வெல்வோம் கொரோனாவை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பருவகாலம் பலவாம்..,
பாராத காலமொன்று வந்ததின்று..,
பாருலகமே பயந்திடும்...,
உயிரெடுக்கும் ஓருயிரி -"கொரோனா"
உருக்கொண்ட கார்காலம்..,

கொல்லும் உயிரி உலகம் சூழ..,
மனதில் சூழ்ந்தது கருமேகம் ..,
நுண்ணுயிரில் நினையாதிருக்க,
மண்ணுயிரோ முடங்கியது மண்வீட்டில்..,

சுற்றம் ஒருசேரினும்..,
நம் சூழ்நிலை ஒன்றல்ல...,
பிணி ஒருபுறம்..,
பசி ஒருபுறம்...,
சுவையுணவு ஒருபுறம்..,
சுருங்கிய வயிறு ஒருபுறம்..,
சூது விளையாடும் கும்பலொருபுறம்..,
வீட்டுச்சுமையால் வாடுவோர் ஒருபுறம்...,
மதுதேடுவோர் ஒருபுறம்...,
மண்சேர்வோர் ஒருபுறம்...,
நினைவுக்கூறுவோர் ஒருபுறம்...,
நிலைக்கண்டு வருந்துவோர் ஒருபுறம்...,

தூய்மை படைத்திடும் துப்புரவாளர்..,
நம்முயிர் காத்திடும் காவலர்...,
கொரோனாவை அழித்திடும் மருத்துவர்...,
நீலம் பழுப்பு வெண்ணிறம்அணிந்துலவும்
மண்ணுலகம் கண்ட மூதேவர்கள்..,

அலட்சியம் அறவே அண்டாது..,
அரசின் முயற்சியை போற்றுவோம்..,
சுயஒழுக்கம் நாம் கொள்வோம்..,
சொல்வதை கேட்டு செயல்படுவோம்..,

தூய்மை ஒன்றை பின்பற்றி...,
துடிப்பும் விழிப்பும் நாம்கொண்டு..,
வாட்டிடும் கொரோனா வதைத்திடுவோம்..,
வசந்தகாலம் விதைத்திடுவோம்...,

போட்டிக்கான கவிதை .. என்னவரின் எழுத்துநடையில் என் எழுத்துக்கு உறுதுணையாய் எழுதிய கவிதை.. அவர் அயல்தேசத்தில் தனித்திருக்க அவரின் பாதுக்காப்பில் நான் தவித்திருக்க என் பாதுகாப்பில் அவர் பயந்திருக்க தொலைத்தூர பிரிவு எங்கள் காதலை வலுப்படுத்தும் இக்காலத்தில் இருவரும் இணைந்து எழுதிய இக்கவிதை மிகச்சிறப்பே ..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro