மனதை பாதித்த நிகழ்வு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எங்கே செல்கிறது இந்த சமுதாயம் ..?? ஏன் இந்த சுயநலமான மாற்றம் மனிதனுக்குள்?? மனிதாபிமானம் அன்பு பாசம் எல்லாம் எங்கே சென்றது..????

இன்று ஒரு வயதான பெண்மணி மருத்துவமனையில் கையில் ஏற்பட்ட எழும்புமுறிவால் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுரை செய்யப்பட்டது...ஆனால் அவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்வதற்கு முன் இரத்தம் சம்பந்தப்பட்ட ஒருவரின் ஒப்புதல் மற்றும் கையொப்பம் வேண்டும் .. அவருக்கோ இரண்டு பையன்கள் ஒரு பெண் .. ஆனால் அவர்களுக்கெல்லாம் வேலை நிமித்தமாக வர இயலவில்லையாம்.. பணம் வேணும் என்றால் அனுப்பிவைக்கிறார்களாம்... பார்த்து கொள்ள தான் ஆள் நியமித்து  இருக்கிறோமே என்ற மனசாட்சியற்ற கூற்று வேறு...

மருத்துவ நிர்வாகமும் அவர்களுடைய பாதுக்காப்பை கருதி கையோப்பம்‌ இட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று உறுதியாக கூறியதால் அவர்கள் வருவதற்கு ஒப்புக்கொண்டனர்.. அதனால் அவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை.. அதுவரை அந்த பாட்டி வலியில் துடித்துக் கொண்டு இருந்தார்..

இன்று காலையில் அவர்களை பரிச்சோதிக்க சென்ற போது அவருடைய மொபைலை கொடுத்து ஒரு பெயரை( அவன் மகன்)சொல்லி கால் பண்ணுமாரு சொல்ல நானும் கால் செய்ய அது விடையில்லாமல் முடிந்தது.. வேறு ஒரு நம்பரின் இருந்து முயற்சி செய்ய விவரத்தை கேட்டவுடன் தவறான எண் என்று துண்டிக்கப்பட்டது.. இதெல்லாம் பார்த்த பாட்டி நான் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன் .. ஆனால் அதற்காகவே நான் இப்படி அனாதையாகிட்டேனே என்று அழுததை பார்த்ததும் எனக்கும் என்னுடன் வந்தவர்களுக்குமே கண்கள் கலங்கிற்று...

பெற்றவர்களை பார்த்துக் கொள்ள கூட நேரம் இல்லாமல்  பணம் சம்பாதிக்கிறோம் .. பணம் தேவைதான் .. ஆனால் அந்த அம்மா இல்லையென்றால் உன்னுடைய நிலைமை என்ன என்று யோசிக்க மறுக்கிறார்கள்...

உங்கள் குடும்பம் என்று வந்தவுடன் ஏன் பெற்றவர்கள் தனித்து விடப்படுகிறார்கள்.. இதை பார்த்த வளரும் உங்கள் குழந்தைகளும் நாளைக்கு இதை தான் உங்களுக்கு செய்யும் என்பதை உணருங்கள்... பணத்தை விட உங்களின் ஆறுதலே இப்போதைய தேவை... முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்களே இப்படி சுயநலமாய் இருந்தால் இன்றைய தலைமுறையினர் இன்னும் மோசமாக தான் இருப்பார்கள் அவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டிய நீங்களே இப்படி இருந்தால் அதனால் அனுபவிக்க போகும் இன்னல்கள் உங்களையே பாதிக்கும்...

உன்னொரு விடயம் எனக்கு மருத்துவ நிர்வாகம் மீதும் சிறுவருந்தம் இருந்தது அதான் பணம் கட்டுகிறேன் என்றே சொல்கிறார்களே பேசாமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிதானே‌. ஆனால் அந்த பாட்டியின் மகன் வந்து கையெழுத்து இடும் முன் கேட்ட கேள்விகள் என் கூற்று தப்பே என்று உணர வைத்தது.. அவர் கேட்ட கேள்வி:

இப்போது மோசமான நிலையில் உங்கள் அம்மாவிற்கு அறுவைசிகிச்சையின் போது ஏதேனும் ஏற்பட்டால் என்று ஒரு பேப்பரில் இருக்க .. அதற்கு அவர் எங்க அம்மா நல்லா தானே இருக்காங்க மோசமாகனு எழுதிருக்கு இதில் கையெழுத்து போட்டால் பின்னாளில் எங்கம்மாவுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் வழக்கு போடமுடியாம போடய்டுமே...

இதற்கு மேல் அவரிடம் என்ன பேச...


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro