பூ - 11

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வீட்டிற்குள் நுழையும் போதே ஒரே ஆர்ப்பாட்டத்தினுடனே உள்ளே நுழைந்தாள் மோனு.

"அத்த..... நா ஒத்துக்க வச்சுட்டேன்.... மாமா எங்க..... நா பெட்ல ஜெயிச்சிட்டேன்... எங்க.... என்னோட கிஃப்ட்..... எடுங்க.... எடுங்க.... "

கார்த்தி மற்றும் வைணவணை வரவேற்ற வேம்பு....
"ஏய் கொஞ்சம் பொறுமையா இரு வாலு.... அங்க பாரு உன்னோட கிஃப்ட்...." என்றார்

"என்னா கிஃப்டா....  மா.... அந்த லூசு என்ன கேட்டுச்சு.... இருங்க உங்களுக்கு இருக்கு... அவ பேச்ச கேட்டு காலைல அப்படி  பேசுனிங்களா....." என்றாள் அம்மு சற்று கோபத்துடன்.....

" அங்க பாரு.... அதோட வின்னிங் கிஃப்ட்... கண்டிப்பா சரியா கெஸ் பான்னுன அம்மு..." என்றான் கோபி (அம்முவோட தம்பி)

"சூப்பர்.... அய்யா..." என ஓடினாள்.

வைனுவுக்கு வீட்டில எல்லாருக்கும்  அறிமுகம் செய்தாள் அம்மு.

"அப்பா எங்க மா...." என்றாள் அம்மு.

"உங்க அத்தை வந்தாங்க.... மேல பேசிக்கிட்டு இருக்காங்க...." என்றார் வேம்பு.

"அம்மா இன்னும் இங்கதான் இருக்காங்களா..... அத்தை..." என்றாள் மகி.

"ஆமா டா... மேல இருங்காங்க..." என வேம்பு கூற "நா அப்பாகிட்ட கொஞ்சம் பேசணும் அதனால நா மேல போறேன் மா..." என்று அம்மு அங்கிருந்து சென்றாள். தானும் வரவா என கேட்ட கார்த்தியை வேண்டாம் என கூறினாள்.

மோனு அருகில் வந்த கார்த்தி "என் அருமை லூசு தங்கச்சி கேட்டதுதான் கேட்ட ஒரு நல்ல கிஃப்ட் கேக்க கூடாது.... போயும் போயும் அபென்லீபே குச்சி மிட்டாய்யும், இலந்த வடையும் கேட்டுருக்க.... "

"டேய் அண்ணா.... போடா.... நீ தான் லூசு இதுல இருக்க டெஸ்ட் உனக்கு எங்க தெரிய போகுது.... சாப்பிட்டு பாக்குறியா...." என்றாள்

"அம்மா தாயே நீயே சாப்டு.... எனக்கு வேண்டாம்... அப்பறம் எல்லாத்தையும் நா தான் சாப்டன்னு எல்லாருகிட்டையும் சொல்லவா..... "

"போடா... " என வந்தவள் மகியிடம் "வேணுமா..." என்றாள்.

மகி தனக்கு வேணும் என கூற சிறு பிள்ளை போல் வாயை மடித்து ஒற்றை விரலில் நையாண்டி காட்டி கொண்டே இருந்தாள்.

ஏனோ தெரியவில்லை வைணு அவள் செய்யும் அனைத்தையும் கண்ணெடுக்காமல்  பார்த்துக்கொண்டே இருந்தான்.
அனைவருக்கும் ஜூஸ் கொண்டு வந்த வேம்பு மோனுவை ஒரு அடி முதுகில்  அடித்து... "என்ன அவ கிட்ட செஞ்சுக்கிட்டு இருக்க பாவம் அங்க பாரு அவ முஞ்சிய...." மகியின் முகத்தை காட்டினார்.

"என்ன அத்தை மருமகளுக்கு சப்போட்டா.... இருங்க என் மாமாகிட்ட சொல்லுறேன்... "

"சொல்லு சொல்லு அப்படியே உங்க மாமாக்கு பயந்துருவோம் பாரு...." என அவளிடம் வம்பிலுத்து கொண்டிருந்தார் வேம்பு.

மேலே இருந்து அம்மு, அம்முவோட அப்பா, அப்பறம் மகியோட அம்மா சுகந்தி அனைவரும் வந்தனர்.

"பாப்பா.... கார்த்தி..." என்றார் ராஜ்.

"மாமா இங்க பாருங்க அத்தை என்ன திட்டுறாங்க.... அவுங்க மருமகளுக்கு நா தரலையாம்...." என்றாள் மோனு.

"ஏன் வேம்பு பாப்பா பாவம் ஏன் திட்டுன...?? நல்லா அடி பொட்டுருக்கண்ணும்...." என்றார் சுகந்தி.

"அம்மா நீங்களுமா.... அதுமட்டும் அத்தை சொல்லல.... உங்க அண்ணாக்கு பயபிட மாட்டங்களாம்...." என சுகந்தியிடம் பேசி கொண்டிருக்க வைனவனின் போன் அடித்தது.
கார்த்தியிடம் சொல்லி விட்டு வெளியே சென்றான்.

"எனக்கு ரொம்ப சந்தோசம் கார்த்தி.... உண்மையா சொல்லனுமுனா உன்ன மாதிரி ஒரு நல்ல பையன் என் பொண்ணுக்கு கிடச்சதுல...  அம்மா அப்பாகிட்ட சொன்னியா.... அவுங்கதான் அடிக்கடி என்கிட்ட கேட்டுகிட்டே இருந்தாங்க..." என கேட்க

"நா சொல்லிட்டேன் மாமா... அம்மா அப்பாவும் சேம ஹேப்பி...." என்றாள் மோனு.

"ஏய் வாயாடி அதெல்லாம் சரி உனக்கு எப்ப கல்யாணம்... மாப்பிள்ளை நாங்க பாக்கணுமா இல்ல நீயே பாத்துட்டியா...." என்றார் சுகந்தி.

"மா... அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம் நானே பாத்துட்டேன்.... ரொம்ப நல்ல பையன்.... அப்பறம்.... " என கூற அனைவரும் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.

"ஏன் எல்லாரும் என்ன அப்படி பாக்குறீங்க... இவளா லவ் ஆ... சரி உங்க மாப்ள எங்கமா காணம்... எப்ப கண்ணுல காமிபிங்க....." என்றாள் மகி.

"அதுவா நானும் அவரும் கண்ணாம்பூச்சி விளையாடுறோம் அவர் இன்னும் என்ன கண்டு பிடிக்கல.... அவர் கண்டு பிடுச்சதும் நா சொல்லுறேன் ஓகே வா...." என்றாள் மோனு.

"உனக்கு வர வர வாய் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு.... எது கேட்டாலும் நக்கல் பேச்சு....." என்றார் வேம்பு.

"இல்ல அத்தை சுகந்திமா தான கேட்டாங்க அதான் சொன்னேன் அவுங்களுக்கு அவுங்க மருமகன பாக்க ஆசை இருக்கும்ல...." என்றாள் அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து சுகந்திய இடித்த படி....

"உனக்கு எந்த விசியத்துல விளையாடுது தெரியாதா.... கொஞ்சம் கூட அறிவே இல்ல...." என்றாள் மகி...

"அட விடுங்கப்பா.... நா சொன்னா நம்ப மாட்டீங்க... ஒருநாள் என்னோட ஆள மாலையும் கழுத்துமா கூட்டிட்டு வந்தாதான் நம்புவிங்க.....  "

"சரிம்மா ..... என்னோட மச்சான் சீக்கிரமா உன்ன கண்டு பிடிப்பான்.... அதனால் எனக்கு அவன சீக்கிரம் அறிமுகம் பண்ணு.... இப்ப நீ முதல சாப்பிடு.... காலைல இருந்து ஒன்னும் சாப்டல....." என்றான் கார்த்தி.

"நீ இன்னும் சாப்டலையா....." என்றார் வேம்பு...

பாவமாக முகத்தை வைத்து கொண்டு ஆமா என்றாள்.

"இந்த அம்மு தான் சாப்பாடு எடுத்துட்டு போடி அப்படினு சொல்ல சொல்ல கேட்காம போய்ட்டா.... பாவம் என் தங்கம்...."
என்றார் வேம்பு.

"ரொம்ப பீல் பண்ண வேண்டாம்.... இப்ப சாப்பாடு போடுங்க.... அவ சாப்பிடுவா.... " என்றாள் அம்மு.

"இல்ல எனக்கு ஒன்னும் வேண்டாம் நா வீட்டுக்கு போறேன்...." என நிற்க....

"போறேன்னு சொன்னா போகணும் இங்க நிக்க கூடாது...." என்றாள் அம்மு....

"அம்மு சும்மா இரு... பாப்பா வா உனக்கு என்ன வேணும் சொல்லு அத்தை உனக்கு... செஞ்சு தாரேன்..." என்றார் வேம்பு....

எனக்கு.... என யோசிதவள் அண்ணா சொல்லுவான் என்றாள் கார்த்தியை பார்த்து....

அவனோ.... அதுவரை அம்முவை பார்த்து கொண்டிருக்க இவள் சொல்ல அனைவரும் அவனையே பார்த்தனர்..... அவனும் அசடு வழிய சிரிக்க.... எல்லோரும் சிரித்தனர்....

"சரி இன்னும் ஒரு பத்து நிமிசம் நா  உனக்கு நூடுல்ஸ் செஞ்சு தாரேன்....." என உள்ளே நுழைய.... சுகந்தி ராஜிடம்.... அண்ணா... என்றார்.

"என்ன அங்க அண்ணாவும் தங்கச்சியும் குசுகுசுனு......" என்றாள் அம்மு.

"அது ஒன்னும் இல்லடா நாளைக்கு காலேஜ் முடியுது... அதனால சுகந்தி உன்ன அங்க வர சொல்லி கேக்குது.... நீ போணா எனக்கும் சந்தோசமாக இருக்கும்..." என ராஜ் கூற.... சரி என்றாள் அம்மு....

"அப்பனா.... நா, அம்மு, அக்கா, அப்பறம் அந்த வாயாடி எல்லாரும் ஒண்ணா.... சூப்பர்'' என்றாள் மகி....

"அப்பா மோனுவுமா.....??" என்றாள் அம்மு.

"ஆமாடா நீயே அவ கிட்ட பேசு.... நா சொன்னா ஏதாச்சும் காரணம்  சொல்லுவா...." என்றார் ராஜ்.

அவளும் ஏதோ ஒரு வழியாக மோணுவிடம் பேசி  நாளைக்கு கடைக்கு வந்தரோம் ஆனா வீட்டுக்கு வியாழன் கிழமை தான் வருவோம் என சுகந்தியிடம் கூற அவரும் மகியும் சரி வந்துருங்க....  என  கிளம்பினார்.

அப்போது உள்ளே வந்த வைணவன்..... "கார்த்தி எனக்கு ஒரு முக்கியமான வேலை சோ நீ அந்த பெரிய மனுசிகிட்ட லிஃப்ட் கேட்டு பொய்டு...." என மோணுவை பார்த்து பிளீஸ் என கண்களால் கூற அவளும் அவ்வாறே சரி என்றாள்.

இதை கண்ட கார்த்தி.... "சரி நீ பாத்து போ.... " என கூற அவனும் அனைவரிடமும் சொல்லி கிளம்பினான்.

"யார் அந்த பெரிய மனுசி???_ என்றான் கோபி... _வேற யாரு இவதான்" என மோனுவின் கையில் அடித்தாள் அம்மு.

சில நிமிடத்தில் மோனுவின் போன் தனது வயலினை வாசிக்க எடுத்தவள்.... "எஸ் அங்கிள் ஐ அம் கம்மிங் யூ டோண்ட் வொர்ரி..... ஐ வில் கம்...." என்று "மாமா காலேஜ்ல கொஞ்சம்  பிராப்ளம் சோ நா போகணும்...." என்றாள்.

"சரி டா போய்ட்டு வா பட் நானும் வருவேன் உன்ன தனியா அனுப்ப மாட்டேன்...." என கூற " இல்ல மாமா நா கார்த்திய கூட்டிகிட்டு போறேன் அப்படியே வீட்டுல விட்டுடுவேன் நவா சொல்லிட்டு போனாரு..."என கூற அவரும் சரி என்றார்.

வேம்பு "நீ இன்னும் சாப்பிடல...." என கூற "ஜஸ்ட் ஹாஃப் ஹவர்.... அத்த திரும்பி வந்துருவேன்" என கிளம்பினாள்.

''அம்மு எனக்கு ஒன்னும் சரியா தோணல... பாரு புள்ள சாப்பிடாம போகுது..." என சலிப்புடன் சமயலறைக்கு சென்றார் வேம்பு.

வெளியே வந்த கார்த்தி "ஆமா எனக்கு ஒரு டவுட்டு.... நீ ஏன்
வைணுவ நாவானு கூபிடுற...
அவனும் இதுவரை உன்கிட்ட பேசும் போது உன் பேரையே சொல்லவே இல்லையே...??"

"எனக்கு எப்படி தெரியும்... அதை நீ நவா கிட்ட தான் கேக்கணும்.... நா கூப்பிடும் காரணத்தை நா அப்பவே  சொல்லிட்டேன்" என வண்டியை கிளப்பி அமரும் படி கூறினாள்.

சிறிது தூரம் செல்ல " அது சரி நீ அவன் சொன்ன உடனே ஒத்துகிட்ட அவன்கிட்ட நீ எதுத்தே பேசலையே...."

"டேய் அண்ணா....  உனக்கு என்னடா பிரச்சனை.... ரொம்ப பேசுன கீழ தள்ளி விட்டுடுவேன்.... பேசாம வா.... "

அவனும் அமைதியாக வர சிறிது நேரத்தில் கல்லூரியை அடைந்தனர்.

அங்கு வைனவன் கமிஷ்னர் ஆபீசை  சென்றடைந்தான். உள்ளே அனுமதி கேட்டு சென்றவன் போலீஸ் க்கே உரிய கம்பீரமான நடையுடன் தனது மேலதிகாரியின் முன் நின்றான்.

"எஸ் மிஸ்டர் வைணவன்... மை யங் மேன்.... ஹவ் ஆர் யூ.... "

"எஸ் சார் ஐ அம் குட்.... "

"உங்கள இங்க வர சொன்னது எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்.... இவனுக்காக தான் நீங்க டிரான்ஸ்ஃபர் வாங்கியே இங்க வந்தீங்க... எப்போ இந்த கேச முடிக்க போரிங்க.... "

"ஜஸ்ட் த்ரீ டேஸ் ஐ கிளாஸ் திஸ் கேஸ் அந்த பொருக்கிய விட மாட்டேன்.... "

"ஓகே மை பாய்.... திஸ் இஸ் யூர் டீம்.... அன்ட் இதோ நீங்க கேட்ட அவன பாதுகாத்து வச்சிருக்க கிரிமினல் ஓட  ஃபுல் டிட்டியல்...." என ஒரு ஃபைலை கொடுக்க அதை வாங்கியவன்... "தங்க் யூ சார்...." என தனது டீம்முடன் வெளியே வந்தான். அது ஐவர் கொண்ட குழு.... அவர்களிடம் பேசிவிட்டு தனது பைக்கில் அமர்ந்து ஃபைலை திறக்க.... அதில் அவன் தேடும் குற்றவாளியுடன்  நேற்று
மோனுவிடம் வம்பிலுத்தவர்களுள்  ஒருவனும் இருந்தான். அவனது கையை தான் அவள் கிலித்தாள்.
உடனே அவன் அழைத்தது அவளுக்கு தான் ஆனால் போனோ சைலண்ட் மோடில் தெரியாம விழுந்துருச்சு.... அவள் எடுக்காமல் இருக்க அம்முவை அழைக்க மோனு கார்த்தியுடன் காலேஜ் சென்றதாக கூறினாள். உடனே போனை வைத்தவன் காலேஜுக்கு சென்றான்.

காலேஜ் உள்ளே சென்ற இருவரும் நேராக பிரின்ஸிபல் அறைக்கு சென்றனர்.

"என்ன ஆச்சு அங்கில்... ஏன் உடனே வர சொன்னிங்க...." என்றாள்.

"இல்லமா.... வெளிய நிக்கிற அந்த ஆளுதான் நம்ம கலெஜோட கேன்டீன் ஆடர் எடுத்தான்.... பட் சாப்பாடு நல்லா இல்லைனு அப்பா அதை கேன்சல் பண்ண சொன்னாங்க...." என்றார் சீனு.

"சரி அங்கள் அதுக்கு இப்போ இவுங்க ஏன் இங்க வந்துருக்கங்க... அதான் கேன்சல் பண்ணியாச்சே... "

"இல்ல மா... அப்பா சைன் போடல.... இன்னைக்கு நம்ம கேண்டீன் சாப்பாடு சாப்டு ரெண்டு பேருக்கு புட் பாய்சன் ஆயிடுச்சு... நா திட்டுணதுக்கு
அவன் ரவுடிய கூட்டிட்டு வந்து பிரச்சனை பன்னுறான்".

"சரி நீங்க சைன் பண்ண வேண்டியது தானே... அப்பறம் போலீஸ்ல கம்பிலைன்ட் தந்திங்களா....???"

"நா சைன் பண்ண முடியாது இங்க நா... அது வந்து பிரின்சிபள் தான் சைன் பண்ணனும்.... பட் போலீஸ் கம்பிலைன் தந்தாச்சு...."

சிறிது நேரம் யோசித்து விட்டு.... "ஓகே அங்கேல் ஐ டிசாய்டு... உங்கள நா பைரின்ஸிபலா அப்பொய்ன் பண்ணுறேன்... "

"ஏய் இது நீ நினைக்கிற மாறி இல்ல... அதுக்கு இந்த காலேஜ் ஓட பவுண்டர் அண்ட் அவுங்க கிளப் தான் முடிவு எடுக்கணும்...   நீ எப்படி முடிவு பண்ணுவ...??"

"எனக்கு தெரியும் அண்ணா... கொஞ்ச நேரம் அமைதியா இரு பிளீஸ்...." என கூற கார்த்திக்கு ஒன்றும் புரியில்லை.... இதுக்கு முன்னாடி மோனுவ இவ்வளவு ஸ்ட்ரீட் மைண்டா பாத்ததும் இல்லை...

"அங்கள் ஆடர் ரெடி பண்ணுங்க...." என கூற அவரும் அப்படியே செய்தார்....

"இப்ப யாரு சைன் பண்ண போரா..????" என்றான் கார்த்தி.

"வேற யாரு நான் தான்.... "

"என்னா.... நீயா... ???"

"ஆமா நான் தான் ரெண்டு பேர் ஹாஸ்பிடல்ல இருக்காங்க இவுங்கள சும்மா விட சொல்லுறியா...."

" பட் இதுனால உனக்கு தான் ஆபத்து.... இந்த சின்ன விசியத்துக்கு நீ சைன் பண்ணனுமா...." என்றார் சீனு....

"ரெண்டு உயிர் அங்கல் நா எப்படி சும்மா இருக்க முடியும்... அப்பறம் நா.... மோனுக்...." என நிறுத்தி  அதை வாங்கி சைன் செய்தாள்.

கார்த்திக்கு ஒன்று மட்டுமே புரிந்தது.... இவ எப்போதும் போல யாரோடையோ சைன போட போரா.... வீட்டுக்கு போய் கேக்கலாம் என மனதிற்க்குள் நினைத்து கொண்டான்.

அனைவரும் வெளியே வர ரவுடி உடன் நின்ற ஒருவன் "அண்ணா இவ தான் என்னோட கைய கிழிச்சது...." என கூற அவனோ மோனுவை கோவமாக பார்த்து கொண்டிருந்தான் இவளை ஏதாச்சும் பண்ணியே ஆகனும் என்ற முடிவோடு...

அங்கே வந்த சீனு... அவர்களிடம் "இதோ உங்களோட ஆடர் கேன்சல் டாக்குமெண்ட்...." என நீட்ட அதை வாங்கிய கோபால் கூட்டி வந்த ரவுடியிடம் "சந்தர்  இவுங்கல சும்மா விட்டா என்னைய உள்ள தள்ளி கம்பி எண்ண வச்சுருவாங்க ஏதாச்சும் பண்ணு...." என கூற அவனோ தனது ஆளிடம் சைகை காட்டினான் சந்தர்.

மோனு "கார்த்தி  நாவாக்கு கால் பண்ணு அப்பறம் அன்கள் நீங்க  போலீஸ்க்கு போன் பண்ணுங்க... " என கூற சரியாக   வைணுவும் அங்கே வந்தான்.  அங்கு தான் தேடி வந்த குற்றவாளி, சந்தர் மற்றும் அவனது தம்பி தீனா கண்டு நடப்பதை யூகித்து அடிக்க ஆரம்பித்தான்... அவனை கண்ட கார்த்தியும் சண்டையில் இறங்கினான். தீனா மோணுவின் கையை பிடிக்க அவளது டிரஸ் கை பகுதியில் கிழிந்தது.... அதனை கண்ட வைனுவோ அவனை அடி துவைத்தான்....

சில நிமிடத்தில் போலீஸ் வர அனைவரையும் ஒப்படைக்க சந்தர் மட்டும் கையை உருகி அருகில் இருந்த கட்டையை எடுத்து மோனுவை பின்னால் தாக்க வர  அவளை ஒரு கையில் இழுத்து மற்றொரு கையில் அடியை வாங்கினான் வைணு.

காலையில் இருந்து எதும் சரியாக சாப்பிடாததோ இல்லை தன்னை  அடிக்க வந்த அதிர்ச்சியோ அவன் கையிலே  மயங்கினாள்.

அப்போது சரியாக அம்முவும் அங்கு வந்து சேர்ந்தாள்...

வைனுவோ மோனுவின் கன்னத்தில் "நிதா.... என்ன பாரு... கண்ணை திற.... பிளீஸ் நிதா....." என கூற அம்மு "வைணு அவள தூக்கு... உன்னோட  நிதாக்கு ஒன்னும் ஆகாது... அவ சும்மா மயங்கிதான்  இருப்பா...." என கூற அவனும் தூக்கினான். கார்த்தி "என்னா... நிதாவா... இது யாருடா....???" என்றான்.

தனது நிதாவை வைணு எப்படி கண்டு பிடித்தான்.... மோணுவை பற்றியும் வைனுவை பற்றியும் அம்முக்கு முன்னாடியே தெரியுமா... என்ன...???? அவ எப்படி சரியான நேரம் அங்கு வந்தா.....????

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro