேலி பேசும் உலகம். நாளை இவர்கள் திருமணம் பற்றி அறியும் போது என்ன செய்யும்?? எள்ளி நகையாடும்! நாளை ஊருக்கும் உலகக்கும் பயந்து தன் மார்க்கெட் கெட்டுப் போய் விட்டதென்று சொல்லி அவன் டைவர்ஸ் என்று சொல்லி விட்டாள் அவள் நிலை என்னாவது? சினிமாக் காரர்களுக்குத் தான் எண்ணற்ற திருமணங்களும் டைவர்ஸ்களும் அல்வா சாப்பிடுவது போல ஆயிற்றே! அவள் அவசரப்பட்டு விட்டாளா? அவள் இருப்பதை வைத்து சந்தோஷமாகவும் மரியாதையாகவும் வாழ நினைப்பவள். அந்த நினைப்பே அவளுக்கு ஒரு வித பயத்தை அளித்தது. சிறைவாசத்துக்கும் விடுதலைக்கும் இடையே சிக்கித் தவித்தாள் மதுரதி. ஒரு பக்கம் அவனது நினைப்பே ஒரு வித பூரிப்பைத் தந்தது மறுபுறம் இந்த திருமணம் வேண்டாம் என லெட்டர் எழுதி வைத்து விட்டு எங்காவது கண்காணாத தூரம் போய்விடலாமா என்றிருந்தது மதுரதிக்கு அப்போது.

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே
வீதி என்னாகுமோ
யார் இவன் யார் இவன்
ஓர் மாயவன்
மெய்யானவன் அன்பில்
யார் இவன் யார் இவன்
நான் நேசிக்கும்
கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ
♥️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro