யாதிரா - 5

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இரண்டாம் நாள்

ஸ்க்ரோல்(scroll) செய்ய செய்ய அவனின் stretcher படம் தான் எல்லா இடங்களிலும் தெரிந்தது. சிலர் அதை மீம் ஆகவும் மாற்றியிருந்தனர். இரு நாட்களிலே பாலிவூட் வருணின் படத்தில் வேறொரு நாயகனா என சிவப்பு எழுத்துக்களில் யூடியூப் வீடியோக்களும் செய்திகளும் வந்துவிட்டன. ஆயினும் தயாரிப்பாளர்கள் இவனிடம் போனில் நல்லவிதமாக பேசியிருந்தனர். அவன் குணமடையும் வரை பாலிவூட் நடிகனுக்காக தமிழகம் காத்திருக்கும் என வாக்குறுதியளித்திருந்தனர். தன் அம்மாவின் ஆசைக்கு இயைந்து ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்பட்டது குத்தமா என வருண் நொந்துவிட்டான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு போனிலிருந்து பார்வையைத் திருப்பினான் வருண். தலை நிறைய முடி ஆனால் வெள்ளை முடியாய் மூக்குக்கண்ணாடியும் முழுக் கை நீள நிற சட்டையும் வெள்ளை பேண்டுமாய் கோல்கேட் விளம்பரத்தில் வரும் டெண்டிஸ்ட்(dentist) போல் ஒரு மருத்துவர் நுழைந்தார். தன் கரத்தை நீட்டியவர் இனிமேல் வருணை பிரத்தியேகமாக கவனித்துக்கொள்வதாகக் கூறினார்.

scrubsஇல் வெகு சாதாரணமாக வலம் வந்த யாதிராவுக்கு நேற்மாறாக இருந்தார் இப்புதிய மருத்துவர். குணத்திலும் தான். விழுந்து விழுந்து கவனித்தார் டீனின் உத்தரவின்படி. சிரித்து சிரித்து பேசிய அவரைக் கண்டு வருணுக்கு எரிச்சல் தான் வந்தது.

"அந்த டாக்டர் எங்கே?" தன்னை வெகுஜனமக்கள் போல் நடத்திய யாதிராவின் professionalism வழிந்து விழும் இவரின் முன்னால் தெளிவானது.

"அவங்க எமெர்ஜன்சி டாக்டர். உங்கள நார்மல் வார்ட் கு மாத்துனதோடு அவங்க வேலை முடிஞ்சுட்டு. தொடர்ந்து continued care வழங்குறதுக்குக்கு specialist நான் இருக்கேன்."

உடனே டீனுக்கு போட்டான் போன் கால்.

டீனிடமிருந்து யாதிராவுக்கு போன் போனது.

"சார், புது அட்மிஷன்ஸ் மற்றும் ஐசியூ கேஸ் பாக்கிறது தான் என்னோட வேலை. அவரு நல்லா ரிகவர் ஆகிடுவாரு ஒரு வாரத்துல. நான் எதுக்கு..."

"இல்ல யாதிரா. அவருக்கு ஆபரேஷன் பண்ண டாக்டர் ஹாஸ்பிட்டல் லேர்ந்து டிஸ்சார்ஜ் ஆகும்வரை பார்த்துக்கிட்டா தான் எந்த problems உம் வராது நு ஆக்டர் வருண் பீல் பண்ணுறார். நம்ம ஹாஸ்பிட்டல் ரெபுடேஷனுக்கு(reputation) இது லாட்டரி அடிச்ச மாதிரி. நல்லா பார்த்துக்குங்க." டீன் இறுதியாய் இருந்தார்.

சில ஆண்களுக்கு இளம் வயது பெண் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதில் ஒரு குதூகலம் கிடைக்கும் அதைப் போலவா இதுவும் என யாதிராவின் பெண் மனம் யோசித்தது. இல்லை, ஹிந்தி ஹீரோயின்ஸ் கூட டூயட் ஆடுனவரு. அப்படிலாம் இருக்காது என தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டு வேலையைத் தொடர்ந்தாள்.

முதல் ரவுண்ட்ஸ் முடிந்ததும் அவனைக் காண அவனின் தனி அறைக்கு சென்றவள் அவனின் கோரிக்கைப் பற்றி அறிந்தவளாகக் காட்டிக்கொள்ளவில்லை. இன்றும் மேனேஜர் பக்கத்தில் சோபாவில் உட்கார்ந்திருந்தார். இரு நாட்களாயிருந்தும் வருணின் பெற்றோர் வராதது அவளை உறுத்தியது. எதுவும் நடக்காதது போல் அவனின் காயங்களை ஆராய்ந்தாள். ரிப்போர்ட் இல் கிறுக்கினாள். பின் திருப்தியடைந்தவள் மீண்டும் அவனிடம் கேட்டாள், "மிஸ்டர் வருண், உங்களுக்கு எதாவது கேள்வியோ கவலையோ இருந்தால் கேளுங்க."

இதற்காகவே காத்திருந்தவனாய் வருணின் வார்த்தைகள் மழைபோல் கொட்டின. "ஆமா, எனக்கு கேள்வி இருக்கு."

அவனின் கண்களில் தெரிந்த தவிப்பை உணர்ந்தவள் மேனேஜரை வெளியில் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டாள். மேனேஜரின் முகம் மறைந்ததும் வருண் கேட்டான், "என்னால எப்போ படத்துல நடிக்க முடியும்?"

"படத்துல நடிக்கிறது பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது மிஸ்டர் வருண். என்ன மாதிரியான உடல் அசைவு, எத்தனை மணி நேரம் நிக்கனும், பேசனும்னு சொன்னீங்கன்னா என்னால பதில் சொல்ல முடியும்."

"ஹ்ம்ம்ம் அதுவும் சரி தான். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நிக்கனும். நடுவுல ரெண்டு நிமிஷம், நாலு நிமிஷம் உட்காருவோம் பட் மோஸ்ட்லி நிக்கிறது தான். அப்புறம் டான்ஸ். அப்புறம் ஓடுறது, குதிக்கிறது. குதிக்கிறது பரவால்ல அத அப்புறம் பண்ணிக்கலாம். ஓடுறது கண்டிப்பா இருக்கும்."

"மிஸ்டர் வருண், அவ்வளவு மணி நேரம் நிக்கிறது நல்லதில்ல. உங்கனால முடியாது. வெயிட்டிங் டைம்ல நிறைய நேரம் உட்கார்ந்தீங்கன்னா உங்கனால பில்மிங்(filming) சில வாரங்களில் ஸ்டார்ட் பண்ண முடியும். டான்ஸ் அண்ட் ரன்னிங் ரெண்டு- மூனு மாசத்துலேர்ந்து தொடங்கலாம். நடுவுல பிஸியோவும்(physio) பண்ணீங்கன்னா staminaஅதிகமாகி மீண்டும் பழையபடி வந்துடலாம். ரெண்டு- மூனு மாசம் பல்ல கடிச்சிக்கனும், அது தான் நிதர்சனம்."

அவளின் பதில் மழையின் இடிபோல் இருந்தது வருணுக்கு. கடந்த இரு வருடமாய் தான் அவன் டாப் ஸ்டார்களில் ஒருவனாய் வலம் வந்துக்கொண்டிருந்தான். இவ்வளவு நீண்ட இடைவேளை இத்தருணத்தில் அவனது முழுக் கனவையும் இழுத்து மூடிவிடும். தன் பின்னனாலேயே வாய்புக்காக சுற்றிக்கொண்டிருந்த புதுமுக நடிகர்கள் இவனின் மூன்று மாத பட வாய்ப்புகளைக் கைப்பற்றிக்கொண்டு முன்னேறிவிட துடிப்பர். கோரோணா லாக்டவுன் இலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த திரையுலகத்தில் இப்பொழுது கால் பதியும் படங்கள் பெரும் வரவேற்பை பெறும் என மேனேஜர் அறிவுரைக் கூறி மூன்று மாதங்களில் 5 படங்களுக்கு புக் செய்திருந்தார். இப்போது விட்டால் மீண்டும் பிடிக்க முடியுமா என மூளைக் கேட்டது. கஷ்டம் என மூளையே பதில் சொன்னது. முழுதாக மக்களின் கண்களிருந்து மறையாமல் விளம்பரங்களிலாவது முகத்தைக் காட்ட வேண்டும் என மூளை திட்டியது.

அவனின் மௌனத்தில் அடங்கியிருக்கும் கஷ்டத்தை புரிந்தவளாய் யாதிரா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"அப்புறம் டாக்டர்... இந்த சர்ஜரி தழும்பு எப்போ மறையும். Ad ஷூட் ல ஷர்ட் இல்லாம..."

"தழும்புக்கு கிரீம் இருக்கு. மேக்-அப் உம் இருக்குன்னு உங்களுக்கே தெரியும் கவலைப்படாதீங்க. நடிகர்களோட ஷூட்டிங் பற்றி தெரியாவிட்டாலும் அவர்களுக்கு தோற்றம் முக்கியம்னு தெரியும். ஏற்கனவே கிரீம் எழுதி உங்க மேனேஜர் கிட்ட கொடுத்துட்டேன் மிஸ்டர் வருண்."

"தாங்க்ஸ் டாக்டர்...ஆரி?"

"யாதிரா"

"தாங்க்ஸ் டாக்டர் யாதிரா."

அவ்விடத்திலிருந்து கிளம்ப நினைத்தவள் இது தன் இடம் இல்லை என தெரிந்தும் கனவுகள் கரைவதைக் கண்டு சும்மா இருந்துவிட முடியவில்லை அவளால்.

"எல்லா கஷ்டங்களுக்கு பின்னாடியும் காரணம் இருக்கு. சீக்கிரமே உங்கள படத்துல பார்ப்பேன் நு நான் நம்புறேன். ஓகே?" என புன்னகைத்துவிட்டு கிளம்பினாள்.

தைரியம் சொல்பவர்களுக்கு வாய் மட்டும் தெரியும், வலி அல்ல. வருண் இவளின் வார்த்தைகளை உதாசீனப்படுத்தினான். ஆறுதல் கேட்கும் நிலைமையில் அவன் இல்லை. அல்லல்படாதவர்களுக்கு ஆறுதல் கூறும் அருகதியும் இல்லை.

"எங்கே அந்த மேனேஜர். அன்றே அவள் எழுதிக்கொடுத்த கிரீமை இன்னும் என் கண்ணில் காட்டவில்லை. நான் படத்தில் நடிப்பதில் இவருக்கும் தானே கமிஷன் காசு கொட்டுகிறது," கொந்தளித்தான் வருண். மேனேஜரைக் கூப்பிட்டு கிரீம் பற்றி விசாரித்து உடனடியாக வாங்கி வருமாறு கட்டளையிட்டான். ஒரு கிரீமினால் தான் இழந்த, இழக்கப்போகும் வாய்ப்புகளை மீட்டெடுக்க முடியாதென அறிந்தும் இருக்கும் ஒரே வழியில் நம்பிக்கை வைத்து தானே ஆகவேண்டும்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro