11. பாக்கியலக்ஷ்மி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

11. பாக்கியலக்ஷ்மி:

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களும் வந்து வாழ்த்த, பெற்றவர்களும் உற்றாரும் மங்கள அட்சதை தூவ அழகிய அரக்கு நிற பட்டில் தங்கசிலையாய் வெண்சங்கு கழுத்தில் மலர்மாலையிட்டு கண்கள் கலங்க தன் நிலையில் இல்லாமல் மனையில் அமர்ந்தவளின் மாந்தளிர்மேனியில் பொன்மஞ்சள் தாலிமின்ன மஞ்சள் நாணை பூட்டினான் துருவேந்திரன்.

அவனை பார்த்த அடுத்த நொடி "விஜய்" என்று ஆசையாய் காதலாய் விளித்தவளை கண்டு முறைத்தவன் தன்னுடைய பெயரை வெளிபடுத்தவும் ஒருநிமிடம் ஒன்றும் புரியாமல் ஆழ்ந்து அவன் முகத்தையே  பார்த்தவள்.

'எப்படி இவர் அவர மாதிரியே இருக்காரு?' என்ற கேள்வியில்  தலையில் பெருத்த வலி ஒன்றை உணர்ந்தாள்.

கண்களை கட்டி காட்டில் விட்டதை போல் இருந்தது அவளின் நிலை.

இருவரின் ஒற்றுமை அவளுக்கு விளங்கவே இல்லை. மேலும் நவியுடன் நடக்க வேண்டிய திருமணம் இவனுடன் எப்படி என்று வேறு மூளைக்குள் குடைய அவனின் கோபம் மேலும் பயம் கொள்ள வைத்தது.

சிங்கத்தின் சீற்றத்துடன் இருந்தான் அவளின் அழைப்பில்.

அய்யர் சொன்ன சடங்குகளை இயந்திரபாவையாய் செய்திருந்தவளுக்கு  திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அங்கங்கே ஏதோ சலசலப்பது போல இருந்தது.

கொஞ்சம் உற்று கவனிக்க ஆரம்பித்தாள். ஒரு சில கண்களில் வியப்பு. ஒரு சில கண்களில் ஆச்சர்யம். ஒரு சில கண்களில் பொறாமை. என பலகாட்சிகளை கவனிக்க நேர்ந்தது. முடிவில் மணபந்தலின் நேர் எதிரில் ராஜ தோரணையுடன் கம்பீரமான பெரியவர் அமர்ந்திருப்பதை கண்டாள். 

"இவரை எங்கேயும் பார்த்ததாக நியாபகம் இல்லையே? இவர் எப்படி இந்த திருமணத்தில்?" என்று நினைத்தவள் இதழ்களில் விரக்தி புன்னகை ஒன்று உதிர்ந்தது  அவளின் திருமணத்தை நினைத்து.

தாலி கட்டிய கணவனையே தெரியவில்லை இதில் இவரை யார் என்று தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று நினைத்த அடுத்த நொடி அவளின் கைகளை மலர் கொத்தை பிடிப்பது போன்று மென்மையாக பற்றியவன் அந்த பெரியவரின் முன்னால் போய் நின்றான்.

" ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா" என்று அவர் கால்களில் விழ அவன் ஆட்டிவிக்கும் பொம்மையாய் இவளும் விழுந்தாள்.

ஆதுவிற்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. விழிகள் தெரித்துவிடுவது போல் இருந்தது நடப்பதை பார்க்க பார்க்க..." பதினாறு செல்வங்களையும் பெற்று நீடுழி வாழனும், தீர்க்க சுமங்கலியா இருமா" என்று இருவரையும் வாழ்த்தி எழுப்பியவர்.

" என் பேரனும் இந்த ஜமீனும் இனி உன் வசம்மா." என்று அவளின் தலையை வருடி  கூறிட ஒன்னும் கேட்க முடியாத நிலைமை அவளிடத்தில், 'நீ யார்....? நீங்களெல்லாம் யார்.... பெற்றவர்களே தள்ளி நிறுத்தும் அளவிற்கு நீங்கள் யார்..?' என்ற கேள்வி அவள் மனதில் அரித்த வண்ணம் இருக்க அப்படியே மயங்கி சரிந்தாள்.

அவளின் திடீர் மயக்கத்தை கண்டதும் மனம் திடுக்கிட்டவன். 'ஆதுமா ஆதுமா' என்று அவளை தாங்கி கொண்டான்.

"கடவுளே! என் பொண்ணுக்கு என்னாச்சி?" என்று பதறியடித்து பெற்றவர்கள் முன்னே வர, அவர்களை தன் ஒற்றை பார்வையில் தள்ளி நிறுத்தி இருந்தான் இந்திரன்.

"மாமா! உங்க பொண்ணை கண் கலங்காம இல்ல.. ஒரு தூசி கூட இவ மேல படாம பாத்துக்குவேன்.. பீளிஸ் " என்றபடி அவளை கைகளில் தாங்கியவன், தனக்கான அறையில் அவளை படுக்கவைத்தான்.

திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் ஏற்கனவே சென்றிருக்க மிச்சமாய் இருந்தது இவர்கள் மட்டுமே.

ஆதுவின் தந்தையின் அருகில் வந்த பூபதி, "கவலை படாதிங்க. இனி எல்லாம் நல்லதா நடக்கும். அவன் நினைச்சதை சாதிச்சி தான் பழக்கம். உங்க மகளுக்கு கல்யாணம்னு கேள்விபட்டதும் அவனால அங்க இருக்க முடியல. கடைசி நிமிஷத்துலயாவது அவனோட ஆதர்ஷினியை அவனுக்கு கொடுத்துடனும்னு தான் உங்க கிட்ட வந்தேன். அவன் கொஞ்சம் கோவமா இருக்கான்... இது வரையிலும் அவன் சந்திச்சது எல்லாமே கஷ்டம் தான். இனியாவது என் பேரன் சந்தோஷமா இருக்கனும்னா அது ஆதுவால மட்டும் தான் முடியும்." என்று நா தழுதழுகாக கூற, அவ்வளவு பெரிய மனிதரின் முன் ஆதுவின் தந்தை பேச முடியாமல் அமைதியாய் இருந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் மனதை மாற்றிய பெருமை துருவனையே சேரும். மின்னலை போல வந்தவன், "நானும் ஆதர்ஷனியும் லவ் பண்ணிட்டு இருக்கோம். யாரை கேட்டு இந்த அவசர கல்யாணம்? யாரை ஏமாத்த இப்படி பண்றிங்க? என்னால எல்லாரையும் சுட்டு தள்ளிட்டு அவள தூக்கிட்டு போயிட்டே இருக்க முடியும்."  என்று ஒரேயடியாய் போட மகளின் எதிர்ப்புக்குரலோ, அவனை யார் என்றே தெரியாது என்ற மறுப்புக்குரலோ, அவளிடத்தில் இல்லை என்பதாலும் மேலும் நேற்று முதல் கல்யாணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்ததும் நியாபகம் வர ஒன்னுடன் ஒன்று முடிச்சி போட இரண்டு என நம்பி விட்டனர் பெற்றவர்கள்.

இத்தனையும் அவள் கண்முன்னே நடந்தது தான். ஆனால், அவள் தான் இதை கவனிக்கவில்லையே? அதை இப்போது கூறினாள் யார் தான் நம்புவார்கள். உடனே மணவரையில் இருந்து நவி எழுத்ததையோ இல்லை அவள் கழுத்தில் துருவ் தாலி காட்டியதையோ கூட அறியாமல் அவள் உலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டு இருந்தாள் ஆதர்ஷனி.

கட்டிலில் அவளை கிடத்திய துருவ் அவள் அருகில் அமர்ந்தான்.  ஆது இல்லாமல் ஒருநாள் முழுவதும் அவன் பட்டபாட்டை யார் அறிவர்.

அலுவலகத்திற்கு வந்திருந்தவள் தீடீர் அழைப்பு வர வீட்டிற்கு சென்றவள் தான் அடுத்த நாள் அவள் அலுவலகத்திற்கு வரவில்லை என்று சுதாவிடம் விசாரிக்க, " என்கிட்டயும் ஒன்னும் சொல்லல அண்ணா" என்றவள் "அவ ஊருக்கு போறேன் மட்டும் சொன்னா அண்ணா" என்றாள்.

துருவிற்க்கோ அவளை காணாமல் இருக்க முடியவில்லை. நாளின் தொடக்கமோ இல்லை நாளின் முடிவிலோ அவளை கண்டால் மட்டுமே அவனால் நிம்மதியாய் இருக்க முடியும்.

அவளின் நலம் கேட்டிட விழைந்தவன், உடனே அவனுக்கு தெரிந்த டிடெக்டிவ் ஏஜென்டை அழைத்து அவளை பற்றிய தகவல் உடனே வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். அடுத்த 2,3 மணிநேரத்தில் அவளுக்கு கல்யாணம் என்பதனை அறிந்தும் கொண்டான்.

"என் ஆதுவிற்கு நான் இல்லாம கல்யாணமா... ? நவியுடன் திருமணமா? நவி நீ தாலி கட்டிடுவியாடா?  அப்பேற்பட்ட விஜயயே பின்னுக்கு அனுப்பிட்டேன். நீ எல்லாம் ஒன்னுமே இல்லடா. வரேன். வந்து நீங்களே அவளை எனக்கு தாரை வார்த்து கொடுக்குற மாதிரி பண்றேன்டா" என்று சூளுறைத்தவன் அதை நடத்தியும் காட்டிவிட்டான்.

படுத்து இருந்தவளின் தலையை மெல்ல வருடியவன் குளிர்ந்த நீரைக்கொண்டு அவள் முகத்தை துடைத்தான். அவனை கண்டதும் ஏதோ ஒரு அச்சத்துடன் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

"நீ.... நீ... யாரு?" என்றாள் முடிய கண்களுடனே.

அவள் செய்கையில் தாடைகள் இறுக "இந்தர்" என்றான் கடின குரலில்.

"நீங்க நீங்க எப்படி என்னை கல்யாணம்  நான் எப்படி உங்களுக்கு சே.... "என்று வார்த்தையை கோர்க்க முடியாமல் மிகவும் சோர்ந்து போனாள்.

"அதுவா நீயும் நானும் லவ்  பண்ணோம் டார்லிங். உனக்கு கட்டாய கல்யாணம் பண்ண பார்த்தாங்க. நம்ம காதலிச்ச விஷயத்தை சொன்னேன். சரின்னு ஓகே சொல்லவும் என் ஆது கழுத்துல தாலிய கட்டிட்டேன்" என்றான் இளகுவான குரலில்.

அவன் பேசியதை கேட்டதும், " நீயும் நானும் லவ் பண்ணோமா? வாட் நான்சென்ஸ்? என்ன உளறல் இது? கேக்கவே சகிக்கல" என்றாள் காதை பொத்திக்கொண்டு.

"நல்லா இல்லையா… சவுண்ட் இஸ் குட் டியர். நீயே டிரை பண்ணி பாரு ஆது … லவ் இந்தர்"  என்று அனுபவித்து கூற அவனை எரிச்சல் நிறைந்த முகத்தோடு பார்த்தாள் ஆதர்ஷனி.

"எங்க வீட்டிலயும் இதுதான் சொன்னியா?" என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு .

அவள் முகத்தினை தன் கையால் திருப்பியவன்.

"இப்படி என்னை பார்த்துக் கூட கேக்கலாம் டா. தப்பா நினைச்சிக்க மாட்டேன்" என்றான் கேலியாய்.

அவன் கேலி பேசியதை ரசிக்கவில்லை என்று அவள் முகமே கூறியது.

  "நான் கேட்டதுக்கு பதில் இது இல்லை" என்று அவள் கூறி அவன் கைகளை தட்டிவிட்டாள்.

அவள் செயலில் இதழ்களில் புன்னகை பூக்க, "கோவப்படும்போது கூட ரொம்ப அழகா இருக்க ஆதுமா" என்றான் ரசனையாய்.

அவனை கலங்கிய கண்கள் கொண்டு முறைத்தவள் தழுதழுத்த குரலுடன், " நான் கேட்டதுக்கு பதில்" என்றாள். அவன் தாய் தந்தையரிடம் என்ன கூறினான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவளுக்கு.

"இப்போ என்ன நான் என்ன சொன்னேன்னு தெரியனும். அவ்வளவு தானே" என்றவன்.

"அவங்ககிட்ட நமக்கு ரிஜிஸ்ட்ர் மேரேஜ் ஆகிடுச்சின்று சொன்னேன்" என்றான் அவள் காதுகளில் குனிந்து.

அதிர்ச்சியில் விழிகள் இருண்டும் கோரஸாய் விரிந்து அவள் பட்டு அதரங்கள் தன் அதிர்ச்சியை வெளிபடுத்தி இருந்து, "பொய் பொய் சொல்லி எல்லாரையும் ஏமாத்தி என்னை கல்யாணம் பண்ணி இருக்க.  நீ விஜய் மாதிரியே...  அவரை என்ன பண்ண..? நீ யாரு..? அய்யோ ஏன் இப்படி என்னை புலம்ப வச்சிட்ட  …? .உன்னை.. உன்னை" என்று அவன் கழுத்தில் இரு கரங்களை கொண்டு சென்றவளை புன்னகையோடு பார்த்திருந்தான் அவன்.

அவனின் புன்னைகை இன்னும் அவளுக்கு ஆத்திரத்தை கூட்ட, "நீ யாருடா என் வாழ்க்கையோய விளையாட?" என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள்.

*********

காபி  ஷாப் அருகில்  இருந்த பார்க்கில் தோழியின் வருகையை கண்டு கை அசைத்தபடியே இருந்தாள் ஒரு யுவதி, "ஹாய் மாது!" என்று மகிழ்வுடன் அழைத்தவள் "வாவ் யூ லுக் சோ கார்ஜியஸ் டீ " என்று அவளை அணைத்து முத்தமிட்டாள்.

அவளிடம் இருந்து விலகியவள், "என்னடி இது  கட்டிபிடித்து முத்தம் கொடுக்குற?" என்று விலக்கி நிறுத்தியவள் பெயர் மாதாங்கி. ஆதர்ஷனியின் முக ஜாடையில் இருக்கும் நவயுக மங்கை.

"ஹா.. ஹா..." என்ற சிரித்த தோழி அழகை ஆரதிக்கிறேன் பேபி என்று மேலும் அருகில் வந்தாள்.

"அடியே வானரமே. என் அழகை ஆரதிச்சது போதும். யாரவது பாத்தா தப்பா நினைக்க போறாங்க" என்று சிரித்தாள்.

"நீ வேற மச்சி. நாமல்லாம் இப்படி இல்லனாதான் அவங்க எல்லாம் தப்பா நினைப்பாங்க " என்றாள் கண் அடித்து.

"சரி. அது எல்லாம் விடு. நினைக்கறவங்களுக்கு காயபோடவும் தெரியும்.  இப்போ எதுக்கு என்னை வர சொன்ன?" என்றாள் அந்த யுவதி .

"ஏய் ஏய் கொஞ்சம் அடங்குடி. எதுக்கு இப்படி படபடன்னு பொறியற? முடியல உன் கூட... ஆனாலும் எனக்கும் வேற வழி இல்ல மச்சி. நீதான் இன்னைக்கு எனக்கு மாட்டி இருக்க.." என்று முகத்தை சுழித்து கூறினாள்.

"உன் தலையெழுத்து அதை யாரல மாத்த முடியும்?" என்று கையை விரித்து காட்டி ஷர்ட் காலரை தூக்கிவிட்டவள்.

" இப்போ நாம எங்க போறோம்? தெரிஞ்சிக்கலாமா?" என்றாள் ஒரு தொகுப்பாளரின் தோரணையில்.

"ஹா.... ஹா..." என்று சிரித்தவள்.

" இன்னும் 3 டேஸ்ல எனக்கு டேன்ஸ் பர்பாமன்ஸ் இருக்கு. அதுக்கு சில திங்க்ஸ் ஆக்ஸிஸரிஸ் எல்லாம் பார்ச்சேஸ் பண்ணணும்" என்றாள்.

"என்ன மச்சி எனக்கு சம்மந்தம் இல்லாத டியூட்டியா இருக்கு. நமக்கு பேண்ட் ஷர்டே சரியா எடுக்க வராதே… இதுல உனக்கு எப்படி?" என்றாள் முகத்தை அஷ்டகோணலாக்கி.

"மூஞ்சிய அப்படி வைக்காத மச்சி. சகிக்கல" என்ற மாது "உன்னை ஹெல்ப்பண்ண கூப்பிடல. இந்த மாதிரி வாயடிக்கத்தான்  கூப்பிட்டேன் . ஒழுங்கா கூட வா" என்று அரட்டி உருட்டி இருவரும் ஒரு மாலிற்குள் நூழைந்தனர்.

***************
எழுத்தாளர்: பாக்கியலக்ஷ்மி

ஐடி:bhagiyalakshmi

****************

அன்பு டால்ஸ் எல்லாருக்கும் வணக்கம்.

நம்ம  எழுத்தாளர்கள் அனைவரும் இந்த ரிலே கதையை  மிகவும் ஆர்வமுடன் ரசித்து எழுத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதேபோல், நாங்கள் இக்கதையின் கருவை முடிவு செய்யாமல், ஒவ்வொரு எழுத்தாளர்களும் தங்களது தனிப்பட்ட எண்ணங்களில் சுதந்திரமாக கதையோடு ஒன்றியிருக்கும்படியும் யோசித்து மிகவும் சிரத்தையுடன் எழுதி வருகின்றனர்.

இதில் ஒரு எழுத்தாளர் என்ன எழுத போகிறார் என்பது அவரின் பதிவை கண்ட பின்பே அடுத்த எழுத்தாளருக்கு தெரியும். எனவே, நாங்களும் உங்களுடன் ஆர்வத்துடன் படிப்பதில் பயணிக்கிறோம்.

பதினோரு பதிவுகள் இதுவரை தந்திருக்கிறோம். இதுவரை எஙகள் எழுத்தாளர்களின் இந்த கதை பயணம் உங்களை எப்படி கவர்ந்திருக்கிறது என்பதை உங்கள் கருத்துக்கள் மூலம் கூறினால் பின்வரும் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் தரும்.

என்றும்
உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
அன்பு எழுத்தாளர்கள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro