1.முன்னோட்டம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"எனி ட்ரிங்க்ஸ் பார் யு சார்?" என்று கேட்ட விமான பணிபெண்ணின் முகத்தை கூட பார்க்காது தன் இடக்கையால் அலட்சியமாக வேண்டாம் போ என்று சைகை காட்டியபடி வலக்கையில் உள்ள மொபைலை பார்த்து கொண்டிருந்தான் வேல்விழிமணியன்.

"குட் ஈவனிங் சார்! திஸ் இஸ் கேப்டன் ஸ்பீகிங். புட் யுவர்  பெல்ட்ஸ் ஆன். வீ  ஆர் கோயிங் டு லேன்ட்." என்று குரல் கேட்டவுடன் தன் மொபைலை பாக்கெட்டில் போட்டுகொண்டு சீட்  பெல்ட்டை சரி செய்தவனின் கேசம் காற்றிற்கு அங்கும் இங்கும் உருண்டோட ஒற்றை விரலால் அதை ஒரு பொருட்டாய்  மதியாமல் தன் விரலால் ஒதுக்கியவன் விழி மூடி சிறிது நேரம் அமர்ந்தான்.

பிளைட் தரை இறங்கியதும் "இட்ஸ் ஹாப்பி  டு ஹவ் எ ட்ரிப் வித் யு சர்!" என்றார் கேப்டன்.

சிநேகமாய் ஒரு சின்ன தலையசைப்பின் சிரிப்போடு விருட்டென்று இறங்கினான் படிகளில்.

"ஹலோ! யா ஜான்! இஸ் தேர் ஆல்  கோயங் குட்" என்ற கேள்வியோடு தன் பி.ஏ ஹரியை பார்க்க, கிழே இருந்து ஓடி வந்தவனின் கரங்களில் தன் லேப்டாப்பை லாவகமாக வீசியபடி வேக எட்டுகளில் தன் காரினை நெருங்கி இருந்தான்.

"எஸ்! ஐ வான்ட் யுவர் அட்டென்ஷன் தேர் ஒன்லி ஹண்டில் ஐ அம் பேக்" என்று மொபைலை துண்டித்து பாக்கெட்டில் போட்டபடி பின் சீட்டில் ஏறிக்கொள்ள ஹரி முன் சீட்டில் டிரைவரின் அருகில் அமர்ந்து கொண்டான்.

வளர்ந்து கெட்டவன் என்று சொல்லுமளவிற்கு ஆறடிக்கு மேல்  உயரம், பெண்களெல்லாம் விரும்பும் பால் வெண்ணை நிறம் அல்லாமல் கோதுமையின் நிறம், அடர்ந்து அடங்காமல் அலட்சியாமாய் விரிந்திருக்கும் இரு  புருவங்களுக்கு கீழ் பார்ப்பவர்களை தைரியமாய் எதிர்கொள்ளும் தீர்க்கமான பார்வை, சற்று நீண்ட மூக்கு, அளவாய் வெட்டப்பட்ட மீசைகளுக்குள் மறைந்து கிடக்கும் மேலுதடு என பார்க்கும் பெண்களை பார்க்காமலே வசீகரிக்கும் ஆண் வேல்விழிமணியன்.

சீறி பாயும் புயலென பாய்ந்து சென்னை நகரத்தினில் நுழைந்த வாகனம் மக்களின் நெரிசலால்  நிறைந்திருக்க ட்ராப்பிக்கில்  நின்றது.

"வாட் தி ஹெல் மேன்? இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் போய் சேர?" என்று பாவமாய் பார்த்த டிரைவரை கோப வார்த்தைகளால் கடித்து துப்பினான்.

அவனை நன்கு அறிந்தவர் என்பதால், "இன்னும் பத்து நிமிஷத்துல போய்ரலாம் தம்பி டென்ஷன் ஆகாதிங்க" என்று பொறுமையாய் பதிலளிக்க சற்று சமாதானமானவன் "சாரிண்ணா" என்றான் ஒற்றை வார்த்தையில்.

"பரவால்ல தம்பி. உங்களை சின்ன வயசுலர்ந்து பார்க்கறேன் உங்களை பத்தி எனக்கு தெரியாதா?" என்று முடிவில் "இதோ வீடு வந்தாச்சி" என்று வீட்டின் பெரிய கேட்டிற்குள் நுழைந்து வண்டியை நிறுத்தினார்.

"ஹரி கெட் மை லக்கேஜஸ் இன்" என்று உள்ளே நாலைந்து எட்டுகளில் சென்றவன் அங்கே இருந்தவர்களை கண்டு எரிமலையென வெடித்து கத்தினான்.

"ஹொவ் டேர் ஆல் யு இன் மை ஹோம்." என்று வாசலை நோக்கி குரல் கொடுத்தான்.

"முத்து அண்ணா, சசி அம்மா " என்றான்

வீடு வேலைகளை பார்த்துகொள்ளும் சசி அம்மாவும் டிரைவர் முத்துவும் அவனின் முன் வந்து நின்றனர்.

"யார் இவங்கலெல்லாம் உள்ள விட்டது? நான் போய் அம்மாவ பார்த்துட்டு வரதுக்குள்ள இந்த இடம் காலியா இருக்கனும். என் கண்ணுல இவங்க யாரும் மறுபடியும் படக்கூடாது. காட் இட். கம ஆன் குயிக் கிளியர்" என்று மேலேறி மறைந்தான்.     

       

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro