1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பார்வதிம்மா" என்றார் குரலில் வெறுமையும் சோகமும் கலந்து.

எங்கோ வெறித்து கொண்டிருந்த பார்வதிக்கு அவரின் குரல் மட்டும் கேட்டிட மெதுவாய் திரும்பி, "என்னண்ணா?" என்றார் அமைதியாய்.

அவர் குரலில் வாழ்க்கையின் மீது வெறுப்பா? கோபமா? சோகமா? எதையும் அறிய முடியவில்லை.

ஆனால் எதுவோ ஒன்று சூறாவளியாய் அவர் வாழ்வில் பலமாய் தாக்கியிருக்குறது என்று மட்டும் எதிரிலிருப்பவர் ஊகித்து விடலாம்.

அத்தனை மென்மை அந்த முகத்தில்.

"பார்வதிம்மா! கையில இருந்த கொஞ்ச காசும் காலிம்மா. காசு குடுத்தா தான் அடுத்த வேலை இல்லைன்னா எதுவும் ரெடி பண்ண மாட்டேன்றாங்கம்மா." என்றார் சுரத்தே இல்லாமல் சுரதன்.

"இன்னும் எவ்ளோ வேணும்ணா?" என்றார் கைகளை பிசைந்து என்ன செய்வது என்று தெரியாமல்.

"அஞ்சாயிரம் கிட்ட தேவை படும்மா." என்றார் துக்கம் தொண்டையடைக்க.

வீட்டில் மருந்துக்கு கூட பத்து பைசா இல்லை. எல்லாவற்றையும் கொடுத்தாயிற்று. இப்போ என்ன செய்வது? என்று என்ன யோசித்தாலும் பணத்தை எப்படி கொடுப்பது என்று தெரியாமல் தவித்தார்.

அப்பொழுது அது கண்ணில் பட, மனதில் நிறைந்த வலியுடன் தன் கழுத்தில் இருந்த ஒற்றை பொட்டு தங்க தாலியை கழட்டி கொடுத்தார்.

"பார்வதிம்மா!" என்றார் சுரதன் மனம் வலிக்க கண்ணீரோடு.

"என்ன பார்வதி இப்படி பண்ணிட்ட?" என்றார் வந்திருந்த ஒரு சிலரில் இருந்த உறவினர் ஒருவர்.

வெறுமையாய் ஒரு புன்னகை பூத்தவர்.

அங்கே படுத்திருக்கும் தன் கணவனை காட்டி, "எனக்கு இதை கொடுத்த உயிரே அங்க இருக்கு. அவரோட வாழ்வுக்கு தான் இது உதவி செய்யல... அட்லீஸ்ட் அவரை அடக்கம் செய்யவாவது உதவட்டும்." என்றார் பார்வதி யாரையும் பாராமல்.

வாய் திறக்கவில்லை அவர். அந்த உறவினராலும் உதவ முடியாத நிலை. அவரால் மட்டுமல்ல அங்கு இருக்கும் யாருமே மனமிருந்தும் உதவ முடியாது. அப்படி உதவினால் நாளை அவர்களின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும். பிறகு அவர்களுக்கு உதவ யாரும் இல்லாமல் இருப்பர். அப்படி ஒரு சதியால் சாபம் வாங்கி வந்திருந்தார்கள் பார்வதி குடும்பத்தினர்.

"போங்கண்ணா... இங்க இருக்க யாராலையும் நமக்கு உதவ முடியாத நிலை. இதை வச்சு வேலையை. பாருங்க." என்றாள்.

"நான் தரேன்னு சொல்றனே மா. நீ தான் கேட்க மாட்டேங்குறே." என்றார் ஆற்றாமையாய்.

"அண்ணா... நீங்க இது வரைக்கும் எங்களுக்கு செய்றதே பெரிய உதவி. அதுக்கே எங்களால திருப்பி செய்ய முடியாது. இப்போ எங்களுக்கு உதவிட்டு இதுக்கும்மேல உங்களுக்கு எங்களால தொந்தரவு வந்துச்சுன்னா என்னால தாங்க முடியாதுண்ணா. நான் ஒண்டி கட்டை தானே... இனி என் காலம் அப்படியே ஓடிடும். விடுங்கண்ணா." என்றார் பார்வதி.

குண்டூசி விழுந்தாலும் அப்படி சத்தம் ஒரு கேட்கும். அங்கே அப்படி ஒரு அமைதி. பார்வதியின் கணவர் பாலுவின் மறைவுக்கு வந்திருப்போரை எண்ணிவிடலாம். பதினைந்து பேர் இருப்பார்கள். அவ்வளவு தான்.

நாம் இப்பிறவியில் வாழ்ந்த வாழ்வுக்கு ஆதாரம் நம் மறைவில் கூடும் மக்களை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பார்கள். இங்கோ அப்படியே தலை கீழ்.

இங்கு யாருமே இல்லையே அப்படியென்றால் இவரின் வாழ்க்கை முறை சரியில்லை என்று நினைத்திடாதீர்.

அது தான் தவறு. யாருக்கும் தீங்கு செய்யாத, மரணத்தின் போதும் மற்றவருக்கு உதவிச் சென்ற மிக நல்ல மனது படைத்த மனிதன் பாலு.

வந்திருப்போர் சொற்பமாயிருந்தாலும் அவரின் மறைவுக்கு தன் வீட்டில் ஒரு மரணம் விழுந்ததாய் எண்ணி உண்ணாமல் வீட்டிற்குள்ளேயே அழும் உறவுகள் எத்தனை எத்தனை...??? அவ்வளவும் ரத்த சம்பதில்லாத உறவுகள் தான்.

ஆனால் அவரின் வாழ்வை இனிமையாய் வேண்டாம் சாதாரணமாக கூட வாழவிடமால் அவர் எவ்வளவு ஓடினாலும் சுற்றி நின்று துரத்தி துரத்தி துன்புறுத்தியவர்கள் வேறு யாருமல்ல அவரின் ரத்த சொந்தம் தான்.

அவ்வளவுக்கும் காரணம் ஒன்றே ஒன்று தான்... அது பாலு பார்வதியின் காதல் திருமணம் மட்டும் தான்.

அவர்களின் திருமணத்தில் ஆரம்பித்தது... இதோ அவரை சவக்குழியில் தள்ளும் வரை ஓயவில்லை... இனியும் ஓயுமா தெரியவில்லை... அப்படி என்னதான் நடந்தது... சீக்கிரமே சந்திப்போம்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro