42. பூஜா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

42. பூஜா:

ராஜேந்திரன் கூறியதை கேட்டு சகோதரர்கள் இருவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றனர்.

ராஜேந்திரன் ராபர்டிடம் சஞ்சனாவை பிடி அவள் கூறினால் தான் இந்த ஜீவா கையெழுத்து போடுவான் என்றான்.

ராபர்ட் தன் கையில் துப்பாக்கி ஏந்தி சஞ்சனாவை பிடித்தான்.

நொடியில் நடந்த இந்த நிகழ்வில் அப்படியே உறைந்து நின்றான் நவீன்.

***

ஆது... "என் பெயரில் தான் இந்த கம்பெனி உள்ளது" என்று கூறிய அடுத்த நொடி வந்தவர்கள் அவளைப் பார்த்து ஏளனமான பார்வை கொடுத்தனர்.

புரியாமல் ஆதுவும் சுகந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"என்ன அப்படி பார்க்கிறாய் இது மாதிரி தான் நடக்கும் என்று எங்களுக்கு முன்னாடியே தெரியும். இப்ப நாங்க சொல்றதை நீ கேட்டுத்தான் ஆகணும் " என்று கூறினர்.

இதைக் கேட்டதும் ஒரு நொடி திகைத்து நின்றாள். வந்தவர்கள் "உனக்கு உன் புருஷன் உயிரோட வேணும்னா நாங்க காற்ற பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு தான் ஆகணும் அப்படி இல்ல நான் உன் புருஷன் உன் புருஷனோட தம்பிங்க ரெண்டு பேரும் மொத்தமா பரலோகம் போய்விடுவார்கள் எப்படி வசதி?" என கேட்டனர்.

இதைக்கேட்ட ஆது நக்கல் தோனியில் சிரித்து "என்னோட பப்புவ யாராலையும் எதுவும் பண்ண முடியாது. உங்களால முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிகோங்க.  இப்ப என் ஆபீஸ்ல இருந்து வெளிய போறீங்களா இல்ல நான் போலீசைக் கூப்பிடவா... ?" அவள் கூறியதை கேட்டு வந்தவர்கள் மிரண்டனர்.

"என்ன அப்படி பாக்குற?... என் பப்பு பத்தி எனக்கு தெரியும். இந்த நேரம் உன்ன அனுப்பி வச்சவன் என்ன ஆகிருப்பானோ? முதல்ல இடத்த காலி பண்ணுங்கடா காத்துவரட்டும்..."
அவள் கூறியதை கேட்டு திரும்பி பார்க்காமல் சென்றனர்.

***

கோர்ட்டில் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. ராஜேந்திரன் சார்பாக பப்ளிக் பிராஸிகியூட்டர் ஆஜராகியிருந்தார்.

துருவ், விஜய் சார்பாக ஜீவாவின்  கார்டியன் பாலசந்தர் ஆஜராகியிருந்தார்.

பப்ளிக் பிராஸிகியூட்டர்... தனது வாதத்தை துவங்கினார் "கணம் கோர்ட்டார் அவர்களே! இந்த வழக்கு நாம் அனைவருக்கும் மிகவும் பழக்கப்பட்ட வழக்கு, தங்களுடைய சொந்த தந்தையை கொலை செய்ததாக கூறி ஏற்கனவே துருவேந்திரன் மற்றும்  விஜயேந்திரன் இருவரும் கைது செய்யப்பட்டு அது நிறுவனம் ஆகாமல் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் அந்த வழக்கை பற்றி தான் பேச உள்ளேன்...

ராஜேந்திரன் அனுப்பிய வீடியோவில் தான் இறந்தால் அதற்கு காரணம் தன்னுடைய மகன்கள் ஆகிய துரு மற்றும் விஜய் என்று தெளிவாக கூறியுள்ளார்.

தற்போது அவர் தங்கியிருந்த வீட்டில் கேஸ் வெடித்து அவர் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அதனால் இதை கண்டிப்பாக துருவ்  மற்றும் விஜய் அவர்கள்தான் செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது..." என்றார்.

பாலசந்தர்... "யுவர் ஆனர்! எனது கட்சிக்காரர் தான் இப்படி செய்தார்கள் என்று எப்படி உறுதியாக எதிர் தரப்பு வக்கீல் கூறுகிறார்?. அந்த நேரத்தில் எனது கட்சிக்காரர்கள் அந்த இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா...?" என்று கேட்டார்.

பப்ளிக் பிராஸிகியூட்டர்... "இந்த வழக்கிற்கான ஆதாரம் தனியாக எதுவும் தேவையில்லை ஏற்கனவே அவரை கொலை செய்ய நினைத்து தாக்கியவர் தான் விஜய் அதற்குத் துணையாக அவருடைய அண்ணன் துருவ் தான் இருந்துள்ளார். இதுபோதாதா இந்த கொலையை அவர்கள் தான் செய்துள்ளனர்" என்றார்.

பாலசுந்தரால் இதற்கு பதில் கூற முடியவில்லை.

ஆது,மாது, கிருஷ்ணபூபதி, அறிவழகி அனைவரும் பதட்டத்துடன் இருந்தனர். தன்னுடைய மகன்களை  எப்படியாவது காப்பாற்ற வேண்டி அறிவழகி கண்ணீர் வடித்தார்.

பப்ளிக் பிராஸிகியூட்டர்... "மேலும் இந்த வழக்கை அசிஸ்டன்ட் கமிஷனர் ஜீவா தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் துருவ் விஜய் இருவரையும் அவர் தான் கைது செய்ய சென்றுள்ளார் கைது செய்து அழைத்து வரும் வழியில் இருவரும் தப்பிச் சென்றதாக ஜீவா அவர்கள் கமிஷனர் அவர்களிடம் கூறியுள்ளார் தவறு செய்யவில்லை என்றால் ஏன் தலை மறைவாக வேண்டும்?" என்றார்.

நீதிபதி... "எதிர் தரப்பு வக்கீல் ஏதேனும் கூற உள்ளீர்களா..?" என்று கேட்க,

பாலசுந்தர்... "இல்லை யுவர் ஆனர்." என்றார்.

பப்ளிக் பிராஸிகியூட்டர்... "மேலும் இந்த கோர்ட்டிற்கு அசிஸ்டன்ட் கமிஷனர் ஜீவாவும் வரவில்லை துருவ் ,விஜய் இருவரின் தலைமறைவிற்கு உடந்தையாக ஜீவா இருக்கலாம். " என்றார்.

நீதிபதி... "அதை எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்.

பப்ளிக் பிராஸிகியூட்டர்... "ஏனென்றால் ஜீவா அவர்களின் உறவுக்காரர் அதனால்தான் நான் தெளிவாக கூறுகிறேன் இதற்கு உடந்தையாக ஜீவாவும் இருந்துள்ளார் ஆகையால் கண்ம் கோர்ட்டார் அவர்களே இந்த கொலையை செய்தது துரு மற்றும் விஜய் தான் என்று தெளிவாக தெரிகிறது. அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொ‌ள்கிறேன். இவர்களுக்கு துணை நின்ற ஜீவா அவர்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொ‌ள்கிறேன்." என்றார்.

நீதிபதி... "எதிர் தரப்பு வக்கீல் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா...?" என்று மீண்டும் கேட்டார்.

பாலசுந்தரால் எதுவும் கூற முடியவில்லை.
ஆதாரங்கள்  அனைத்தும் எதிராக உள்ளதால் மேற்கொண்டு எதுவும் வாதிட முடியாமல் அவரிடத்தில் அமர்ந்துவிட்டார்.

அறிவழகி, ஆது, மாது முவரும் அவர்களை நினைத்து கவலை கொண்டனர்.

அறிவழகி இத்தனை வருஷம் கழிச்சு கிடைத்த பையன் கடைசி வரைக்கும் என் கூடவே இருக்க முடியாமல் அந்தப் பாவி ராஜேந்திரன் இந்த மாதிரி பண்ணி விட்டானே என்று புலம்பினார்.

நீதிபதி... "ராஜேந்திரன் தரப்பில் கூறப்பட்ட அனைத்திற்கும் எதிர்த்தரப்பு வக்கீல் இடம் எதிர்த்து போராட எந்த ஒரு சாட்சியங்களும் இல்லை. ஆதலால் இந்த கொலையை செய்தது துருவ் மற்றும் விஜய் தான் என்றும்....." என கூறிக் கொண்டிருக்கும் போதே..

"ஒரு நிமிஷம்... யுவர் ஆனர்" என்று வாசல் பக்கம் குரலொன்று கேட்டது.

குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்பினர். அங்கு ஒருவன் கையில் ஒரு டேப் கொண்டு வந்து பாலசுந்தர் அவரிடம் கொடுத்துச் சென்றான்.

அதை வாங்கி நீதிபதியிடம் கொடுத்து அனைவருக்கும் போட்டுக் காட்டினார்.

அதில் ராஜேந்திரன் தங்கியிருந்த வீட்டில் யார் யார் எல்லாம் வந்தார்கள் என்றும் என்னென்ன பேசினார்கள் என அனைத்தும் அதில் இருந்தது.

விஜய், துருவ் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்று கூறப்பட்ட அந்த நேரத்தில் என்ன நடந்தது என்றும் அந்த கேமராவில் இருந்தது.

இவை அனைத்திற்கும் காரணம் ராஜேந்திரன் மற்றும் ரவி ராபர்ட் என்பதும் தெளிவாகத் தெரிய வந்தது..

****

"அந்த கேமரா காரியா பிடிடா...
 அவள பிடிச்சா ஜீவா பையன் கையெழுத்து போடுவான்" என்று கூறினான்.

சஞ்சனாவை பிடித்த ராபர்ட் அவள் கையில் வைத்திருந்த கேமராவையும் செல்லையும்  பிடிங்கி  கீழே போட்டு உடைத்தான். 

இதைப்பார்த்த சஞ்சனா  "இப்ப நீ இதை பண்ணி எந்த பிரயோஜனமும் இல்ல. ஏன்னா இதுவரைக்கும் நடந்த எல்லாமே எங்க போகணுமோ அங்க போய் சேர்ந்தாச்சு. இனிமே உங்களால தப்பிக்க முடியாது" என அவள்  கூறிய நொடி ராபர்ட் அவளை அடிக்க கை ஓங்கினான்.

அதற்குள் நவீன் அவன் கையில் இருந்த துப்பாக்கியை தட்டி அவன் கையை பற்றிக் கொண்டான்.

நவீன் கையில் இருந்த துப்பாக்கியை பார்த்து ராஜேந்திரன் கேலியாக சிரித்தான்.

"இவன் சரியான காமெடி பீஸ் இவனால ஒண்ணும் பண்ண முடியாது ராபர்ட் நீ அவள பிடி அவள  பிடித்தால் தான் இவனுங்க நம்ம வழிக்கு வருவானுங்க.நொடியில் நவீன் தனது கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு ராபர்ட்டின் காலில் சுட்டான். அதை சற்றும் எதிர்பார்க்காத இராஜேந்திரன் மிரண்டு போய் அப்படியே நின்றான்.

"என்ன சொன்ன ? நா காமெடி பீசா... இப்ப தெரியுதா இந்த நவீன் யாருன்னு..... ஒழுங்கு மரியாதையா நீயா வந்து சரண்டர் ஆகி விட்டால் உனக்கு நல்லது இல்லைனா எங்களுடைய ஆட்டம் எப்படி இருக்கும்னு நீ பாக்க போற..." நவீனின் செய்கையில் சகோதரர்கள் மூவரும் வியந்து பார்த்தனர்.

"டேய்... நவீன் உனக்குள்ள இவ்வளவு தைரியமா ஆரம்பத்திலிருந்தே ஒரு காமெடியனா உன்ன நினைச்சுட்டோம்...
ஆனா இப்ப நீயும் ஹீரோ தான்னு நிரூபிச்சுட்ட... " என்றதும்...

"இது எல்லாத்தையும் நான் உங்ககிட்ட இருந்து தானடா கத்துக்கிட்டேன்... " என்றான் நவீன்.

துருவ், "நீ மட்டும் இப்ப இங்க இல்லைன்னா
என்ன நடந்திருக்கும்னு நெனச்சாலே பயமா இருக்கு..."

இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ராஜேந்திரன் சஞ்சனா கையை பிடித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை அவள் கழுத்தில் வைத்தான்.

"என்னங்கடா இங்க இவ்ளோ பெரிய விஷயம் நடந்துகிட்டு இருக்கு நீங்க என்னடானா சாவகாசமா பேசிகிட்டு இருக்கீங்க" எனக் கூற
அவனைத் திரும்பிப் பார்த்தவர்கள் சஞ்சனா கழுத்தில் கத்தி இருப்பதை கண்டு மிரண்டனர்.

"டேய்... ராஜேந்திரன் அவ கழுத்துல இருந்து கத்தியை எடுத்துடு இல்லைனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..." என ஜீவா சீறினான்.

"உன்னால என்ன பண்ண முடியும்?
இவ தான உனக்கு உயிர் அதுனால
உன்னால ஒன்னும் பண்ணமுடியாது..." நொடிப்பொழுதில் சஞ்சனா சுதாரித்து அந்தக் கத்தியை தன் கை கொண்டு தட்டிவிட போகையில் அவளின் கை மணிக்கட்டில் அந்தக் கத்தியால் அவளுடைய கையில் லேசான வெட்டுப்பட்டு கீழேவிழ போனவளை தன் கரங்கள் கொண்டு அவளை தாங்கிப் பிடித்தான் ஜீவா.

சுதாரித்து ராஜேந்திரனை துருவ்  அடிக்க விஜய் நவீன் இருவரும் ராபர்ட்டை அடிக்கத் துவங்கினார்கள்.

அவர்களிடம் இருந்து ராஜேந்திரன் மற்றும் ராபர்ட் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதற்கு முன்பு நடந்த வரை அனைத்தையும் சஞ்சனா தன்னுடைய கேமரா மூலம் தன்னுடைய நண்பனான தன்னுடன் பணிபுரியும் இன்னொரு டிடெக்டிவிற்கு இதை அனுப்பி வைத்தாள்.

இதற்குப் பிறகு நடந்ததை நவீன் சட்டையில் இருந்த பட்டன்கேமரா உதவியால் அனைத்தும் அந்த நண்பனான டிடெக்டிவிற்கு சென்றது.

இதை அனைத்தையும் அவன் கலெக்ட் செய்து கொண்டுதான் கோர்ட்டுக்கு விரைந்தான்..

இவை அனைத்தையும் பார்த்த நீதிபதி
பாலசுந்தரை நோக்க "இதற்கு முழு காரணம் ராஜேந்திரன் தான் அவர் சாகவில்லை கேஸ் வெடித்து இறந்ததாக கூறப்படும் அந்த நபர் யார் என்று விசாரிக்க உத்தரவிடுமாறு கனம் கோட்டார் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். துரு மற்றும் ஜீவா இருவரும் நிரபராதிகள் என்றும் அவர்களை விடுதலை செய்யக்கோரியும் கேட்டுக்கொள்கிறேன்..." என்றார்.

நீதிபதி... "இந்த வழக்கில் குற்றவாளி எனக் கூறப்பட்ட துருவ் மற்றும் விஜய் இருவரும் நிரபராதிகள் என்று உத்தரவிடுகிறேன். மேலும் முக்கிய குற்றவாளியான  ராஜேந்திரன் மற்றும் ரவி ராபர்ட் இருவரையும் கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிடுகிறேன்..." என்று கூறிமுடித்தார்.

இதைக் கேட்ட அறிவழகி, ஆது, மாது,  கிருஷ்ணபூபதி அனைவருக்கும் அளவுகடந்த மகிழ்ச்சியில் திளைக்க.. ஆது அழுதேவிட்டாள்.
தன்னுடைய பப்புவை எக்காரணம் கொண்டும் பிரியக்கூடாது என்றும். அவன் என்னவன் எனக்கு மட்டுமே சொந்தமானவன் என்று நன்கு உணர்ந்துகொண்டாள்.

"எத்தனை கஷ்டம் வந்தாலும்
அனைத்திலும் வென்று
உன்னிடம் தஞ்சம் அடைவேன் ...
எமனையும் எதிர்த்து போராடி
உன் கரம் சேர்வேன் ...
உன் விழி கலங்கினால்
என் உயிரும் கலங்கிடும் ...
என்றும்...
"உன் மனம் வருடும் ஓவியமாக"

**********
எழுத்தாளர்: பூஜா

ஐடி: @poojakutty

**********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro