paguthi 8

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அடுத்த நாள் காலை என்றும் போல் கதிரவன் தன் கடல் தாயின் அணைப்பிலிருந்து மனமின்றி பிரிந்து தன் செங்கதிர்களால் இவ்வுலகை ஒளிமயமாக்கிக்கொண்டிருந்த நேரத்தில் நமது கதையின் நாயகர்களும் நாயகிகளும் தங்கள் அலுவலகத்தில் இன்று செல்ல வேண்டிய இடங்களை பற்றியும் அங்கு மேற்கொள்ள வேண்டிய வேலைகள் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தனர் (அப்டி என்ன பேசிட்டு இருப்பானுங்க சரி உள்ள போய் பாப்போம் ).

அங்கு அர்ஜுன் அனைவரிடமும் பேசிக்கொண்டிருக்க கார்த்திக் மட்டும் அவனை முறைத்துக்கொண்டிருந்தான்(இந்த பக்கி ஏன் இப்டி மொறைக்குது.இதுலாம் உனக்கு செட்டாகாதே டா )

அர்ஜுன் "ஓகே guys நாம நேத்து பேசுன மாறி நாம இப்போ செல்லிகிராமம் areakkum சிறுகுளம் areakkum ரெண்டு டீம்மாஹ் பிரிஞ்சு போக போறோம்நானும் ப்ரியாவும் செல்லிகிராமம் போறோம் நீயும் மித்ராவும் சிறுகுளம் போறீங்க சரியா?"என்று கேட்க 

மித்ராவோ "எது இந்த கொரங்கு கூடயா என்னால முடியாது அர்ஜுன் வேணுன்னா நீங்க என் கூட வாங்க நா அவனோட போக மாட்டே ன்."என்று கூறுகின்றாள் .

அதை கேட்ட கார்த்திக் "ஏய் மித்ரா நாம ஒன்னும் tour போகல official விஷயமா தான் போகப்போறோம் சோ don't be சில்லி நா உன்ன எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன் ஓக்கவா" என்று பொறுமையாக பேசினான் இதை கேட்ட 

மித்ராவோ"என்ன இந்த மனுஷகொரங்கா என்கிட்டே பொறுமையா பேசுறான் ??நா எதுவும் கனவு கான்கிறேனா இல்ல இவனுக்கு மண்டைல எதுவும் அடி பட்ருச்சா??"என்று எண்ண மீட்டுக்கொண்டே அவனை நோக்கினாள் பின் கார்த்திக் அவளை அழைத்துச்சென்றான் .

(என்னடா கார்த்திக் கிட்ட இந்த திடீர் மாற்றம்னு நெனைக்குறீங்களா அதுக்கு ஒரு சின்ன பிளஷ்பக் பாப்போம் )

நேற்று மாலை

அர்ஜுனும் கார்திக்க்கும் தங்களது தாங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர் .வந்ததும் அர்ஜுன் வீட்டின் balconykku சென்று அஸ்தமிக்கும் சூரியனின் அழகிலும் எதிரில் ஆயிரம் சூரியனின் பொலிவோடு எதிர் வீட்டு balconyil நின்றுஅத்தெருவில் விளையாடும் குழந்தைகளை ரசித்துக்கொண்டிருந்த தன்னவளின் வதனத்திலும் தன்னைத் தொலைத்திருந்தான்.


அங்கு வந்த கார்த்திக் அவனது பார்வை ப்ரியாவிடம் நிலைத்திருப்பதை பார்த்துவிட்டு அவனை தோள் தொட்டு திருப்பினான் பின் "அர்ஜுன் நானும் காலைல இருந்து உன்ன பாத்துக்கிட்டு தான் இருக்கேன் நீ ப்ரியாவையே வச்ச கண்ணு வாங்காம

பாக்குற இதுக்கு என்ன அர்த்தம்??"என்று கேட்கிறான் அதற்கு அர்ஜுனோ "மாமா (correctaah கூப்புடுறான்ல) நான் அவளை பார்த்துட்டேன்டா ."என்கிறான்

அதற்க்கு கார்திக்க்கோ "எவளடா" என்றுவிட்டு அவன் சொன்னது விளங்க அவனை நோக்கி அதிர்ச்சியாக பார்த்து "டேய் மச்சான் யு mean பிரியா தான் உன்னோட "என்று கூற அர்ஜுனோ ஆம் என்பது போல் தலை அசைத்தான் .

பிறகு கார்திக்கிடம் அவளை பற்றி தெறிந்துகொண்டான் அப்பொழுது அவனுக்கு இருந்த ஒரே எண்ணம் "சின்ன வயசுலயே அப்பா அம்மாவை இழந்து எவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சுருக்க பிரியா இனி உன் எல்லாமுமா நா இருப்பேண்டா"என்று மனதிற்குள் கூறி கொண்டு 

கார்திக்கிடம் "டேய் மாமா நாளைக்கு என்ன பண்ற மித்ராவை நீ கூட்டிட்டு சிறுகுளம் போற நான் ப்ரியாவை கூட்டிட்டு செல்லிகிராமம் போரேன் ப்ளீஸ் டா "என்றான் அ

தற்க்கு கார்திக்க்கோ "எது அந்த பிசாச நா கூட்டிட்டு போகணுமா அதுக்கு நா இந்த மாடில இருந்து குதிச்சுருவேண்டா "என்றான்

 பின் அர்ஜுனோ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு "friendukkaaga இதை கூட பண்ண மாட்டியாடா மாமா "என்றான்.

 அதை கேட்ட கார்த்திக் "மாமா மாமான்னு என்ன அந்த வேலையே செய்ய வச்சுட்டேல (இப்போ தான் புரியுதாடா உனக்கு) செஞ்சு தொலைக்குரேன்"என்றான்

(flashback ஓவர்)

இப்பொழுது அர்ஜுனும் ப்ரியாவும் செல்லிகிராமம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள்.அர்ஜுன் ஜீப் ஓட்ட அவனுக்கு அருகாமையில் அமர்ந்திருந்த ப்ரியாவோ அங்கிருந்த பச்சை பசும் வயல்களையும் ,சில்லென்ற காற்றையும்

சிறு குழந்தை ப்ரம்மித்து பார்ப்பது போல் பார்த்துக்கொண்டும் அவ்வப்போது அர்ஜுனிடம் அங்கு இருக்கும் மயில்களையும்,பஞ்சவர்ணக்கிளிகளையும் காட்டி கொண்டும் வந்து கொண்டிருந்தாள் .அர்ஜுனோ அவள் இயற்கை அழகை காண தன் விழிகளை விரிக்கும் அழகையும் அவளது குழந்தைத்தனத்திலும் மிகுந்த ஆனந்தத்தில் மிதந்து கொண்டு இருந்தான் (அது பல நாள் நீடிக்க போவதில்லை என்று அறியாததாலோ).

சுமார் 30 நிமிட பயணத்திற்கு பின் இருவரும் செல்லிகிராமத்தை அடைந்தனர் .செல்லிகிராமம் பெயரில் உள்ள அழகு ஊரில் ஏனோ இல்லை .ஆங்காங்கே விவசாயத்தை கை விட்டதன் அடையாளமாக முற்செடிகள் மண்டிய விளைநிலங்களும் புழுதிப்படிந்த சாலையும் என செல்லிகிராமம் தன் செல்வச்செழிப்பை இழந்து அநாதரவாக காணப்பட்டது.

அதை கண்டு கொண்டே வந்த அர்ஜுனிற்கும் ப்ரியாவிற்கும் ஏனோ இனம் புரியாமல் துக்கம் எழுந்தது.தனக்கு மிகவும் பிடித்த ஒரு பொருள் சீரழிந்து போனதை பார்க்கும் பொழுது எழும் வலி அவர்களது மனதில் எழுந்தது .

இவற்றை பற்றி சிந்தித்துக்கொண்டே வந்த அர்ஜுன் பிரியாவுடன் ஒரு வீட்டின் முன் நின்றான். 

அங்கு இருந்த மூதாட்டி ஒருவர் அவர்களை நோக்கி சிறிது தயக்கத்திற்குப்பின் உள்ளே அழைத்தார் அங்கு சென்ற அர்ஜுன் மற்றும் ப்ரியாவிடம் "யாரப்பா நீங்கள் வெளியூர் ஆட்களைப்போல் காட்சி அளிக்கிறீர்கள் .இங்கு உள்ளூர் ஆட்களே அதிகம் தங்குவதில்லையே தாங்கள் என்ன காரிய காரணமாக இங்கு வந்தீர்கள் ??"என்று கேட்டார்.

 அவர்கள் பேசிய விதத்திலேயே புரிந்திருக்கும் இங்கு உள்ள மக்கள் இன்னும் ஆங்கில மோகத்திற்கும் கிழக்கத்திய நாகரிகத்திற்கும் மாறாமல் செந்தமிழில் பேசுபவர்களாகவும் தமிழரின் பண்பாட்டையே பின்பற்றுபவர்களாகவும் உள்ளார்கள் என்று .

அவர்கள் கேட்ட கேள்விக்கு அர்ஜுன் பதிலளித்தான் "பாட்டி நாங்கள் அருகில் இருக்கும் மாயாபுரியிலிருந்து வருகிறோம் இங்கு பல திருட்டு சம்பவங்களும் மர்மமான பல சம்பவங்களும் நடப்பதாக கேள்விப்பட்டோம்.அதை விசாரிப்பதற்காக நியமனம் செய்ய பட்டிருக்கும் அரசாங்க அதிகாரிகள் தான் நாங்கள் .எனவே இவ்விடத்தை பற்றியும் இவ்விடத்தில் உள்ள முக்கிய இடங்களை பற்றியும் கூறினால் உதவியாக இருக்கும் என்று கூறினான் "

அதை கேட்ட பாட்டியோ " ஏனப்பா தாங்கள் ஆபத்திடம் வேண்டுமென்றே செல்கிறீர்கள் ?இதுவரை இந்த கிராமத்திற்கு விசாரிக்க வந்த எவரும் காரணத்தோடு உயிரோடு திரும்பி சென்றதில்லையப்பா .தங்களை காண மிகவும் இளவல்களாக தெரிகிறீர்கள் இந்த கிராமத்தை விட்டு சென்றுவிடுங்களப்பா "என்று கூறுகிறார் .


பின் பிரியா எழுந்து வந்து அவரது கைகளை பற்றினாள் பின்"பாட்டி இந்த கிராமத்தை ஏதோ ஒரு விஷயம் சாபக்கேடா சூழ்ந்துருக்கு அதை அப்படியே விட்டால் அந்த பீடிகை உங்களை மேலும் மேலும் தான் துன்புறுத்தும் .தங்களின் பேத்தி வயதில் இருக்கும் பல பெண்கள் maraindhirukkiraargal .ஒரு ஆணிற்கு எந்த ஆபத்து வந்தாலும் அது அவனை மட்டுமே பாதிக்கும் ஆனால் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் பாஹிப்பு ஒரு வம்சத்தையே பாதிக்கும்.தயை கூர்ந்து கூறுங்கள் ."என்று கூறுகின்றாள் .

அதை கேட்ட பாட்டி ஏனோ அவளை நோக்கி ஒரு பெயரை உச்சரித்தார் .அது என்ன வென்று அவருக்கே தெரியும் .பின் அவரின் கூற்றுப்படி ப்ரியாவை அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு பழமையான மண்டபத்திற்கு அழைத்துச்சென்றான்.

அந்த மண்டபம் அத்தனை வருடத்திற்கு பின்னும் பல சிதைவுகள் பிடியில் சிக்கியும் தனக்கே உறிய கம்பீரத்துடன் இருந்தது. பிரியா அந்த மண்டபத்தில் இறங்கி நடக்க ஏனோ அர்ஜுனிற்கு உள்ளம் படைப்புடன் இருந்தது மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ப்ரியாவை ஒருமுறை அழைத்தான் அதற்க்கு அவள் திரும்ப அவளை ஒரு முறை பார்த்து விட்டு அவ்வூரில் உள்ளவர்களிடம் விசாரிக்க சென்றான்.

அர்ஜுனிற்கு ஏன் அந்த படபடப்பு ??

மண்டபத்திற்குள் செல்லும் பிரியாவிற்கு என்ன ஆகும் ??

stay tuned to know

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro