16

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இன்று ....

பல வருடங்கள் கழித்து சஞ்ஜீவின் கண்கள் உறக்கத்தை தழுவியிருக்க காலையில் ஏதோ உருளும் சத்தத்தில் தான் கண் விழித்தான் . மணியோ காலை ஆறு என்று காட்ட படுக்கையில் தனதருகில் மனைவியின் முகம் காண ஆவலுடன் நோக்கியவனிற்கோ வாயை சற்று பிளந்தபடி உறங்கும் மகளே கண்ணில் விழுந்தாள் . அவளின் பிளந்த வாயை கண்டு சிரித்தவன் " அப்டியே அவங்க அம்மா மாறி " என்று கூறியபடி அவள் உறக்கம் கலையாமல் கன்னத்தில் முத்தம் பதித்தவன் காலை கடன்களை முடித்துவிட்டு மனைவியை தேடி செல்ல அவளோ பரபரப்பாக இரவு உடையுடன் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தாள் .

அவளை கண்டு புன்னகைத்த சஞ்சீவ் "குட் மார்னிங் " எங்க அவளோ சட்டென்று கேட்ட குரலில் பதறி நெஞ்சில் காய் வைத்தவள் அவனை கண்ட பின்னே சற்று ஆசுவாசமாகி குட் மோர்னிங் என்று சிறிய குரலில் கூறியவள் மீண்டும் அடுப்பின் பக்கம் திரும்பி விட்டாள் .

சஞ்சீவ் அவள் பரபரப்பாய் வேலை செய்வதை பார்த்தவன் அவளிடம் பேசுவதற்கு அவகாசம் பார்த்து காத்திருக்க அவளோ அவனிற்கு ஒரு கோப்பையில் குழம்பிய ஊற்றி அவன் முன் வைத்து விட்டு மீண்டும் வேலை பார்க்க துவங்கி விட்டாள் .

அவளிடம் பேச சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவன் அவள் குளம்பியை வைத்து விட்டு வேலை பார்க்க துவங்கவும் " இன்னைக்கு காலேஜ் போகணுமா ?" என்று கேட்க

அவளோ அவனை திரும்பி பார்த்தவள் " ஆமா பரிட்சை நடந்துட்டருக்கு " என்று கூற

அவனோ அவளின் கட்டுத்தறித்த பேச்சில் அடுத்து எப்படி துவங்குவது என்று தெரியாமல் திண்டாடினான் " எப்போ வருவ ?"

அதுல்யா " 5 மணி ஆகும் ."

சஞ்சீவ் " ஓஒ ஷிவுவ நான் ஸ்கூல் கூட்டிட்டு போகவா ?" என்று கேட்க

அவளோ அவனை திரும்பி பார்த்தவள் " அவளுக்கு லீவு விட்டு நாலு நாள் ஆகுது அடுத்த மாசம் தான் ஆரம்பிக்கும் " என்று கூறிவிட்டு பாத்திரங்களை ஒதுக்கியவள் அவன் அவற்றை கழுவ செல்வதை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு " பாத்திரம் கழுவ ஆள் வருவாங்க ஏதும் செய்ய வேண்டாம் . " என்றவள் " மறுபடி எப்போ வேதாளம் முருங்கைமரம் ஏறுமோ " என்று முணுமுணுத்தபடி அவனை தாண்டி செல்ல அவனோ இதற்கே முழி பிதுங்கி நின்றான் .

ஒரு முறை கூட அவளின் பார்வை அவனை தீண்டவே இல்லை . பெருமூச்சு விட்டபடி அறைக்குள் சென்றவன் அவள் இன்று உடுத்தவிருக்கும் புடவையை எடுத்தபடி குளியலறைக்குள் செல்ல அவனோ அவளின் அலமாரியில் இருந்த உடைகளை ஆராய்ந்தான் . கல்லூரிக்கு பேராசிரியராக ஆனதால் பலதும் புடவைகளாக தான் வைத்திருந்தாள். ஒரு சின்ன சிரிப்புடன் அதை நோக்கியாவின் கண்ணில் பட்டது ஒரு சிகப்பு நிற புடவை . அதை புருவம் சுருக்கியபடி எடுத்தவன் கைகளால் வருட அதுவோ அவனின் நினைவுகளை பின்னோக்கி இழுத்து சென்றது .

அன்று......

அதுல்யா கல்லூரி முடிந்து தோழிகளுடன் பேசியபடி வெளியே நடந்து வந்து கொண்டிருக்க அவளின் அலைபேசி சிணுங்கியது . அதை எடுத்து பார்த்தவள் ஜீவா என்ற பெயர் ஒளிர கண்கள் மின்ன அதை காதில் வைத்தவள் " என்னாச்சு ஜீவா ? ஊருக்கு வந்துடீங்களா ? என்ன நடந்துச்சு ?" என்று வரிசையாக கேள்விகளால் துளைக்க

அவனோ " ஹே.. பொறுமையா பேசு ... இப்போ உன் காலேஜ் வாசல்ல தான் இருக்கேன் உன்னால வர முடியுமா ? " என்று கேட்க அவளோ அவனின் குரல் இயல்பானதிலேயே பிரெச்சனை முடிந்ததை உணர்ந்தவள் நிம்மதி பெருமூச்சுடன் தோழிகளிடம் பையை விடுதியில் வைக்க கூறியவள் அவர்களின் கேலிப்பார்வையை பொருட்படுத்தாமல் வெளியில் வந்தாள் .

சஞ்ஜீவ் அவனது இருசக்கர வாகனத்தில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான் . அதுல்ய புன்னகையுடன் அவனை நோக்கி வர அவனோ அவளை கண்டு புன்னகைத்தவன் " வெளிய போகலாமா ? " என்று கேட்க

அவளோ மேலே வானத்தை பார்த்தவள் " மழை ஏதும் வரலையே " என்று கேலி செய்ய

அவனோ அவளை செல்லமாய் முறைத்தவன் " ஏறு " என்று முறைப்புடன் கூற அவளோ சிரித்தபடி அவன் பின் ஏறிக்கொண்டாள் .

அதுல்யா " என்னாச்சு சஞ்ஜீவ் அவங்க வீட்ல என்ன சொன்னாங்க ?" என்று கேட்க சஞ்ஜீவிற்கோ அன்றைய தினம் கண்ணில் விரிந்தது .

அடுத்த நாள் காலை சற்று பரபரப்புடன் தான் விடிந்தது சஞ்ஜீவிற்கும் அவனின் குடும்பத்தினருக்கும் . மகள் செய்து வைத்த காரியத்தில் இருந்து இன்னுமே அவனின் பெற்றோரால் மீண்டு வர முடியவில்லை . அவமானத்தை சந்திக்க வேண்டும் என்று தெரிந்தே தயாராகி சென்றனர் சுபத்ராவை தனித்து விட்டு கார்த்திக்கின் இல்லம் நோக்கி .

அங்கே கார்த்திக்கின் வீட்டிலும் நிலைமை சற்று கவலைக்கிடமானதாக தான் இருந்தது . அவனின் அன்னைக்கோ தனது மகன் இப்படி செய்ததை ஜீரணிக்கவே முடியவில்லை . அவனை வைத்து பல மனக்கோட்டைகள் கட்டி வைத்தவரால் வேறேதும் கூற முடியவில்லை .

சஞ்சீவ் அவனது பெற்றோருடன் வரவேற்பு அறைக்குள் நுழைய அங்கே கார்த்திக்கின் அன்னையும் தந்தையும் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தனர் . கார்த்திக்கின் கன்னமோ கை ரேகை பதிந்து வீங்கி இருந்தது . இரு வீடு பெற்றோரும் ஒருவரை ஒருவர் எவ்வாறு எதிர்கொள்வதென்று தெரியாமல் சற்று நேரம் மெளனமாக இருக்க சஞ்ஜீவும் அமைதி காத்த படி கார்த்திக்கின் அருகில் சென்று நின்று கொண்டான் .

கார்த்திக்கின் தந்தையே பேச்சை தொடங்கினார் " விஷயம் கேள்வி பட்டோம் ... பையன பெத்த எங்களுக்கே அவ்வளவு ஆதங்கம் இருக்கு அப்போ உங்க நெலமை புரியுது.....சீக்கிரமே கல்யாண தேதியை வச்சுறலாம் " என்று கூற

சுபத்ராவின் தந்தையோ " எங்க பொண்ணு இப்டி பண்ணுவான்னு நாங்க நெனச்சு கூட பாக்கல . நீங்க எப்போ வைக்கலாம்னு சொன்னாலும் எங்களுக்கு சரி தான் " என்று கூற

கார்த்திக்கின் அன்னையோ " நல்லவிதமா வளர்த்திருந்தா நல்ல விதமா இருந்துருப்பா . என் பையனுக்கு எப்படி எல்லாம் பொண்ணு பாக்கணும்னு நெனச்சேன் கடைசில இப்பிடி ஒண்ணுமில்லாத குடும்பத்துல கல்யாணம் பண்ற மாறி வச்சுட்டானே இவன் " என்று பேச சஞ்ஜீவிற்கு ஆத்திரம் வந்தாலும் தங்கை செய்து வைத்த காரியத்தின் பலனாய் அவன் பொறுமையை கடைபிடிக்க கார்த்திக்கின் தந்தையோ சுபத்ராவின் பெற்றோரின் இறுகிய முகத்தை பார்த்து வருந்தி அவரின் மனைவியை முறைக்க அவர் தனது முகத்தை திரும்பியபடி அமர்ந்து கொண்டார் .

கார்த்திக்கின் தந்தை " அவ பேசுனதை ஏதும் நெனச்சுக்காதீங்க .... சொந்தக்காரங்க மத்தில விஷயம் தெரிய வேண்டாம் கோவில்ல கல்யாணத்த வச்சுட்டு பையனுக்கு தோஷம்னு சொல்லிக்கலாம் " என்று கூற சஞ்ஜீவின் தந்தை தலை ஆட்டும் முன்

சஞ்ஜீவ்" அங்கிள் ஒரு நிமிஷம் தப்பா நெனச்சுக்காதீங்க . நான் சுபத்ரவோட அண்ணன்...... நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு நகை போட்டு என் தங்கச்சி கல்யாணத்த நா மண்டபத்துலயே நடத்தி தரேன் " என்று கூற கார்த்திக்கின் தந்தையோ அவனை குழப்பத்துடன் பார்த்தவர் " அது... ஏன்பா அதெல்லாம் வேண்டாம்.. " என்று கூற

சஞ்ஜீவ் " என்னால பண்ண முடியும் அங்கிள் ... ஒரு சின்ன request என் தங்கச்சி பண்ணது தப்பு தான் ஆனா ப்ளீஸ் அதை சொல்லி காட்டாதீங்க அவ தாங்க மாட்டா " என்று கூற கார்த்திக்கின் தந்தையோ அவனை ஒரு வித பிரம்மிப்புடன் பார்த்தார் .

இவர்கள் பேசி அப்பொழுதே ஒரு தேதியை குறிக்க அதுவோ இன்னும் 20

தினங்களில் இருந்தது . சஞ்ஜீவ் அவனின் நண்பனின் தந்தையை சந்தித்து கடனை வாங்கிக்கொண்டு பர்சனல் லோனும் விண்ணப்பித்து விட அது அடுத்த 10 நாட்களில் கிடைத்து விடும் . இவை அனைத்தையும் அவளிடம் கூறி முடிக்க அவளிற்கோ சுபத்ராவின் மீது தன்னால் கோபம் எழுந்தது . அவளால் அல்லவா இவனிற்கு இத்தனை சிரமங்கள் . அதை மறைத்தவள் அவன் கூறுவதை கேட்டுக்கொண்டு "எப்டியோ எல்லாம் நல்லபடியா முடுஞ்சுச்சு . சரி இப்போ எங்க சார் போறோம் ?" என்று கேட்க

அவனோ அவளை கண்ணாடியின் வழியே பார்த்தவன் " ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சு அதான் சும்மா வெளிய போகலாம்னு கூப்பிட்டேன் " என்று கூற

அவளோ " சரி எங்க போகணுமோ போங்க " என்று கூற

அவனோ அங்கிருந்து 11 கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலிற்கு அழைத்து சென்றான். கோவிலை கண்டு சலித்தவள் அவனின் கடவுள் நம்பிக்கை அறிந்தமையால் அவனுடன் இணைந்து உள்ளே சென்றாள்.

அந்தி சாய்ந்த நேரமாதலால் அங்கே அத்தனை அரவம் இல்லை . அவளை அழைத்துக்கொண்டு தரிசனம் செய்துவிட்டு அமர்ந்தவன் அவளது நெற்றியில் எதுவும் இல்லாததை கண்டு சிறியதாய் குங்குமம் வைத்து விட அவளோ சிரித்தபடி அவனை நோக்கினாள் . சிறிது நேரம் அங்கு அமர அவனோ அவளை நோக்கி திரும்பியவன் " உனக்கு நா abroad போறது ஏதும் பிரெச்சனை இல்லையே அம்மு ?" என்று கேட்க அவளோ அவனின் கேள்வியில் அவனை அதிர்ந்து நோக்கினாள் .

அவளின் பார்வையை உணர்ந்தவன் " அன்னைக்கே உன்னோட வாய்ஸ் down ஆயிருச்சு ... வந்து கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன் .... உனக்கு.... " என்று கேட்க

அவளோ ஒரு பெருமூச்சை விட்டவள் " கஷ்டமா இருக்கு ... நாம லவ் பண்ண ஆரம்பிச்சு ஆறு மாசம் கூட முடியல நம்மளுக்குள்ளேயே இப்போ தான் ஒரு புரிதல் வந்துட்டு இருக்கு .... அவ்ளோ தூரம் .... timezone issues ... communication நிறைய இருக்கு .... ஆனா இப்போ வேற வழியும் இல்லையே ...." என்று கூற

அவனோ அவளின் இந்த புரிதலில் மனம் நிறைய புன்னகைத்தவன் அவளின் கையை பற்றி " எவ்ளோ தூரம் போனாலும் .... நமக்குள்ள எந்த இடைவெளியும் வராம பாத்துக்குறேன் ..... ஐ ப்ரோமிஸ் திஸ் டு யு " என்று கூற ஆலய மணி அழகாய் ஒலித்தது .

அவளை அவ வெளியே அழைத்து வர அங்கே பூ விற்கும் பெண்மணியோ பூ வாங்கிக்கொள்ள கூற அவளோ அவனை பார்க்க அவனோ அவளை கண்டுகொள்ளாமல் " அதெல்லாம் வேண்டாம் பாட்டி" என்ற படி நடக்க துவங்க

அந்த பாட்டியோ " கூட வந்த பொண்ணுக்கு வாங்கி குடுப்பா என்ன புள்ளயோ " என்று கூற அவனோ அவளை அப்பொழுது தான் கண்டான் அவள் அவனை முறைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள் .

அவள் முறைப்பை கண்டு குழம்பியவன் அந்த பாட்டியிடம் பூவை வாங்கி கொடுக்க அவளோ அவனிடமிருந்து வெடுக்கென்று அதை வாங்கியவள் " எல்லாத்தையும் சொல்லித்தரணும் மாங்கா மாங்கா " என்று திட்ட அது அவன் காதில் தெளிவாக விழுந்தது .

சஞ்ஜீவ் " ஏய்ய் எனக்கு என்ன முன்ன பின்ன தெரியுமா ? " என்று கேட்க

அவளோ " தெரிஞ்சுட்டா மட்டும் வாங்கி குடுத்துருவ போயா " என்று கூறி அமர்ந்து கொண்டாள் . அவனோ அவளை கண்ணாடியில் கண்டவன் அவள் சுருங்கிய முகத்தை கண்டு சிரித்தபடி விடுதியின் வாசலில் வந்து நிறுத்த அவளோ "பை " என்று கை அசைத்து விடுதி நோக்கி நடக்க துவங்கி விட்டாள் .

அவள் செல்வதை கண்டு " அம்மு " என்று அழைத்த சஞ்ஜீவ் அவளை கூப்பிட அவள் குழம்பிய முகத்துடன் அவன் அருகில் வந்து நின்றாள் .

சஞ்ஜீவ் வண்டியின் பெட்டியில் இருந்த ஒரு புடவையை எடுத்தவன் அவள் கையில் கொடுக்க அவளோ அவனை விரிந்த கண்களுடன் நோக்கினாள் .

அதுல்யா "என்ன இது ????? புதுசா... " என்று கேட்க

அவனோ " வேலை கிடைத்ததற்கு ஒரு சின்ன gift ... உனக்கு பிடிக்கலையா ? " என்று கேட்க

அவளோ அவன் முதல் முதலில் வாங்கி தந்த பரிசான அந்த சிவப்பு நிற புடவையை கண்கள் மின்ன வருடியவள் "ரொம்ப புடிச்சிருக்கு .... culturalsku கட்டிக்கிறேன்" என்று கூறி தேங்க்ஸ் என்று அவன் முகம் பார்த்து சிரிக்க அவளின் சிரிப்பில் நிறைவை உணர்ந்தவன் தலை அசைத்து கிளம்ப இன்று அவனிற்கு அந்த புடவையை கண்டதும் அந்த இனிய நினைவுகளின் தாக்கம் புன்னகையை தோற்றுவித்தது .

குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு சஞ்ஜீவ் திரும்ப அங்கே அவனின் மனைவி நேர்த்தியாக உடுத்திய புடவையுடன் கண்ணாடியின் முன் அமர்ந்து தலை சீவிக்கொண்டிருந்தாள். அவன் பார்வையும் அவளின் பார்வையும் கண்ணாடியில் கவ்வி நிற்க அவனோ " இந்த புடவை இப்பவும் கட்டுறியா? நிறைய வருஷம் ஆய்ருச்சுச்சுல அப்போ இருந்த மாதிரியே வச்சுருக்க" என்று இயல்பாய் கேட்க

அவளோ " ஆமா எனக்கு உங்கள மாதிரி புதுசுல ஒரு மாதிரி பழசானதுக்கு அப்புறம் ஒரு மாதிரி வைக்க தெரியாது "என்று கூற அவனின் முகமோ சடுதியில் இறுகி கருத்து விட்டது . அவனின் முகத்தை பார்த்த பின்னே தான் உதிர்த்த வார்த்தையை உணர்ந்தவள் அவனை தவிப்புடன் ஏறிட்டு நோக்க அவனோ கண்ணைக்கசக்கியபடி எழுந்து அமர்ந்த மகளை தூக்கியபடி வெளியில் சென்றுவிட்டான் . வெளியில் செல்லும் முன் அவன் அவளை பார்த்த பார்வையில் தான் எத்தனை யாசகம் .... அவன் வெளியில் சென்றும் அதே நிலையில் இருந்தவளோ கண்ணில் கண்ணீர் துளிர்க்க கை முஷ்டிகளை இறுக்கியபடி அமர்ந்துவிட்டாள். 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro