Paguthi 12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது.அர்ஜுனும் கார்திக்கும் தயாராகி  பிரியா,அவினாஷ் மற்றும் மித்ராவுடன் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது கார்த்திக் ரேடியோவில்

"கண்ணால் பேசும் பெண்ணே

என்னை மன்னிப்பாயா

ஒரு தவறை தவறி செய்தேன்

என்னை மன்னிப்பாயா "

என்ற பாடலை ஒலிக்கவிட்டு மித்ராவின் பதிலுக்காக அவள் முகத்தை கண்ணாடியில் நோக்க அவளோ ஹெட் செட் மாட்டி கொண்டு பாட்டு கேட்டு கொண்டிருந்தாள்.

கார்த்திக்கின் முகம் உடனே வாட அதை கண்ட அர்ஜுன் தன் சிரிப்பை அடக்க மிகவும் கஷ்ட பட்டான்.பின் அனைவரும் தங்கள் அலுவலகத்தை அடைய அங்கு பட்டு வெட்டியும் சட்டையும் அணிந்து 2 ,3 பேருடன் அவர்களுக்காக ஊர்த்தலைவர் காத்திருந்தார்.ஊர்த்த தலைவர் கார்த்திக் மற்றும் அர்ஜுனிடம் வணக்கம் தெரிவிக்க அவர்களும் பதில் வணக்கம் செலுத்தினர்.

பின் அர்ஜுன்"நேத்து உங்க கடிதம் கெடச்சுது இந்த ஊருலயும் திருவிழா அப்போ தான் பல துர்சம்பவங்கள் நடக்குது அதுனால நீங்க இந்த ஊர்த் திருவிழா பத்தி சொன்னிங்கன்னா பாதுகாப்பு குடுக்க வசதியா இருக்கும் "என்றான் 

அதற்கு ஊர்த் தலைவரோ "இந்த ஊருல காலம் காலமா இந்த திருவிழா நடக்குது தம்பி.பல மாநிலத்துல இருக்குறவுங்களும் முந்தி இங்க வணிகத்துக்காக வந்து அப்டியே தங்கிட்டாங்க அதுனால பல மாநிலங்களோடு விழாக்களையும் நாங்க இந்த திருவிழா அப்போ கொண்டாடுவோம்.இது 10 நாள் நடக்கும்.சிவனும் ஹரியும் ஒண்ணுங்குற அடிப்படையில நாங்க இந்த திருவிழாவை சிவனும் பெருமாளும் சேர்ந்து இருக்குற எங்க ஊரு கோவில்ல நடத்துவோம்.மொத நாள் அடுத்த நாள்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் போட்டியும் நடக்கும்.அது எல்லாமே கோவிலை சுத்தி இருக்குற இடத்துல தான் நடக்கும்.பல துர்சம்பவங்கள் நடந்ததால் ஊற விட்டு வெளியேறின ஜனங்க எல்லாம் கூடுறது இந்த திருவிழாக்கு தான்.இன்னைக்கு மாலைல பந்தக்கால் நட்டு திருவிழாவை தொடங்குவோம்."என்று கூறி முடிக்க 

கார்த்திக்"ரொம்ப நன்றிங்கய்யா நாங்க எங்களால முடிஞ்ச அளவுக்கு பாதுகாப்பு குடுத்து உங்களுக்கு பொருள்சேதமோ,உயிர் சேதமோ வராம தடுக்குறோம்."என்று கூற

ஊர்த்த தலைவர் "ரொம்ப சந்தோஷம்ப்பா அப்போ நாங்க வரோம் ."என்று கூறி எழுந்து சென்றார்.

மாலை வேளையும் நெருங்க அர்ஜுனும் கார்திக்கும் அந்த கோவிலின் வரைபடத்தையும் அதை சுற்றி உள்ள இடங்களின் வரை படத்தையும் பார்த்து அங்கு காவலர்களை தனி தனி குழுவாகப் பிரித்து பாதுகாக்கும் படியும் அனைத்து விபரங்களையும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை தெரியப்படுத்தவும் கூறினர்.

பின் மித்ரா பிரியா,அவினாஷுடன் தங்கள் தங்குமிடம் நோக்கி சென்றனர்.

செல்லும் வழியில் அவினாஷ் "ஹே மித்து அக்கா பிரியா அக்கா எங்க ஊருல திருவிழா சூப்பராக இருக்கும் தெரியுமா.எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இன்னைக்கு பூஜ பண்ணிட்டு அப்பறோம் திருவிழாக்கு பந்தக்கால் நடுவாங்க,அப்பறோம் அடுத்த நாள் காலைல சிவனுக்கும் நாராயணருக்கும் அபிஷேகம் பண்ணிட்டு ராமாயணக் கதையை நாடகமா நடத்துவாங்க,அப்பறோம் மாலை பொண்ணுங்களுக்கு எல்லாம் கோலப்போட்டி நடக்கும்,அப்பறோம் இந்த திருவிழாலயே வர்ணப்போச்சு விழா தான் ஜாலியாஹ் இருக்கும்."என்க 

கார்த்திக் "வர்ணப்பூச்சு விழாவா பொண்ணுங்களுக்கு கோலப்போட்டி மாறி என்ன ஆம்பளைங்களுக்கு செவித்த பெயிண்ட் அடிக்கிற போட்டியா ??"என்று கேட்க மித்ரா அவனது கூற்றில் சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டு வந்தால் .

பின் பிரியா"ஏன்டா பெயிண்ட் அடிக்கிற காம்பெடிஷன் வச்சு என்ன நீ பெரிய ட்ராயிரா இல்லையாண்ணா கண்டுபிடிக்க போறாங்க என்ன சொல்ல வரான்னு கேளுங்க டா"என்க 

 அவிநாஷ் தொடர்ந்தான்"அது நார்த் இந்தியால கொண்டாடுற ஹோலி மாதிரி தான் அக்கா ஆனா கொஞ்சம் டிபிறேன்ட் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு வர்ணம் இருக்கும் தம்பிக்குநீலம்  அண்ணனுக்கு சிகப்பு அப்பா,அம்மாக்கு வெள்ளை அப்பறோம் கல்யாணம் பன்னிக்க போறவுங்களுக்கு மஞ்சள் இப்டி பூசுறதால அவுங்களோட உறவு என்னைக்கும் நிலத்து இருக்கும்ங்கிறது எங்க ஊரோட ஐதீகம் ."என்று கூற 

அர்ஜுன் காதில் "மஞ்சள் கல்யாணம் பண்ணிக்க போறவுங்களுக்கு என்பது மட்டும் தெளிவாக கேட்டது .பின் தங்குமிடம் வந்தவர்கள் தயாராக மித்ராவும் ப்ரியாவும் சல்வாரில் வருவதை கண்ட அவினாஷ் அவர்களை மாற்றி மாற்றி நோக்கினான்.

அவன் நோக்குவதன் அர்த்தம் விளங்காததால் மித்ரா"ஹே அவி ஏன் அப்டி பாக்குற இந்த டிரஸ் நல்லா இல்லையா ??"என்று கேட்க 

அதற்கு அவினாஷ் "நல்லா இருக்கு ஆனா ஒரு சின்ன சிக்கல்" என்க 

அதற்கு பிரியா "என்னடா சிக்கல் ?"என்க 

அவினாஷ்"அது எங்க ஊரு திருவிழால வயசு பொண்ணுங்க எல்லாரும் ஒன்னு புடவை கட்டணும் இல்ல தாவணி கட்டணும் ."என்க மித்ராவும் ப்ரியாவும் பேந்த பேந்த முழித்தனர்(இருக்காதா பின்ன ரெண்டு பேரும் சல்வார் போடுறதே உலக அதிசயம் இதுல சேலை கட்ட சொன்னா).

பின் மித்ரா அவினாஷிடம் "அது வந்து அவி எங்க கிட்ட சேலை இல்ல அண்ட் எங்களுக்கு கட்டவும் தெரியாது' என்க.

அவினாஷ் சற்று யோசித்து விட்டு குடு குடு வென்று வெளியே ஓடியவன் 10 நிமிடத்தில் கையில் ஒரு பையுடன் வந்தான் அதை வாங்கி பார்த்த இருவரும் ஆச்சர்யத்தில் கண்களை விரித்தனர் ஏனெனில் அதில் புடவையும் சட்டையும் இருந்தது.

பிரியா"ஹே அவி இது எப்படி ஒனக்கு கெடச்சது ??"என்று வினவ 

அதற்கு அவினாஷ்" உங்கள மாதிரி தான் எங்க அக்காவும் இருப்பா இந்த ரெண்டு சேலையும் அவ தொலைஞ்சு போறதுக்கு மொத நாள் தான் வாங்கினா நீங்களும் எனக்கு அக்கா மாறி தான இன்னைக்கு இதை கட்டிக்கோங்க "என்று பாசமாக கூற சோதரன் பாசமதை அறியாத இருவரும் அவனை கட்டி பிடித்தனர் .

அவினாஷ்"அய்யய்யோ ரெண்டு பெரும் விடுங்கக்கா மூச்சு முட்டுது" என்று துள்ளி ஓட அவர்கள் இருவரும் அறைக்குள் சென்றனர்.

பின் மித்ரா "ஏண்டி நமக்கு தான் சேலை கட்ட தெரியாதே இப்போ என்ன பண்றது ?""என்று வினவ 

அதற்கு ப்ரியாவோ "கூகிள் ஆண்டவர் இருக்க பயமேன் என்று selai கட்ட video பார்த்து கட்டி கொண்டு வெளியே வந்தனர். 

அங்கு அர்ஜுன் கார்த்திக்கிடம்"டேய் எவ்ளோ நேரம் டா கெளம்புவ பொண்ணுங்க தான் இப்டி அலங்காரம் பண்ணுவாங்கன்னா நீ என்னடா "என்று புலம்பி கொண்டே வெளியே வந்தவன் எதிரில் மஹாலக்ஷ்மியை போல் சிகப்பு சேலையில் முடியை தளர பின்னி காதில் ஜிமிக்கி ஆடிட மோகன சிரிப்போடு வெளி வந்த ப்ரியாவை பார்த்து ஸ்தம்பித்து நின்றான் .

"பெண்ணே நீ பதுமையோ

என் வாழ்வின் 

வளமென வந்த புதுமையோ "

என்று மனதில் கவிதை வாசித்தவன் அவள் அருகில் சென்று"பிரியா யு ஆர் ஜஸ்ட் killing me alive"என்று கூற அவளோ வெட்கத்தில் நெளிந்தாள்.

 பின் மித்ரா"mkum mr .அர்ஜுன் கோவிலுக்கு போலாமா" என்றால் பின் கார்த்திக் கிளம்பி வெளி வர முதல் முறை மித்ராவை சேலையில் பார்த்தவன் இதயமோ ஒரு நிமிடம் நின்றே துடித்தது.

பின் தன்னை சமன் செய்து கொண்டவன் அனைவருடனும் சேர்ந்து கோவிலுக்கு சென்றான்.

அங்கு கோவிலில் ஊரில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் குழுமி இருக்க .ஊர்த்த தலைவருக்கு முதல் மரியாதை செய்யப் பட்டு அவர் கையால் பந்தல் கால் நடப்பு பட்டது.பின் இரவு நேர பூஜை முடிய அங்கு நிலவரத்தை காண்காணித்துக் கொண்டிருந்த அர்ஜுனிற்கும் கார்த்திக்கிற்கும் சந்தேக மூட்டும் வகையில் எந்த நிகழ்வும் நடை பெறாமல் இனிமையாக அம்மாலை வேளை முடிவுற்றது.

செல்லும் வழியில் வண்டியை அர்ஜுன் துணிக் கடையில் நிறுத்த மித்ராவும் ப்ரியாவும் சில சேலைகளை வாங்கி கொண்டனர்.பிரியாவிற்கு அனைத்து சேலைகளையும் அர்ஜுன் நேரடியாக தேர்ந்தெடுக்க மித்ராவிற்கு கார்த்திக் அவளுக்கு பொருத்தமான சேலைகளை நன்றாக இல்லை என்று சொல்லி அதையே அவளை தேர்ந்தெடுக்க வைத்தான்.அன்றைய நாள் இனிமையாக கரைய மித்ராவும் கார்த்திக்கிற்கும் இடையில் இருந்த மனக் கசப்பு இன்றும் சரியாக வில்லை.


அடுத்த நாள் காலை அழகாக விடிய காலை பூஜைக்கு ஐவரும் கிளம்பி சென்றனர்.பூஜையும் முடிய பெண்களுக்கான கோலப்போட்டி மாலையில் துவங்கியது .ப்ரியாவையும் மித்ராவையும் கலந்து கொள்ளும் படி அவினாஷ் வலியுறுத்த ஓவியம் வரைய தெரிந்த மித்ரா மட்டும் அதில் கலந்து கொண்டால் .

அவளிடம் மன்னிப்பு கேட்க கார்த்திக் எத்தனையோ முறை முயன்றும் அது தோர்த்து போக அவன் அங்கு காவலை மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்த அர்ஜுனிடம் சென்று நின்று கொண்டான்.

பின் மித்ரா கோலம் இட்டு முடிக்க அதன் நடுவில் வைக்க பூவை தேடினால்.

பிரியா"மித்ரா சூப்பராக இருக்குடி ஆனா என்ன ஏதோ தேடுற ??"

அதற்கு மித்ரா "அது ஒன்னும் இல்லடி நடுவுல பூ வச்சா கோலம் இன்னும் நல்லா இருக்கும் "என்று சொல்ல இதை பாதி மட்டுமே கேட்ட கார்த்திக்"கார்த்திக் அவளை சமதானப் படுத்த கடவுளா ஒனக்கு ஒரு சான்ஸ் குடுத்துருக்காரு அவளுக்கு பூ குடுத்து சமதானப் படுத்திருவோம்."என்று நினைத்துக் கொண்டு சென்றவன் என்ன பூ வாங்குவது என்று தெரியாமல் மொத்த பூ கடயில் உள்ள அனைத்து வகை பூக்களையும் தலையில் ,கழுத்தில் மாலைகளும் கையில் கூடயுமென வந்து மித்ரா முன் நின்றான்

"மித்ரா என்ன பூ வேணுமோ அத எடுத்துக்கோ "என்று கூற அவனது கோமாளித்தனத்தில் வாய் விட்டு சிரித்த மித்ரா "ஹே கொரங்கு   கோலத்துல வைக்க ஒரு பூ கேட்டா ஒரு பூ கடைய வாங்கிட்டு வந்துட்ட "என்று கூறி மீண்டும் நகைக்க 

கார்த்திக்"யாரு கொரங்கு பாவம் புள்ள பூ கேக்குதேன்னு கொண்டு வந்தா என்னையே கொரங்குக்குறியா .??"என்று கூற 2 நாட்களாய் போடாத சண்டைக்கு ஈடு கொடுக்கும் படியாக சண்டை இட்டனர் இருவரும்.

இவர்கள் இங்கு சண்டையிட அதை பார்த்த பிரியா தலையில் அடித்துக் கொண்டு அவ்விடம் விட்டு நகர அவளது கையை பிடித்து இழுத்த அர்ஜுன் அவளை பார்த்து"பிரியா எல்லாம் அழகா இருக்கு ஆனா ஒன்னு கொறையுதே "என்று கூற

 பிரியா தன்னை சரி பார்த்து "இல்லையே எதுவும் கொறயலயே என்று கூற அர்ஜுன் அவளது தோள் தொட்டு திருப்பி அவளது கூந்தலில் மல்லிகை சரத்தை சூட்டினான்.

அன்றைய நாளும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் கரைய அதீத மகிழ்ச்சி நிலைக்குமா??

திருவிழாவில் நடக்க இருப்பது என்ன??

stay tuned to know
Hi everyone en storykku 1k reads kedachchadhu romba sandhoshama irukku. Chapter dedicated to all my readers and specially to my udan pirava wattpad sagodharar @ashikmo.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro