பகுதி-37

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

யார் என்ன சொன்னாலும் என்னை இன்று கொன்னாலும்
நான் உந்தன் பாதி புரிந்து கொண்டேன்
யார் கூட வந்தாலும் என்னோடு நின்றாலும்
உன் பேரை சொன்னாலே திரும்பி நின்றேன்
இந்தக் காதல் உனக்காக என்றும் தீராது
உயிர் போகும் என்றாலும் அது போதாது

இனிமேல் யாரைக் காணக்கூடாது என நினைத்தாலோ,யாரை தன் மனம் மறக்க முடியாமல் தினந்தினம் திணறுகிறதோ அவனே வந்து தன் முன்னால் நிற்பதைக் கண்டு சிலையானாள் தியா.

"ஹாய்" என அபி கூற

இப்படி இவன் தன்னைப் பார்த்து அழகாக புன்னகைக்க மாட்டானா என அவள் ஏங்கிய நாட்கள்
தான் எத்தனை...

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள் கடினப்பட்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

"ஆர் யூ ஓகே...??" அவன் அவளை ஒருவித பதட்டத்துடன் பார்க்க

அவனைப் புரியாமல் பார்த்தாள்.

"நீங்க சிரிக்கும் போது உங்க கண்களும் சிரிக்கும் அதைப் பார்க்கும் போதே எதிரில இருக்கவங்களுக்கும் சிரிக்கணும்னு தோணும்.ஆனால் இன்னைக்கு உங்க சிரிப்புல உயிர் இல்லை என்னாச்சு??? எதுவும் ப்ராப்ளம் இல்லையே??"அக்கறையாய் வினவ

அவன் அக்கறை,அன்பு,அரவணைப்பு இதெல்லாம் தனக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்காதே என்ற எண்ணம் எழ அழுகையைக் கட்டுப் படுத்தியவள் "அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. நான் வரேன் கொஞ்சோ டயார்டா இருக்கு " என்றவள் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு அறைக்கு சென்றுவிட்டாள்.

அந்த பார்வையில் என்ன இருக்கிறது என்பதை அவனால் அறியமுடியவில்லை.
ஆனால் அவள் சோகமாக இருப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...(உடனே லவ்வுனு வந்துடப்படாது அவன் சாதரணமாவே எல்லார் மேலையும் அக்கறையா தான் இருப்பான்)

அறைக்குள் நுழைந்தவள் "ஏன் அபி ஏன் நீங்க வேணும் எனக்கு என்னால உங்களை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியலையே...அய்யோ கடவுளே ஏன் இப்படி பண்ணுற?? அவரை விட்டு பிரிஞ்சு இருக்கலாம்னு நினைக்கும் போதுதான் அவரா என்கிட்ட வந்து பேசுற மாதிரி செய்வியா?? " கதறி கதறி அழுபவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது திவிக்கு.

"தியா அழாதே டி நான் வேணா அபிக்கிட்ட பேசவா??"

அவளை நிமிர்ந்து பார்த்தவள்
"பேசுவியா??எனக்காகவா??நீ சொன்னா அபி ஒத்துப்பாரா?? என்னை கல்யாணம் பண்ணிப்பாரா?? மேஹாவை விரும்புன அளவு என்னை விரும்புவாரா??"அவள் கேட்க

"ம்ம்ம்"என்ற பதில் வர

அழுது அழுது சோர்ந்த முகமும் அழகாய் புன்னகைத்தது.

திடீரென்று அவளை நிமிர்ந்து பார்த்தவள் "ஆனா ஆனந்தி??" என்றவள் நிறுத்தி

"வேணாம் டி எனக்கு அபி வேணாம் எனக்காச்சும் ஆறுதல் சொல்ல நீ இருக்க.ஆனா அவங்களுக்கு யாரும் இல்லை டி அபி அவங்களுக்கு தான்...அபியால மட்டும் தான் அவங்களை நல்லா பாத்துக்க முடியும் நான் இப்படியே இருந்துக்கிறேன் டி..." என்றவள் தரையில் அமர்ந்து

" ஆனால் என்னால அபியை மறக்க முடியாதே நான் என்னடி பண்ணுவேன்" தரையில் சரிந்து அழுபவளை பார்க்க முடியாமல் அவளை கன்னத்தில் அடித்தாள்.

தியா திவியைப் பார்க்க "ஏண்டி இப்போ நீ அழுகிற?? இதுதான் வாழ்க்கை நாம ஆசைபடுறது எல்லாமே நமக்கு கிடைக்காது...நீயே அபியை விட்டுக்கொடுக்கிறதா முடிவு எடுத்துட்டள்ள அப்புறம் ஏன் அழுகுற...அவர் கிட்ட பேசவும் வேணாம்னு சொல்லுற விட்டுக்கொடுத்தாச்சு இனி அவர் உனக்கில்ல அழுகாதே..முதல்ல கண்ணைத் தொட மூஞ்சி கழுவிட்டு இங்க உட்காரு நான் வரேன் " என்றவள் வெளியே சென்று விட்டாள்.

திவி சொல்லிச் சென்றதை செய்தவள் எதையோ பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அவளிடம் பாலை கொடுத்து குடிக்கச் சொன்னவள் அவளை தூங்க வைத்தாள்.
தூக்கத்திலும் அபி அபி என்றுதான் உலறிக்கொண்டிருந்தாள்.

"கடவுளே ஒன்னு அபிகூட இவளை சேத்து வை இல்லைனா அவரை மறக்குற மாதிரி ஏதாச்சும் பண்ணு...என்னால இவளை இப்படி பார்க்க முடியல " என கண்கள் கலங்க வேண்டிக் கொண்டிருந்தாள்.(இரண்டில் ஒன்று கண்டிப்பாக நடக்கும் ஆனா எதுனு தான் தெரியல)

உள்ளே சென்றவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் "தியா ஏன் இப்படி இருக்காங்க அவங்க எப்பவும் சந்தோஷமா இருந்தா தான் நல்லாருக்கும்" என நினைத்தவன் அர்ஜூவைத் தேடிச் சென்றான்.

அவனைப் பார்த்தவன் தன்னையும் மீறி சிரித்துவிட்டான்.

அவன் சிரிப்பு சத்தத்தில் தன்னிலைக்கு வந்த இருவரும் அய்யோ என தலையில் அடித்துக் கொண்டு சஞ்சு வெளியே ஓடி விட்டாள்

அர்ஜு அவனைப் பார்த்து ஈஈஈ இங்க நடந்ததை யாருக்கிட்டேயும் சொல்லிடாத மச்சான் எனக் கூற

"மாட்ட மாட்ட சொல்லவே மாட்ட" என சிரித்துக் கொண்டே தலையாட்ட

"என்னடா என்ன எனக்கும் ஒரு காலம் வரும் நானும் நீ உன் பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்குறதை பாப்பேன் இப்படி சிரிப்பேன்" எனக் கூற

"பாக்கலாம் பாக்கலாம்" என்றவன் அவனருகில் சென்று அமர்ந்தான்.

ஆமாம் மக்களே அர்ஜு சஞ்சு கிட்ட கொட்டு வாங்கிட்டு இருந்தான்.

"ஏன் சார் சஞ்சு கிட்ட கொட்டு வாங்கிட்டு இருந்த??"

"அந்த சோக கதையை ஏன் மச்சா கேக்குற?? "

"சரி கேட்கல விடு"

"அய்யோ அப்படிலாம் சொல்லிடப்படாது கேட்கணும் நண்பன் பாவம் ல" எனக் கூறி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு என்ன நடந்துச்சுனா??? என்றவன் மேலே பார்க்க

"இப்போ நானும் மேலே பாக்கணும் அதானே"

"ஆமா ஆமா " என அர்ஜு தலையாட்ட

தலையில் அடித்துக் கொண்டவன்
ம்ம் சொல்லு என்றான்.

"அதுவந்து அபி நான் காலைல எழுந்து கீழே போனேனா அப்போ ஒரு பொண்ணு வந்து மாம்ஸ் இந்தாங்க காபினு கொடுத்தா என்னது மாம்ஸ்ஆஆ னு ஷாக் ஆகிட்டு யாரு மா?? நீ னு கேட்டேன...நான் சஞ்சுவோட ஒன்னு விட்ட சித்தப்பா பொண்ணு நீங்க அழகா இருக்கீங்க மாம்ஸ் கொஞ்சோ யோசிச்சுருக்கலாம் விடுங்க இப்போ கூட நோ பிராப்ளம் நான் எப்படி இருக்கேன் அப்படினு கேட்டா....
சத்தியாமா சொல்றேன் அவ என்ன சொன்னானு எனக்கு புரியவே இல்லை உனக்கு என்னமா நீ அழகா இருக்கனு சொன்னேன்...."

அப்புறம்??? அபி ஆவலாக கேட்க...

" அப்புறம் என்ன என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கனு சொல்லுறா மச்சான் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்"

"யாரு நீ...கண்ணா இரண்டு லட்டு திண்ண ஆசையா??" அதானே உன் மைண்ட் வாய்ஸா இருந்துருக்கும் என அபி கூற

"ஈஈஈஈஈ இல்லை மச்சான் நான் ராமர் டா ,எனக்கு என் சஞ்சு மட்டும் தான் நான் எதுவும் பேசாம சைலண்ட் மோடுல இருந்தேன் என் அருமை பொண்டாட்டி வந்து ஒன்னு விட்டா பாரு இப்போவும் வலிக்குது டா...."

ஹாஹா என அபி சிரிக்க

அப்புறம் என அர்ஜு ஆரம்பிக்க

"அப்புறம் என்ன ஆகிருக்கும் அங்க விட்டது பத்தாதுனு இங்கேயும் வந்து வெளுத்து வாங்கிருப்பா??"அதானே

"ச்ச்சச ச்ச்சசசச இல்லை கன்னத்துல கொசு அதான் அடிச்சேனு சொல்லிட்டு மீனு மாமா கிட்ட விளையாடுனது போதும் போ சாப்பிடுனு சொல்லிட்டு என்னை ரூம்க்கு இழுத்துட்டு வந்து...என்கிட்ட மட்டும் நல்லா வாய் அடிக்கிற அவகிட்ட வேணாம்னு வாய் திறந்து சொல்ல கஷ்டமா?? அப்படினு சொல்லி நல்லா கொட்டிட்டா டா பாரேன் வீங்கிருச்சு..."

போதும் டா என்னால முடியல
"நான் சொல்ல வந்ததே மறந்துட்டேன் பாரு..." என்றவன்
அபி ஆனந்தி திருமணம் பற்றி கூற

"அவ சந்தோஷமா இருப்பா நீ???" எனக் கேட்க

அவனைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்தவன் " தெரியல மச்சான் அவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டா டா இனிமேலாவலு சந்தோஷமா இருக்கட்டுமே..."

"ஆனால் நீ உன்னால இருக்க முடியாதே டா...திருமணம்ங்குறது சும்மா இல்ல டா நீ அவளை உன் மனைவியா ஏத்துக்கலாம் ஆனால் நீங்க சந்தோஷமா இருக்க காதல் வேணும் டா.இப்போதைக்கு இந்த கல்யாணம் வேணாம்டா "

"இல்ல மச்சான் அம்மா கேட்டுக்கிட்டே இருக்காங்க என்னால பழச மறக்க முடியும்னு தோணல டா...அவளுக்கு நல்ல கணவனா இருப்பேன் காதல்??? தெரியல டா..."

"மேஹாவை இன்னும் மறக்கலையா??"

"அய்யயோ அவ இன்னொருத்தரோட மனைவி டா...அவளை நான் நினைச்சுட்டு இருக்கிறது தப்பு அவ மேல வெச்ச காதல் அது ஏற்படுத்துன காயம் அதைத்தான் மறக்க முடியல..."

அபியை அணைத்துக் கொண்டவன் "விடு மச்சி பாத்துக்கலாம் நடக்குறது எல்லாம் நல்லதுக்காக தான்"

"சரி டா நான் கிளம்புறேன் அம்மா வர சொன்னாங்க...ஜுலை 2 மேரேஜ் டா சிம்பிளா கோவில்ல கண்டிப்பா வந்துடு" என்றவன் கிளம்பிவிட்டான்.

"ஏன் மா சரசு இது தான் உண்டற மறுமவளாக்கும்??"

"ஆமா ஆத்தா"

"இதென்ன மா கண்ணாலம் ஆகப்போகுது மூஞ்சில எந்த கலையும் இல்லாம இருக்கா."

"அது பையன் இன்னும் இங்கே வரலைல அதான்..."

"சேரி சம்பந்தி ஊட்டுக்காரங்க வந்தாச்சா"

"அவளுக்கு அம்மா அப்பா யாரும் இல்லை ஆத்தா"

"இதென்ன டி கூத்தா இருக்கு. உண்டற மவன் ராசா கணக்கா இருப்பானே அவனுக்கு அப்பா அம்மா இல்லாத பொண்ணு தான் கிடைச்சுதாக்கும்??"..

" ஆத்தா அவ என் மருமவ என்ற ராசாக்கேத்த ராணி தான் இவ...வாயில நரம்பு இல்லாம பேசாத சொல்லிப்புட்டேன்...நீ வாமா நம்ம போலாம்" என்றவர் உள்ளே அழைத்துச் சென்றார்.

ஆனந்தி முகம் வாடி அமர்ந்திருக்க

"இது கிராமம்ல அப்படிதான்மா இருக்கும் எல்லாம் அன்பு தான்...அதைக் காட்ட தான் தெரியல நாளைக்கே பாரு உன்னை எவ்ளோ நல்லா பாத்துக்கிறாங்கனு...அவங்க மனசுல எதையும் வெச்சுக்க மாட்டாங்க அதுனால தான் நீ பீல் பண்ணாத சாப்பிட்டியா?? "எனக் கேட்க

"இல்லைங்க அத்தை எனக்கு வேணாம்"

"இப்படி சொன்னாலாம் நீ கேட்க மாட்ட"என்றவர் தோசை எடுத்து வந்து அவளுக்கு ஊட்டி விட்டார்.

அவள் கண்கள் கலங்க
அதை துடைத்து விட்டவர்

"நீ எனக்கு மருமகள் மட்டும் இல்லை மகளும் தான் சரியா??" எனக் கேட்க

ம்ம்ம் என தலையாட்டினாள்.
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
தூங்கி எழுந்து கண்களை கசக்கிக் கொண்டே மேஹா வர ரசித்தவாறே
அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அகிலாவைக் கண்டவள் "அகி பேபி" என அவர் அருகில் அமர்ந்துக் கொண்டவள்  அவர் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டாள்.

"இவ்ளோ நேரமாடி தூங்குவ?"

"ஹேமா டார்லிங்க நீயும் இங்கே தான் இருக்கியா??ஆமா இது என்ன இடம்??" எனக் கேட்க

"மேஹா மா நல்லா இருக்கியா??"என கண்ணன் கேட்க

"அப்பா " என்றவள் அவரைக் கட்டிக் கொண்டாள்.

அவள் தலையை தடவியர் "நல்லா இருக்கியா டா ஏன் இப்படி இளைச்சுருக்க??  ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா??" எனக் கேட்க

நல்லா தானே சாப்பிடுறேன் என்றவள் அவரை அமர வைத்து அருகில் அமர்ந்து கொண்டாள்.

"ஹேமா டார்லிங் எப்படி இருக்க??
" நான் நல்லா தான் டி இருக்கேன்"என்றவர் நீ என்று கேட்க

எழுந்து நின்றவள் இங்கே பாரு நான் எப்படி இருக்கேனு சொல்லு என தன் உடலை வளைத்து வளைத்து காட்ட

மனோ அவள் செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டிருந்தான்.

"மனோ " என்று அகிலா அழைக்க

"என்னது மனோ வா??" என்றவள் திரும்பிப் பார்க்க அவன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

அய்யோ என்றவள் ஹேமாவின் பின் சென்று ஒளிந்து கொண்டாள்.

"நேத்து தான் அர்ஜு மேரேஜ்ல பாத்தீங்க என்னமோ பல வருஷம் கழிச்சு பாக்குற மாதிரி பில்டப் வேற..." என மனோ கலாய்க்க

எட்டிப்பார்த்து அவனை முறைத்தவள்

"அப்படி தான் பில்டப் கொடுப்போம்" எனக் கூற

ஹேமா அவள் தலையில் கொட்டினார்.

"ஏன் மா" அவள் உதட்டைப் பிதுக்க

"மாப்பிள்ளையை மரியாதை இல்லாம பேசுற வாங்க போங்கனு 
சொல்லு" என்று தண்டிக்க

"ம்ம்மக்ககும் " என்றவள்

வாங்க போங்க எனக் கூறிவிட்டு அகியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"மேஹா வெளியே போயிட்டு வரலாமா??"

"நான் வரமாட்ட பா" என்றவள் அவனைப் பார்த்து நக்கலாகச் சிரிக்க

அவளைப் பார்த்து முறைத்தவன் "அத்தை " எனக் கூப்பிட

"இதோ கிளம்பிட்டேன் எதுக்கு அம்மானு லாம் கூப்பிட்டுட்டு...." என்றவள் அவனை முறைத்துக் கொண்டே அவன் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

அவனும் சிரித்துக் கொண்டே அவள் பின்னே சென்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro