யாதிரா - 8

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஐந்தாம் நாள்

தன் இரண்டாவது வீடான ஆல் வெல் மருத்துவமனையில் யாதிரா அடியெடுத்துவைத்தாள். நேற்றைய சர்ஜரி முடித்த பேஷண்ட்களை கூர்மையாக கவனித்தாள். மற்ற மருத்துவர்களை மீட்டிங் இல் சந்தித்து சில சிக்கலான கேஸ் பற்றி கலந்துரையாடினாள். வருணின் அறைக்கு வரும்போது மணி 9.30 ஆகியிருந்தது. அரை மணி நேரம் தாமத்ததில் வருண் என்ன என்னவோ நடத்திவிட்டான்.

அவன் அறையை நெருங்கியவள் அறையின் வெளியே மேனேஜருடன் இரு புதியவர்கள் பேசுவதைக் கண்டாள். ஓர் ஆணும் பெண்ணும் டிராவல் சூட்கேஸுடன்(travelling suitcase) நின்றனர். ஒரு வேளை வருணின் மும்பை நண்பர்கள் ப்ளைட் பிடித்து வந்திருக்கிறார்களோ என யோசித்தவள் அருகில் சென்று மேனேஜருக்கு வணக்கம் வைத்தாள்.

மேனேஜர் அவ்விருவரையும் அறிமுகப்படுத்தாமல் திருட்டு முழி முழித்தபோதே யாதிராவுக்கு புரிந்துவிட்டது இவர்கள் நண்பர்கள் அல்ல என. சும்மா விடுவாளா.. நீங்க சொல்லாட்டி என்ன நானே கேட்கிறேன் என யார் இவர்கள் என கேட்டுவிட்டாள்.

"இவங்க மேக்-அப் ஆர்டிஸ்ட். இன்னைக்கு வருணோட இண்டர்வியூவுக்கு மேக்-அப் போட வந்திருக்காங்க."

"அப்படியா.. குட்! சரி, கோரோணா டெஸ்ட் எடுத்தீங்களா?" விருந்தாளியிடம் சாப்டீங்களா என கேட்பது போல் புன்னகையுடன் யாதிரா திரும்பிக் கேட்டாள்.

"இல்ல எடுக்கல."

"அப்போ இந்த வார்ட் பில்டிங்க் கிட்டயே நீங்க நிற்க கூடாது. என்ன சார் இது, உங்களுக்கு தான் தெரியும்ல. விசிட்டர் யாருக்கும் அனுமதி இல்லைன்னு. நீங்க மிஸ்டர் வருண் கூட இருக்கிறதுக்கு பர்மிஷன் கொடுத்ததே பில்டிங் விட்டு நீங்க வெளிய போக மாட்டீங்கன்ன கண்டிஷன்ல தான். இப்போ புதுசா ஆள கூட்டிட்டு வந்துருக்கீங்க."

"இது வருணுக்கு ரொம்ப முக்கியமான இண்டர்வியூ. மேக்-அப் ரொம்ப முக்கியம்."

"கோரோணா டெஸ்ட் இல்லாம முடியாது. இண்டர்வியூ எடுக்கிற கேமரா மேனும் ஜர்னலிஸ்ட் உம் டெஸ்ட் எடுக்கனும். ரிசல்ட் வர ஒரு மணி நேரம் ஆகும்"

"ஆஆஆ? சரி, ஒரு மணி நேரம் ஒகே தான். எடுக்க சொல்லிடுறேன். ஆனா நியூஸ் ஆளுங்க வர்ரதுக்குள்ள இப்பவே வருணுக்கு மேக்-அப்...."

"சத்தியமா டெஸ்ட் பண்ணாம உள்ள அனுப்ப முடியாது. அவங்க இப்ப எதையும் தொடாம இந்த பில்டிங் லேர்ந்து கிளம்பனும். ஐம் சாரி." யாதிரா இரும்பு பிடியாய் இருக்க மேனேஜர் வருணுக்கும் யாதிராவுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவிக்க யாதிராவுக்கே பாவமாக இருந்தது. இந்த இண்டர்வியூ வருணுக்கு எவ்வளவு முக்கியம் என அவள் அறிவாள். அதுவும் இந்த இண்டர்வியூ தோற்றத்துக்காக நடத்தப்படும் ஒன்று என்றும் அறிவாள்.

"Excuse me, one minute. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நானே வருணுக்கு மேக்-அப் போட்டுவிடுறேன். நீங்க மேக்-அப் பேக் ஐ வச்சிட்டு போங்க. டிஸ்போஸபல் பிரஷ்(disposable brush), ஸ்பாஞ்ச் எல்லாம் வச்சிருக்கீங்கள்ள?" இவளின் திடீர் கோரிக்கையைக் கேட்டு திடுகிட்ட இருவரும் மேனேஜரைத் திரும்பி பார்க்க மேனேஜர் சைகைக் காட்டினார். சூட்கேஸை வைத்துவிட்டு இருவரும் கிளம்பினர்.

"வருண் கிட்ட..."

"நான் சொல்லிக்கிறேன். நீங்க ஜர்னலிஸ்ட் ஆளுங்களுக்கு டெஸ்ட் எடுக்கிற வேலைய கவனிங்க"

சூட்கேஸை இழுத்துக்கொண்டு யாதிரா அறையினுள் நுழைந்தாள். நீண்ட பெருமூச்சு விட்டாள். எவ்வளவு திட்டு வாங்கிட்டோம், அதில் இதையும் சேர்த்துக்குவோம்.

"மிஸ்டர் வருண், உங்களுக்கு மேக்-அப் பண்ண வந்திருக்கேன்"

வருண் அவளை ஏறெடுத்துப் பார்த்தான், "scalpel பிடிக்கும் கைகளுக்கு பிரஷ் பிடிக்க தெரியுமா?"

"தெரியுமோ இல்லையோ என் கிட்ட சொல்லாம திருட்டு தனமா இண்டர்வியூ ஏற்பாடு பண்ணுனா இது தான் நடக்கும். அவங்களுக்கு கோரோணா டெஸ்ட் எடுக்காம இந்த பில்டிங் உள்ள கூட வர கூடாது மிஸ்டர் வருண்."

இப்போது வருண் பெருமூச்சு விடும் தருணம். "இண்டர்வியூ நடக்குமா நடக்காதா?"

"நடக்கும். இது உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியும். ஜர்னலிஸ்ட்கு கோரோனா டெஸ்ட் ஏற்பாடு பண்ண மேனேஜர் போயிருக்கார்."

பேக் ஐ திறந்தவள் உள்ளிருந்த எண்ணிலடங்கா திரவியங்களையும் பிரஷ்களையும் கண்டு திக்குமுக்காடினாள். பின் சுதாரித்தவளின் விரல்கள் muscle memory போல் அதாவது ஒரு முறை சைக்கிள் ஓட்டினால் வாழ்னாள் முழுக்க மறக்காதது போல் டக் டக் என ஒவ்வொரு கிரீமாய் எடுத்தன.

"ஆர் யூ ஒகே மிஸ்டர் வருண்?" தன் விரல்களில் moisturiser ஐ வைத்துக்கொண்டு அவனின் முகத்தில் தடவுவதற்கு முன் ஒரு முறை பர்மிஷன் கேட்டாள்.

"வழியில்ல. ஸ்டார்ட் பண்ணுங்க டாக்டர் யாதிரா."

ஆண்களின் மேக்-அப் விஷேசமானது. மேக்-அப் போட்டிருப்பது தெரிந்தால் அவர்களின் ஆண்மைக் கேள்விக்குள்ளாகுமாம். ஆனாலும் மேக்-அப் போடவேண்டும். பூசிய மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்.

வருணின் கருவளையங்களை concealer வைத்து மறைத்தாள். கண் இமை முடிகளை curl செய்தாள், நீளமாய் காட்ட மஸ்காரா தடவினாள். அங்கும் இங்கும் தென்பட்ட கரு புள்ளிகளை மறைத்தாள். லிப் பால்ம்(lip balm), தடவியதும் லிப் டிண்ட்(lip tint) ஐ பூசினாள். பின் பயன்படுத்திய பிரஷ் எல்லாவற்றையும் வீசினாள். கண்ணாடியை நீட்டினாள்.

"நல்லா இருக்கு! I didn't expect you to be this good."

"காலேஜ் படிக்கும்போது செமஸ்டர் லீவில் கல்யாண பெண்களுக்கு மேக்-அப் போட்டு காசு சம்பாரிச்சேன். இப்ப உதவுது. டிரஸ் மாத்த போறீங்களா மிஸ்டர் வருண்?"

இக்கேள்விக்கு வருணின் முகம் சிவந்தது. "இல்ல, ஷர்ட்லஸ்(shirtless) ஆ இருந்தா பெட்டர் நு மேனேஜர்..."

"ஒகே, அவரோட அட்வைஸ் ஐ கேளுங்க."

கிளம்ப ஆரம்பித்தவளை வருண் நிறுத்தினான், "டாக்டர் யாதிரா, ஒரு ஹெல்ப்"

யாதிரா அவனின் கோரிக்கைகாக காத்திருந்தாள்.

"இந்த டிரிப் ஏத்துற மாதிரி செட்-அப் பண்ண முடியுமா?" முழுங்கி தயங்கி கேட்டான். யாதிரா சிரித்தாள்!

"கைய காட்டுங்க வருண், குத்தி டிரிப் ஏத்துறேன்," என அவன் கையைப் பிடிக்க பயத்தில் அவன் பின்வாங்கினான்.

"ஒரு ஜாலிக்கு தான்! காலி பாட்டில் ஏத்துனா கண்டுபிடிச்சிருவாங்க. இந்த காலத்துல எல்லாத்தையும் ஸ்லோ மோ(slow mo) ல போட்டு குளு(clue) கண்டுபிடிக்கிறாங்க. வேணும்னா ஒன்னு ரெண்டு gauze ஒட்டுறேன். "

"தாங்க்ஸ்!"

பேஷண்ட் இன் உடலை மீட்டெடுக்க அவர்களின் வாழ்க்கையையும் மீட்டெடுப்பது அவசியம்.

அவளின் வருகை வருணுக்கு புத்துணர்ச்சியை அளித்தது. வேறு யாரோ இவனுக்கு மேக்-அப் போட்டிருந்தால் உடலையும் மனதையும் இந்த அளவு கவனித்திருக்க மாட்டார்கள் என வருண் உணர்ந்தான். முன் ஆக்கிரமித்திருந்த பயமும் குழப்பமும் தெளிந்த நீரோடையாய் அமைதிக்கொண்டது. இப்புதுணர்ச்சியுடன் ஜர்னலிஸ்ட் ஐயும் அவர்களின் மூலம் வெளியுலகத்தையும் சந்திக்க ஆவலானான் வருண்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro