7. ரம்யா அனாமிகா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

7. ரம்யா அனாமிகா:

தன் மேல் மயங்கி விழுந்த ஆதுவை தோளில் சாய்த்து கொண்டு," அத நீ தான் சொல்லணும் " என்றான் துருவேந்திரன் (நம் கதையின் நாயகன்) நக்கலான சிரிப்புடன்.

ஆறடி உயரம் அடர்த்தியான புருவமும், இடது புருவ ஓரத்தில் வெட்டு காயம் போல் சிறிய தழும்பு, கூர்மையாக அனைவரையும் எடை போடும் கண்களும் , கூர்மையான நாசியும், கன்னக்குழி சிரிப்புடன் பார்க்கும் அனைவரையும் திரும்பி பார்க்க வைப்பதுபோல் இருந்தான் நம் கதையின் நாயகன் துருவேந்திரன். புருவத்தில் உள்ள காயத்தின் தழும்பு மற்றும் கன்னக்குழி மட்டும் தான் துருவா மற்றும் விஜயிக்கு உள்ள வித்தியாசம்.

"நீ... நீ.. எப்ப இங்க வந்த?" என்று ஆத்திரமும் கோபமாக கத்தினான் விஜய்.

"உஸ்..." என்று வாயில் விரல் வைத்து காட்டிவிட்டு பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து சுதாவிற்கு கால் செய்தான்.

"ஏய்!! உனக்கு உடம்பு முழுக்க கொழுப்பு டி" என்று திட்டினான் நவி.

"ஆமா நீ பணம் கொடுத்தல்ல நா சாப்பிடுறதுக்கு பாரு அந்த கொழுப்பு தான் டா" என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தவளின் போன் அடித்தது, "ஹலோ அண்ணா" என்றாள் வேகமாக.

"நீ உடனே கார்டனுக்கு வா" என்று துருவா வைத்தான்.

"ஏய்!! என்கிட்ட பேசுடி அங்க என்ன போன்ல பேசுற" என்று சண்டைக்கு நின்றான்.

"டேய்!! உன்கிட்ட நா அப்புறம் சண்டை போடுறேன் போடா" என்று ஓடினாள்.

"ஹேய்!!" என்று பின்னால் போகப் போனவனின் கையை பிடித்து தடுத்தான் ஓர் இளைஞன்.

"நவீன் அவ போகட்டும், நா சுதா அண்ணா சுகந்த் தர்ஷினி ஒர்க் பண்ற கம்பெனில ஜிஎம்மா இருக்கேன், வாங்க சாப்பிடலாம்" என்றான்.

"இல்ல தர்ஷிய காணோம் அவ வரட்டும்" என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

"அவங்க ஃப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டு இருப்பாங்க போல, அப்புறம் நவீன் என்ன பண்ணிட்டு இருக்கீங்க??" என்று பேசிக்கொண்டே வேறு பக்கம் அழைத்துச் சென்றான் சுகந்த்.

"அண்ணா இவளுக்கு என்னாச்சு?" என்று பதறியபடி பக்கத்தில் வந்தாள் சுதா. விஜய் சுதாவின் அண்ணா என்ற அழைப்பில் அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

"சுதா இவள பாத்துக்கோ நா இந்த ஸ்டோன் பெஞ்சுல படுக்க வைக்கிறேன்" என்று துருவா தூக்கி படுக்க வைத்தான்.

"டேய்!! அவ " என்று விஜய் ஆரம்பிக்கும்போதே,

"வாய மூடு, சுதா பார்த்துக்கோ" என்று ஆதுவின் தலை முடியை கோதி அவள் நெற்றியில் இதழ் பதிட்டுவிட்டு,"வாடா" என்று கோவமாக வீட்டிற்கு பின்னால் சென்றான் துருவா.விஜய் சுதாவை ஒர் பார்வை பார்த்துவிட்டு பின்னால் சென்றான்.

"ம்ம்... இப்ப சொல்லு" என்றான் துருவா நக்கலாக பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு நின்று.

"நீ எப்ப பாரின்ல இருந்து இங்க வந்த??", என்றான் விஜய் அதிர்ச்சியும் ஆத்திரமுமாக.

"நா எங்க இருந்தா உனக்கு என்ன? ஆமா நீ யாரு எனக்கு? நா எங்க போறது வரது சொல்றதுக்கு, அப்புறம் உன் அப்பே! எப்படி இருக்கான்??" என்றான் நக்கலாக.

"டேய்!! மரியாதையா பேசு அவரு உனக்கும் அப்பா தான்" என்று ஆத்திரத்தில் கத்தினான்.

துருவா சத்தமாக வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். விஜய் அவன் சிரிப்பதை ஆத்திரமாக பார்த்தான்." நல்லா காமெடி அடிக்கிறியே!! டா பேசாம சினிமால காமெடி ரோல் பண்ணு உனக்கு நல்லா சுட்டாகும்" என்றான் கோபமான பார்வையுடன்.

"நீ இப்படி இருக்கனால தான் அப்பா எப்போதுமே எங்க கூடவே!! இருக்காரு" என்றான் நக்கலாக.

"அப்படிப்பட்ட பச்சோந்தி எங்களுக்கு தேவையே!! இல்ல நீ உன் அப்பன் எக்கலாமோ!! போங்க அத பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல ஆனா என் ஆது கிட்ட மட்டும் நெருங்குன உயிரோட விடமாட்டேன்" என்றான் அழுத்தமாக.

"டேய்!! அவ உன் ஆது இல்ல என் ஆது அவ என் லவ்வர் அவள நா நெருங்காம, யாரு டா நெருங்குவா?" என்றான் நக்கலாக.

"இன்னொரு தடவை உன் ஆதுன்னு சொன்ன மண்ணுல புதைச்சுருவேன்,உன் குடும்பத்துக்கு நடுவுல்ல வரது தான் பொழப்பா டா?? முதல்ல உன் அம்மா இப்ப நீ, நீ பண்ற எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா?? நீ இப்ப வேல பார்க்குறியே அதுவே! என் கம்பெனி தான், சரி போனாப் போகுது விட்டு வச்சா என் அடிமடியிலயே! கை வைக்கிறியா??" என்றான் ஆத்திரமாக கண்கள் சிவக்க.

"ஆமாடா அவ உனக்கு எவ்ளோ! முக்கியம்னு எனக்கு நல்லாவே! தெரியும், உன்ன பழிவாங்க தான் இப்படி பண்றேன், உன்னால முடிஞ்சா என் ஆது என் ஆதுன்னு சொல்றீயே! அந்த ஆதுவ என்கிட்ட இருந்து பிரிச்சி காட்டுடா" என்றான் சவாலாக.

"என்கிட்டயே சவால அவள எப்படி என் ஆதுவா மாத்தணும்னு எனக்கு நல்லாவே தெரியும், காலைல ஆபிஸ் வந்தியே!! அதுக்கு அப்புறம் உன் போன்ன பத்திரமா வைக்க மாட்டா? உன் போன் ஈவ்னிங் நாளு மணி வரைக்கும் என் கிட்ட தான் இருந்தது, ஹ்ம்ம்.. இப்ப முதல் வேலையா உன் போன் எங்கானு பாருடா" என்றான் நக்கலாக. விஜய் அப்போதுதான் தன் போனை வேகமாக தேடினான்." ஒரு போன் கூட பத்தரமா வச்சுக்க தெரியல இதுல நீ எனக்கு சவால் விடுற " என்று நக்கலாக போனை தூக்கி போட்டான்.

அதை வேகமாக பிடித்து," இப்ப அவ மனசுல நா தான் இருக்கேன் அத மறந்துட்டீங்களே! மிஸ்டர் துருவேந்திரன்" என்றான் இவனும் அதே நக்கலுடன்.

"இதெல்லாம் எனக்கு தூசி மாதிரி டா அவ ஆள் மனசுல இருக்குறது நா ஒருத்தேன் மட்டும் தான், இவ்ளோ! நாள் நீ கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுன இனிமே! இந்த துருவா ஓட ஆட்டத்த பார்ப்ப, பார்க்க வைக்கிறேன்" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு சென்றான்.

விஜய் ஆத்திரமாக அவன் போவதை பார்த்துக் கொண்டு நின்றான். 'இவனுக்கு இந்த விஷயம் எப்படி தெரிஞ்சது?? ஆது எனக்கு மட்டும் தான் அதற்கான திட்டத்தை நாம போடணும்' என்று விஜய் யோசித்தபடி வீட்டிற்கு கிளம்பினான்.

"தர்ஷி... தர்ஷி..", என்று கன்னத்தை தட்டினாள் சுதா.

"ஹேய்!! சுதா எனக்கு என்னாச்சு?? இங்க விஜய் மாதிரியே! ரெண்டு பேர் இருந்தாங்க" என்று ஆது வேகமாக எழுந்து சுற்று முற்றும் பார்த்தாள்.

"ஹேய்!! உனக்கு என்னாச்சுடி?? என்ன உலருர??".

"இல்லடி விஜய் மாதிரியே!! இன்னொரு தர நா பார்த்தேன்" .

"என்னடி கனவு காண்றீயா?? நீயே இங்க மயங்கி கிடந்த, நீ முதல்ல சாப்பிடு அதனாலதான் மயக்கம் வந்திருக்கும்".

"இல்ல சுதா நா நிஜமா தான் சொல்றேன் இங்க தான் பார்த்தேன், என் போன்ல கூட மெசேஜ் வந்தது" என்று வேகமாக எடுத்து பார்த்தாள். அவள் போனில் எந்த மெசேஜும் இல்லை. குழப்பமாக சுதாவை பார்த்தாள்.

'நல்ல வேல துருவா அண்ணா முன்னாடியே!! போன்ல இருந்த மெசேஜ் அந்த குரங்கு நம்பர பிளாக் பண்ணி கிளியர் பண்ண சொன்னாங்க, இவ எழுந்ததும் அத தான் பாக்குறா ' என்று மனதில் நினைத்துக்கொண்டு,"உன்ன நவீன் தேடுறான் டி, விஜய் வந்தாரு எப்பவோ!! போயிட்டாரு நீ ஏதோ! குழப்பத்துல இருக்கேன்னு நினைக்கிறேன், உனக்கு என்னாச்சு?? மெசேஜ் அது இதுன்னு உலருர", என்றாள் பொய்யான குழப்பத்துடன்.

"ஒன்னும் இல்லடி நவி தேடுனானா?? வா போலாம்" என்று யோசனையுடன் சென்றாள்.

இவை அனைத்தையும் பார்த்த துருவா மரத்திற்கு பின்னால் இருந்து வெளியே வந்து அவள் போவதை பார்த்தான்.'சாரி ஆது மா உன்ன குழப்பனும்னு இத பண்ணல, உன்ன இன்னைக்கு ஆபிஸ்ல நெருக்கமா பார்த்ததுமே முடிவு பண்ணிட்டேன் லவ்வ சொல்லனும்னு இந்த விஜய் நாய் உன்கிட்ட மெசேஜ்ல தொல்லை பண்ணாம இருந்திருந்தா எல்லாமே நல்லபடியா நடந்திருக்கும், உனக்காக நீ வேலைக்கு சேர்ந்த கம்பெனிய வாங்கினேன், உனக்காக என்ன வேணாலும் பண்ணுவேன் ஆனா உன்ன மட்டும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் டி, வரதுதான் வர தனியா வந்திருக்க கூடாது, இந்த நவீன வேற கூட இழுத்துட்டு வந்து இருக்க, இவன்தான் சின்ன வயசுல இருந்தே எனக்கு இம்ச கொடுக்கவே! ஊர்ல இருந்து வருவான் இப்ப எதுக்கு வந்தானோ!' என்று மனதிலே புலம்பினான்.

"டேய்!! என்னடா இங்க நிக்கிற அந்த நாதாரி என்ன சொன்னான்??" என்றான் சுகந்த்.

"எல்லாம் தெரிஞ்சு தான் பண்றான், ஆதுவ கஷ்டப்பட்டுட்ட பார்க்குறான் நா சும்மா விடமாட்டேன்" என்றான் ஆத்திரமாக.

"சரிடா டென்ஷனாகாத அங்க வந்து பாரு உன் ஆதுவோட அத்த பெத்த ரத்தினம் பண்ணுற வேலைய" என்றான் சிரிப்புடன்.

"ஆளாளுக்கு ஏன்டா என் ஆதுவ இம்சை பண்ணுறீங்க??" என்று புலம்பினான்.

"அங்க வந்து பாருடா சுதாவுக்கும் அவனுக்கும் அங்க ஒரு போர்க்களமே! நடக்குது வா" என்று இழுத்து சென்றான். இருவரும் மறைந்து நின்று பார்த்தனர்.

"தர்ஷி இவ்ளோ!! நேரம் எங்க போன?? என்னைய தனியா இந்த பிசாசு கிட்ட விட்டுட்டு போயிட்டா" என்றான் நவீன் சுதாவைப் பார்த்து.

"போடா ரத்த காட்டேரி".

"போடி மோகினி பிசாசு".

"போடா கொள்ளிவாய்ப் பிசாசு" என்று இருவரும் மாறி மாறி சண்டை போட்டனர்.

"ஹேய்! ரெண்டு பேரும் வாய மூடுங்க ஏற்கனவே!! தலை வலிக்குது இதுல நீங்க வேற கத்திகிட்டே இருக்கீங்க" என்றாள் ஆது கோபமாக.

"இவன் தான்டி" என்றாள் சுதா வேகமாக.

"இவதான்" என்று மீண்டும் மாற்றி மாற்றி சண்டை போட்டனர்.

"போதும்.. போதும்.." என்று கோவமாக கத்தினாள்.

"மூணு பேரும் சாப்பிடாம ஏன் இங்க நிக்கிறீங்க? வாங்க சாப்பிடுங்க" என்று சுகந்த் அழைத்து சென்றான்.

சாப்பிட்டு முடித்ததும். "பாய் சுதா பாய் அண்ணா" என்று தர்ஷினி விடைபெறும்போது,

"பப்பு.. பப்பு.. ஓடாத" என்று ஓர் பெண் மூன்று வயது பையனை பிடிக்க ஓடி வந்தாள்.

ஆது வேகமாக திரும்பி பார்த்தாள்."இப்படிய பப்பு ஓடுவ" என்று அந்த பையனை தூக்கினாள் அவன் தாய்.

"இவங்க எங்க வீட்ல வேலை பார்க்கிறாங்க டி அவன் அவங்க பையன்" என்று சுதா அறிமுகம் செய்தாள். அந்த பெண் சிரித்தாள்.

"பப்பு இங்க வாங்க " என்று ஆது குழந்தையை கை நீட்டினாள். குழந்தை சிரிப்புடன் அவளிடம் தாவியது. குழந்தையின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு கலங்கிய கண்களுடன் அந்த பெண்ணிடம் கொடுத்தாள். குழந்தையை வாங்கிக்கொண்டு அவள் உள்ளே! சென்றாள்.

"தர்ஷி" என்றான் நவீன் அவள் தோளில் கை வைத்து.

கலங்கிய கண்களை யாரும் அறியாமல் துடைத்தவள்."நாங்க வரோம்" என்று பொதுவாக சொல்லிவிட்டு காரில் ஏறினாள். நவீன் தலையை அசைத்தபடி சென்றான்.

துருவா இவை அனைத்தையும் பார்த்ததும்,'உன் ஆள் மனசுல நா மட்டும் தான்டி இருக்கேன் அந்த இடம் எனக்கு மட்டும்தான்' என்று சிரிப்புடன் மனதில் நினைத்துக் கொண்டு வெளியே வந்து சுதா மற்றும் சுகந்திடம் விடைபெற்றுச் சென்றான்.

தர்ஷினி வீட்டிற்கு வந்ததும் தலைவலி என்று ரூமிற்கு சென்று படுத்தாள்.'பப்பு நீ இறந்துட்டானு சொன்னத இன்னவரைக்கும் என்னால நம்ப முடியால டா, இன்னைக்கு வந்த அந்த அன்னோன் நம்பர் மெஸேஜ் கூட நீ பேசுற மாதிரி இருக்கு டா, இன்னைக்கு உன் நியபகம் ரொம்ப வருது டா, ஏன் பப்பு என்னைய விட்டுட்டு போனா?', என பேட்டில் படுத்து அழுதாள்.

துருவா வீட்டிற்கு வந்ததும் பழைய நினைவுகளில் மூழ்கினான்.

ராஜேந்திரன் மற்றும் கல்யாணி தம்பதியினரின் ஓரே மகன் துருவேந்திரன். கல்யாணி மும்பையில் ராஜா வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ண பூபதியின் ஒரே மகள். தன் அப்பாவின் பி.ஏவாக வேலை பார்த்த ராஜேந்திரனை ஓடி வந்து காதல் திருமணம் செய்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார். ராஜேந்திரன் பணத்திற்காக மட்டுமே! கல்யாணியை காதலிப்பது போல் நடித்தார். திருணம் முடிந்தது ஒரு வருத்திலே ராஜேந்திரன் கிருஷ்ணனை பார்க்க போக வற்புறுத்தினார் கல்யாணி முடியாது.என் அப்பா என்னைய பார்க்க அவராக வருவார் என மறுத்துவிட்டார். அதன் பிறகு ராஜேந்திரன் வெளியூர் சென்று வேலை பார்க்கிறேன் என்று விட்டிற்கு மாதம் ஒரு முறை மட்டுமே துருவாவை பார்க்க வருவார்.

ஆதுவிற்கும் துருவிற்கும் என்ன சம்பந்தம்??? விஜய் எதற்காக துருவாவை பழிவாங்க நினைக்கிறான்??????

**************
எழுத்தாளர்: ரம்யா அனாமிகா

ஐ டி: Ramya_Anamika

***************

Intha writer epi pidicha kandipa avangalai follow pannunga. Avangaloda other stories a padinga readers.

Each Relay writersai follow pannunga and read their other stories also.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro