பகுதி - 22

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


வெள்ளை பூவே
நீ எந்தன் நிலவடி
எந்தன் வானை மறைகின்ற அழகி
உந்தன் உயிரை என் சுவாசம்
தொடுதேனா கூறடி வந்து கூறடி

நிலவே மலரே கவியே
அழகே அணையா ஒளியே
என் நெஞ்சுக்குள்ள வா வா

தன் டிபார்ட்மெண்ட்டினுள் நுழைந்த மனோ பார்த்தது இரண்டு பெண்கள்   அவன் கேபினில் அமர்ந்திருப்பதைத் தான்.

உள்ளே செல்ல காலடி எடுத்து வைக்க
அங்கே திவியோ "யாருடி இந்த மனோ சார் பேரு கொஞ்சோ நல்லா தான் இருக்கு சைட் அடிக்கிற அளவுக்கு வொர்த்தா இல்லையானு வேற தெரியல பாரு கடைசியில ஒரு சொட்டத் தலையன் வந்து நிக்க போறான்"என்றவள் நிலாவைப் பார்க்க அவளோ திவியை முறைத்துக் கொண்டிருக்க

"இன்னா டி ஆவுனா முறைக்கிற ஒருவேளை நீ எனக்கு ஒன்னு விட்ட முறைப் பொண்ணா இருப்பியோ???" திவி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு யோசிப்பதைப் போல் பாவனை செய்ய

"நிஜமாவே ஒன்னு விட்டுருவேன் பாத்துக்கோ அவரு எப்படியோ இருந்துட்டு போகட்டும் உனக்கு என்ன??"புருவத்தை தூக்கி நிலா முறைத்தாள்.

நிலாவின் முகத்தை இதுவரை பார்க்காமல் இருந்த மனோ திவியின் பாடலில் அவள் முகத்தைப் பார்த்தான்.

கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...

எனப் பாடியவள் அவள் இன்னும் அதிகமாக முறைப்பதைக் கண்டு வாயை கப் சிப் என்று மூடிக் கொண்டாள்.

"அது என்னடி இன்னா னு லாம் பேசுற நீ எப்போ சென்னை பாஷை பேச ஆரம்பிச்ச"என நிலா கேட்க

"அதுவா அது அது ஒரு குட்டி நொறுக்கு மேட்டர் டி"என திவி கூறினாள்.

"என்னடி என்னனம்மோ சொல்லுற
உங்க அப்பா என்னை நம்பி தான் உன்னை அனுப்புனாரு ஏதாச்சும் பண்ணித் தொலைக்காத"

"ம்ம்க்குகும் ஹலோ கோவக்கா உங்க மீசைக் கார டாடியும் என்னை நம்பி தான் உன்னை அனுப்பினாரு நியாபகம் இருக்கட்டும் நானாச்சும் நொறுக்கு தான்.
ஆனால் நீ பாலோ லாம் பண்ணுற"எனக் கூற

"அவளை பார்த்து முறைத்தவள் அப்போது தான் வெளியே நின்றிருக்கும் மனோவைக் கண்டாள்.

தன் விழிகள் விரிய அவரைப் பார்த்துக் கொண்டிருக்க

"இவர் தான் மனோவா இருக்குமோ அழகா இருக்காரே பா நோ நோ நம்ம நொறுக்குக்கு நம்ம துரோகம் பண்ண கூடாது கன்ட்ரோல் திவி கன்ட்ரோல்."என திவி மனதில் கூறிக் கொண்டிருக்க
மனோ உள்ளே வந்து அமர்ந்தான்.

"என்ன வேணும் "என்று கேட்க

"மனோ சாரை பாக்கணும்"என்று நிலா கூற

"நான் தான்"என்றவன் திவியைப் பார்த்து சிரித்துக் கொண்டே

"என்ன மேடம் நான் சைட் அடிக்கிற அளவு இருக்கேனா" நக்கலாக சிரித்துக் கொண்டே கேட்டான்.

"அய்ய்யோ ஈஈஈஈ சாரி சார்"என திவி கூற

ஏனோ திவி இப்படி சிரிப்பது அவனுக்கு மேஹாவின் புன்னகையை நியாபகப் படுத்த
அவனின் இதழ்களும் புன்னகையில் விரிந்தது.

மனோ சிரிப்பதைக் கண்டவள்
"என்ன திவி இது உனக்கு வந்த சோதனை இவ்ளோ அழகா சிரிக்கிறாரு யப்பா நொறுக்கு உனக்கு ஒரு பைஃவ் டேஸ் லீவு விடுறேன்"என்றவள் மனோவைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

"எதுக்கு என்னைப் பார்க்கணும்"என மனோ கேட்க

நிலா இன்னும் விழி விரித்து அவரை பார்த்த நிலையில் தான் இருந்தாள்.

"சரிகமபத2019 கல்சுரல்ஸ்ல கலந்துக்க வந்திருக்கோம் சார் உங்களை பாக்க சொன்னாங்க ரிஷப்ஷன்ல" என திவி கூற

"ஓஓஓ சூப்பர் நான் தான் அந்த பங்ஷனோட  கோ-ஆர்டினேட்டர்.
நீங்க ஆடிட்டோரியம் போங்க நான் வரேன் "எனக் கூறியவன்

திவியைப் பார்த்து "நொறுக்கு??அப்படினா என்ன?" எனக் கேட்க

"ஈஈஈஈஈ என்று பல்லைக் காட்டியவள் க்ரஷ் சார்"என்க

ஹா ஹா எனச் சிரித்தவன் "நல்லா தான் பேரு வைக்கிறீங்க"என்று கூறி தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

மந்திரிச்சு விடப்பட்ட நிலையில் சுற்றும் நிலாவையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள் திவி.

ஆடிட்டோரியம் வந்தவர்கள் அவர்கள் கல்லூரி மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அமர்ந்தனர்.

"என்னடி மனோ சார்ர பாத்தாச்சா??என்ன சொன்னார்??"என மாணவர்கள் கேட்க

"பாத்தாச்சு வரேனு சொன்னார்..."என்றவள் நிலாவைப் பார்க்க அவள் இன்னும் அதே நிலையில் தான் இருந்தாள்.

"இவளுக்கு அடிக்கடி என்ன தான் ஆகுமோ??" என்றவள் தன் தோழிகளுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.

"எப்பவும் சரிகமபத2019ல இதே காலேஜ்தான் வின் பண்ணுமாம்.
அதோ அவங்க தான் இங்க இருக்க ஆர்ட்ஸ் கிளப் செகரட்டரியாம் சூப்பரா பாடுவாங்க,படிப்பாங்க,டேன்ஸ் கூட சூப்பரா ஆடுவாங்களாம்"என ஒரு மாணவி கூறிக் கொண்டிருக்க

திவி திரும்பி அந்த பெண்ணைப் பார்த்தாள்

"யாரு அந்த பிங்க் சுடியா "என நிலா கேட்க

"ஆமா டி"

"நீ ஏண்டி அந்த பிங்க் சுடி பொண்ணையும் முறைக்கிற அவளை பாரு எவ்ளோ அழகா இருக்கா அமைதியான பொண்ணு போல" என திவி கூற

திவியின்  கன்னத்தில் அறைந்தவள்
"என் முன்னாடி அவளை புகழாத...எனக்கு எல்லா விசயத்திலையும் போட்டிக்கு வருகிறாள்"அந்த எல்லா என்பதை அவள் அழுத்திக் கூறினாள்.

"அவளை இப்போ தானடி பாக்குற"  என திவி கேட்க

"இந்த முறையும் அவளை முதல்ல வர விடமாட்ட நான் தான் நான் மட்டும் தான் "என்றவள் மனோவின் வருகைக்காக காத்திருந்தாள்.

"என்னையா?? ஹாஹா போங்கடி நம்ம நம்மளோட பெஸ்ட்ட குடுப்போம் டி லக் இருந்தா வின் பண்ணலாம் இல்லைனா அடுத்த டைம் பாத்துப்போம்...
வெற்றியும் தோல்வியும்
வீரனுக்கு அழகு தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு" எனத் தன்னிடம் "இப்படி விட்டு கொடுக்காம நம்மளே வின் பண்ணா உன்னை பழிவாங்க ஒரு வில்லி வரப்போறா" எனக் கூறிய தோழியிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

மனோ உள்ளே வர அனைவரும் ஆஆஆஊஊ எனக் கத்தினர்.
(ஈஈஈஈ மனோ ஸ்டூடண்ஸ் தான்)

"ஹாய்  ப்ஃயூச்சர்  ஸ்டார்ஸ்!!
உங்க எல்லாரையும் வருக வருக என வரவேற்கிறேன் என்னோட பார்ட்னர் முகி சார் இன்னைக்கு இல்லை.
இருந்திருந்தா இந்த வெல்கம் ஈவன்ட்டை கூட சூப்பரா செலிபிரேட் பண்ணிருக்கலாம்"எனக் கூற

"யா சார் வி மிஸ் அவர் முகி சார்"எனக் கத்தினர்.

சிரித்தவன் "கண்டிப்பா நாளைக்கு வந்திடுவாரு இன்னும் டூ டேஸ்ல நம்ம ஆவலோட எதிர்ப்பாக்கிற சரிகமபத2019 நடக்கப் போகுது...இதுவரை 35 காலேஜ் ரெஜிஸ்டர் பண்ணிருக்காங்க எல்லாரும் உங்க பெஸ்ட்ட கொடுங்க. வெற்றியும் தோல்வியும்
வீரனுக்கு அழகு தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசையை..."என நிறுத்த

"முறுக்கு"என மாணவர்கள் கத்த

"ஆனா எங்களுக்கு தான் மீசையே இல்லையே "என மாணவிகள் கத்த

"அது தோத்து போறவங்களுக்கு மா...நாங்க தான் பெரிய மனசு வெச்சு உங்களுக்கு விட்டு கொடுக்குறோமே"என மாணவன் ஒருவன் கூற

"நல்ல சாமாளிப்பிகேஷன் டா..."என்றவன் "லெட் ஸ்டார்ட் அவர் வெல்கம் பார்ட்டி இப்போ உங்களை வருக வருக என கூறி வரவேற்புரை வழங்க நம்ம செகரட்டரி வரப் போறாங்க " எனக் கூறி கீழே பார்த்தான்.

அவன் அறியவில்லை மேஹா தான் செகரட்டரி என்று.

அவள் தான் என அறிந்திருந்தால் வீட்டிலேயே இதைப் பற்றி பேசியிருப்பான்..
மேஹா நன்றாக பாடுவாள் அது மட்டுமே அவன் அறிந்தது.

அவள் காலில் அடி பட்டிருப்பதால் ஒரு அடி எடுத்து வைத்ததில் கால் தடுமாற

மேடையிலிருந்து கீழிறங்கி வந்தவன் அவளைத் தாங்கி பிடித்தான்.

"எதுவும் அடி படல தான வலிக்குதா???"  என மனோ கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்தவள் மனோவின் கண்களைப் பார்த்துக் கொண்டே  இல்லை எனத் தலையசைத்தாள்.

அவன் அருகாமையில் இருந்தவள் இப்படியே தன் வாழ்வு முடிந்து விடக் கூடாதா என நினைத்துக் கொண்டிருக்க

அங்கே திவி "அடியேய் நிலா கை வலிக்குது டி ஏன் இப்படி என் கையை பிடிச்சுருக்க "எனக் கத்த

"நிலா "என்ற பெயரில் தன்னிலை அடைந்தவள் அவன் கைகளை விலக்கி தானே நடக்க ஆரம்பித்தாள்.

நடக்க முடியாமல் தடுமாற
"அவன் கைகளை இறுக்கி பிடித்தவன் நான் கூட்டிட்டு போறேன்"என அவளை அழைத்துச் சென்றான்.

மைக் பிடித்து வரவேற்புரை வழங்கியவள் "வெற்றி என்பது பெற்றுக் கொள்வது தோல்வி என்பது கற்றுக் கொள்வது வெற்றியைப் பார்த்து மயங்காதே தோல்வியைக் கண்டு துவழாதே...Try Try and Try again  you will succeeded at last "எனக் கூறியவள் மனோவிடம் மைக்கினைத் தந்தாள்.

"அழகா பேசுன "என அவளிடம் கூறியவன்

"நம்ம கல்லூரியோட பலமே நம்ம செகரட்டரி  தான் எனக்கு இப்போ தான் தெரியும் மேஹா தான் செகரட்டரினு அவங்களை நம்ம பிரின்சிபால் ரொம்பவே புகழ்ந்தாங்க நான் இதுதான் முதல் முறை இந்த பொறுப்பை எடுக்கிறது நல்லா பண்ணுவேனு நம்புறேன் நம்ம எல்லாரும் சேர்ந்து நல்லா பண்ணுவோம் பண்ணுவோம் தான!!!!!!" எனக் கேட்க

"கண்டிப்பா சார்"என அனைவரும் கத்தினர்.

மேஹாவை மறுபடியும் கைப் பிடித்து அழைத்துச் சென்றவன் கீழே விட்டுவிட்டு திரும்ப அங்கு பிரின்சிபால் வந்தார்.

"இந்த முறையும் நம்ம காலேஜ் தானே மேஹா ??"

"கண்டிப்பா மேம் நாங்க எங்களோட பெஸ்ட்டை கொடுப்போம்"எனக் கூறியவள் அவரைப் பார்த்து  சிரிக்க

"இப்படியே வா???" என அவள் கால்களைக் காட்ட

"அதெல்லாம் ஒன்னுமில்லை மேம் நம்ம தான் வின் பண்ணுவோம் நம்பிக்கையோட இருங்க அப்புறம் பிரியாணி ரெடியா இருக்கட்டும் "எனக் கூற

"ஹாஹா கண்டிப்பா"என்றவர் அவர்களுக்கு வாழ்த்து கூறிவிட்டு சென்றார்.

"ஓவரா சீன் போடுறா அவ" என நிலா கூற

"எனக்கு ஒன்னு அப்படி தெரியல"  என திவி கூறினாள்.

"நீ எனக்கு பிரெண்டா இல்லை அவளுக்கா???" என நிலா கேட்க

"உனக்கு தான் "என்றவள் " சாரி" எனக் கூறி அமைதியானாள்.

" முகி தான் உங்களுக்கு இன்சார்ஜ் நான் அதர் காலேஜ்ஸ்க்கு ஆல் தி பெஸ்ட் காய்ஸ்" என்றவன் மேஹாவை நன்றாக பார்த்துக் கொள்ளும் படி கூறிவிட்டு சென்றான்.

அவன் அன்பு தனக்கு எப்போதும் கிடைக்காதே!!!! என நினைத்தவள்

அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

மற்ற கல்லூரி மாணவர்களிடம் அனைத்து விதிமுறைகளையும் கூறியவன் அவர்களுக்கும் ஆல் தி பெஸ்ட் கூறிவிட்டு சென்றான்.

மேஹாவை வெறுப்பேற்ற நினைத்து நிலா மனோவிடம் மட்டுமே பேசிக் கொண்டிருக்க மேஹா எதையும் கண்டுகொள்ளவில்லை.

இதுவே பழைய மேஹாவாக இருந்திருந்தால் ஒரு வழி செய்திருப்பாள்....ஆனால் இவள் தான் மனோவையே வேறு ஒருத்திக்கு விட்டுக் கொடுக்க துணிந்து விட்டாளே!!

எதற்கெடுத்தாலும் மனோ சார் மனோ சார் என அவர பின்னாலே சுற்றிக் கொண்டிருந்தாள். மாலை வேண்டும் என்றே தன் ஸ்கூட்டி சாவியை எடுத்து வைத்துக் கொண்டு தொலைந்து விட்டதாக கூறி மனோவுடன் வருவதாக கூறினாள்.

அவனும் வேறு வழியில்லாமல் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

மனோ வர லேட் ஆகும் என நினைத்து  அங்கேயே அவனுக்காக காத்திருந்தாள்.

"ஹாய் மேஹா நான் திவி நீங்க அழகா இருக்கீங்க"எனக் கூற

அவளைப் பார்த்து புன்னகைத்தவள்
"நானா??" எனக் கேட்க

"பின்ன நானா???" என திவி கேட்டாள்.

"உங்களுக்கென்ன நீங்க கூட அழகா இருக்கீங்க" என மேஹா கூற

"பாத்தீங்களா நான் உங்களை அழகா இருக்கனு சொன்ன அதுனால நீங்க என்னை சொல்லுறீங்க நான் அழகா இருக்கேனு யாரும் சொல்ல மாட்றாங்க அதான் இப்படி"எனக் கூறி கண்ணடிக்க

"ஹா ஹா கேடி "என்ற மேஹா அவளைப் பார்த்து சிரித்தாள்.

"ஒரு புன்னகைப் பூவே" என திவி கூற

மறுபடியும் மேஹா சிரிக்க ஆரம்பிக்க

"ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளைப் பார்த்த எல்லோரும்"என திவி பாட

"போதும் போதும்."எனக் கூறி புன்னகைத்தாள்.

"உங்க ஸ்மைல் க்யூட்டா இருக்கு."

"சப்பா என்னமா வேணும் உனக்கு"என மேஹா சிரித்துக் கொண்டே கேட்க

"மனோ சார்" என்ற திவியை
மேஹா விழி விரித்து அவளைப் பார்க்க

" ஹாஹா அவர் நம்பர் வேணும்"எனக் கூறிச் சத்தமாக சிரித்தாள்.


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro