30. தமிழ்வெண்பா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

30. தமிழ்வெண்பா:

இருவரும், "என்னது உன் கஸ்டடியா?" என்று கோரஸாக கேட்டு பின் துருவ், "யோவ்! நீதான் எங்க மூணு பேரு கஸ்டடில இருக்க" என்றான்.

விஜய் ஓட்டுனரின் முகத்தை கொஞ்சம் திருப்பி பின் பக்கம் காட்ட, அவனை கண்ட ராஜேந்திரனுக்கு உண்மையான நெஞ்சுவலியே வந்துவிடும் போல இருந்தது.

"நீ... நீ... நீ எப்படி இவங்க கூட...?" என்ற ராஜசேகரின் உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அங்கே இருந்தது சுகந்தே தான்...

"என்ன ராஜு பேபி இதுக்கே சாக்கான எப்படி? கொஞ்சம் நமக்கு முன்னாடியும் பின்னாடியும் பாருங்க..." என அவன் கூறிட படபடக்கும் இதயத்தோடு முன்னும் பின்னும் நோக்கினார்.  துரூவும் தன் பக்கமிருந்த கண்ணாடியை இறக்க அந்த பக்கத்திலிருந்து கையாட்டிக் கொண்டிருந்தான் ஒருவன்.

"இவங்க எல்லாம் என் ஆளுங்க... நான் தானே உங்கள கொல்ல ஏற்பாடு பண்ணேன்..." என்றார் ராஜேந்திரன் இன்னும் முழுமையாக நீங்காத குழப்பத்துடன்.

"அப்போ உன் ஆளுங்க... இப்போ எங்க ஆளுங்க..." என்றான் சுகந்த் காரின் வேகத்தைக் கூட்டியபடியே.

அவரால் இதை நம்பவே முடியவில்லை. 'இவன் எப்படி இவர்களுடன்? இதையறியாது தன்னுடைய அத்தனை திட்டத்தையும் முட்டாள் தனமாக அவனிடம் ஒப்பித்திருந்தேனே?' என உள்ளத்தில் வன்மம் ஏற குமைந்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்.

லீனாவின் மூலம் தான் சுகந்தின் அறிமுகமே கிட்டியது ராஜேந்திரனுக்கு. லீனா, சுகந்த், துரூவ் மூவருமே முதுகலை ஒன்றாய் பயின்றவர்கள்.

தாய்மொழி மட்டுமே போதுமான காரணமாக இருக்க கண்டதும் துரூவ், சுகந்த் இருவருக்குமிடையே அழகான நட்பு மலர்ந்து விட்டது.

முதலில் லீனாவின் காதலை தெரிந்துக் கொண்டு சுகந்த் கூட அதற்கு ஆதரவாகவே பேசினான். ஆனால் துரூவ் ஆதுவின் மீது கொண்ட காதல் தெரிந்தபின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான். அதன் பிறகே இருவரும் சேர்ந்து ஆது வேலை செய்யும் கம்பெனியை வாங்கியது.

ராஜேந்திரன் விஜயை கொல்ல முயலும் வரைக்கூட அவருக்கு இருப்பது பண ஆசை என்று தான் எண்ணியிருந்தான் துரூவ்.

ஆனால் என்று பெற்ற மகனையே கொல்ல நினைத்தாரோ அன்றே தெரிந்துக் கொண்டான் அதையும் மீறி ஏதோ இருக்கிறது என்று.

இப்படியே போனால் அவருடனே இருக்கும் விஜயின் உயிருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்று எண்ணியவன் தனக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவர் ராஜேந்திரனுடன் கைக் கோர்க்க வேண்டும் என்று எண்ணினான்.

அதனாலேயே லீனாவின் மூலம் சுகந்தை ராஜேந்திரனிடம் கைகோர்க்க சொல்லி இருந்தான்.

சுகந்தும். "எனக்கு வேண்டியது துரூவின் மரணம்தான்... அவன் இறந்தால் இந்த கம்பெனி முழுதும் எனதாகிவிடும்... அவன் சொத்து உங்களுடையது ஆகிவிடும்..." என அவர் நம்பும்படி ஆசையை தூண்ட... இவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அவருடன் கைக்கோர்த்த சுகந்தோ பணத்தை காட்டி அவர் ஆட்களை எல்லாம் தன்பக்கம் இழுத்திருந்தான்.

முதலில் ராஜேந்திரன் நெஞ்சுவலியில் துடிப்பதைக் கண்ட விஜய்கூட அதை உண்மை என்றே நம்பினான்... அதனாலேயே துரூவையும் அழைத்தான்.

ஆதுவின் வற்புறுத்தலால் துரூவும் கிளம்பி வர... வரும் வழியில் தான் சுகந்த் அழைத்து இப்படி ஒரு திட்டம் தீட்டபட்டிருப்பதைப் பற்றி கூறினான்.

ராஜேந்திரன் நேரடியாக சுகந்திடம் இந்த திட்டத்தை கூறவில்லை. அவரின் ஆட்கள் இதை கூறிட... அவனும் அதை துரூவிடம் சொல்லி இருந்தான்.

அவனையும் வர சொல்லி விட்டு விஜயிடமும் துரூவ் இதை சொல்ல, அவரின் போக்கிலேயே போக முடிவு செய்தனர் அவர்கள்.

"என்ன ராஜு பேபி ஏதாவது புரியுதா? இல்ல நான் புளிப் போட்டு விலக்கு விலக்குனு விலக்கனுமா..." என்றான் சுகந்த்.

"டேய்... நம்பிக்கை துரோகி... உன்னை போய் நம்பினேன் பாரு..." என ராஜேந்திரன் பின்புறமாய் சுகந்தின் கழுத்தை பற்றினார்.

"உன்னை விட இந்த உலகத்துல பெரிய நம்பிக்கை துரோகி யாரவது இருக்காங்களா?" என குரல் வர ஆண்கள் நால்வருமே பதற்றத்துடன் அறிவழகியை தான் பார்த்திருந்தனர். இதுவரை அவர் இருந்ததையே அவர்கள் தான் மறந்து விட்டிருந்தனர்.

"அறிவு நான் சொல்லறத கேளு. எல்லாம் நம்ம நல்லதுக்கு தான்." என அவர் அவசரமாக ஏதோ கூற வர...

"எது நல்லது? இல்ல எது நல்லது...? என் புள்ளைய நீ கொல்ல பார்த்தது தான் எனக்கு நல்லதா" என்று ஆங்காரம் வந்தவரை போல் அவர் கத்த... ஸ்சம்பித்துப் போனார் ராஜேந்திரன். தான் என்ன சொன்னாலும் நம்பும் அறிவு அவரல்ல என அந்த நொடியே புரிந்துப் போனது ராஜேந்திரனுக்கு.

"இனி இவனிடமிருத்து தப்பிக்க வழியேயில்லை..." என தீவிரமாக யோசித்தவர், சட்டென்று முதுகிற்கு பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அறிவழகியின் கழுத்தில் வைத்தார். இதைக் கண்ட மற்ற மூவருமே பதறிப் போயினர்...

"டேய் விஜய்... எனக்கு தெரியும்டா உங்க அம்மா மேல நீ உயிரையே வச்சு இருக்கனு. அவ முகம் லேசா வாடினா கூட உன்னால தாங்க முடியாதுல. இப்போ உங்க அம்மா உயிரோட வேணும்னா என்னை இறங்கி பத்திரமா போகவிடு. இல்ல உன் அம்மாவ உயிரோட பாக்க முடியாது." என்றார் மிரட்டல் தோனியில் ராஜேந்திரன்.

"சூப்பர்... முன்னாடி புள்ளைய... இப்ப பொண்டாட்டிய... சீக்கரம் கொல்லுங்க... கொன்னுட்டு இந்த பணத்தை எல்லாம் நீங்களே அனுபவிங்க... அப்போயாவது உங்களுக்கு சந்தோஷம் வருமா...?" என்றார் அறிவழகி கண்ணீருடன். அவரால் இந்த ஏமாற்றத்தை ஏற்கவே முடியவில்லை. எத்தனை வருட திருமண வாழ்வு? அது இன்று கண்முன் பொய்த்து போவதை அவரால் எப்படி ஏற்க முடியும்...?

"என்னடி நினைச்ச உன்னை ஆசைபட்டு விரும்பி கட்டி கிட்டேனா? இதோ இவன் அம்மாவ பணத்துக்காக கல்யாணம் பண்ணிகிட்டேன். அவ என்னனா எங்க அப்பாவா என்னை கூப்பிடற வரைக்கும் நான் போய் பணமுன்னு நிக்க மாட்டேனு அவ்வளவு பிடிவாதமா இருந்துட்டா. சரினு உன்னை கல்யாணம் பண்ணா. உங்கப்பன் என்னமோ சொத்தெல்லாம் உனக்கு பொறக்கப் போற புள்ள மேல எழுதி வச்சுட்டான். என்னை பாத்தா எப்படி தெரியுது? அப்புறம் எதுக்குடீ நான் உன்னை கல்யாணம் பண்ணனும்?" என ராஜேந்திரனும் கத்த... அவரின் உண்மை முகம் கண்டு அதை ஏற்க முடியாது கண்கலங்க அமர்ந்திருந்தவர் அப்படியே மயங்கி சரிந்தார்.

துரூவ் ராஜேந்திரனின் இடுப்பில் ஓங்கி இடிக்க... அதில் அவரும் தடுமாற, சரியாக அந்த நேரத்தை பயன்படுத்தி அவரிடமிருந்த கத்தியை பறித்திருந்தான் விஜய்...

"விஜய்! இவங்கள கூட்டிட்டு நீ உடனே ஹாஸ்பிட்டல் போ. இந்த ஆள நான் பாத்துக்கறேன்." என்று விஜயை அவன் அன்னையுடன் ஒரு காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தான் துரூவ்.

            💕 💗💗💗 💕

துரூவ் மீண்டும் வீட்டிற்கு வர ஆதுவின் இருபுறமும் சுதாவும் நவியும் ஆளுக்கு ஒரு பக்கமாய் முறுக்கிக் கொண்டு அமர்ந்திருக்க, ஆதுவோ தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள்.

"என்னச்சு ஆதும்மா? ஏன் இப்படி உக்காந்து இருக்க?" என்றபடியே துரூவ் அவளை நெருங்கினான்.

"இங்க குத்துயிரும் கொலையுருமா ஒருத்தன் தலையில கைய வச்சுட்டு உக்காந்து இருக்கேனே... அதெல்லாம் உன் கண்ணுக்கே தெரியாதா?" என்ற நவியின் குரல் அவன் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.

"நீ எனக்கு இதுங்கள துணைக்கு அனுப்பனீயா...? இல்ல தொல்ல பண்ண அனுப்பனீயா...? இரண்டும் என் உசுர வாங்கிட்டுங்க... நாயும் பேயும் தோத்துடும் போல... அந்த அளவுக்கு அடிச்சுக்குதுங்க... ஸ்ஸ்ஸ் ஹப்பா... முடியல என்னால..." என்றவள் குரலில் லேசாக சோர்வு தெரிய...

"என்ன ஆதுமா நீ தூங்க வேண்டியது தானே... இவ்வளவு நேரம் ஏன் முழிச்சு இருக்க...? பாரு கண்ணெலாம் சிவந்து போயிட்டு..." என்றபடியே அவளை கையில் ஏந்திக் கொண்டவன் தங்கள் அறையை நோக்கி நகர... மற்ற இருவரும் ஆவென அவர்களை பார்த்திருந்தனர்.

"ஒரு மரியாதைக்காவது ஒரு வார்த்த பேசறானா? பொண்டாட்டிய பாத்ததும் பொட்டி பாம்பா அவ பின்னாடியே போறான். எனக்குனு ஒரு பொண்டாட்டி இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா?" என நவி வாய்விட்டு புலம்பினான்.

"அதுக்கு ஆப்பிரிக்கா இல்ல போகனும்..." என்றாள் சுதா தீவிர பாவனையில்.

"ஏன்...?" என்றான் இவன் உண்மையிலேயே புரியாத பாவனையில்.

"பின்ன இன்னொரு ஆப்பிரிக்க கரடிய தேட வேண்டாமா...?" என்றவள் ஓட தயாராக தாவி அவளை பிடித்திருந்தான் நவி.

"எனக்கு ஆப்பிரிக்க கரடியெல்லாம் வேண்டாம். இண்டியன் கத்திரிக்காவே போதும்." என்றவன் அதிர்ச்சியில் மலர்ந்த அவள் விழிகளில் இதழ் பதித்து அங்கிருந்து சென்றிருந்தான். இவள் தான் நடந்ததிலிந்து மீள முடியாது அப்படியே சிலைப் போல நின்றிருந்தாள்.

தர்ஷியை படுக்கையில் விட்டவன்... "நீ தூங்கு ஆது மா... நான் ப்ரெஸ் ஆகிட்டு வந்துடறேன்..." என்றபடியே குளியலறைக்குள் நுழைய போவனிடம,

"மாமாக்கு இப்போ எப்படி இருக்கு...?" என்றாள் தர்ஷி.

"எந்த மாமா...?" என்று கேள்வியை அவள் பக்கமே அவன் திருப்ப, "அதான் உங்க அப்பா...?" என்று சொல்ல வந்தவள் அவனின் அனல் கக்கும் பார்வையில்... "அதான் விஜயோட அப்பா..." என்றாள் தடுமாறி.

"அவரு எனக்கு அப்பா இல்ல. அதே மாதிரி உனக்கு மாமாவும் இல்ல... காட் இட்..." என்றவன், "அவருக்கு என்னை ரொம்ப நல்லா ஆரோக்கியமா... அமோகமா இருக்காரு..." என்றபடியே குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

அவன் மீண்டும் இரவு உடைக்கு மாறி வெளியே வரும் வரையும் அதே நிலையில் தான் அமர்ந்திருந்தாள் ஆது.

"என்ன ஆதும்மா... இன்னும் நீ தூங்கலையா...?" என்றபடியே அவன் அவளின் அருகில் அமர...

"எதுவும் பிரச்சினை இல்லையே...?" என்றாள் அவள்.

"எதுவும் இல்லை ஆதுமா... நீ நிம்மதியா தூங்கு..."

"இல்ல நீ ஏதோ மறைக்கற பப்பு... உன் முகமே அதைக் காட்டிக் கொடுக்குது..." என்ற ஆதுவை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்திருந்தான் துரூவ்.

"பெரிசா எதுவுமே இல்ல ஆதுமா... நான் இருக்கேன் இல்ல... என்ன வந்தாலும் நான் பாத்துப்பேன்... என் ஆதுமா எதுக்கும் கவலைப்படாம நிம்மதியா தூங்குங்க... என் ஆதுமா நிம்மதியா சந்தோஷமா இருந்தா தான் என்னாலயும் நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியும்..." என்றபடியே அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் மெல்ல தட்டிக் கொடுக்க, அவன் மார்பினிலே துயில் கொண்டிருந்தாள் அவள். அவளை அணைத்தபடியே நீண்ட நாட்களுக்கு பிறகு அவனும் நிம்மதியாய் உறங்கிப் போனான்.

            💕  💗💗💗   💕

இரண்டு நாட்களுக்கு பிறகு... மெல்ல இளையராஜாவின் பாடல் ஒன்றை ஹம் செய்தபடியே... தனது காரை லாவகமாக அந்த காட்டுப் பாதையில் செலுத்திக் கொண்டிருந்தான் துரூவ்... விஜய் அன்று ஆதுவை கூட்டி வந்திருந்த அதே காட்டு மர வீடு... அதன் முன் காரை நிறுத்தியவன்... இறங்கி உள்ளே நுழைய அங்கே மத்தியில் ஒரு மர நாற்காலியில் ராஜேந்திரன் கட்டி வைக்கப் பட்டிருந்தார்... இவன் கண் அசைக்க... அவருக்கு காவலாய் நின்றிருந்த அடியாட்களெல்லாம் வேகமாக வெளியேறி இருந்தனர்... அதுவரை அந்த வீட்டின் பின்புறமாக நின்று இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த விஜயும் உள்ளே வந்தான்...

"இப்போ எப்படி இருக்காங்க...?" என்றான் துரூவ் விஜயிடம், ஏனோ அவனால் சட்டென்று அறிவழகியை அன்னையென்று அழைக்க முடியவில்லை... ஆனால் அவரை தான் அவன் கேட்கிறான் என விஜய்க்கு நன்றாகவே புரிந்தது.

"ம்ம்ம் நல்லா இருக்காங்க... ஆனா எப்ப பாத்தாலும் அழுதுட்டே இருக்காங்க... சமாதானப் படுத்த முடியல..." என்றான் விஜய் உச்சுக்கொட்டி.

சரி என்னும் விதமாய் தலையசைத்தவன். அருகில் இருந்த தண்ணீரை ராஜேந்திரன் முகத்தில் ஊற்ற பதறி அடித்து விழித்தார் அவர். இரண்டு தினங்களாக அடிக்கவில்லை. துன்புறுத்தவில்லை அவரை. ஆனால் பசியின் கொடுமையை உணர்த்தியிருந்தனர்.

"என்ன ராஜு பேபி...? இப்பவாது உண்மைய சொல்லறீயா...? இல்ல..." என்றபடியே அவனை பார்த்திருந்தனர் இருவரும்.

"என்னதான்டா வேணும் உங்களுக்கு..?. ஏன்டா என்னை இப்படி சித்தரவதை பண்ணறீங்க...?" என ஆவேசம் வந்தவரைப் போல கத்தியவரை பார்த்திருந்தவன் பொருமையாக நிதானமாக, "உன் உயிர்தான் வேணும்... அதுவும் ஒவ்வொரு நிமிஷமும் நீ துடிதுடிச்சு கொஞ்சம் கொஞ்சமா சாகறது தான் வேணும்... ஒவ்வொரு நாளும் என் அம்மா சிந்தின கண்ணீருக்கு பதில் வேணும்..." என்றான் துரூவ்.

அவர் பதிலேதும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருக்க... "சரி அதெல்லாம் வேண்டாம்... விட்டுடலாம்... எனக்கு ஏன் இப்படி எல்லாம் நீ பண்ணனு தெரிஞ்சாகனும்... கண்டிப்பா பணத்தாசை மட்டும் இல்ல... முதல நீ என்ன அழிக்கனுமுனு நினைச்சப்ப கூட... அந்த இடத்துக்கு விஜய கொண்டு வர நினைக்கறனு தான் நினைச்சேன்... எந்த அப்பனும் புள்ளைக்கு பணம் சேர்க்கனுமுனு நினைக்கறது தான் இயல்பு... ஆனா, நீ அவனையும் கொல்ல நினைச்சப்ப தான் இதுல இன்னும் ஏதோ இருக்குனு புரிஞ்சுது... இப்போ விஜயோட எல்லா சொத்தையும் நீதான் அனுபவிக்கற... அதுக்கும் மேல அவன் உன் புள்ள... நீ பணத்தாசை புடிச்சு சோத்து சேர்த்தாலும் அவனுக்காக தான் சேர்க்கனும்... ஆனா, அவனையே கொல்லனுமுனு நினைக்கறனனா... ஏன்...?" என்றபடியே அவன் அவரையே பார்த்திருக்க... இடி இடியென அந்த இடமே அதிரும்படி சிரித்திருந்தார் அவர். அடுத்து அவர் சொல்லிய பதில் தந்த அதிரச்சியில் சிலையென உறைந்து நின்றிருந்தனர் விஜய் துரூவ் இருவருமே.

**************
எழுத்தாளர்: தமிழவெண்பா

ஐடி: Thamizhvenba

**************
வணக்கம் வாசகர்களே! 30வது அத்தியாயம் வரை நம் கதை வெற்றிகரமாக வந்திருக்கிறது.

இந்த கதைக்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.

ஒவ்வொரு எழுத்தாளரும் மற்ற எழுத்தாளரின் படைப்போடு ஒன்றி யோசித்து அழகாக எழுதி தன் படைப்பையும் இணைக்கிறார்.

அவர்களுக்கு ஊக்கம் அளிக்க தாங்கள் படித்துவிட்டு தங்களின் கருத்துக்களையும் இங்கே பகிரலாமே?? அவர்களும் அவர்களின் எழுத்துக்கு கிடைத்த கருத்துகளில் மகிழ்வார்கள் அல்லவா??

படித்துவிட்டு மட்டும் செல்வதால் ....

தொடர்ந்த் எங்களுக்கு ஊக்கம் அளியுங்கள் செல்வங்களே!

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro