பகுதி - 53

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலை அணைப்பின் வாசமும்
காதல் கிறங்கும் சுவாசமும்
சாகும்போதும் தீர்ந்திடாது வா உயிரே
காதில் உதைக்கும் பாதமும்
மார்பில் கிடக்கும் நேரமும்
வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே

ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழையாகும்
கண்ணீர் சுகமாய் இமை மீறும்
காலம் உந்தன் வரமாகும்

பச்சைபசேல் வயல்வெளிகள் கண்களைக் கவர காரில் ஒலித்த ஏ.ஆர் ரஹ்மானின் பச்சை நிறமே பச்சை நிறமே மனதுக்கு இன்னும் நிறைவாக ஒருவித புத்துணரச்சியை தந்தது.

சுற்றி வயல்வெளிகளுக்கு நடுவே
பிரம்மாண்டமாய் அமைந்த மனோவின் வீட்டிற்குள் கார் நுழைய அங்கிருக்கும் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி.
இனிமேல் மனோ மேஹா இங்கே தங்க போகிறார்களல்லவா.

முதன்முதலாக திருமணம் முடிந்து வரும் மணமக்களைப் போல் இருவருக்கும் ஆராத்தி எடுக்க வர

"அய்யோ அகி பேபி நான் என்ன புதுபொண்ணா " என்ற மேஹாவின் சிணுங்கலைக் கண்டுகொள்ளாமல் புன்னகைத்தவாறே ஆராத்தி சுத்தியவர் செல்ல அவருக்கு பின்னே
ஹேமா மற்றும் கண்ணன் தேங்காய் கொண்டு வந்து சுத்த

" நீங்களுமா?" என்றவள் தலையில் கை வைக்க அவள் தலையில் கொட்டி
" ஸ்ஸ் " என்று சைகை காட்டி மகிழ்ச்சியுடன் " நாய்க்கண்ணு நரிக்கண்ணு " என்றவருடன் சேர்ந்து மேஹா நாய் மாதிரி நரி மாதிரி முகத்தை மாற்ற

" நாய் பேஸ் வெக்க சொன்னா இது என்ன கன்ட்ராவியா ஏதோ" என்ற முகிலை இடுப்பில் கை வைத்து முறைக்க ஆரம்பித்தாள்.

சிரித்தவாறே மேஹாவின் பெற்றோர் செல்ல அடுத்ததாக முகில் மற்றும் சோனி பூசணிக்காயுடன் வர
" டேய் நீங்களுமாடா? " என்ற மனோவைக் கண்டுகொள்ளாமல்
" ஒரு பூசணிக்காயை வைத்தே இன்னொரு பூசணிக்காய்க்கு திருஷ்டி கழிக்கிறோம் அடடா" என்ற முகிலை மேஹா கொலைவெறியுடன் பார்க்க
" டேய் என் ஆளை பார்த்தா பூசணிக்காய் மாதிரி இருக்கா" என்று மனோ முகிலிடம் கேட்டு அவனை முறைத்தான்.

" பின்ன இல்லையா?" என்ற முகிலிடம்

" ஏதோ கொஞ்சம் குண்டா பூசணிக்காய் மாதிரி இருந்தா உடனே உண்மையை இப்படி பப்ளிக்கா சொல்லிடுவியா?" என்ற மனோவை மேஹா அடிக்க வர

அவள் கைகளை தன் கைகளுக்குள் சிறை வைத்தவன் அவள் விழிகளைப் பார்க்க அவன் விழிகளில் கைதியாகினாள் அந்த பேதை.

" போதும் போதும் உங்க ரொமான்ஸ் இங்க பச்ச குழந்தைகள்ளாம் இருக்கோம்"

" யாரு நீ இந்த கரடி தொல்லை தாங்கல..." என்றவனை முறைத்த முகில் பூசணிக்காயை சுற்றி அவர்களை கடந்து செல்ல

" இப்போவாச்சும் உள்ளே வரலாமா ?" என்று கேட்ட இருவரிடமும்

"வேண்டாம்னு சொன்னா மட்டும் அப்படியே போயிட போறீங்களா? வாங்க வாங்க" என்ற முகிலை முறைத்துக் கொண்டே உள்ளே வந்தனர்.

" டேய் அண்ணா இங்கே வாயேன்" என்ற மேஹாவிடம்

" ஈஈஈஈ என பல்லைக் காட்டியவன் வந்தா நீ அடிப்ப" என்று கூற

" நீ வரலைனா உனக்கு ஊத்துற குழம்புல பேதி மாத்திரையை கலந்துருவேன் எப்படி வசதி?" என்ற மேஹாவிடம் " அம்மா தாயே நான் சரண்டர் " என்று கூறி அவள் கைகளுக்கு தன் காதுகளை இரையாக்கினான்.

சிரிப்பும் பேச்சுமாய் அந்த நாள் கழிய
தனக்கு பிடித்த தங்களின் அறைக்குள் சென்றவள் ஒவ்வொன்றாய் தன் வெண்டை பிஞ்சுவிரல்களால் வருட அவளைக் கை கட்டி கதவில் சாய்ந்தவாறு நின்று ரசிக்கத்

தொடங்கினான் அவளின் கள்வன்....

அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் அவள் பால்கனிக்கு செல்ல
" இந்த குண்டுதக்காளிக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு குறைச்சா சரி ஆயிடுவா" என்று அவளைத் திட்டிக் கொண்டே அவனும் சென்றான்.

அவனுக்குப் பிடித்த ஊஞ்சலில் அமர்ந்தவள் நிலவினை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அந்த மாயக் கள்வனோ அவளை திட்ட வெளியே வந்து அதை மறந்து தன் நிலவை ரசித்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வை அவளை ஏதோ செய்ய அவன் புறம் திரும்பாமலே அவன் முகத்தை வேறு புறம் திருப்ப
அவள் செயலில் புன்னகைத்தவன்
அவள் முகத்தைத் தன்புறம் திருப்ப
அவன் முகத்தைக் காண முடியாமல் அவன் மார்பில் புதைந்துக் கொண்டாள்.

(இதுக்கப்புறம் நமக்கு அங்க என்ன வேலை....வாங்க போவோம்)
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

எப்படி தன் திட்டத்தை நடைமுறை படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தவன் திவியையும் துணைக்கு அழைத்துக் கொண்டான்.

தன் திட்டத்தை அர்ஜூவிடம் கூறிக் கொண்டிருக்க அவனை இடையில் நிறுத்திய அர்ஜூவோ "டேய் உன் மாமனாரைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் மீசை படு பயங்கரமானவர் டா நீ போய் உன்னை ஏதாவது சொல்லிடப்போறார்" என்றவனிடம்

" தியா பாவம் டா என் காதலுக்காக அவ அப்பாவையே வேணாம்னு வந்தவ அவளுக்காக நான் இதை கூட பண்ண மாட்டானா??? எனக்கு தியாவோட சந்தோஷம் ரொம்ப முக்கியம் டா" என்றவன் "திவி நாளைக்கு கிளம்பலாம்" என்றவன் " தியாக்கு இது தெரிய வேணாம்" என அர்ஜூவிடம் கூறி விட்டு மலைகளின் அரசியான ஊட்டியை நோக்கி பயணமானான்.

கம்பெனி விஷயமாக பாரீஷ் செல்வதாக கூறி தன்னுடன் வருகிறேன் என்றவளை ஒருவழியாக சமாளித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அபிக்கு.

காலை 6 மணிக்கு கிளம்பியவர்கள் 10 மணி போல் கூடலூரை வந்தடைய " அண்ணா அதோ அந்த எஸ்டேட்க்கு நடுவில ஒரு குட்டி பங்களா இருக்கே அதுதான் உங்கள் இதயராணியின் கோட்டை " என்று கூறிய திவியை முறைத்தவன்

" அழகா இருக்கு" என அதை ரசிக்கவும் மறக்கவில்லை.

"அவளுக்கு பிடிச்ச மாதிரியே கட்டுன வீடு அது அவங்க வீடு மொதல்ல எஸ்டேட்டுக்கு கீழே தான் இருந்துச்சு.
இவ தான் எஸ்ட்டேட்டுக்கு நடுவில  வீடு வேணும் சொல்லி அதே மாதிரி அவங்கப்பாவும் கட்டிட்டாரு அவ கண் முழிக்கிறதே முதல்ல அவங்க அப்பா முகத்துல அதுக்கப்புறம் சுற்றிலும் இருக்க அவங்க தோட்டத்தை பார்த்து தான்.
அவளுக்கு கார்டன்ல இருக்க ரொம்ப
பிடிக்கும்.
நிறைய விதமான பழம்,பூ ,காய்கறிகள்னு எல்லாமே இருக்கும் " என்றவள் கூறிக்கொண்டே செல்ல இப்படி வளர்ந்தவளா தன்னுடன் அந்த வீட்டில் இருக்கிறாள் என நினைக்கும் போதே கண்கள் கலங்கியது அவள் மேல் காதலும் பெருகியது.

" அப்புறம் அண்ணா " என்றவளை " அதென்ன அர்ஜூ உனக்கு மாமா நான் உனக்கு அண்ணா வா" என்று கேட்க

" தியா உங்களை காதலிக்கிறதை பாக்குறப்போலாம் எனக்கு மட்டும் ஒரு அண்ணா இருந்தா உன்னை துரத்தி துரத்தி காதலிக்க சொல்லி உன்னை என் அண்ணியா எங்க வீட்டிலையே வெச்சுருப்பேன் பட் மை பேட் லக் நான் ஒரே பொண்ணா போயிட்டேன் " என்று புலம்புவேன் அப்போ தியா "நான் லவ் பண்ணுற பையனும் உனக்கு அண்ணா தான் நீ என் கூடவே இருந்துக்கோ" என்று கூறி சிரிப்பாள்
" அதனால தான் நீங்க எனக்கு அண்ணா ஆயிட்டீங்க" என்று கூறிய திவியிடம்.

" செம ப்ளாஸ்பேக் போ" என்று அபி கூற அவனை முறைத்தவள்

" வாங்க வாங்க மீசையை இன்ட்ரோ பண்ணுறேன் " என அழைத்துச் சென்றாள்.

அவர்கள் வீடு வரை வந்தவர்கள் தியாவின் அப்பா பேச்சைக் கேட்டதும் அப்படியே நின்றனர்.

அவருக்கு தியாவை தவிர யார் அப்பா என்று அழைத்தாலும் பிடிக்காது.
அவரிடம் வேலைக்கு வருபவர்கள் முதலாளி ,ஐயா என அழைப்பதையும் அவர் விரும்பமாட்டார்.
அதனாலேயே சிறியவர்களுக்கு தாத்தா, ஒருசிலருக்கு அண்ணா, சிலருக்கு மாமா.

" ஒரு முறை தன்னை அப்பா என்ற அழைத்த பெண்ணிடம் என் தியா குட்டியைத் தவிர வேற யாரும் என்னை அப்பானு சொல்லுறது எனக்கு பிடிக்காதுடா மா என்னை நீ மாமானு கூப்பிட்டாலும் சரி
இல்லைனா தாத்தானு கூப்பிட்டாலும் சரி " என்று கூறிவிட்டார்.

இன்று அதேபோல் எஸ்டேட் கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் வந்து அமர்ந்தவர் அங்கு வேலை செய்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்க
" அப்பா " எனக் கத்திக் கொண்டே கணக்கு பார்த்துக் கொண்டிருந்த சாரதியிடம் அந்த சிறுமி வர

அப்பா என்ற அழைப்பு அவரை ஏதோ செய்ய நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார்.

கண்கலங்க சாய்ந்திருந்தவரிடம் வந்த அவரது தங்கை அண்ணா என்று அழைக்க அவர் கைகளில் இருந்ததைக் கண்டு புன்னகைத்தார்.

அவர் கைகளில் இருந்தது மொபைல்...
அதில் தியா இவரை அப்பா என்று அழைப்பது போல் ஒரு பதிவு இருக்கும் அவள் நியாபகம் வரும் சமயங்களில் அவருக்கு மருந்தாக இருப்பது அதுதான்.

இதையெல்லாம் பார்த்த அபிக்கு மனது வலித்தது.
தன்னால் தான் இதெல்லாம் என்று நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது.

அதை கேட்டுக் கொண்டிருந்தவர் காலடியில் அமர்ந்தவன் கண்களில் கண்ணீரோடு அவரைப் பார்க்க

அவனை யாரென்று தெரியாமல்
" யாருப்பா நீ எழுந்திரு " என்று கூறியவரை

" ப்ளீஸ் ப்ளீஸ் நான் இங்கேயே இப்படியே உட்கார்ந்து பேசுறேன்" என்றவனின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவரை அமைதியாக்கியது.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

திவி ஊருக்கு சென்றதும் அவளில்லாமல் என்றும் அவனுக்கும் பிடித்த அந்த அலுவலகம் கூட சரணுக்கு வெறுமையையே தந்தது.

வீட்டிற்கும் போக பிடிக்காமல் அலுவலகத்திலும் இருக்க பிடிக்காமல் இருவரும் அன்று ஒன்றாக சென்ற கோவிலில் போய் அமர்ந்தான்.

மொபைலில் தெரியும் அவனின் செல்ல ஊட்டியை தன் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தவன் அப்படியே அவளிடம் பேச ஆரம்பித்தான்...
"இன்னும் ஒரு மெசேஜ், கால் எதுவும் பண்ணல நான் உங்ககூட டூடூ பேச மாட்டேன்" என்றவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.(டேய் அவ என்னமோ உன் முன்னாடி இருக்க மாதிரி பண்ணுறியே டா)

திவியுடன் வந்தவன் நான் போய் பேசிக்கிறேன் நீ உன் வீட்டுக்கு போடா என்று திவியை அனுப்பி வைத்து விட்டு தான் அவன் உள்ளே சென்றான்.

எஸ்டேட்டில் நடந்துக் கொண்டிருந்தவள் " சருக்குட்டி என்ன பண்ணிட்டு இருப்பான் அவன் லவ்வர் அபி அண்ணாவையும் இங்கே கூட்டிட்டு வந்தாச்சு அர்ஜூ மாமாவுக்கும் அவனுக்கும் சுத்தமா ஆகாது " என நினைத்தவள்
அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

ஒரே ரிங்கில் அவன் அட்டெண்ட் செய்ய (மானம் போச்சு மருவாத போச்சு நீ லாம் ஒரு ஹூரோவா)

திவி சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்.

" ஏங்க திவிங்க சிரிக்கிறீங்க?" என்றவனிடம்

" சும்மா சும்மா " என்றவள் மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தாள்.

" போங்க நான் உங்க மேல செம கோவம் " என்று கூறியவனின் குரலிலே அவன் தன்னை எந்தளவு மிஸ் பண்ணுகிறான் என்று அறிந்தவள்

" எனக்கு ஒரு பட்சி சொல்லுச்சி என் செல்ல சருக்குட்டி என்னை ரொம்ப மிஸ் பண்ணுறதா ?அப்படியா" என்று கூறியவளிடம்

" இல்லையே" என்றவன் உடனே

" அப்படிலாம் சொல்ல மாட்டேங்க அபி அண்ணாவும் இல்லை நீங்களும் இல்லை ஒருமாதிரி இருக்கு" என்று கூறி திவியிடம் பல நல்ல வார்த்தைகளை வாங்கிக் கொண்டான்.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro