பகுதி - 55

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வேண்டும்..உன் மடி மீது உறக்கம் 
இதுதான் அன்பே நான் வேண்டும் சொர்க்கம்..
ஆஹா...து.. இதுபோல் வேறெந்த உறவும்..
நீ தான் உயிரே என் தாயின் வடிவம்..
கனவெல்லாம் நினைவாகி நீயானது..
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே..
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே

காலம் அது நிற்காமல் ஓடிக் கொண்டிருக்க ஒருசமயத்தில் அவனின் ஓரப்பார்வைக்காக ஏங்கியவள் இன்று அவன் காதலில் திக்குமுக்காடிப் போனாள்.

கல்லூரி செல்ல வேண்டும் என்பதையே மறந்து மேஹாவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தவனை திட்டி கலாய்த்து ஒன்றும் மாறததால் எப்படியோ போ என்று தண்ணீர் தெளித்து விட்டுவிட்டனர்.

மனோவைக் காதலுடன் பார்த்தவள் 
அருகில் அழைக்க அந்த மேடிட்ட வயிறுடன் இருந்த அவனின் குண்டு தக்காளி தாய்மையின் பூரிப்பினால் இன்னும் சற்று எடை கூடியிருக்க உட்கார முடியாமல் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருப்பவளை பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.

அவளருகில் சென்றவன் காலுக்கடியில் அமர்ந்து கொண்டு வீங்கிய அந்த பாதங்களை பதமாக பிடித்து விட அவன் தலை முடியை கலைத்தவள் திடீரென்று ஏற்பட்ட வலியால் முகம் சுருங்க உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

அவனைப் பார்த்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றவளுடன் தானும் போவதாக அடம் பிடித்தவனுக்கு சத்தியமாக அதில் விருப்பமில்லை இது அவனவளின் விருப்பம் மட்டுமே.

அவள் வலியில் துடிப்பதை தாங்க முடியாமல் தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து அழுத அந்த ஆண்மகன் அவர்களின் குழந்தைகளைக் கண்டு இப்போது ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

ஆம் இரட்டைக் குழந்தைகள்
ஆண் அவனது குண்டுதக்காளி போலவும்
பெண் அவளது லாலிபாப் போலவும் இருக்க முதலில் அவன் கண்கள் பார்த்தது அவனின் மனையாளைத் தான்.

அவள் கண்கள் மயக்கத்தில் சொருக அவனை அருகே அழைத்தவள்
"ஐ லவ் யூ லாலிபாப் " என்று கூற
இதுவரை அவளிடம் கெஞ்சி கொஞ்சி கேட்ட அந்த வார்த்தை இந்த நிமிடத்தில் கிடைக்கும் என அவன் நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை.

விழிகளைத் தாண்டி வழிந்தோடிய அந்த கண்ணீரைத் துடைத்தவள் அருகில் இருந்த காலண்டரைக் காட்ட இன்று அவனின் பிறந்தநாள்.

வியப்பில் விரிந்த அவன் விழிகள் பேசிய மொழியில் அவள் மறுபடியும்  சொக்கி காதலில் விழத்தான் செய்தாள்.

பிரசவ வலியில் மயங்கியவளின் நெற்றியில் இதழ் பதித்தவன் அவள் கைகளைப் பிடித்தவாறு அருகில் அமர்ந்துக் கொள்ள குழந்தைகளை சுத்தம் செய்த செவிலியர்கள் கொண்டு வந்து கொடுத்தும் அவர்களைக் கூட கைகளில் வாங்காதவன் தன்னவளையேப் பார்த்துக் கொண்டிருக்க அகிலாவும் ஹேமாவும் தான் குழந்தைகளைக் கைகளில் வாங்கிக் கொண்டனர்.

மயக்கம் தெளிந்த தன்னவளிடம் குழந்தைகளை காட்ட தாய்மார்களிடம் குழந்தைகளை வாங்க வந்த மனோவிடம் குழந்தைகளைத் தரமாட்டோம் என அடம்பிடிக்க அவர்களை முறைத்தவன் அவனது குண்டுதக்காளியிடமே புகார் படிக்க சென்றான்.

அவனைப் பார்த்து சிரித்தவள் அவனை அருகில் அழைக்க அவள் சிரித்ததினால் கோபம் கொண்டவன் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அருகில் செல்ல அவன் சட்டைக் காலரை பிடித்து இழுத்தவள் அவன் இதழ்களைப் பற்றினாள்.
இதழ் யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்க கதவு திறக்கும் சத்தத்தில் விலகியவர்கள் கண்டது  அவர்களைப் பார்த்து தங்களது பொக்கை வாய் காட்டி சிரிக்கும் அந்த மழலைகளைத் தான்.

ஹாப்பி பர்த்டே என் செல்லக்குட்டிகளா என்றவள் மூன்று பேருக்கும் நெற்றியில் இதழ் பதித்து தன்னுடைய வாழ்த்துகளைக் கூற அங்கு ஒரு வாழ்த்துப்படலமே ஆரம்பித்தது.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

"ஏன் பா ஒரு காதணி விழாவுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா " என்று கேட்ட அந்த பெரியவரின்  தோள்மீது கைப் போட்ட அர்ஜூ இது என் மருமகளோட காதணி விழா அப்படித் தான் இருக்கும் என்று காலரைத் தூக்கிக் கூற

இது என் மருமகளோட காதணி விழா என ஒரு பக்கம் முகி வர அந்த பெரியவரோ ஆளை விடுங்கடா சாமி எனக் கூறி ஓடிவிட்டார்.

அர்ஜூ , முகி இருவருக்கும் ஆண் குழந்தையே பிறந்திருக்க மேஹாவின் மகள் தங்களது வீட்டுக்குத் தான் மருமகளாக வர வேண்டும் என சண்டையிட தொடங்கிவிட்டனர் மேஹாவின் பாசமலர்கள்.

இந்த விழாவுக்கு அனைவரையும் அழைத்திருக்க குடும்பத்துடன் ஆஜராகி இருந்தனர் அவர்களது நண்பர்கள் பட்டாளமும்.
மனோவின் மாணவர்களும் வந்திருக்க அது காதணி விழா போல் அல்லாமல் கல்யாண வீடு போல் காட்சியளித்தது.

மனோவின் வீட்டிலேயே அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்க
அந்த  குட்டி அரண்மனை பிரம்மாண்டமாக காட்சியளித்தது முகி மற்றும்  அர்ஜூவின் கை வண்ணத்தால்.

"லாலிபாப் அவ வந்துருவா தான " என்று கேட்ட மேஹாவின் கண்களோ நொடிக்கொரு முறை வாசலைப் பார்த்துக் கொண்டிருக்க
"கண்டிப்பா வந்துருவா" என்றவனும் அவள் கண்டிப்பாக வர வேண்டும் என தான் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தான்.

கடைசியாக அபியின் திருமணத்தின் போது சந்தித்தது.
அதற்கு பிறகு பலமுறை முயற்சி செய்தும் பார்க்க அனுமதிக்காதவளின் மீது கோபம் வந்தாலும் அவள் மேல் உள்ள அன்பு குறையவில்லை இங்குள்ள அனைவருக்கும்.

ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தவளோ முகம் முழுக்க புன்னகையுடன் இளஞ்சிவப்பு நிற பட்டுடுத்தி காற்றில் அசையும் கூந்தை சரி செய்தவாறு அவளின் வினுவுடன் வந்துக்கொண்டிருந்தாள்.

தன் வாழ்நாளிலே இப்படி ஒரு அரக்கத்தனமான காதலைக் கண்டிராதவளுக்கு ஏனோ வினுவின் காதல் பயத்தை மட்டுமே கொடுத்தது.
மென்மையான ஆண்களை மட்டும் சந்தித்த அவள் வினுவைப் போன்றவனை இதுவரை சந்தித்ததில்லை.
எங்கும் காதல் எதிலும் காதல் என்பது போல் அவனின் ஒவ்வொரு செயல்களிலும் காதல் மட்டுமே இருக்க இவளுக்கு அவன் மீது பயம் மட்டும் தான் அதிகமாகிக் கொண்டிருந்தது.
அவள் வேண்டாம் என்று கூறினால் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்பவனைக் கண்டு பயம் வந்தாலும் போகப் போக அது அவளுக்குப் பழகிவிட்டது.

இப்படியும் ஒருத்தரைக் காதலிக்கமுடியுமா என்றவளுக்கு பதில் வினு தான்
"சச்ச்ச அ அரோகண்ட் லவ் " இது தான் அவளுக்குத் தோன்றும் அவன் காதலைக் காணும் போதெல்லாம்.
அபியை மறப்பது கடினம் என்றாலும் மறந்துதான் ஆகவேண்டும் என நினைத்தவள் அதை நடைமுறை படுத்தவும் ஆரம்பித்துவிட்டாள்.
வினுவின் குடும்பம் தன்மீது காட்டுவது அன்பு மட்டுமே என்பதை புரிந்து கொண்டவள் அவனுடனான திருமணத்திற்குமான் ஒத்துக் கொண்டாள் நம் ஆனு என்கிற ஆனந்தி.

இதோ திருமண அழைப்பிதளுடன் இருவரும் கை கோர்த்து நடந்து வர அங்கிருக்கும் அனைவருக்கும் பரம திருப்தி.

அர்ஜூ மற்றும்  முகியின் மடியில் வைத்து தான் காது குத்த போவதாக கூறிய மேஹாவைக் கண்டு புன்னகைத்த மனோ சரி என்று சொல்ல ஆனால் அவர்களின் புத்திரர்களோ தங்களுக்குப் பிடித்த தங்களின் மாமா அருகில் சென்று நின்று  கொண்டனர்.

அர்ஜூ முகி இருவரும் மனிஷாவை மருமகள் மருமகள் என கொஞ்ச அவளுக்கோ நந்துவின் கணவன் அருண் தான் பிடித்த மாமா.
அவனது புதல்வன் நிரஞ்சன் தான் அவளுக்கு செல்ல அத்தானும் கூட...

அவளின் செயலை கண்டு அருணை முறைத்த இருவரும் என் மருமகள் பாத்துக்கோ என சண்டை போட
அவர்களின் புதல்வன் ரிஷி மற்றும் வைபவோ நான் தான் உனக்கு அத்தான் இதோ இந்த நிரஞ்சன் அண்ணா இல்லை என மனிஷாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

அர்ஜூ மற்றும் சஞ்சனாவின் புதல்வன் வைபவ் மனிஷாவை தன்புறம் இழுக்க
சோனி மற்றும் முகியின் புதல்வன் ரிஷியோ தன்புறம் இழுத்தான்.
இரண்டு வயதான மனிஷாவோ நிரு அத்து என அழுக இருவரையும் அமைதியாக இருக்க சொன்ன நிருவோ அவளைத் தூக்கிச் செல்லம் கொஞ்ச ஆரம்பித்தான்.

நிருவின் மடியிலே வைத்து காது குத்தலாம் என அகிலா கூற அதன்படி அவன் மடியிலே வைத்து காது குத்த அவளின் அன்பு அத்தானின் மடியில் இருந்தவளுக்கோ வலி என்பதே தெரியவில்லைப் போல...
கன்னக்குழி தெரிய சிரிக்க அதில் அழுந்த முத்தமிட்ட அவன் அத்தானோ அவளுக்கு வாழைப் பழத்தை ஊட்டினான்.

மனிஷாவிற்கு அருண் மாமா ப்ரியம் என்றால் மனிஷ்க்கு அபி மாமா.
தியா மனோவின் தங்கை என்றாகிவிட்டதால்  இந்த முறை.
இப்போதே வயிற்றில் இருக்கும் குழந்தையை கொஞ்ச ஆரம்பித்துவிட்டான் மனிஷ்.

தியா ஏழு மாத கருவை சுமந்துக் கொண்டிருக்க அபி அதிகம் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன்  பேசுகிறானோ இல்லையோ மனிஷ் பேசிவிடுவான்.
அவன் அபி மடிமேல் தான் அமருவேன் என அடம்பிடிக்க அர்ஜூ மற்றும் முகிலை அந்த பெரியவர் நக்கலாக பார்க்க உனக்கு நான் எனக்கு நீ என்பது போல் அணைத்துக் கொண்ட இருவரும் மேஹா என் பையனுக்கு உன் பொண்ணு தான் சீக்கிரம் ஒரு பொண்ணு பெத்துக் கொடுத்திடு என்று கூற பெண்ணவளோ மனோவின் காதல் பார்வையில் சிவந்து கொண்டிருந்தாள்.

"ஐ பீல் லைக் கிஸ்ஸிங் யூ " என்று வந்த மெசேஜை கண்டவளோ தன்னவனைத் தேட அவனோ அபியின் அருகில் நின்று அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தான்.

"டெவலப் ஆயிட்ட டா" என்று மனதில் தன் சருக்குட்டியை கொஞ்சிய திவியோ வெளியே செல்ல அவள் பின்னாலே வந்த சரணோ அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

எங்க அப்பானா தான் பயம் மத்தபடி ஐ லவ் யூ ங்க என்றவனோ கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை வளர்த்து தந்தையிடம் தன் காதலைக் கூறி அடி உதை என பல வாங்கி இதோ இன்னும் அடுத்த ஐந்து மாதத்தில் திருமணம் என்று முடிவாகியிருந்தது.

அதுவரை இருவரும் பார்த்துக் கொள்ளக் கூடாது என்று கூறிய அந்த ஹிட்லரின் பேச்சைக் கேட்காமல் அணைத்துக் கொண்டிருக்கும் இருவரும் அங்கு யாரும் இல்லை என எண்ணிக் கொண்டிருக்க

"டேய் சரண் " என்ற அந்த ஹிட்லரின் குரலில் பிரிந்த இருவரும் பயந்து நடுங்க சரணோ அதற்கும் மேல் போய் தியாவின் பின்னால் ஒளிந்துகொண்டான்.

அதைக் கண்டு அனைவரும் சிரிக்க
திருத்திருவென முழித்தனர் அந்த இளம்சிட்டுகள்.

இவர்கள் இதே போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என வாழ்த்தி நாமும் விடை பெறுவோம் நண்பர்களே.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி நன்றி நன்றி...
இந்த கதை 55 அப்டேட் வரும்னு நான் கனவுல கூட நினைக்கல.
எனக்கு எங்க காலேஜ் மெக் டிப்பார்ட்மெண்ட்ல ஒரு சாரை ரொம்ப பிடிக்கும், அவர் என்னோட சைட்...எனக்கு மட்டுமில்ல நிறைய பேருக்கு அவர் சைட் தான்.

சும்மா அதை வைத்து ஆரம்பித்த கதை.
இந்த அளவு இத்தனை கதாபாத்திரங்கள் வரும்னு நான் நினைக்கவே இல்லை...
எல்லாரும் கேட்கலாம் ஏன் இத்தனை கதாபாத்திரம்னு.
எனக்கு ஒரு ஊரையே வெச்சு மேய்க்கிறது தான் பிடிக்கும்😂நான் என் கேரக்டர்ஸ் தான் சொல்றேன்...

சரி உங்களுக்கு எந்த கதாபாத்திரம் பிடிக்கும்னு சொல்லுங்க ஏன் பிடிக்கும்னு சொல்லுங்க😊😊

நன்றி

தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro