19. சல்மா சசிகுமார்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

19. சல்மா சசிகுமார்:

நித்ராதேவியின் பிடியில் சிக்கிய நம் ஆது அப்போது தான் மெல்ல கண் விழுத்து பார்த்தாள்.

அவள் கண்களுக்கு முன் துருவ் அவளையே விழி இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தான்.

கண்களை கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தாள் அவன் அங்கு காணவில்லை.

ஏற்கனவே சுதாவும் துருவும் பேசுவதை கேட்ட ஆது மிகுந்த மன உளைச்சலில் இருந்தாள். இதில் இவன் பிம்பம் வேறு வந்து போவதால் மேலும் தலைவலி கூடியது தான் மிச்சம்.

திடீரென அந்த அறை கதவை திறந்துக்கொண்டு துருவ் அறைக்குள் நுழைந்தான்.

" சாரி ஆது மா." என்று துருவ் பேசிக்கொண்டே அவள் அருகில் வந்தான்.

"உனக்கு எவ்வளவு வேனுனாலும் திட்டிக்கோ. அடிக்கணும்னா ரெண்டு அடி கூட போடு. ஆனா, உன்னை மீறி என்னால யோசிக்க முடில ஆது. நீ இல்லாத லைஃப என்னால யோசிச்சு கூட பாக்க முடிலடி" என்று அவளை கண்களில் மொத்தமாய் நிறைத்துக்கொண்டான் துருவ்.

ஆது பதில் ஏதும் பேசவில்லை. அவன் கூறிய வார்த்தைகளே மூளைக்குள் குழப்பத்தின் பிடியில் கொண்டு சென்றது.

" ரொம்ப யோசிக்காத பேபி. வா சாப்டலாம். பிளீஸ்." என்று அவள் விழிகளையே மிகவும் இறைஞ்சி வேண்டினான்.

ஆது என்ன நினைத்தாளோ? அவன் அழைத்ததும் பதிலேதும் பேசாமல் அவன் கன்னங்களில் பளாரென அறைந்தாள்.

"ஆது ... " என்றான் மெதுவாக. அவள் அடித்தது அவனுக்கு கன்னங்களில் வலிக்கவில்லை மாறாக இதயத்தில் வலித்தது.

ஆதர்ஷினியின் மனநிலை வேறாக இருந்தது. அவனை அடித்துவிட்டாளே தவிர முகத்தில் எந்த வித பாவனையும் காட்டவில்லை.

அவளை விசித்திரமாக பார்த்தான் துருவ்.
'இன்னும் இவ கிட்ட எவ்ளோ அடி வாங்கனுமோ கடவுளே' என்று மனதில் நினைத்தான்.

'என்ன?' என்பதை போல புருவத்தை உயர்த்தினாள்.
........................................................................

ஆது யார் ?.. மாதுவிற்கும் ஆதிவிற்கும் இருக்கும் உறவு தான் என்னவாக இருக்கும் என்று  தன்னை பற்றியே அறிய நினைத்து எண்ணங்கள் வெவ்வேறாக இருக்க ஒரு ஆர்வத்துடன் நவினுடன் பைக்கில் சென்றாள் மாது.

திடீரென பைக்கை நிறுத்தியவன்.

" ஆது ... " என்றான் எதையோ எண்ணியவாறு.

" மிஸ்டர்... நான் மாதங்கி உங்க அத்தை பொண்ணு ஆதர்ஷினி இல்ல." தன் ஆர்வத்தில் தடை ஏற்படவும் பொறிந்து தள்ளினாள்.

" ஓகே மிஸ். மாதங்கி நான் ஒரு வேகத்துல உன்ன கூடிட்டு கிளம்பிட்டேன். ஆனா, கொஞ்சம் பதட்டமா இருக்கு. நீயும் ஆதுவும் கிட்ட தட்ட ஒரே மாதிரி இருக்கீங்க. இப்போ பிரிஞ்சு இருக்கீங்கனா ஏதோ காரணம் இருக்கும். திடீர்னு அவங்க முன்னாடி கூட்டிட்டு போய் எதாச்சும் நடந்திடுமோனு பயமா இருக்கு" என்றான் ஒரு வித பதட்டத்துடனே நவின்.

"அப்போ என்னை கூடிட்டு போக மாட்டீங்களா??  எல்லாரும் என்கிட்ட மறைக்குறீங்க. நான் என்ன தான் பண்ணுவேன்" சோர்வுடனே ஒலித்தது அவள் குரல்.

"நான் அத்த கிட்ட பேசுறேன். இத பொறுமையா தான் டீல் பண்ணணும். அவசரப்பட்டு எதையும் செய்ய கூடாது மாது." என்று யோசனை மிகுதியாய் வார்த்தைகளை கோர்த்தான் நவின்.

சோர்வுற்றவளாய் வீடு திரும்ப முடிவுசெய்து நவினிடம் விடைபெற்றாள்.

" ஓகே நவின். சீக்கிரமா பேசிட்டு சொல்லுங்க. நான் கிளம்புறேன்." என்றாள் மாது.

" நானே வீட்ல விட்றேனே" என்று அவளின் பதிலை எதிர்பார்ப்புடன் பார்த்தான்.

" வேணா நவின். உங்களுக்கே என்னோட அம்மாவ தெரிஞ்சிருக்கப்போ.  என் அம்மாவுக்கும் உங்கள தெரிஞ்சிருக்கனும்.  இப்போதைக்கு வீட்ல இத பத்தி தெரிய வேணாம் நீங்க சொன்ன மாறி பொறுமையாவே போகலாம். நா போய்ப்பேன் நவின் நீங்க பயபடவேணாம்" என்று மனதில் எதையே யோசித்தவளாக அவனிடம் விடை பெற்றாள் மாது.

........................................................................

துருவை அறைந்தபின் ஆது சற்று இயல்பாகவே இருந்தாள். அவனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. ஆனால், அவன் பேசுவதற்க்கு பதிலளிக்காமலும் இல்லை.
ஆதுவின் மனநிலை புரியாமல் துருவ் தான் குழப்பத்தில் இருந்தான்.

"ஆது.. வெளிய எங்கேயாச்சும் போலாமா??" என்றவன் அவளின் மறுப்பான சைகையை மட்டுமே அவன் எதிர்பார்த்து காத்திருந்தான்.

" போலாம்" என்றாள் உணர்ச்சிகளற்ற குரலில் ஆது.

தன் காதில் தேன் வந்து பாய்வதை போல் உணர்ந்தான் துருவ்.

"நெஜமாவா என் கூட வருவியா?" என்றான். ஒரு வேளை கனவு உலகத்துல இருக்கேனோ துருவ் எந்திரி டா.  அவனால் நடப்பதை நம்ப முடியவில்லை.

" ரொம்ப ஆக்ட் பண்ணினா நா எங்கயுமே வரல" என்று எரிச்சலாக பதிலளித்தாள் ஆது.

"ஐயோ வேணா வேணா. நா எதுவுமே பேசல போலாம் போலாம்." என்றவன் எங்கு அவள் மறுத்துவிடுவாளோ என்று அவசரமாக புறப்பட்டான்.

அதே நேரம்.

" ஹாய் மாது நீங்க எங்க இங்க?" எதேச்சையாக மாதுவை சந்தித்தான் விஜய்.

"ஹா...  ஹாய்...  வீ...  வீட்டுக்கு போகனும் விஜய் பஸ்காக காத்திட்டு இருக்கேன்..." என்று திடீரென அவனை அங்கு எதிர்பார்க்காததால் சற்று தடுமாறியவாறே பதில் அளித்தாள் மாது.

" நா டிராப் பண்ணவா? இப் யூ டோன்ட் மைண்ட்" அழகாய் சிரித்தவனாய் கேட்டான் விஜய்.

"நெவர் மைண்ட்" என்று அவனின் கொள்ளை கொள்ளும் சிரிப்பையும் உள்வாங்கி கொண்டு சிரித்தாள் மங்கை.

"விஜய் நா ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?" என்று ஏதோ பெரியதாய் கேட்கும் பீடிகையாய் கேட்டாள்.

"கேளுங்க தப்பா எடுத்துக்க மாட்டேன்." அப்படி என்ன கேட்கபோகிறாள் என்ற மனநிலை அவனுக்கு.

" இன்னும் ஆதர்ஷினிய விரும்புறிங்களா??" தயக்கத்தை மறைத்தவளாய் கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வியில் பைக்கை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

அவன் நிறுத்திய வேகத்தில் அவன் மீதே மொத்தமாய் சாய்ந்தாள் மாது.

" அவ என்னோட காதலியா இருந்திருக்கலாம். ஆனா, இப்ப அவ துருவோட மனைவி. அதுக்காக என் காதல குழி தோண்டி பொதச்சுட்டேனு கேட்டா கண்டிப்பா இல்ல.  இதுக்கு காலம் தான் பதில் சொல்லனும்." வேதனைகளை மறைத்தவனாய் பதில் மொழிந்தான் விஜய்.

தன் மனதை கல்லாக்கிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார்கள்.

"விஜய் என்னை விடுங்க. வேற யாரையும் கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லையா?" என்று அவனின் விருப்பத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் மாதுவிடன் இருந்தது.

மறுபடியும் சடன் பிரேக் அவனின் மேல் முழுவதும் மோதி அவன் பின்னந்தலையில் தன் நெற்றியை முட்டிக்கொண்டாள் மாது.

" விஜய் எதுக்கு இப்படி பிரேக் பிடிக்குறீங்க வலிக்குது? அந்த ரெஸ்டாரண்ட்ல உக்காந்து பேசலாமா?" என்றாள் தலையை தேய்த்துக்கொண்டே.

" ம்ம்ம்ம்.... " அவளின் கேள்வியில் எரிச்சலை உணர்ந்தவன் சற்று நிதானித்துக்கொண்டான்.

அதே நேரம் ...

ஆதுவும் துருவும் ஒரு ரெஸ்டாரன்டில்.

" ஆது என்ன ஆர்டர் பண்ணட்டும்?" அவளுக்கு பிடித்துதான் வந்தாளா தன் கட்டாயத்திற்காக வந்தாளா என்று சற்று பதட்டமாகவே காணப்பட்டான் துருவ்.

" எதாச்சும் சொல்லு?" என்று அவனை சட்டைசெய்யாமல் வேடிக்கை பார்த்தாள் ஆது.

அதே ரெஸ்டாரெண்டில் விஜயும் மாதுவும்   முழுமையான 10 நிமிட  அமைத்திக்கு பின்,.

"இப்போ சொல்லுங்க விஜய் " அவள் விடுவதாய் இல்லை.

" தெரியல மாது .. " விடையற்றவனாய் விஜய்.

" சரி. ஆதுவோட நினைவா உங்ககிட்ட என்னவெல்லாம் இருக்கு?" என்றாள் மாது.

" புரியல?" என்றான் விஜய் அவளின் கேள்வி விளங்காதவனாய்.

"அதான் பா. அவங்க பண்ண மெசெஜ்,  போட்டோஸ் அது போல..." அவள் குரலில் ஒரு உரிமை மெதுவாய் படற பேசினாள் மாது.

" இருக்கு. அது எதுக்கு இப்போ?" அவளின் நோக்கம் மெலிதாய் பிடிபட்டது போல கடினம் காட்ட துவங்கினான் விஜய்.

"விஜய் கொஞ்சம் பொறுமையா நான் சொல்ற மாறி பண்ணுங்களேன். பிளீஸ்... அந்த மெசெஜ் உங்க கையால டிலிட் பண்ணுங்க..." என்றாள் சற்று பயத்தோடு.

" வாட்? "  சற்று சத்தமாகவே கேட்டுவிட்டான் விஜய்.
*****

" தேங்ஸ் ஆது நா கூப்டதும் வந்ததுக்கு.
இந்த டிரஸ் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு." என்றான் அவளை தன் கருத்தில் வைத்து அழகான சிரிப்புடன் துருவ்.

"நா போய் கை கழுவிட்டு வரேன்" என்று  அவனின் சிரிப்பான பேச்சை முழுவதுமாய் தவிர்த்தாள்.

***

" நீங்க தானே சொன்னீங்க? அவ துருவோட மனைவினு. இன்னோருத்தரோட மனைவி. அதுக்குதான் சொன்னேன். கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவீங்க. தினமும் அத பாக்காம வேற மாறி உங்க ஃபீலிங்ஸ் மாத்த டிரை பண்ணுங்க விஜய்.

உங்களுக்கு பிடிக்கலனா பண்ணாதீங்க.

உங்க மனநிலைய மாத்தனுமேன்னுதான் சொல்றேன். இல்லாட்டி வேணாம்." என்றாள் நிறுத்தி நிதானமாக, அவனின் நிலை கண்டு பரிதவிப்பாக இருந்தாலும் வேறு வழி தோண்றவில்லை மாதுவிற்க்கு.

சற்று நேரம் யோசித்தவன்.

இரும்பாய் மனதை மாற்றிக்கொண்டு ஆதுவிற்காக உருகி உருகி செய்த மெசேஜ் அவளது போட்டாக்கள் என்று அத்தனையையும் அழித்தான்.

அதேநேரம், விஜயின் செயலை சற்று தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தாள் ஆது.

************
எழுத்தாளர்: சல்மா சசிகுமார்

ஐடி:@salmasasikumar

************

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro