paguthi 14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அங்கே அவ்விடத்தில் தன் பார்வையை சுழல விட்ட கார்த்திக்கின் கண்ணில் பட்டதோ தொட்டில்,மஞ்சள் சரடுகளால் நிறைந்திருந்த ஒரு மரம் தான் .அப்பொழுது அவனது சிந்தையில் வந்தது அன்று அவன் இவ்விடத்தைப் பற்றி விசாரிக்கையில் ஒரு மூதாட்டி கூறியது தான் .

"இந்த ஊரு திருவிழா அப்போ நடக்குற சுமங்களிப் பூஜை முடிஞ்சதுக்கு அப்பறோம் கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணுங்களும் கல்யாணம் ஆகி கொழந்த இல்லாத பொண்ணுங்களும் இந்த ஆத்தங்கரைல இருந்து 2 காத தூரத்துல இருக்குற ஒரு தெய்வ மரத்துக்கு போய் தாலியையும் தொட்டிலையும் கட்டிட்டு வருவாங்க.அப்டி செய்த அடுத்த 3 மாசத்துல பலன் கெடைக்கும்ங்கிறது எங்க ஊருல காலம் காலமா நம்புற ஒரு விஷயம்.

என்றார் பின் கார்த்திக்"அப்போ பாட்டி இது வரையும் ஏதாவது கல்யாணம் ஆன பொண்ணுங்க காணாம போய் இருக்காங்களா??என்று கேட்க

அதற்க்கு அப்பாட்டியோ "இல்லப்பா எங்க ஊருல எவ்ளோ கொடூரமான கெட்டவனா இருந்தாலும் கல்யாணம் ஆன பொண்ண தப்பான எண்ணத்தோட பார்க்க மாட்டாங்க.கல்யாணம் ஆன பொண்ணுங்க எங்க ஊரு அம்மனுக்கு சமம் ."

என்பதே ஆகும் சற்று யோசித்தவன் பின் முட்டியிட்டு அமர்ந்திருந்த மித்ராவை தன் கரங்களால் தூக்கி சென்றான்.

அவனது செய்கையில் மிரண்ட மித்ரா"கார்த்திக் என்ன பண்ற விடு " என்று கத்த அவனோ அவளை ஒரு பார்வையில் அடக்கினான் .அவனது செய்கையில் குழம்பி இருந்தார் அவ்வூர்த் தலைவர்.

மித்ராவை அம்மரத்தின் அடியில் இறக்கி விட்டவன் அம்மரத்தில் இருந்து திருமாங்கல்ய சரடு ஒன்றை எடுத்து மித்ராவை நெருங்கினான் .அவனது செய்கையின் அர்த்தம் உணர்ந்த மித்ரா செய்வதறியாது சிலையென நின்றாள்.

அவளை நெருங்கிய கார்த்திக் சர சர வென பாயும் ஆற்றின் சத்தம் மேல தாள ஒலியாக,மரத்திலிருந்து உதிரும் பூக்கள் அட்சதை ஆக,சூரிய தேவனையும் நதித் தாயையும் ,காட்டின் இயற்கையையும் சாட்சியாகக் கொண்டு மித்ராவின் செங்கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கினான்.திருமாங்கல்யம் கழுத்தில் ஏறும் வேளை மித்ராவின் கண்கள் கண்ணீரை சுரந்தது சுனை போல.கார்திக்க்கோ "சாரி மித்து "என்று தன் மனதில் மன்னிப்பை வேண்டினான்.

அடியாட்கள் அவர்களை நெருங்க முயற்சிக்க அவ்வூர்த் தலைவர் அவர்களைத் தடுத்தார்."கல்யாணம் ஆன பொண்ண என்ன ஆனாலும் தொட கூடாதுடா "என்று அவர் கூறி முடிக்க அங்கு அர்ஜுன் காவலர்ப் படையுடன் வந்து சேர்ந்தான்.

அர்ஜுன்"ஹான்ட்ஸ் அப் யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட் "என்று கூறி அவர்களை கைது செய்தான்.பின் அங்கு வந்து சேர்ந்த பிரியா கார்த்திக் மற்றும் மித்ராவை பார்த்து வியந்து நிற்க அப்பொழுதே அவர்களை கவனித்த அர்ஜுனும் ஆச்சர்யம் அடைந்தான் மித்ராவின் கழுத்தில் கார்திக்க்கின் கரங்களால் ஏறி இருந்த மாங்கல்யத்தை கண்டு.

பின் பிரியா"கார்த்திக் மித்ரா என்னதிது?நீங்க அடிச்சுக்கிட்டே இருக்கும் போதே நெனச்சேன் டா எப்படியும் ஒரு நாள் இப்டி நடக்கும்னு ஆனால் மோதல்ல ஆரம்பிக்கிறது காதல்ல முடியும்னு நெனச்சேன் நீங்க கொஞ்சம் ஒரு படி மேல போயி கல்யாணமே பண்ணிக்கிட்டிங்க."என்று கூற

கார்த்திக் என்ன பேசுவது என்றே புரியாமல் நின்றான்.பின் தன் சிந்தனையிலிருந்து வெளி வந்த அர்ஜுன் கார்த்திக் ஏதோ பேச போக அவனை ஓடி சென்று அணைத்துக் கொண்டவன்."ரொம்ப சந்தோஷமா இருக்குடா என்று உரக்க கூறியவன் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் நீ ஏன் இப்டி பண்ணணு எனக்கு தெரியும் ஆனா இப்போதைக்கு உண்மைய உளறி வைக்காத மார்னிங் உன்கிட்ட நான் கொஞ்ச நேரம் தனியா பேசணும்."என்றான்.

அவனது சொற்களுக்கு மதிப்பு கொடுத்து கார்த்திக் எதுவும் பேசாமல் மெளனமாக நின்றான் பின் மித்ராவிடம் திரும்பியவன் கண்டதோ கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை கண்ணீருடன் நோக்கி கொண்டிருந்த மித்ராவை தான்.

இங்கு மித்ராவை அழைக்க நினைக்கையில் பிரியா வந்து அவளை அழைத்து சென்றால்.பின் கார்த்திக்கும் அர்ஜுனும் தங்கள் கடமையை செய்ய அவ்வூர்த் தலைவரை விசாரித்தனர்.

அர்ஜுன்"இது வரைக்கும் எத்தனை பொண்ணுங்கள கடத்திருக்கீங்க?"என்று வினவ

அவரோ"உன்கிட்ட நான் என் சொல்லணும்?"என்று தெனாவட்டாக பேச

கார்திக்க்கிற்கோ அடக்கி வைத்திருந்த கோவம் கட்டவிழ்த்து வெளி வர அவரது மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டவன் "நாங்களும் வயசுக்கு மரியாதை குடுத்து பொறுமையா விசாரிச்சா ரொம்ப போற ஒழுங்கு மரியாதையா சொல்லிடு இல்ல?"என்று அவன் ஆக்ரோஷமாக கத்த

அவனை அலட்சிய பார்வை பார்த்தவன்"செய்ய முடிஞ்சதை செஞ்சுக்கோ போடா "என்று கூற

மீண்டும் அடிக்க போன கார்திக்க்கை தடுத்து நிறுத்திய அர்ஜுன் " இருடா மச்சான் ஏன் இவ்ளோ கோவப படுற கூல் ."என்றவன்" உன் தம்பி எவன் அவன் ஹான் நாராயணன் அவன் தான உன் buisnessoda underground dealeraah இருக்கான்.அவன் கூட இப்போ ராமேஸ்வரத்துல ஒரு கடைல தன்னோட பொண்டாட்டிக்கு சேலை எடுத்துக்கிட்டு தான இருக்கான்"என்று கேட்க

அவ்வூர்த் தலைவருக்கோ வேர்த்து கொட்டியது பின் "இல்ல நா நம்பமாட்டேன் நீ என்கிட்டே இருந்து உண்மையா வாங்க பொய் சொல்லுற "என்க

கார்திக்கோ "ஓ அப்டியா சரி நீயே கேக்குறியா என்று அவனுக்கு போன் போட்டு கொடுக்க அவனது தம்பி அர்ஜுன் கூறிய விபரத்தையே கூற ஊர்த் தலைவருக்கோ வியர்வை நிற்காமல் வழிந்தது.

இதைக் கண்ட அர்ஜுன்"ஓ ரத்தம்னா ஒடனே பாசம் பொங்குதோ ஒரு நிமிஷம் அந்த ரத்தத்தோடு ரத்தம் இன்னும் கொஞ்ச நேரத்துல தரைல சிந்த வைக்கிறேன் என்று தனது போனில் "ஆங் இப்போ பொசிஷன் எடுத்துக்கோங்க,aim ,ஷூ.."என்று அவன் கூறி முடிக்கும் முன்

ஊர்த் தலைவரோ "வேணா வேணா அவனை எதுவும் செய்ய வேணாம் நான் உண்மையா சொல்லிடுறேன் என்று கூற அர்ஜுன் லேசாக சிரித்தவன் "மிஷன் அபார்ட் "என்று விட்டு

அவன் அருகில் வந்து "சொல்லு இதுவரைக்கும் எத்தனை பொண்ணுங்கள கிடைத்திருக்கு என்க அவுங்கள வித்துருக்க ?இப்போ நீ ஏதாவது பொண்ண அடைச்சு வச்சுருக்கிய அப்டி வச்சுருந்தன்ன என்க வச்சுருக்க?"என்று கேட்க

அவ்வூர்த் தலைவர் கூற தொடங்கினார் "நா 3 வருஷமா தான் தம்பி இந்த தொழிலை பண்ணுறேன்.என்னோட மத்த தொழில்ல பெரிய நஷ்டம் வந்துச்சு அத சரி கட்ட வேற வழி தெரியாம இருந்தப்போ தான் இந்த ஊருல பல பொண்ணுங்க காணாம போறது எனக்கு தோணுச்சு .இப்போ நா கடத்துனா அது தனியா தெரியாதுன்னும் தோணுச்சு.பணத்தோட பேராசை என்ன மூர்கத்தனமா 30 பொண்ணுங்களோட வாழ்க்கையை அழிக்க வச்சது.பணம் நெறைய வந்தது.இப்போ கூட ஒரு 10 நாள் முன்னாடி ஒரு பொண்ண கடத்தினேன் மித்ராவோட சேர்த்து இன்னைக்கு அவளையும் வித்துரலாம்னு நெனச்சு என் காட்டு bungalowla அடைச்சு வச்சுருக்கேன்."என்று கூறி முடித்தார் .

பின் கார்த்திக் அவர் கூறிய தேதிகளை புகார்களோடு ஒப்பிட்டு பார்த்ததில் இதுவரை 15 பெண்களை மட்டுமே காணவில்லை என்னும் புகார் பதிய பட்டு இருந்தது.அதை கவனித்தவன் இதே போல் பல பெண்களை பற்றிய விவரம் போலீசிடம் வராமல் இருந்திருக்குமோ ?"என்று எண்ணினான்.

பின் அவர் கூறிய காட்டு பங்களாவிற்கு சென்று பார்த்த பொழுது அங்கு ஓர் வெளிச்சம் வராத அறையில் சுமார் 20 வயது மதிக்கத் தக்க ஒரு பெண் கை கால்கள் கட்டப் பட்டு மயங்கிய நிலையில் இருந்தால் .அவளது கைகளில் ஆங்காங்கே மயக்க ஊசி போட்டதற்கான தடயம் தெளிவாக இருந்தது அவளை மீட்ட காவலர்கள் அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின் வீடு வந்து சேர்ந்த அர்ஜுனையும் கார்த்திக்கயும் வர வேற்றது பூக்களாலும் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த வீடு தான் .கார்த்திக் புரியாமல் பார்க்க பிரியா பெரிய ஆரத்தி தட்டுடன் வெளியில் வந்தால் மித்ராவை மறுகையில் பிடித்துக் கொண்டு.

மித்ரா இப்பொழுது பழைய சல்வார் அல்லது சேலை கட்டி பூ வைத்து கழுத்தில் புது தாலி மின்ன வகிட்டில் குங்குமத்தோடு வந்து நின்றால் .அவளைக் கண்ட கார்திக்கின் கண்கள் ஒரு முறை அவளை ரசனையாய் அளவிட்டது பின் உண்மை உணர்ந்தவன் தன் செய்கைக்கு தன்னையே கடிந்து கொண்டான் .

பின் பிரியா"ஹே அர்ஜுன் நீங்க உள்ள வாங்க ."என்றவள் மித்ராவையும் கார்திக்கயும் ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தால் .மித்ராவின் முகத்தை பார்த்த கார்திக்கிற்கோ அவளது சிந்தனை ரேகைகள் நிறைந்த முகம் வருத்தத்தை தந்தது .

அங்கு அவர்கள் உள்ளே செல்லும் முன் நில்லுங்க என்று ஒரு குரல் கேட்டது .எவன்டா அவன் என்று நினைத்த கார்திக்க்கின் முன் நின்றதோ கை கட்டி உதட்டை பிதிக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்த அவினாஷை தான்.

கார்த்திக்"ஏன்டா உள்ள வரக் கூடாதுன்னு சொன்ன?"என்று வினவ

அவனோ "நீங்க எனக்கு ஒரு ப்ரோமிஸ் பண்ண தான் உள்ள வர முடியும் ப்ரோமிஸ் பண்ணுங்க "என்க அவர்கள் இருவரும் சிறுவன் என்ன கேட்டு விட போகிறான் என்று அவனது பிஞ்சு கரத்தில் தங்கள் கரத்தை வைத்து சத்தியம் செய்தனர் .

பின் மித்ரா"சரி சத்தியம் பண்ணிட்டோம் எதுக்கு சத்தியம் வாங்குன?"என்று வினவ

அவனோ "நீங்க ரெண்டு பேரும் இனிமே எந்த சூழ்நிலைலயும் பிரிய கூடாதுன்னு தான் என் கிட்ட சத்தியம் பண்ணிருக்கீங்க அதுவும் என்மேல "என்க கார்த்திக்கின் கண்களும் மித்ராவின் கண்களும் ஒரு முறை த ன்இணையுடன் இணைந்தது.

பின் அர்ஜுன்"பிரியா இன்னைக்கு விசாரிச்சதுல அந்த ஊர்த் தலைவர் கடத்தி வச்சுருந்த ஒரு பொண்ண மீட்டு மருத்துவமனையில சேத்தாச்சு.அந்த பொண்ணு நிவேதா இருக்கலாம்னு தோணுது .நாளைக்கு கண் முழிச்சுருவான்னு சொல்லிருக்காங்க .நாளைக்கு அவிய கூட்டிட்டு போய் காமிச்சு அது நிவேதாவான்னு செக் பன்னிரு.இப்போ செம tiredaah இருக்கு சாப்பாடு வை தூங்கணும்."என்றான்.

பின் பிரியா அனைவருக்கும் சாப்பாடு பரிமாறி விட்டு உண்டால் "அங்கு உணவின் போதோ அவரவர் அவரவர் சிந்தனையில் உழன்றிருக்க மௌனமே அங்கு ஆட்சி புரிந்தது.

பின் ப்ரியாவின் அறை நோக்கி தூங்க சென்ற மித்ராவை பிரியா கார்த்திக் அறைக்குள் அனுப்பி வைத்தால்.அங்கு கார்திக்க்கோ நிலவை பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்தான்.

அவன் அருகில் வந்து நின்றாள் மித்ரா.அரவம் நோக்கி திரும்பிய கார்த்திக் மித்ராவை கண்டவன் ஒரு நிமிடம் திகைத்து பின் பேச்சை துவங்கினான்"சாரி மித்ரா நா வேணும்னே செய்யல.அங்க 15 பேர் துப்பாக்கியோட இருந்தாங்க என் கைல ஒரு weaponum இல்ல அதுனால அர்ஜுன் வர வரைக்கும் தப்பிக்க வேற வழி தெரியல .இந்த கல்யாணத்த ஏத்துக்குறதும் ஏத்துக்காததும் உன் விருப்பம்.ஒரு 6 மந்த்ஸ் பொறுத்துக்கோ டிவோர்ஸ் வாங்கி தந்துருறேன்.அது வரைக்கும் நீ நீயா இரு.நமக்குள்ள எப்போவும் நாம friendsaave இருப்போம் நா உன் புருஷன்னு எந்த அட்வாண்டஜம் உன்கிட்ட எடுத்துக்க மாட்டேன் . நீ பெட்ல தூங்கு நா couchla தூங்கிக்குறேன் குட் நைட்."என்று அவள் முகம் பார்க்காது பேசியவன் அவள் முகத்தை பார்க்காமலே சென்று உறங்கிவிட்டான்.பின் மித்ராவும் ஒரு நாளில் தனது வாழ்வு எவ்வாறு புரட்டி போடப் பட்டு விட்டது என்று எண்ணிய படியே உறங்கிப் போனால்.

கார்த்திக் அவளது முகம் பார்த்து பேசாததால் எதுவும் விபரீதம் நிகழுமா??

இனி அவர்கள் மண வாழ்வு எவ்வாறு இருக்கும்?

அனைத்து பெண்களையும் கடத்தியது ஊர்த் தலைவர் இல்லையெனில் மற்ற பெண்கள் என்னவாயினர்??

stay tuned to know.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro