பகுதி 15

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காற்றாய் மாறி காதலிக்கிறேன் கண்ணே ஒரு முறை சுவாசம் கொள்
நானும் உன்னை சம்மதிக்கிறேன் என்றே இங்கொரு வார்த்தை சொல்
மன்னவனே மன்னவனே உயிரில் உயிராய் கலந்தவனே......

சோபாவில் தலைக்குக் கை கொடுத்து சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தான் மனோ.

அவனைப் பார்த்தவள்
"ஏன் தான் உங்களை பார்த்தேனோ அன்னைல இருந்து இப்போ வர கண்ணுக்குள்ளேயே நிக்கிறீங்க அய்யோ என்னோட லாலிபாப் சமத்தா தூங்குறீங்களா??இதோ வரேன்"என்றவள் அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

"சார் சார்"மெல்லிய குரலில் கூற...
(பாத்து பாத்து வாய்க்கு வலிக்க போகுது சத்தமா கூப்பிடுமா)

அவன் அசையாமல் இருக்க
எழுந்து நின்று அவன் தலையை வருடினாள்.

"நிலா மா "அவன் முணங்க

"நிலா வா அது யாரா இருக்கும்"என எண்ணியவள் அவனை எழுப்பினாள்.

சோர்வுடனே கண்களைத் திறந்தவன்
"என்ன "என்று கண்களாலே கேட்க

மேஹா அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்கே அவள் பார்ப்பது ஏதோ போல் இருக்க ஹலோ எனக் கூறி சொடக்கு போட்டான்.

அதில் தெளிந்தவள் "ஆன் நீங்க தான் இன்னைக்கு டீ போடணும் ஆனா"அவள் கூறி முடிப்பதற்குள்

"ஆமா நான் உனக்கு என்ன வேலைக்காரனா??உனக்கு வேணும்னா நீ போட்டு குடி ஏற்கனவே தலைவலி அந்த பக்கம் போ உன்னைப் பாத்தாலே கடுப்பாகுது எப்போ என்னை விட்டுட்டு போவியோ அப்பதான் நான் நிம்மதியா இருப்பேன்"எனக் கூறி அவளைப் பார்க்க

கண்களில் கண்ணீருடன் டீ கப்பை நீட்டினாள்.

அவன் அவளைப் பார்த்து முழிக்க

"நீங்க தான் டீ போடணும் நீங்க ரொம்ப டையார்டா இருக்க மாதிரி இருக்கு அதான் நானே டீ போட்டுட்டேன் இ்தாங்க சார் நான் சொல்ல வந்தேன் "என்றவள் அவன் முன் இருந்த டேபிளில் டீ கப்பை வைத்து விட்டு சமையலறைக்குச் சென்று விட்டாள்.

"அய்யோ"என தலையில் அடித்துக் கொண்டவன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஏண்டா மனோ ச்சச இப்படி பண்ணிட்டியே அவ ரொம்ப பீல் பண்ணிருப்பால்ல"என்றவன் சமையலறைக்கு செல்ல எழுந்திருக்க

"இந்தாங்க சார் பிஸ்கட் சாப்பிடுங்க நான் சீக்கிரம் சமையல் ரெடி பண்ணிடுறேன்" என்று கூறி திரும்பி நடந்தாள்.

"மேஹா "என மனோ அழைக்க

திரும்பாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

"மேஹா சாரி ஏதோ டென்சன்ல கத்திட்டேன் ப்ளீஸ்  என்ன பாரு
என்கிட்ட பேசு"எனக் கூற

அவன் குரலிலே அவன் வருந்துவதைக் கண்டவள் மனம் தாங்காமல்
"அய்யோ என்னாச்சு சார் அந்த சொட்ட தலை எச்ஓடி என்ன சொன்னாரு???அவருக்கு இதே தான் பொழப்பு மனிசன பாம் போட்டு தூக்கிருவோம்"என்றவள் அய்யோ என நாக்கைக் கடிக்க

அவள் செய்கையில் சிரித்தவன்
"வாயாடி வா இங்கே உட்காரு அப்புறமா சமைக்கலாம்" என அருகில் உட்கார வைத்தான்.

"சாரி நான் ரொம்பவே டென்சன் ஆகிட்டேனு நினைக்கிறேன் உன் கண்ணுல கண்ணீரைப் பாத்ததும் ஒரு மாதிரி ஆயிடுச்சு சாரி மா"எனக் கூற

"அய்யோ சார் வேணாம் பரவால விடுங்க"என்றவள் "நான் நல்லா தான் டீ போட்டுருப்பேன் தைரியமா குடிக்கலாம்"

மெலிதாக புன்னகைத்தவன்
"அதெல்லாம் நான் நம்ப மாட்டேன் பா நீ இத குடி எனக்கு வேற போட்டுக்கலாம்"எனக் கூறிக் கண்ணடிக்க

அவன் செய்கையில் அவள் விழி விரித்து பார்க்க

"குடி னு சொன்னேன்"எனக் கூறினான்.

"அது அது இது உங்களுக்கு பிடிச்ச இஞ்சி டீ குடிச்சா நல்லா இருக்கும் அதுனால தான்"எனக் கூறி அவனைப் பார்த்தாள்.

"எனக்கு இஞ்சி டீ புடிக்கும்னு உனக்கு எப்படித் தெரியும் "அவன் புருவத்தை உயர்த்த

"எத்தனை டைம் கேண்டீன்ல பாத்திருக்கேன்"என்றவள் அப்போது தான் உணர்ந்தாள் தான் உளறியதை.

"ஆன் ஆன் நான் எனக்கு டீ எடுத்துட்டு வரேன்"ஒரே ஓட்டமாக சமையலறைக்கு ஓடி விட்டாள்.

"அய்யோ மேஹா இப்படி யா உளறுவ மண்டு  மண்டு நோக்கு விவஸ்தையே இல்லை டி"அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டு தலையில் அடிக்க

"சொன்னா நானே அடிப்பேனே நீயே உன்னை ஏன் அடிச்சுக்கிற மேஹா"எனக் கூறிச் சிரித்தான்.

அவள் "அய்யோடா"உதட்டைச் சுழிக்க

"சரி சரி தள்ளு நான் இன்னைக்கு சமைக்க போறேன்"என்றவன் உள்ளே நுழைந்தான்.

"டீ சூப்பர் மேஹா நீ ஏதாச்சும் படிக்கணும்னா படி நான் செய்யுறேன் சரியா?"எனக் கூற

"படிக்கவா???அப்படிலாம் ஒன்னுமில்லையே"

"எக்ஸாம் வந்துரும்ல நீ படி போ"என்றவன் காய்கறிகளை எடுத்து கழுவ ஆரம்பித்தான்.

அவள் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்க

"நீ இன்னுமா போகல"

"இதோ போயிட்டேன்"என்றவள் மறுபடியும் வந்து எட்டிப் பார்க்க

" திருட்டுப் பூனை ஏன் எட்டிப் பாக்குது" என அவளைப் பார்க்காமல் காய்களை நறுக்கிக் கொண்டே கூறினான்.

"ஈஈஈஈஈ ஹெல்ப் வேணுமானு கேட்க வந்தேன்"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ படி போ"

"ம்ம்ம்க்ககக்கும் நான்லாம் எக்ஸாம்க்கே காலைல படிச்சுட்டு போய் எழுதுவேன் என்னை படிக்க சொல்லுறியே லாலிபாப்"என புலம்பியவள் உள்ளே சென்று புத்தகத்தை எடுத்து வைத்தாள்.

அவள் கல்லூரி சேர்ந்த ஒரு வாரத்திலேயே புத்தகம் வாங்கி கொடுத்து விட்டான்.

"படிக்கவே தோணலயே...என்ன பண்ணலாம்???"என யோசித்தவள்
"அவர பாக்கணுமே எண்ண பண்ணலாம்"என விரலை முகத்தின் கடவாயில் வைத்து யோசித்துக் கொண்டிருக்க.

அவள் என்ன செய்கிறாள் என பார்க்க வந்தவன்
"எந்த கோட்டையை புடிக்க இந்த யோசனை மேடம்??"

"ஆன் உங்கள புடிக்க தான்"

"என்ன "அவன் உணர்ச்சி வசத்தில் கத்த

"உனக்கு உன் வாய் உன் வாய் தான் எதிரி அய்யய்யோ முறைக்கிறாரே"

"அது அது வந்து"அவள் என்ன கூறி சமாளிக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள்.

"என்ன சொல்லி சமாளிக்கலாம்னு நினைக்கிறியாக்கும்" என மனோ கூற

"ஆமா அதெப்படி கண்டுபிடிச்சீங்க"
எனக் கூறி அய்யோ என தலையில் அடித்துக் கொள்ள

அவனுக்கு அவள் செய்கையில் சிரிப்பு வந்துவிட்டது.

"படி"என்றவன் சென்று விட

"அய்யோ மேஹா ஏண்டி இவ்ளோ கேவலமா உன் மைண்ட் வாய்ஸ் இருக்கு"தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் புத்தகத்தை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.(அவன பாக்காம இருக்க முடியலயாம்)

"என்ன இந்த பக்கம் மேஹா மேடம்??அடுத்து என்ன உளறலாம்,எப்படி சமாளிக்கலாம்னு வந்தியா"எனச் சிரித்துக் கொண்டே கேட்க

"அதுவா அது வந்து டவுட் சார் அதான்"

"என்ன டவுட்"என மனோ கேட்க

"அய்யோ டக்குனு ஒன்னும் வரமாட்டிங்குதே "என யோசித்தவள் திருத்திருவென முழித்தாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன் படிக்கலனா புக்கை ரூம்ல வெச்சுட்டு இங்கே வா ஏதாவது சமாளிக்கணும்னு உளறாத" எனக் கூற

"இத விட கேவலமா இவர்கிட்ட அசிங்க பட முடியாது "என நினைத்தவள் அவன் சொன்ன மாதிரியே செய்தாள்.

"என்ன செய்றீங்க சார்."

"அதுவா உனக்கு பிடிச்சது"எனக் கூறினான்.

"எனக்கா எனக்கு என்ன பிடிக்கும் "என மேஹா யோசித்துக் கொண்டிருக்க

"யோசி யோசி "மனோ கூற

"மேகி "

"இல்லை"

"தோசை"

"இல்லை"

"சப்பாத்தி"

இல்லை என அவன் உதட்டைப் பிதுக்க

அவள் ஒவ்வொன்றாக கூறிக் கொண்டே இருந்தாள்.

"அம்மா தாயே போதும் உனக்கு பிரியாணி பிடிக்கும் தானே"

"ஆஆ ரொம்ப ரொம்ப"

"அது தான் செய்யுறேன்"எனக் கூறியவன் அவள் வாயில் கேரட் துண்டை திணித்தான்.

அவள் கேரட்டை சாப்பிட்டுக் கொண்டே அவனைப் பார்த்துக் கொண்டிருக்க

"எவ்ளோ நேரம் தான் நின்னுட்டே இருப்ப டிவி பாரு"என்க

"என்ன துறத்துரதையே வேலையா வெச்சுக்கிறது"அவள் புலம்ப

அதைக் கேட்டு சிரித்தவன்
"சரி இங்கேயே உட்காரு"

"ம்ம்"வேகமாக தலையாட்டியவள் ஸ்லாபின் மேல் ஏற முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன் "இதுக்கு தான் வளரணும்"

அவனைப் பார்த்து முறைத்தவள்

"ஹலோ நான் ஹைட்டா தான் இருக்கேன்"எனக் கூற

ஓஹோ என வாயை மூடிக் கொண்டு சிரிக்க

அதனை கண்டு சிணுங்க ஆரம்பித்தாள்.

"அய்யோ அரை அடி இரு"என அவள் இடுப்பில் கை வைத்து தூக்கி உட்கார வைத்துவிட்டு அவன் வேலையை ஆரம்பிக்க

அவள் தான் என்ன நடந்தது என யூகிக்க முடியாமல் நெளிந்து கொண்டிருந்தாள்.
இன்னும் அவன் கை அவள் இடுப்பைச் சுற்றி இருப்பது போலவே தோன்ற அவனைக் கண் கொட்டாமல் பார்த்துக்
கொண்டிருந்தாள்.

"நீ இந்த காலேஜ் தானே இன்ஜினியரிங் பண்ண என்ன பாத்துருக்கியா"எனக் கேட்க

"இவரைப் பார்க்காமலா இருந்திருப்ப தினமும் அதிகமா பாக்குறதே இவரைத் தானே"என நினைத்தவள்

"அப்பப்போ கேண்டீன்ல என் பிரெண்ட் அபி உங்க பேவரெட் ஸ்டூடண்ட்"

"அபியைத் தெரியுமா??எனக்கு ரொம்ப பிடிக்கும் அவனை"

"தெரியுமே"எனக் கூறியவள்
அவன் கூட மட்டும் தானே மணிக்கணக்கா பேசுவீங்க என மனதில் நினைத்தாள்.

"உனக்கு சூப்பரா சமையல் செய்ய வருதே கத்துக்கிட்டியா??"

"ஆன் ஆமா சார்"

"சூப்பர் ஆனா எனக்கு வரப்போற மனைவிக்கு சமையல் செய்ய தெரிஞ்சிருக்க கூடாதுனு ஒரு ஆசை நான் தான் அவளுக்கு செஞ்சு தரணும்"அவன் கூற

"வரப்போற யா"அவள் கேட்க

"அது....நம்ம தான் டிவோர்ஸ் வாங்கிடுவோம்ல"எனக் கூறியவன் வெளியே சென்று விட்டான்.

"என்னை அவருக்கு எப்போமே பிடிக்காதா "என நினைத்துக் கண் கலங்கியவள் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.

அவனுக்கும் ஏதோ போல் இருக்க சோபாவில் அமர்ந்திருந்தவன் அப்படியே உறங்கி போனான்.

அவளுக்காக செய்தது அப்படியே வீணாய் போனது.
அவள் அவன் மேல் கொண்ட அளவுக் கடந்த காதலைப் போல

காலையில் கண் விழித்தவள் அவனுக்கு டீ போட்டு வைத்துவிட்டு,சமையல் செய்து மதியத்திற்கு டிபன் பாக்ஸில் எடுத்து வைத்து விட்டு கல்லூரிக்குச் சென்று விட்டாள்.

கண் விழித்தவன் அவளைத் தேட அவள் இல்லாமல் போக அவள் ஏதாவது எழுதி வைத்திருப்பாளா என ஏங்கியது மனோவின் மனம்.

எதுவும் இல்லாமல் போக மனம் வாடியவன்
மறுபடியும் தன் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டான்.

கல்லூரிக்குச் சீக்கிரமே சென்றவள்
எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்த தன்னவனின் நினைவுகளில் மூழ்கியிருந்தாள்.

அருகில் வந்தமர்ந்த சஜூ "என்னடி மேஹா ஏன் நேத்து மதியமே போயிட்ட"எனக் கேட்க

"தலைவலி டி"எனக் கூறிப் புன்னகைக்க

"ம்ம்ம் சரி "என்றவள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க மேஹா எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

மனோ வந்திருப்பானா என நினைத்தவள் அதை அறிந்துக் கொள்ள எண்ணி "சஜூ பேபி...இரு இப்போ வரேன்"என அவனைப் பார்க்கச் சென்றாள்.

மேஹாவின் செல்போன் சிணுங்க அதை எடுத்துப் பார்த்தவள் திரையில் "டெவில்"என மின்ன

அந்த பெயரைப் பார்த்துச் சிரித்தவள் அட்டெண்ட் செய்து காதில் வைத்தால் பெண்ணாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையில்.

"அறிவுக் கெட்ட முண்டம் எருமை பன்னி பன்னி எங்கடி போய் தொலஞ்ச போனவ அப்படியே மொபைலை குப்ப தொட்டில போட்டுட்டு போக வேண்டியது தான
எதுக்கு இப்போ மட்டும் அட்டெண்ட் பண்ண நேர்ல மட்டும் வந்த நீ செத்த "எனக் கத்திக் கொண்டே இருக்க

"அப்படிலாம் பேசாதீங்க அது தப்பு"என மெல்லிய குரலில் கூறினாள்.

"யாரு நீங்க??"

"நான் சஜூ"எனக் கூற

"அய்ய்ய் என் நேம் அஜூ னு உங்களுக்கு எப்படி தெரியும்??"

"ஆன் என்னோட நேம் சஞ்சனா என்ன சஜூனு கூப்பிடுவாங்க"எனக் கூற

"ஸ்வீட் நேம்"

"என்ன" அவள் கொஞ்சம் குரலை உயர்த்தி பேச

"உங்க நேம்லயே ஸ்வீட் இருக்குனு சொன்னேங்க"

"மேஹா வெளியே போயிருக்கா அவ வந்ததும் உங்க கூட பேச சொல்லுரேன்"என்றவள் கட் செய்து விட்டாள்.

"S(Aju) அவ நேம்ல என்னோடதும் இருக்கேஇப்போ தான் அமைதியா பேசுற பொண்ண பாக்குறேன் மேஹாவும் இருக்காலே பஜாரி முகம் தெரியாத பெண்ணிற்காக தன் தோழியைத் திட்டிக் கொண்டிருந்தான்.

மேஹா வந்ததும் அவளிடம் ஒன்று விடாமல் ஒப்பிக்க
"இவ்ளோ டீசண்ட்டாவா பேசுனான்"எனக் கூறிச் சிரித்தாள்.

சஜூ"என்ன" என்று முழிக்க

அவன் அப்படி தான் இடியட் பட் ரொம்ப நல்ல பையன் என்றவள்
"வா கிளாஸ்க்கு போவோம்"என அழைத்துச் சென்றாள்.

"நல்ல பையானா இப்படி திட்டுரான் இடியட் நிஜமாவே டெவில் தான்"அவனை அர்ச்சித்துக் கொண்டே சென்றாள்.

மேஹாவிற்கு கால் வர அதை அட்டெண்ட் செய்தவள்
"சொல்லு நாயே"

"பொண்ணும் என்னுது தான் கன்னும்
என்னுது தான்"எனக் கூற

"என்ன பக்கி உளறுர"

"ஆன் இப்போ ஒரு பர்பி பேசுனாங்களே அவங்கள சொன்ன"

"அடி வாங்காத நான் அப்புறமா கால் பண்ணுரேன்"

"ஒரு நிமிஷம் அந்த பர்பி இப்போ என்னைத் திட்டுனாங்களா மட்டும் கேளு டி ப்ளீஸ்"

"அவ ஏண்டா உன்னைத் திட்ட போறா??"

"வாய் பேசாம கேளு அவக்கிட்ட"

"ம்ம்ம சஜூ பேபி அர்ஜூவைத் திட்டுனியா??"

திருத்திருவென விழித்தவள் "இ...இல்லையே "எனக் கூற

"இல்"என மேஹா முடிப்பதற்குள்

"கேட்டுச்சு கேட்டுச்சு அவங்க திட்டுனாங்க எனக்குத் தெரியும் நாளைக்கு வரேன் உன்னைப் பார்க்க"

"எப்படித் தெரியும்??"மேஹா கேட்க

"தெரியும் வரேன்"என்றவன் கட் செய்து விட்டான்.

"நிஜமாவே நீ திட்டலையா???"

"திட்டுனேன் "சஜூ கூற

ஹாஹா என சிரித்தவள் முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

"டெவில்"மறுபடியும் திட்டிக் கொண்டே அவளும் சென்றாள்....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro