1. தன் மகளின் வரவு!

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஈருயிராய் இருந்த தன் மனைவி ப்ரசவ வார்டினுள் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் நல்ல செய்தி வரவில்லையே என்று தனக்கு தெரிந்த தெரியாத எல்லா கடவுளையும் வேண்டி கொண்டிருந்தான் இந்த கதையின் நாயகன்.

தன் இதயத்துடிப்பு தனக்கே கேட்பது போல் உணர்வு தோன்ற உள்ளுக்குள் தனக்கே பிரசவம் நடப்பது போல் ஒரு சொல்லமுடியாத பயம் வலி எல்லாம் சேர்ந்து உடல் நடுங்க சுவரில் கைகளை கட்டியபடி கண்களை மூடி சாய்ந்து நின்றிருந்தவனை கலைத்தது ஒரு அந்நிய குரலோடு இன்னொரு மெல்லிய அழுகை "சார்! உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. இந்தாங்க" என்று தன்னிடம் பிறந்து சில நொடிகளே ஆன தன் குழந்தையை செவிலியர் தர...

தன் உயிர்குருதியில் முளைத்த சின்ன ரோஜா மொட்டு இதழ் விரித்து தன் பட்டு போன்ற சின்னஞ்சிறு கை கால்களை உதைத்து தன் மெல்லிய அழுகையால் இந்த உலகிற்கு வந்துவிட்டதை உணர்த்துவது போல் இருக்க கண்களில் பொங்கும் ஆனந்த கண்ணீர் ஆறாய் வழிந்தோட தன் நடுங்கும் கரத்தினால் வாங்கி கொண்டு உச்சி முகர்ந்தவன்.

"என்

உயிர்குருதியில் ஜனித்து

என்னவளின்

உயிர்கருவில் குடிகொண்டு

ஈரைந்து மாதங்கள் வளர்ந்து

வெளிவந்த எம் செல்வி நீயே?

என்னை ஈன்றெடுக்காத

தாய் நீயே!"

சடாரென தலை நிமிர்த்தி "சிஸ்டர் என் மனைவி எப்டி இருக்காங்க? நல்லா இருக்காங்கல்ல?"என்றான் நடுங்கும் குரலில்...

பின்னோடு வந்த டாக்டர் "சாரி டு செ திஸ் சார்! எவ்ளோ முயற்ச்சி பண்ணியும் நாம பயந்த மாதிரியே நடந்துருச்சி அவங்கள எங்களால காப்பாத்த முடியல. வெரி சாரி! மனச தேத்திகொங்க" என்றார்.

தன் தலையில் இடி விழுந்ததை போல் உணர்ந்தவன் இந்த உலகமே தன் காலடியில் இருண்டு கிடப்பதை போல் தோன்ற சற்று முன் நடந்ததை நினைத்தான்....

சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் "என்னங்க எனக்கு இடுப்பு ரொம்ப வலிக்குது சீக்கிரம் வாங்க " என்று தன் மனைவி அலறியதில் உள்ளே இருந்து வேகமாக ஓடி வந்தவன் அவளை தாங்கி பிடித்து "என்னம்மா! எ்ன பண்ணுது?" என்றான் பதட்டமாக...

பதட்டம் கலந்த பயத்துடன் "எனக்கு பிரசவ வலி ஸ்டார்ட்ஆகிடுச்சுன்னு நினைக்கிறன்" என்றவளிடம்

"சரி டா! எதுக்கும் டென்ஷன் ஆகாதே ரிலாக்ஸாக இரு நாம இதோ ஹாஸ்பிடல் போய்டலாம்" என்று தனக்குள் எழும் பயத்தை வெளிக்காட்டாமல் தன்னவளுக்கு தைரியம் கூற அவ்வளவு மரண பயத்திலும் அவனின் வார்த்தைகள் அவளுக்கு தெம்பூட்ட மெல்லிய சாரலாய் அரும்பியது அவளின் புன்னகை...

"இதோ வந்துடறேன்" என்று உள்ளே பொறுமையாக சென்றவள். குளியறை சென்று வலியோடு அணிந்திருந்த நைட்டியை கழட்டி சிறு குளியலை குளித்து முடித்து வந்து தன் கணவன் தனக்காக முதன் முதலில் வாங்கி குடுத்த அடர் கருநீலநிற புடவையை எடுத்து கட்டிக்கொண்டு பூஜை அறை முன் சென்று நின்றவள் "என்னங்க இங்க வாங்க"என்று குரல் குடுக்க

"இதோ வந்துட்டேன்" என்று உள்ளே வந்தவன் "ஏம்மா இப்ப இது ரொம்ப முக்கியமா? அப்படியே கிளம்புவியா ?"என்றவன் அப்பொழுது தான் கவனித்தான் அவள் அணிந்திருந்த புடவையை, அவன் உதட்டில் மெல்ல புன்னகை அரும்ப அவள் முறைப்பதை பார்த்து "சரி சரி நான் எதுவும் சொல்லவில்லை"என்று சிரித்தான்.

கற்ப்பூரத்தை ஏற்றி கையெடுத்து கும்பிட்டவள் குங்குமச்சிமிழை அவனிடம் நீட்ட அதில் இருந்து எடுத்த குங்குமத்தை அவளின் நெற்றியில் கீற்றாய் இட்டவன் நெற்றிவகிட்டிலும் வைத்து அவளின் உச்சியில் ஒரு முத்தத்தை தந்த பின் " போலாம் டா லேட்டா ஆகுது "

"ஹ்ம்..." என்று பெருமூச்சு வெளிப்பட கண்களில் கண்ணீரோடு அவனை தழுவிக்கொண்டாள்.

"டாக்டர் சொல்றதையும் மீறி எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலை படாதே போலாம்" என்றான்

சரி என்று தலை ஆட்டியவள் "ஆ...ஆ ..... ரொம்ப வலிக்குதுங்க சீக்கிரம் போகலாம் என்னால வலி தாங்க முடியலை " என்று வலியில் துடிக்க

"இதோ உடனே ஹாஸ்பிடல் போகலாம் " என்று அவளை வெளியே மெதுவாக அழைத்து வந்து தன் காரில் உட்கார வைத்தான்.

"ஒரு ரெண்டு நிமிஷம் இதோ வந்துடறேன" உள்ளே ஓடியவன் சட்டையை எடுத்து வேகமாக போட்டு கொண்டு வீட்டை பூட்டிகொண்டு ஓடி வந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

"செல்வி! பத்து நிமிஷம் இதோ ஹாஸ்பிடல் போய்ட் ரொம்ப வலிக்குதாடா கொஞ்சம் பொறுத்துகோடா " என்று அவள் துடிப்பதை பார்த்து தன்னால் அந்த வலியை வாங்கி கொள்ளமுடியவில்லையே என்று வேதனை பட்டு கூற

அவ்வளவு வலியிலும் "என்னங்க! இந்த பிரசவத்துல நான் நல்லபடியா பிழைச்சி வந்துட்டா சரி அப்டி ஒரு வேளை எனக்கு ஏதாவது ..." எனும் போதே அவளின் வாயை தன் கைகள் கொண்டு மூடி "அப்டிலாம் ஒன்னும் நடக்காது நீயும் நம்ம பாப்பாவும் நல்லபடியா வந்துருவிங்க" என்று தன் கணவன் சொல்ல

அவன் கையை தன் வாயில் இருந்து விலக்கி "டாக்டரே இப்பவரைக்கும் அதுக்கு உத்திரவாதம் தரலையே! அப்டி எனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா நம்ம பாப்பாவ என்னை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்க கூடாது ஏன்னா நான் தான் உ ங்களுக்கு பொண்ணா பிறந்து உங்க கூட இருக்க வருவேன்" என்று கூற அவள் கூறுவது நடக்க கூடாது என்று வேண்டினாலும் அவளின் திருப்திக்காக சரி என்று தலை ஆட்டினான்.

"சார்! சார்!" என்ற குரல் கேட்க நினைவுகளில் இருந்து மீண்டவன் ஒரு மணி நேரத்திற்கு முன் உயிரோடு இருந்தவள், யாருமற்ற அனாதையாக இருந்தவனை நான் இருக்கிறேன் உனக்கு என்று சொல்லி தன் உயிராய் என்னை நேசித்தவள் இப்பொழுது இல்லை தன்னை மறுபடியும் தனிமரமாக தவிக்கவிட்டு சென்றுவிட்டாள் என்பதை நினைக்கும் பொழுதே துக்கம் தொண்டையை அடைக்க குழந்தையை அணைத்தபடி சுவரோடு சாய்ந்து தரையில் அமர்ந்து கதறி அழுதான்.

"சார்! உங்ககூட யாரும் வரலையா?" சிஸ்டர் கேட்கவும் "இல்லை" என்று தலை ஆட்டியவன். தன் போனை எடுத்து வேகமாக அழுதுகொண்டே டயல் செய்தான்.

எதிர் முனையில் "ஹலோ!" என்று குரல் கேட்கவும் "டேய் பிரபு! உன் தங்கச்சி நம்ம எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போய்ட்டாடா" என்று கதற

"டேய் என்னடா உளர்ற? செல்வி எங்க?"என்று பதட்டதோட கேட்க

"அவ நம்ம எல்லாரையும் விட்டுட்டு போய்டாடா! நான் தலபாடா அடிட்சிகிட்டேன் இந்த குழந்தை வேணாம்னு என் பேச்சை கேக்கலையே? இப்ப பாரு ..."என்று கேவ

"டேய் இப்ப நீ எங்க இருக்க ?" என்று பிரபு கேட்க

"நான் இங்க செல்விக்கு பிரசவ வலி வந்துச்சுனு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேண்டா இங்க என் கைல ஒரு பட்ச குழந்தைய குடுத்துட்டு எங்க ரெண்டு போரையும் ஆனாதையா விட்டு போய்டா " என்று புலம்பினான்

"டேய் தமிழ் நீ அங்கேயே இரு இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன் " என்று போனை கட் செய்தவன் அடுத்த பத்து நிமிஷத்தில் அங்கு இருந்தான்.

பிரபுவை கண்டதும் சிறு குழந்தையென ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டு கதற தொடங்கினான் நம் நாயகன் சரவணத்தமிழன்.

எல்லா பார்மாலிட்டிசையும் தான் ஒருவனே முன் நின்று முடித்து செல்வியின் உடலை வீட்டிற்கும் கொண்டு வந்துவிட்டான் பிரபு.

தனகென்று யாருமில்லாத நேரத்தில், தனக்காக, வீட்டிற்கு ஒரே பெண்ணாய் செல்லமாக வளம் வந்த பெற்றவீட்டை துறந்து வந்த செல்வியை தலைமுழுகிய அவளின் பெற்றோருக்கு சரவணத்தமிழன் பிரபுவின் மூலம் தகவல் சொல்ல "எங்கள் பெண் செல்வி என்று அவனை கூட்டி கொண்டு இந்த வீட்டு வாசலை தாண்டினாளோ அன்றே இறந்து விட்டாள். இது யாரோ? முன் பின் தெரியாதவர்ன்களின் சாவுகேல்லாம் எங்களால் வரமுடியாது" என்று கூறி அனுப்பி விட்டனர்.

தன் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தன் தொழில் முறை தெரிந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் என எல்லோரும் துக்கவீட்டில் சூழ்ந்திருக்க எல்லா காரியங்களையும் தான் ஒருவனே நண்பனின் துணைகொண்டு செய்து முடித்தான் தமிழ்.

தன் மனையாள் கூறியது சரியாக இருக்கிறது "உனக்கு நான் எனக்கு நீ! அவ்வளவு தான் சிறிய கூட்டில் சந்தோசமாக இருக்கலாம் அவர்களை பற்றி பேச்சு எதற்கு உங்களை மதிகாதவர்களின் உறவு நமக்கு தேவை இல்லை. " என்று கூறினாள்.

இரண்டு வருடம் பின்னோக்கி சிந்தனையில் மூழ்கியவனை மீட்க தேவதையாய்

"அப் ...ப் ...பா!" என்று மழலை குரலில் தன் அப்பாவை கொஞ்சும் தமிழில் கூப்பிட்டது இரண்டு வயதான குழந்தை...

தன் காலை கட்டிக்கொண்டு சிரித்தபடி நிற்கும் குழந்தையிடம் "சர்வதா குட்டி! என்னடா குட்டி ?" என்று கொஞ்சியபடி தூக்கி கொண்டான்.

"ஆம்! தங்கள் இருவரின் ஆசை மகளுக்கு தன் பெயரின் முதல் எழுத்தான "சரவ" வும் தன் காதல் மனைவி பெயர் தாமரைச்செல்வியின் முதல் எழுத்தான "தா"வும் சேர்த்து "சர்வதா" என்று வைத்திருந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro