பகுதி 17

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சந்தோஷமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்து கொண்டேனே
ஜாமத்தில் விழிகிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ... காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா

அவளின் தேடலாக இருந்தவன் இன்று வெறும் தேடலாக மட்டுமே மாறுவான் என அவள் நினைக்கவில்லை.

காதல் மூன்று எழுத்து மந்திரம் அது.பலரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்வதும் அது தான் துன்பத்தில் மூழ்கடிப்பதும் அது தான்.

மூன்று வருடங்களுக்கு முன் அவள் நினைக்கவில்லை
தான் ஒருவரை உயிருக்கு மேல் காதலிப்போம் எனவும் அவரின் மேல் கொண்ட காதலுக்காகவே அவரை வேறொருவருக்கு விட்டுக் கொடுப்போம் எனவும்.

என்ன தான் அவள் அவளின் ஆசை நாயகனை விட்டுக் கொடுத்துவிட்டாலும் அவனைக் காணாமல் இருக்க இயலவில்லை.

அவளின் மூச்சுக்காற்று அவனல்லவா!!!!!!அவனில்லாமல் அவள் உயிர் வாழ்வதும் கடினம் தான்.

நமக்கு பிடித்தவர்கள் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் என்ற ஒரு எண்ணம் தான் அவளை அவனை விட்டு இவ்வளவு தூரம் வர வைத்தது.

இதோ இன்று பயணம் ஆகிறாள் தன்னவனைக் காண.
அந்த பேருந்தில் சென்னை-கோயம்புத்துர் என எழுதப் பட்டிருந்தது.

யாரிடமும் சொல்லாமல் என்னைத் தேட வேண்டாம் என மட்டும் எழுதி வைத்து வந்து விட்டாள்.

தன்னவனை தன் தோழிக்கு விட்டுக் கொடுத்த பின் வேறொருவரின் கணவரை நினைக்க கூடாது என மூளை கூறினாலும் மனம் அவள் பேச்சைக் கேட்பதில்லை.

ஒருமுறையாவது காண வேண்டும் என எண்ணம் தோன்ற உடனே கிளம்பிவிட்டாள்.

பேருந்தின் பயணம் ஆரம்பிக்க அவளின் நினைவலைகளும் தன்னவனைப் பற்றி நினைக்க ஆரம்பித்தது.

என்றும் முகத்தில் ஒரு வசீகர புன்னகை,இதழோரம் குறும்பு என வலம் வருபவள் சோகத்தின் மறு உருவமாய் அமர்ந்திருந்தாள்.

கோயம்புத்தூர் வந்து இறங்கியதும் ஏதோ ஒரு இனம் புரியா மகிழ்ச்சி அவளுள் ஏற்பட தன்னவன் மூச்சு காற்றே தனக்கு இத்தனை இதம் தருகிறது என்ற நினைவில் தன் தோழி சஜூவின் வீட்டிற்கு பயணமானாள்.

"ஏய் சூசு(சூப்பர் சுஜி😜) ஏண்டி இப்படி பண்ணுற மேஹாவ கண்டுபிடிச்சதும்
அவ முன்னாடி நாம கல்யாணம் பண்ணிக்க போறோம் நானும் முடிஞ்ச வரை தேடிட்டு தான் இருக்கேன் ஆனால் எங்கேயும் கிடைக்கல ரொம்ப கஷ்டமா இருக்கு டி நீயும் என்னை புரிஞ்சுக்காம ஏன் என்கூட பேச மாட்டிங்கிற எனக்காக டைம் ஸ்பெண்ட் பண்ண மாட்டிங்கிறனு சொன்னா நான் என்னடி பண்ணுவேன் மேஹா வோட அம்மா அப்பா அகிலா மா எல்லாரும் பாவம் டி அவள நினைச்சு வருத்தப்படுறாங்க"

அவள் அப்பொழுதும் மௌனம் காக்கவே எப்பொழுதும் அவன் கடைபிடிக்கும் ஆயுதத்தை கையில் எடுத்தான்.

இதுவரை வீடியோ காலில் கெஞ்சிக் கொண்டிருந்தவன் இரு இரு என்று ஒரு பாதுகாப்பான இடத்தில் மொபைலை வைத்து விட்டு நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்தவன் தலைக்கு மேல் கைகளை கூப்பி "பொண்டாட்டி ஐம் பாவம் டி புருசனை மன்னிச்சுக்கோ"அவன் கெஞ்ச

அவனுக்குத் தெரியாமல் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் "இப்போவும் இந்த குரங்கு சேட்டையை பண்ணணுமா??" எனக் கேட்க,

"என்னது"தலையை நிமிர்த்தியவன்  அவள் முகத்தைப் பார்க்க அவள் இதழோரம் இருக்கும் புன்னகையைக் கண்டு கொண்டான்.

"ஓஓஹோ நான் குரங்கு சேட்டை பண்ணுறேன் அப்படி தானே!!!! அவன் கேட்க"

"ஆமா ஆமா " அவள் தலையை மேலும் கீழும் ஆட்ட

"இந்த குரங்கு அங்க வந்தா என்ன பண்ணும் தெரியுமா"எனக் கூறிக் கண்ணடித்தான்.

அவனைப் பார்க்க முடியாமல் வெட்கத்தில் முகம் சிவந்தவள்"போடா"எனக் கூறினாள்.

"ஹா ஹா நீ போடா கூப்பிட்டா எவ்ளோ நல்லாருக்கு ஆனா நான் கேக்குறப்போ மட்டும் சொல்லாம கெஞ்ச விடு."

"அது அப்படி தான் "அவள் சிரிக்க

"இந்த அழகான தேவதையை எனக்கு தந்தது என் மேஹா தான் ஆனால் அவ இப்போ எங்க இருக்கானு தெரியல"அர்ஜூ கூற

"கண்டிப்பா நம்ம மேஹா வருவா அஜூ நீ பீல் பண்ணாத"எனக் கூறியவள் கதவு தட்டும் ஓசை கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள்.

"என்னடி ஓரக் கண்ணால எங்கயோ பாக்குற"அர்ஜூ கேட்க

"அப்பா வந்துட்டாங்க போல நான் அப்புறம் பேசுறேன் "எனக் கூறியவள் அவன் பேச வாய் எடுப்பதற்கு முன்பே கட் செய்து விட்டாள்.

இவ ஒருத்தி எனத் திட்டிவிட்டு மொபைலை கையில் வைத்து அவள் அழைப்பிற்காக காத்திருந்தான்.

திட்டிய அடுத்த நொடியே அழைப்பு வந்தது.
கையில் லாலிபாப் வைத்து சுவைத்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையை ரசித்துக் கொண்டிருக்கும் போது இவன் அவளைப் பார்த்து ரசித்த அந்த அழகிய நொடி அவனது நண்பர்களால் படமாக்கப் பட்டிருந்தது.
அது அவன் மனதைக் கவர்ந்த படம் அதுதான் அவன் மொபைல்,லேப்டாப் என அனைத்திலும்.

அவள் கால் செய்ததும் அந்த படம் வர சிரித்துக் கொண்டே அட்டெண்ட் செய்தவன் "பக்கத்து வீட்டு கதவை யாரோ தட்டிருக்காங்க அஜூ மா அதுதான சொல்ல போற"எனக் கூற

"ஈஈஈஈ ஆமா"

"இது தெரிஞ்சது தானே"அவன் சிரிக்க...

"நான் அப்பானு நினைச்சேன்"

"மிஸ்டர்.சந்து உன்னை மாதிரி வெட்டினு நினைச்சியா??" அர்ஜூ கலாய்க்க

"மரியாதையா கூப்பிடுடா "அவள் முறைத்தாள்(சந்திரனை சந்து ஆக்கிட்டான் பா😜)

"என்னடி அப்படி தான் கூப்பிடுவேன் மாப்பிள்ளைனு பம்புவாரு உங்க அப்பா"அவன் சிரிக்க

ஆஹான் அப்படியா எங்கப்பாவா உங்க பொண்ண கல்யாணம் பண்ணி தரலைனா நான் தற்கொலை பண்ணிப்பேன் அவ இல்லாம என்னால இருக்க முடியாதுனு காலுல விழுந்தது"இப்போது அவள் சிரிக்க ஆரம்பித்தாள்.

தன் குடும்பத்தை எண்ணி அஜூவைப் பிடித்திருந்தாலும் வேண்டாம் உன் மேல் காதல் இல்லை எனக் கூறிக் கொண்டிருந்தாள் சஜூ.

இதற்கு மேல் இவளிடம் கெஞ்சுவதை விடுத்து அவள் அப்பா விடம் கெஞ்சலாம் என அவள் வீட்டிற்கே சென்று விட்டான்.

முதலில் இதெல்லாம் சரிவராது என கூறினார்.

பின்பு  மிரட்டி பார்த்தார்.

அப்பொழுதும் அடங்காமல் அவரிடம் மறுபடியும் பேசப் போக சஜூவின் அண்ணா அஜூவை அடித்து விட்டார்.

இது தெரிந்த சஜூ அப்பா விடம் சண்டையிட இவ்வளவு நாள் அஜூ மட்டும் தான் காதலிக்கிறான் தன் பெண்ணிற்கு விருப்பம் இல்லை என நினைத்தவர்  இப்பொழுது தெரிந்து கொண்டார்.

அடி வாங்கிய பின்னும் அஜூ சஜூவிற்காக பேச வந்தான்.

"பிளீஸ் எப்படியாவது என்னை உங்க பொண்ணோட சேத்து வைங்க"என அவர் காலிலே விழுந்து விட்டான்.

ஏற்கனவே இவர்களின் காதலுக்கு அரைகுறையாக சம்மதம் கூறலாமா வேணாமா  என நினைத்தவர் அஜூவின் இந்த செயலில் முழுவதும் அவன் பால்
சாய்ந்து விட்டார்.

அவனின் காதலுக்கும் சம்மதம் தெரிவித்து விட்டார்.

மேஹாவை கண்டுபிடித்து அவள் முன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இருவரும் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இருவரும் தங்களை மறந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க மறுபடியும் கதவு தட்டும் ஓசை கேட்டது.

அவள் எட்டிப் பார்க்க

"என்னடி ஓரக்கண்ணால எட்டிப் பாக்குற"  என அஜீ கேட்க

"யாரோ தட்டுறாங்க இரு "என்றவள் மொபைலை கைகளில் எடுத்துக் கொண்டே சென்றவள் கதவினைத் திறந்தாள்.

கதவினைத் திறந்தவள் எதிரில் இருந்த மேஹாவைக் கண்டு அதிர்ச்சியில் மொபைலைக் கீழே போட்டு போட்டாள்..

கீழே விழுந்த மொபைலின் வழியே மேஹாவைக் கண்ட அஜூ கண்களை கசக்கி கசக்கி மறுபடியும் பார்த்தான்.

தன் கண்களால் தன்னையே நம்ப முடியவில்லை அவனால்.

உடனே கால் கட் செய்தவன் மேஹாவைக் காண கிளம்பிவிட்டான்.

மேஹாவைக் கண்டவள் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க "என்னடி அவ்ளோ அழகாவா இருக்கேன் இப்படி சைட் அடிக்கிற" எனக் கண்ணடிக்க

"மேஹா" கண்களில் கண்ணீருடன் சொல்ல

"நான் தான் நானே தான்"என மேஹா சிரிக்க

அவள் கன்னத்தில் அறைந்தவள் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அடிச்சுட்டு இப்போ லவ்ஸ்ஸா போடி போடி பசிக்குது வா வா உள்ளே போலாம் என்றவள் உள்ளே சென்றாள்.

சாப்பிட்டு விட்டு அனைவரையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தவள் கடைசியாக

நந்து என நிறுத்தி சஜூவைப் பார்த்தாள்.

"நல்லா இருக்கா டி இரண்டு பேபிஸ் அதுவும் டிவின்ஸ் தெரியுமா"

"சூப்பர்ல" என்றவள் மனமோ ஏதோ போல் இருக்க "நான் ரெஸ்ட் எடுக்கிறேன் டி டையார்டா
இருக்கு "என எழுந்து உள்ளே சென்றாள்.

அறைக் கதவினை திறக்க சென்றவளை சஜூ அழைக்க

"என்னடி "என மேஹா கேட்டாள்.

"மனோ சாரைப் பத்தி கேட்கலையே"என சஜூ கேட்க

மேஹாவையும் அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் வர ஓடிச் சென்று

அணைத்துக் கொண்டாள் சஜூவை.

"அழாதே அழாதே அவர் நல்லாருக்காரு டி அவராலையும் உன்ன மறக்க முடியாதுல குட்டீஸ்ல ஒரு பாப்பா நேம் கூட மேஹா தான்"
என சஜூ கூற ஏனோ

மனது பாரமாக இருக்க உள்ளே சென்று விட்டாள்.

"என் நேம் தான் வெச்சுருக்கீங்களா சார் பாப்பாவ எப்படி கூப்பிடுவீங்க தூக்கி கொஞ்சுவீங்க தான எனக்கு உங்களை பாக்கணும் போலவே இருக்கு "என்றவள் மெத்தையில் அமர்ந்து தன்னவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.

உள்ளே நுழைந்தவன்
"எங்கே அவ "எனக் கேட்க

உள்ளே என கைக் காட்டியவள் "அஜூஅவ பாவம் டா இப்போ தான் மனோ சார் பத்தி கேட்டா நீ எதுவும் அவளை கஷ்டபடுத்திறாத" எனக் கூற அவளை நிறுத்து என  கைகளால் கூறியவன் மேஹா இருக்கும் அறைக் கதவினை தட்டினான்.

மேஹா வந்து கதவை திறந்த அடுத்த நொடி அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தவன் "ஏண்டி ஏன் என்னை விட்டுட்டு போன உனக்கு அவர் தான் முக்கியம்ல அவருக்காக எங்களை விட்டுட்டு போயிட்ட எவ்ளோ நாள் தெருத்தெருவா அழைந்தேன் தெரியுமா???நீ என்றால் எனக்கு உயிர் டி நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் சொல்லு" என அவன் கத்த

மேஹா அவன் கூறுவது புரியாமல் அவனையே பார்த்தவாறு நின்றிருக்க
அந்த புதியவன் கூறியது என்னவோ அஜூ மற்றும் சஜூ விற்கும் கூட புரியவில்லை....




Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro