paguthi 23

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கார்த்திக் கண்ட காட்சியால் உறைந்து நின்றான் ஏனெனில் அந்த அரண்மனையின் வாயிலில் இருந்து இன்னொரு உருவமும் தன் தலை முதல் கால் வரை மூடி விட்டு வந்தது.பின் அது பலி பீடத்தை நெருங்கி வந்தது அது அப்பலி பீடத்தில் எரிய பின் தன் முகத்தில் உள்ள துணியை எடுத்தது.ஆம் நம் மித்ராவே தான் ஆனால் முழுதும் மாறி இருந்த மித்ரா.

அவளது கண்ணில் பழைய கருணை இல்லை அதற்கு பதில் அகங்காரம் இருந்தது,அவளது உதட்டிலோ ஏளனச் சிரிப்பு,அவளது நடையிலோ அதிகாரத் தோரணை என மித்ரா முழுவதுமாக மாறி விட்டிருந்தாள் .இன்னும் அதையே ஜீரணிக்க முடியாமல் நின்று கொண்டிருந்த கார்திக்கிற்கோ அவள் ஹோம குண்டத்தில் அமர்ந்து மந்திரம் உச்சரித்து பூஜை செய்ய கார்த்திக் தலை சுற்றி கீழே விழுகாத குறையாக நின்று கொண்டிருந்தான் .

கார்த்திக் "என்.. என்... மித்... மித்துவா இது .ஒருத்தி எப்படி ஒரு வாரத்துல இப்டி மாறுவா .இல்.. இல்ல இதை நான் நம்பமாட்டேன் ."என்று தனக்குள்ளேயே பேச ஆனால் அவன் கண்ணால் காணும் காட்சி அனைத்தும் அதுவே மெய் என்றது .சிறிது நேரத்திற்கு பின் முதல் பூஜை நிறைவடைய மித்ரா சம்யுக்தாவின் தாழ் பணிந்தால்.

அதை கண்ட கார்த்திக்கின் ரத்தம் கொதித்தது அவன் கண்கள் சிவப்பாக தன் க்ரோதத்தை காட்டும் வழி தெரியாமல் தன்னை கட்டு படுத்திக் கொண்டிருந்தான்.பின் தன் மனதில் "மித்து நீ இதை உன் மனசார செய்றன்னு எனக்கு தோணல என ஆனாலும் சேரி உன்ன மீட்பேன் .இது நம்ம காதல் மேல சத்தியம்."என்று தனக்குள் சபதமெடுத்தவன் அங்கேயே நின்றான்.

அங்கே சிறையில் அம்முதியவர்"நான் கூற போகும் சரித்திரம் மிகவும் பழமையானது .பல வருடங்களுக்கு முன் இந்த மாயாபுரி 100 காத தூரம் பரந்து விரிந்திருந்த செல்வ செழிப்பு மிக்க ஒரு ராஜ்யமாக திகழ்ந்தது .கலையும்,வணிகமும்,பக்தியும் , என மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியிருந்த ராஜ்ஜியம்.எங்கள் கோ சிம்மசொப்பனம் ,நேர் பார்வை கம்பீரமான நடை கருணை ததும்பும் கண்கள் .நீதி சோழனுக்கு சற்றும் குறைவில்லாது நீதி வழங்கும் நீதிமான் .அவர் நாமம் ஷிவதேவ் வர்மா .

சுமார் 108 வருடங்களுக்கும் முன் . கதிரவன் கடல் தாயின் அணைப்பிற்குள் செல்ல முழு நிலா தாவரங்கள் நிறைந்த பூமியை வெள்ளியென ஜொலிக்க வைக்க நித்திரா தேவி மக்களை ஆட்சி புரிய துவங்க இங்கே அரண்மனையிலோ ஒரு அறையில் ஆங்காங்கே தொங்கும் விளக்குகளில் இருந்து வரும் ஒலிக்கிரணங்களாலும் முழு நிலவின் மதுரந்தமான ஒளியிலும் பளபளத்த உயரமான சிவலிங்கத்தின் முன் தன் இரு கரங்களும் கூப்பி கண்கள் மூடி பிரார்த்தனையில் இருந்தார் அந்நாட்டின் கேசரி என போற்றப்படும் ஷிவதேவ் வர்மா .

அங்கே ஒரு பூசாரி யாகம் வளர்த்து பூஜை செய்து கொண்டிருக்கிறார் .சரியாக நடுஜாமத்தில் சிவனின் பாதத்தில் நிலவொளி பட்டது .அது சிவனை நிலா தேவி தொழுவதைப் போல் இருந்தது பின் நிலா தேவி பிரியா விடை பெற்று செல்லவோ அங்கு நிலவை மிஞ்சும் ஒலியுடன் கூடிய இன்னொரு பொருள் இருந்தது.ராஜா ஷிவதேவ் வர்மா அதன் அருகில் சென்று 

அப்பொருளை தம் கரங்களில் எடுத்து பார்த்தார் .அந்த பொருள் தங்கத்தால் செய்தது போல் இருந்தது,அது சதுரங்க வடிவில் பல லட்சினைகளைக் கொண்டு இருந்தது,அது ஒரு சங்கிலியோடு இணைக்கப்பட்டு பதக்கம் போல் அமைப்புடன் இருந்தது .

அந்த பொருள் நிலவொளியில் கண்கள் கூசும் வண்ணம் மின்னியது .அதை தம் கரங்களில் எடுத்த ஷிவதேவ் வர்மா அதை தம் இரு கண்களிலும் ஒற்றி எடுத்தவர் "ஓம் நமசிவாய என்று கூறி மீண்டும் அதை சிவனின் பாதத்தில் வைத்தார்.பூஜையை முடித்ததும் அப்பூஜையை செய்து கொண்டிருந்த பூசாரி எழுந்து சிவனுக்கு தீபாராதனை செய்தார் .

பின் ராஜா ஷிவதேவ் வர்மா தம் கரங்களால் சிவனுக்கு பூக்கள் தூவி அர்ச்சனை செய்தார்.பின் சிவலிங்கத்தை வணங்கியவர் அப்பூசாரியிடம் திரும்பி "குல குருவே 30 வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும் நமது குல சொத்து இவ்வருடம் தோன்றியுள்ளது .எப்பொழுதும் போல் இம்முறையும் எந்த பாதிப்பும் இல்லாமல் நம் குல செல்வம் ஷிவனிடமே நிலைத்திருக்க வேண்டும் இதுவே எனது பிரார்த்தனை ."என்று கூற

குல குருவோ "எப்பொழுதும் நிலைமை ஒன்றாக இருப்பதில்லை மன்னா"என்றார் .

அவர் கூற்றில் திடுக்கிட்ட ஷிவதேவ் வர்மா"என்ன கூறுகிறீர்கள் குல குருவே ?இந்த பதக்கம் தெய்வ ரகசியமாகும் .எமது முன்னோர் சிவனுக்காக ஆற்றிய தொண்டிற்காக சிவன் நல்கிய ஷக்தி ப்ரசாதமாகும் .இதை பற்றி யாரும் அறியார்.அங்கணம் இருக்க்கயில் இதற்கு என்ன ஆபத்து வர வாய்ப்புள்ளது ?"என்று வினவ 

குல குருவோ "எந்த தெய்வீக பொருளும் ஒரு நிபந்தனையோடே உருவாக்கப் படுகின்றது அது போல் இந்த பதக்கமும் 108 வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும் சித்ரா பௌர்ணமி அன்று தன்னை தானே காத்து கொள்ளும் சக்தியை இழந்திருக்கும்.அவ்வேளையில் அது தீயவர்களின் கையில் சிக்கினால் சர்வநாசம் நிச்சயம் ."என்க 

ஷிவதேவ் வர்மா "இதை தடுக்க வேறு வழியே இல்லையா குருதேவா ?"என்று வினவ குல குருவோ "காலமே பதில் கொடுக்கும் அரசே "என்று கூறி முடிக்க தந்தையே என்ற சத்தம் கேட்டு இருவரும் சத்தம் வந்த இடம் நோக்கி திரும்பினர்.

அங்கோ கார்மேகத்தை போன்ற அடர்த்தியான கேசம் அலை அலையாய் அசைய ,அகன்ற விழியில் அஞ்சனம் தீட்டி ,ராஜகுமாரிகளுக்கே உரிய ராஜ உடையில் கன்னி பிராயத்தில் இருந்தும் குழந்தை போல் தன் தந்தையை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் ராஜகுமாரி ருத்ரமதியை கண்டனர் .தந்தையே என்று ஓடி வந்தவள் ஷிவதேவ் வர்மாவிடம் ஓடி வந்து அவரை அணைத்து கொண்டால்.ஷிவதேவ் வர்மாவும் எல்லை இல்லா மகிழ்ச்சியுடன் தன் தவப் புதல்வியை தழுவிக்கொண்டார் .பின் விலகிய ருத்ர மதி சிவனை தொழுதுவிட்டு,குருதேவரை நோக்கி "பணிகின்றேன் குருதேவா" என்றுவிட்டு திரும்பியவள் ஷிவதேவ் வர்மாவை முறைத்தாள் .

மகளின் முறைப்பிற்கு காரணம் தெரியாத ஷிவதேவ் வர்மாவோ "ருத்திரா என் அருமை செல்வமே ஏனடா தந்தையை இப்படி முறைக்கிறாய் உன் கண்களில் இருந்து நெருப்பு வருமாயின் இந்நேரம் நான் பசுபமாகி இருப்பேன்"என்று கூறி விட்டு நகைக்க 

ருத்திராவோ" தங்கள் பரிகாசத்தை கேட்க நான் வரவில்லை தந்தையே தங்களுக்கு தண்டனை வழங்கவே வந்தேன் "என்க 

ஷிவதேவ் வர்மாவோ "ஏனம்மா எனக்கு தண்டனை தர போகிறாய் உன் தந்தை செய்த குற்றம் தான் என்னவோ?"என்று வினவ 

அவளோ "தாங்கள் ராஜ்யத்தை விட்டு வெளியேறி இன்றோடு 3 மாதங்கள் ஆகின்றது .தங்களை காணாது நான் எத்தனை தவித்தேன் தெரியுமா .ஆனால் தாங்களோ வந்ததும் இங்கு வந்துவிட்டீர்கள்.தாங்கள் செய்த குற்றத்திற்கு தண்டனை தரவேண்டுமல்லவா"என்று வினவ 

குமரி ஆன பின்பும் குழந்தையாய் இருக்கும் தன் மகளை அணைத்தவாறு"ஏனம்மா 3 மாத பிரிவிற்கே இத்தனை துயர் கொள்கிறாய் நீ நாளை திருமணம் ஆனால் என்ன செய்வாய் "என்று கேட்க 

ருத்திராவோ "என் தந்தையை பிரிய நேருமாயின் எனக்கு திருமணமே வேண்டாம் தந்தையே "என்றால். 

அதற்கு ஷிவதேவரோ "அதில்லை ருத்ர..என்று ஏதோ பேச எத்தனிக்க 

ருத்திராவோ "இல்லையும் இல்லை ஒன்றும் இல்லை இனி என் திருமணம் குறித்த விவாதம் வேண்டாம் .நாளை நான் என் தோழிகளுடன் காட்டு பகுதியில் உள்ள சுனை அருவிக்கு சென்று வர விரும்புகிறேன்.அதற்கு தங்கள் அனுமதி வேண்டும் செல்லவா??"என்று குழந்தை போல் முகத்தை வைத்து கொண்டு வினவ 

அவரும் "சரி ருத்ர சென்று வா ஆனால் கவனமாக இருக்க வேண்டும் புரிந்ததா " என்று அனுமதி அளிக்க அவளும் புள்ளி மான் போல் துள்ளி குதித்து வெளியேறினால் .குருதேவரை நோக்கிய ஷிவதேவர் "குரு தேவ என் மகள் என் உயிர் இவளை மணக்க இருக்கும் பாக்கியசாலி எவனோ?"என்று கூற 

குருதேவரோ"விடை வெகுதூரத்தில் இல்லை மன்னா"என்று கூறினார்.

பின் தன் அறைக்கு சென்ற ஷிவதேவ்வர்மர் கண்டது பணிப் பெண்களுடன் அறையில் விளக்கேற்றிக் கொண்டிருக்கும் தன் அருமை மனைவியை தான்.

பின் அவர் "தனிமை "என்று கூற அங்கிருந்த பணிப் பெண்கள் அனைவரும் வெளியேறினர்.அவரது குரலால் திரும்பிய ராணி சித்தாரா தேவியின் வதனம் அவரது வரவைக் கண்டு மிகுந்த பிரகாசத்தை அடைந்தது .

 அவரிடம் ஓடி வந்தவர் "அரசே தாம் எப்பொழுது வந்தீர்கள் தமது வரவைப் பற்றிய தூது எம்மை அடையவில்லையே .3 மாதத்தில் இப்படி மெலிந்துள்ளீர்களே .ஏன் நிற்கிறீர்கள் வந்து அமருங்கள் ."என்று கூறி அவரை பஞ்சணையில் அமரவைத்தவர் "ஒரு நிமிடம் அரசே தமக்கு அருந்த பாயசம் எடுத்து வருகிறேன் என்று கூறி செல்ல முற்பட அரசர் ஷிவதேவர் அரசியின் கரத்தை பற்றி தமதருகில் அமர வைத்தார்.

பின் "அரசி யான் தம்முடன் பொழுதை செலவழிக்க வேண்டியே இங்கு வந்தோம் .ஆனால் தாமோ எம்மை உபசரிப்பதிலேயே கண்ணாக உள்ளீரே."என்று வினவ 

அரசி"தம்மை உபசரிப்பது எமது பாக்கியம் அல்லவா."என்று விட்டு அரசரது முகத்தை கூர்ந்து கவனித்தார் பின் "அரசே தாம் என்ன யோசனையில் உள்ளீர் ."என்று வினவ

அரசரோ "தேவி நமது புதல்வி ருத்திராவிற்கு திருமண பிராயம் வந்து விட்டது எனினும் அவளோ பார்க்கும் இளவரசர்கள் அனைவரையும் வேண்டாம் நான் தங்களுடன் தான் இருப்பேன் தம்மை பிரிந்து செல்ல மாட்டேன் எனக்கு திருமணம் வேண்டாம் என்கிறாள்.பல சிக்கல்களுக்கு தீர்வு கண்ட எமக்கு இச்சிக்கலுக்கு தீர்வு காண இயலவில்லை."என்று கூற

சித்தாரா தேவியோ அவர் அருகில் அமர்ந்து அவரது கரத்தை தாம் கையால் அழுத்தி "காலம் கூடி வந்தால் நடப்பது நடந்தே தீரும் மன்னா .கவலை வேண்டாம் .நமது புதல்வியின் திருமண நாள் வெகு தொலைவில் இல்லை.பெறாவிடினும் அவள் எமக்கு புதல்வியே ஆவாள்" என்றார் .

ஆம் சித்தாரா தேவி ஷிவதேவரின் இரண்டாம் மனைவி.அவர் ருத்ரவின் தாய் அல்ல எனினும் பெற்ற தாயை காட்டிலும் அவள் மேல் பாசத்தை அதிகமாக பொழிபவர்.

தம் மனைவியின் கூற்றில் சற்று நம்பிக்கை உற்ற ஷிவதேவர் அவரை நோக்கி முறுவலித்தார்.

அங்கே ருத்திரா தன் தந்தையுடன் எவ்வாறு நேரம் செலவழிப்பது என்று கனா கண்டு கொண்டே உறங்க இங்கோ ஷிவதேவர் ருத்திராவின் திருமணம் குறித்து கனா காண விதி யார் கனவை நினைவாக்க உள்ளது??

சிவனின் சொத்து ஷிவனிடமே இருக்குமா??

மர்மங்களுக்கு விடை கிடைக்குமா ??

stay tuned to know

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro