4

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

என்ன தான் அவனிடம் தைரியமாக பேசி விட்டு வந்தாலும் அவளது மனதென்னவோ படபடப்பாக தான் இருந்தது . தனது பணிநேர அட்டவணையை எடுத்தவள் அதற்கடுத்து தன்னால் பாடம் எடுக்க முடியும் என்று தோன்றாததால் HOD அறையின் முன்பு சென்று நின்றவள் அரை நாள் விடுப்புக்காக நின்றாள் . அவளை நிமிர்ந்து பார்த்தவருக்கு அவளது சோர்ந்த முகம் சற்று யோசனையை கொடுக்க விடுப்பிற்கு அனுமதி கொடுத்தவர் அவள் கதவை திறக்கும் முன் ஒரு முறை அழைத்தார் . " அதுல்யா"

அதுல்யா அவரை கேள்வியாய் பார்க்க அவரோ "get back soon as my favourite student அதுல்யா " என்று கூற அவளோ இதழ் பிரியாத ஒரு புன்னகையை அவரிடம் செலுத்தியவள் அவ்விடம் விட்டு அகன்றாள் . செல்லும் அவளின் பக்கவாட்டு தோற்றத்தை பார்த்தவரோ ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டார் கல்லூரி காலத்தில் சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாய் குழந்தைத்தனத்துடனும் முகத்தில் என்றும் உறைந்த புன்னகையுடனும் வளம் வந்தவளின் இந்த இறுகிய தோற்றம் அவருக்கே மனதை பிசைந்தது .

தனது இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்த அதுல்யா வீடு வந்து சேர்ந்தவள் அப்படியே தனது மெத்தையில் விழுந்தாள் . மேலே சுழலும் காற்றாடியை கண் சிமிட்டாமல் பார்த்தவள் கண்களில் எதிரில் இருந்த அலமாரியின் மேல் இருந்த ஒரு ஆல்பம் கண்ணை உறுத்தியது . பல வருடங்களாக தனது வாசஸ்தலத்தை அந்த அலமாரியின் மேல் மாற்றிக்கொண்ட அந்த ஆல்பத்தை கண் சிமிட்டாமல் பார்த்தவள் மெல்ல எழுந்து அந்த அலமாரியின் அருகில் சென்றாள் .

ஒரு முக்காலியை எடுத்து போட்டவள் அதன் மேல் ஏறினாள் .

அதை எடுத்து தூசிதட்டியவள் தனது படுக்கையில் வந்து அமர்ந்தவள் அதன் முகப்பு பக்கத்தை வருடி அடுத்து அதில் இருந்த பக்கத்தை புரட்டினாள்.அதில் அவள் அவளின் தமக்கையோடும் தந்தை தாயோடும் சிரித்தபடி நின்றிருந்தாள். அவளது அலை அலையான கேசம் என்னவோ தோள் வரை தான் புரண்டிருந்தது. முகத்தில் கள்ளம் கபடமில்லாத மந்தகாசமான புன்னகையுடன் கண்களில் குழந்தைத்தனம் வழிய நின்றிருந்தாள்.

அதில் இருந்த தன்னை பார்த்தவளிற்கு அப்பொழுது இருந்த அதுல்யாவிற்கும் இப்பொழுது இருக்கும் அதுல்யாவிற்கும் எத்தனை வித்யாசம் என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்பொழுது தான் அவள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்த சமயம் . அவளது வீடோ நடுத்தர வர்கத்திலிருந்து பணக்கார வர்கத்தை தொட்டுவிட ஒரு நூல் இழை இடைவெளியில் இருப்பவர்கள் . அவள் தாயும் தந்தையும் வெல்லூரில் ஒரு பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டார் வைத்து அதை சிறிது சிறிதாக விரிவாக்கி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸாக மாற்றி இருந்தனர் .

இருவரும் வியாபாரம் வியாபாரம் என்று ஓடினாலும் மகள்கள் விஷயத்தில் எந்த குறையும் வைத்ததில்லை பணம் செலவழிப்பதில் நேரம் செல்வழிப்பதிலும் செல்லம் கொடுப்பதிலும்.இதுவரை கேட்டது கிடைக்காமல் இருந்ததும் இல்லை அவளை அவளது தந்தை கால் நோக நடக்க விட்டதும் இல்லை . அடுத்த தெருவிற்கு செல்வதாய் இருந்தாலும் காரில் தான் அழைத்து செல்வார் .

அவளது தமக்கை மும்பையில் பேஷன் டிசைனிங் படிக்க அவளது தந்தை தாய் இருவரும் காலையில் ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் சென்றால் இரவு 8 மணிக்கு தான் திரும்பினர். பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிந்து ஒரு 10 நாட்கள் பொறுத்து பார்த்தவள் அதன் பின் தனிமை தாளாமல் சென்னையில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் சேர்ந்து சில softwaregalai கற்க போவதாக கூறினாள். மகளை தரையிலேயே இறக்கி விடாத அவளின் தந்தை மிகுந்த எதிர்ப்பை தெரிவிக்க அவளோ சென்றே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து சென்னை வந்து இறங்கினாள் .

அங்கே அவரின் தங்கையின் வீட்டில் பார்த்து தங்க வைத்தவர் காலை 10 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை இருக்கும் பைதான் மற்றும் ஜாவா வகுப்பில் சேர்த்து விட்டார் . அங்கே சுற்றி முற்றி பார்க்க அவளோடு சேர்ந்து ஒரு 10 பேர் இருப்பார்கள் . அதில் ஒருத்தி மட்டும் அவளின் வயதில் இருந்தாள். தயங்கி நின்றிருந்தவளை நோக்கி கை அசைத்தவள் அவளை தனது இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அமர வைத்தாள். அவர்களுக்கு தினம் 1.5 மணி நேரம் தியரி வகுப்பும் அதன் பின் practical வகுப்பும் நடக்கும் .

அந்த பெண்ணிடம் திரும்பிய அதுல்யா

" ஹாய் நான் அதுல்யா இப்போ தான் 12th முடுச்சு leavela போர் அடிக்குதுனு இந்த கிளசஸ்ல சேர்ந்துருக்கேன் நீ ?"என்று கேட்க

அந்த இன்னொருவளோ " நான் மேகா நானும் இப்போ தான் 12th முடுச்சேன் நீ எந்த ரேசொந்தக்காக வந்தியோ அதே reasonkaaga தான் நானும் வந்தேன். அம்மா என்ன கோர்ஸ் அடுத்து படிக்க போற நீ ?"

என்று கேட்க

அதுல்யாவோ " மோடெல்லிங் பண்ணலாம்னு விஸ்கோம்ல சேர்க்க சொன்னேன் ஆனா குடும்ப மானம் என்னாகுறது மரியாதை என்னாகுறதுனு என் காத புன்னகிடுறேயாகி நம்ம நாட்டோட நேஷனல்

டிக்ரீள தான் சேர்ப்பேன்னு சொல்ட்டாங்க " என்று கூற

மெகாவோ " நேஷனல் டிக்ரீயா அப்டினா ?" என்று கேட்க

அதுல்யாவோ " அதான்பா இன்ஜினியரிங் " என்று கூறியவள் சிரிக்க அவள் கூறிய விதத்தில் மேகாவும் சிரித்து விட்டாள் .

மேகா" நான் விஸ்காம் தான் பண்ண போறேன் . நல்ல மார்க் எடுத்த இன்ஜினியரிங் சேர்த்துருவாங்கனு பிளான் பண்ணி கம்மியா மார்க் வாங்கிட்டேன் " என்று கூற

அதுல்யா அவளை பார்த்து சிரித்தவள் " சா ஒரு 20 நாள் முன்னாடி உன்ன பாத்துருக்க கூடாதா இந்த ஐடியா தெரியாம போயிருச்சே " என்று கூறிக்கொண்டிருந்த பொழுதே அவர்களின் அந்த சென்டரின் உரிமையாளரும் முதன்மை ஆசிரியருமானவர் உள்ளே வந்தார் கூட ஒரு இளைஞனும் நின்றிருந்தான் . அந்த இளைஞனை அதுல்யாவின் விழிகள் ஆர்வமாய் பார்க்க ஏனோ முதல் பார்வையிலேயே அவனை மிகவுமே பிடித்து விட்டது அவளுக்கு .

அதா முதன்மை ஆசிரியர் " ஹலோ ஸ்டுடென்ட்ஸ் . படிக்க வயதில்லைனு சொல்லுவாங்க இங்க பலதரப்பட்ட வயதினர்களும் சேர்ந்து இருக்குறத பாக்கேல அது எவ்ளோ உண்மைன்னு தெரியுது . உங்க எல்லாருக்கும் என்னோட ஆல் தி பெஸ்ட் . இந்த 2 மாச கோர்சில நீங்க 2 softwares கத்துக்க போறீங்க . மீட் mr. சஞ்சீவ் . இவர் 2 வருஷத்துக்கு முன்னாடி அண்ணா யூனிவர்சிட்டி பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் கோல்ட் மெடலிஸ்ட் . ஹி ஆல்சோ ஒர்க்ஸ் அஸ் chief programme analyst in இன்போசிஸ் . here he works as a பார்ட் டைம் டீச்சர் . உங்க எல்லாரோட மெண்டரும் இவர் தான் . "என்று கூற அதுல்யாவோ மற்றவர்களை விட உற்சாகமாகவே அவனுக்கு கை தட்டினாள்.

அவனோ ஒரு இதழ் விரிந்த புன்னகையை சிந்தியவன் வகுப்பெடுக்க ஆரம்பித்து விட்டான் .

சஞ்சீவ் " சார் சொன்னதே என்னோட அறிமுகத்துக்கு போதும்னு நினைக்குறேன் . இங்க எல்லாருமே உங்க வயசு அனுபவத்தலாம் பின் தள்ளிட்டு முதல் நாள் பள்ளிக்கு வர குழந்தையா உங்கள நெனச்சுக்கோங்க , சந்தேகம் வந்தா தயங்காம கேளுங்க , codes நா சொல்லி தரது தான் போடணும்னு இல்ல you can explore yourself with the basics . சோ பாடத்துக்கு போலாமா "

அவன் நேரடியாக பாடத்துக்கு போலாமா என்று கேட்க அதுல்யாவோ தனது கையை உயர்த்தினாள் .

அவளை பார்த்தவன் துறுதுறு கண்களுடன் விழித்தபடி குழந்தைத்தனம் முகத்தை நிறைக்க நின்றவள் தோற்றம் மனதை சட்டென தாக்கினாலும் முகத்தை இயல்பாக வைத்தவன் " என்ன கேக்கணும் ?"

அதுல்யா " உங்கள introduce பண்ணீங்க எங்களோட intruduction வேணாமா ?"என்று கேட்க

அவனோ அதே முகபாவத்துடன் " உங்களோட performance பார்த்து நானே உங்க பேர ஞாபகப்படுத்திக்குறேன் தேவை இல்லாம டைம் வேஸ்ட் பண்ணி உங்க பேர கேட்டாலும் அது என் மைண்ட்ல இப்போ நிக்காது ." என்று கூறி வகுப்பெடுக்க ஆரம்பித்து விட

அவளோ மனதிற்குள் "சரியான ரூல்ஸ் ராமானுஜன் கிட்ட மாட்டிகிட்டேனே " என்று நினைத்தாலும் அவன் நன்றாகவே பாடம் சொல்லி கொடுத்தான் .

1.5 மணி நேர வகுப்பிற்கு பின் அங்கிருந்த கணினி ஆய்வகத்திற்கு அழைத்து சென்றவன் அனைவர்க்கும் ஒரு ஒரு கணினியை கொடுத்து அதில் இன்று எடுத்த codesai போட்டு பார்க்க சொன்னான் . பார்த்து ஒரு முறையும் அதை காண்பித்த பின் பார்க்காமல் ஒரு முறையும் போட்டு காட்ட கூறினான் .

இந்த 1.5 மணி நேரத்தில் அதுல்யாவிற்குமே இந்த கோடிங்கில் ஆர்வம் வந்திருக்க அவள் செய்வதை அவனறியாமலே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டான் சஞ்சீவ். மற்ற நேரத்தில் துறுதுறுவென இருப்பவள் வேலையிலும் அதே துறுதுறுப்புடன் இருந்தாள். அன்று எப்படி பிரிண்ட் செய்வது மற்றும் எப்படி கணக்குகள் போடுவது போன்ற சுலபமான கோடிங்குகள் தான் அவன் சொல்லி கொடுத்திருந்தான் .

அதுல்யா முதல் முறை அனைவருக்கும் முன் தட்டச்சு செய்து முடித்தவள் அதை சரி பார்க்க அவனை அழைக்க அவனும் சரி பார்த்து விட்டு அவளது குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை எடுத்து தன்னிடம் வைத்துக்கொண்டு " குட் இப்போ பாக்காம அடிங்க " என்று கூற

அவளோ பெரிதாக சிரித்தவள் அடுத்த பதினைந்தாவது நிமிடம் அவனை அழைத்தாள். அவன் output பார்க்க அதிலோ " ஹாய் சஞ்சீவ் , திஸ் ஐஸ் அதுல்யா , நைஸ் டு மீட் யு " என்று போட்டிருந்தவள் அதன் கீழ் ஒரு கை குலுக்கும் எமோஜியும் போட்டு வைத்திருந்தாள் .

அதை பார்த்து லேசாய் புன்னகைத்தவன் " குட் நல்லா பிக்கப் பண்றீங்க அதுல்யா" என்க

அதுல்யாவோ "என்னது pickupaa அபச்சாரம் அபச்சாரம் . நான் நல்ல புள்ளைங்க ஏதோ நீங்க நல்ல இருக்கீங்களேன்னு அப்பப்போ பார்த்தேன் அதுக்குன்னு இப்டிலாம் சொல்லலாமா " என்று அந்த அப்பாவி முழியுடன் கூற சஞ்ஜீவோ அவள் பேசியதை உள்வாங்கவே 2 நிமிடங்கள் எடுத்தவன் அதை உணர்ந்ததும் கடுகடுப்பு எட்டி பார்த்தாலும் அவளது பாவனையில் சிரிப்பும் வந்து தொலைத்தது.

முகத்தை கடுகடுவென வைத்தவன் அடுத்த programme பண்ணுங்க . என்று கூறி விட்டு அடுத்த இருக்கைக்கு செல்ல அவளோ அவன் முதுகின் பின் நாக்கை துருத்தியவள் " ரூல்ஸ் ராமானுஜம் " என்று முணுமுணுக்க இவை அனைத்தையும் அவளின் பக்கவாட்டில் இருந்த வெறுமையான சிஸ்டம் சகிரீனில் பார்த்தவன் இதழ்கள் அவனறியாமலே புன்னகைத்துக்கொண்டது .

அன்றைய வகுப்பு நேரம் முடிய அரக்கப்பரக்க ஓடி வந்த சஞ்சீவ் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டவன் தனது அலுவலகம் நோக்கி வண்டியை செலுத்தினான் . அவன் பரபரப்பாக செல்வதை பார்த்தவள் தனது தோளை குலுக்கிக்கொண்டு அவளது அத்தை வீட்டிற்கு சென்று விட்டாள்.

அங்கே அவளது அத்தை பிரமிளா கதவை திறந்து விட்டவர் " எப்படி பாப்பா போச்சு கிளாஸ்லாம் " என்று கேட்க

அவளோ " சூப்பரா போச்சு அத்தை . " என்று சுற்றி பார்த்தவள் " எப்படி அத்த இப்டி தனியா இருக்கீங்க பயமா இல்லையா என்ன " என்று கேட்க

அவரோ " இல்லடா தனியா எங்க இருக்கேன் . அதான் மேல் ரூமஹ் வாடகைக்கு விட்ருக்கேனே அங்க ஒரு பையன் இருக்கான். பிரச்சனை இல்ல " என்று கூற

அவளோ " ஆமா நேத்தே சொன்னீங்கள்ள என்னால தான் பாக்க முடியல . " என்று கூற

அவரோ " என்னாலேயே அவனை வார நாட்கள்ல பாக்க முடியாது . பாவம் கஷ்டப்படற குடும்பத்துல முதல் பட்டதாரி போல இவன், இவன் தங்கச்சி கல்யாணம், அவன் வீட்டு செலவு எல்லாம் இவன் தலைல தான் . மொதல்ல நாலஞ்சு பசங்களோட சேர்ந்து தான் ரூம் எடுத்துருந்தான் போல அப்ரோம் ஏதோ புடிக்கலைனு இங்க வந்துட்டான் . நா சும்மா பூட்டி வச்சுருக்குறதுக்கு வாடகைக்கு விடுவோம் நமக்கு அடலீஸ்ட் பாதுகாப்பவாச்சு இருக்கும்னு தான் வாடகை கம்மியா வாங்குறேன் . "என்று கூற அவளிற்கு அந்த ஆடவனை பார்க்க ஆவலாக இருந்தது .

அப்படியே அந்த ஒரு வார காலமும் கடந்து விட இவள் சஞ்ஜீவிடம் நன்றாக பேச முற்படுவதும் அவன் அவள் முன் கடுகடுவென இருப்பதும் பின் திரும்பி சிரிப்பதும் என்று இருந்தான் . அவளது அத்தை ஒரு லேப் technicianaaga பணி புரிகிறார் ஆதலால் அவருக்கு சனிக்கிழமை முழு நேர அலுவலகமும் ஞாயிறன்று அரை நேரமும் இருக்கும் .

சனி ஞாயிறு instituteum இல்லாத காரணத்தால் அவளது அத்தையிடம் கேட்டு அங்கே அவர்கள் பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு செல்ல அனுமதி கேட்க அவரோ " தனியாளாம் விட முடியாது பாப்பா . நா வந்து கூப்டு போறேன் " என்று கூற

அவளோ " எது ராத்திரி 7 மணிக்கு வந்து நீங்க என்ன கூப்டு போறீங்களா . போங்க அத்த . நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல " என்று கூற அவரோ முட்டியை தொட்டு நின்ற பிளீட்ட் ஸ்கிர்ட் மற்றும் அரை கை வைத்திருந்த கிராப் டாப்பில் கழுத்து வரை வெட்டப்பட்டிருந்த அலை அலையான கூந்தலும் முட்டை கண்களும் என்று இன்னும் குழந்தைத்தனம் மாறாமல் இருப்பவளை பார்த்து சிரித்தவாறு "சரி சரி நீ பெரிய பொண்ணு தான் . ஆனா இந்த தடவ நீ தனியா போக வேணாம் மேல ஒரு பையன் இருக்கான்னு சொன்னேன்ல அவனோட அனுப்பி வைக்குறேன் ."என்று கூற

அவளோ அவள் அத்தையை நக்கலாக பார்த்தவள் " தனியா அனுப்ப மாட்டிங்க ஆனா ஒரு பையனோட அனுப்புவீங்களா " என்று கேட்க

அவரோ சிரித்தவாறு " அவனோட உன்ன இல்ல உலக அழகிய கூட நம்பி அனுப்பலாம் கண்ணியமான பையன் " என்று கூறியவர் அவனை கீழிருந்த படிகளில் இருந்து அழைத்தார் " சஞ்சீவ் " என்று

அந்த பெயரில் துணுக்குற்று மேலே பார்த்தவள் கண்டதென்னவோ சாட்சாத் அவளது ஆசிரியரான சஞ்சீவை தான்.

அதில் முகம் விகசிக்க அவனை பார்த்தவள் சிரிக்க அவனோ அவளை சிறிதும் இங்கு எதிர்பார்க்காமல் பிரமிளா மீண்டும் அழைத்ததில் உணர்விற்கு வந்து கீழே இறங்கினான் .

பிரமிளா " சஞ்சீவ் இது என் அண்ணன் பொண்ணு அதுல்யா . கொஞ்சம் இவளை இங்க பக்கத்துல இருக்குற பார்க்குக்கு மட்டும் கூட்டிட்டு போறியா இன்னைக்கு . எனக்கு வேலைக்கு நேரமாயிருச்சு தனியா அனுப்பவும் ஒரு மாறி இருக்கு. சின்ன புள்ள இல்லையா கொஞ்சம் இன்னொசென்ட் " என்று கூற

அவனோ அவர் கூறிய இன்னொசென்ட்டில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன் " சரி மா நா கூப்டு போறேன் " என்று கூற அவரும் புன்னகைத்தவாறே " அத்து சேட்டை பண்ணாம அண்ணனோட பத்திரமா போயிடு வரணும் " என்று கூற

அவளோ " எது அண்ணனா . அண்ணன்னுலாம் கூப்பிட முடியாது போங்க " என்று வெளிப்படையாகவே அதிர்ந்தவள் அவள் அத்தையை முறைத்து விட்டு கீழே விடு விடுவென இறங்கி சென்று விட சஞ்ஜீவ் அவளது செய்கையில் சற்று சுதாரித்தவன் உள்ளே அவள் அண்ணனா என்று கேட்டது சற்று இளஞ்சாரலை வீச செய்தாலும் இன்னொரு மனதின் கடுகடுப்பு அதை அடக்கி விட கீழே அவள் பின் சென்றான் .

அதுல்யா அவனை பார்த்து புன்னகைத்து அவன் அருகில் வர அதற்கு ஒரு முறைப்பை பதிலாய் தந்தவன் " ரெண்டு ஸ்டெப் இடம் விட்டு நடங்க " என்று கூற அவளோ அவனின் முறைப்பு எதற்கு என்று புரியாமலே அவன் சொன்னது போல் இடைவெளி விட்டு நடந்தாள் .

அதுல்யாவிற்கு அவன் மேல் எப்பொழுதுமே ஒரு பிரம்மிப்பு உள்ளது . அவனின் கம்பீர தோற்றதால் பதின் வயது பெண்ணிற்கே உரிய ஹோர்மோன் விளையாட்டால் முதலில் ஈர்க்கப்பட்டாலும் அவன் பாடம் எடுக்கும் நேர்த்தி , எத்தனை முறை கேட்டாலும் சளைக்காமல் சொல்லி தரும் பாங்கு , அவனை மற்ற மாணவர் எரிச்சல் மூட்டினாலும் பொறுமையை கை விடாது அழுத்தமான தொனியில் அவரை அணுகுவது , ஒரு கண் பார்வையில் சலசலக்கும் வகுப்பை அரை நொடியில் அமைதிப்படுத்தும் ஆளுமை, அவனது படிப்பு ,அத்தனை பெண்கள் இருந்தும் ஏன் இவளே சென்று வம்பு வளர்த்தாலும் எட்டி நில் என்று தள்ளி நிறுத்தும் கண்ணியமும் அவளிற்கு அவன் மேல் ஒரு ஹீரோ போன்ற பிம்பத்தை கொடுத்திருக்க அவனை தனது முன்னோடியாக அதாவது inspirationaaga பார்க்க துவங்கி இருந்தாள்.

வாழ்க்கையில் கஷ்டம் என்ற ஒன்றையே கண்டிறாதவளுக்கு குடும்பத்திற்காக ஓடிக்கொண்டே இருப்பதாய் அவள் அத்தை கூறி இருக்க அந்த முகம் தெரியாத நபரின் மேல் இருந்த பிரம்மிப்பு இப்பொழுது அவன் தான் அது என்று தெரிந்திருக்க அந்த ஹீரோ பிம்பம் மேலும் வலுத்திருந்தது . அவள் மனதில் வேறெந்த சலனமும் இருக்கவில்லை .

அதுல்யா " அவனோடு பார்க்கிற்கு வந்தவள் சற்று வெயில் அதிகமில்லாத மரங்கள் அடைத்த நடைபாதையில் குதித்து குதித்து நடந்து போய் கொண்டிருந்தாள் குதிரை வால் ஆட .

அவனிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தவள் திடீரென்று எங்கோ எதையோ பார்த்து சிரித்தவள் அவனின் கையை சுரண்ட அவனோ ஏற்கனவே அவளின் மேல் சந்தேகக்கண்ணோடு இருந்தவன் அவள் சுரண்டலில் கோபம் கொண்டு " ஏய்ய் தள்ளி நில்லுன்னா நிக்க மாட்டிய தொட்டு தொட்டு பேசிகிட்டு அங்க என்னன்னா அண்ணன்னு அவங்க சொன்ன ஷாக் ஆகுற இங்க என்னனா கைய சொரண்டுற . வயசுக்கேத்த மாறி நடந்துக்க மாட்டியா " என்று அடிக்குரலில் சீற

அவளோ அவனை ஏதோ புரியாத மொழியில் பேசுகிறது போல் பார்த்தவள் பின் அவனை பார்த்து அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்து விட்டாள் . அதுல்யா " அட பாவி இப்டி நெனச்சு தான் நீ வீட்டுல இருந்து என்ன மொறச்சு மொறச்சு பாத்துட்டு இருந்தீங்களா ஹாஹாஹாஹா . உங்கள மாறி ரூல்ஸ் ராமானுஜனை லவ் பண்ண முடியுமா இல்ல லவ் பண்ண தா விட்ருவீங்களா . அங்க பாருங்க ஒரு பப்பி ஒரு பேபியோட walkerla வெளயாடிகிட்டு இருந்துச்சு அதை காட்டலாம்னா போயா யோவ்வ் " என்று கூறிவிட்டு முன்னே நடக்க அவனோ ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றவன் இன்னும் குழப்பம் தீராதவனாய் அவள் பின் செல்ல அவளோ ஒரு பெஞ்சில் அமர்ந்தவள் தனதருகில் இருந்த ஒரு இருக்கையை தட்டி காட்டி விட்டு அவன் அமர்ந்ததும் அவனை பார்த்து " இப்போ உங்களுக்கு எனக்கு உங்க மேல இஸ்கி இஸ்கி இருக்கானு doubtaa "

அவனோ புரியாமல் " இஸ்கி இஸ்கியா அப்டினா " என்று கேட்க

அவளோ " அட அதான்பா லவ்வு " என்று கேட்க அவனோ ஒரு நொடி தயங்கினாலும் அடுத்த நொடியே அழுத்தமாக ஆம் என்று தலையாட்டிட

அவளோ புன்னகைத்தவாறு இல்லை என்று தலை ஆட்டினாள் " எனக்கு நீங்க inspiration ஜீவா . " யாரும் அழைத்திடாத புது பெயரில் அவள் தன்னை அழைத்தது லேசாய் மனதை உறுத்தினாலும் அவள் கூறுவதை முழுதாய் கேட்கும் பாவனையில் அமர்ந்தான் சஞ்சீவ் .

அதுல்யா "நா என் அக்கா அப்பறோம் அப்பா அம்மானு இருப்போமா . நா வாழ்க்கைல கஷ்டம்னு ஒண்ணா பார்த்ததே இல்ல . அடுத்த தெருவுக்கு கூட எங்கப்பா தனியா விட மாட்டார்னா பாத்துக்கோங்க . முதல்ல உங்கள பாத்தப்போ சைட் அடிச்சேன் உண்மை தான் ஆனா நீங்க நடத்துற விதம் , அந்த டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்றது , உங்க டிசிப்ளின் , அப்பறோம் குடும்பத்துக்காகன்னு ஓடுறது அத்த சொல்லிருக்காங்க இதெல்லாம் சேர்ந்து ஒரு ஹீரோ மாறி ஒரு இன்ஸ்பிரஷன் மாறி உங்கள பாக்குறேன் . என்னை இன்ஜினியரிங் தான் சேர்ப்பேன்னு என் அப்பா சொல்லிட்டாரு இங்க வந்து உங்கள பாத்து தான் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் எடுக்கணும்னே தோணுச்சு தெரியுமா . " என்று தலையை ஆட்டி ஆட்டி கூற அவள் மனதில் தான் ஒரு ஹீரோ என்கின்ற அந்தஸ்தில் இருக்கிறோம் என்பதே அவனிற்கு ஒரு வகை உவகையை கொடுக்க அவள் மனதில் அப்படியான சலனம் ஏதும் இல்லை என்று தெரிந்தது இன்னொரு விதத்தில் ஆசுவாசத்தை தந்தது .

நன்றாக புன்னகைத்தவன் " சாரி அதுல்யா அது ... 1 வருஷமா நிறைய ஸ்டுடென்ட்ஸ் பார்த்துட்டேன் அங்க இப்டி வந்து தான் நிப்பாங்க அதான் நீ சின்ன பொண்ணு வேற " என்று கூற

அவளோ கையை உயர்த்தியவள் " ஹலோ ஹலோ ஏதோ நீங்க 6 வருஷம் முன்னாடி பொறந்துட்டா நா சின்ன பொண்ணுன்னு அர்த்தம் இல்ல i am 18 " என்று முகத்தை சிலுப்ப அவளது அந்த செய்கையில் சிரித்தவன் கையை நீட்டி " சரி பிரிஎண்ட்ஸ் இனி உனக்கு எந்த ப்ரோப்ளேம்னாலும் டௌபதினாலும் கண்டிப்பா நீ என்ன கூப்பிடலாம் " என்று கூற அவளும் ஒரு நாயகனை நேரில் கண்டு விட்ட விசிறியை போன்ற சந்தோஷத்துடன் அவன் கையை பற்றிக்கொண்டாள் நட்பின் விதையை தூவியதன் அடையாளமாக . 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro