பகுதி 8

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஏதேதோ மாற்றம் வந்து
என்னைத்தான் துண்டு போடுதே
ஏகாந்த காற்று வந்து
என் நெஞ்சை தொட்டு போகுதே

நின்றாலும் நடக்கும் போதிலும்
நண்பர்கள் சிரிக்கும் போதிலும்
ஒட்டாமல் வாழ்கிறேன்
என்னிடம் நான் இல்லை.....

பழைய நினைவுகளுடன் தன்னிலை மறந்து அமர்ந்து கொண்டிருந்தவளை
"ஹலோ எல்லோ சுடிதார்" என யாரோ கத்தும் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தாள்....

தன்னைத் தான் அவள் அப்படி கூப்பிடுகிறாள் என்பதை கூட அறியாமல் அவளின் பின்புறம் சென்று கொண்டிருந்த மனோவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.....

வீட்டில் உம்மென்று இருந்த மனோவிற்கும் இப்போது இருக்கும் மனோவிற்கும் எவ்வளவு வித்தியாசம்....

முதன் முதலில் அவனை எப்படி பார்த்தாலோ அதே மாதிரி தான் இருக்கிறான் இப்பொழுதும்....

"ம்ம்ம்க்கும் இவ்ளோ அழகா இருந்தா...எல்லா பொண்ணுங்களும் சைட் அடிக்க தானே செய்வாங்க..வீட்டுக்கு வந்ததும் முதல்ல தார் எடுத்து மூஞ்சில பூசி விடணும்...அந்த முடி அதுப்பாட்டுக்கு இருக்கு....அத ஏன் சும்மா சும்மா கலச்சுட்டுட்டு இருக்க....இரு லாலிபாப் மொட்டை அடிச்சு விடுற...."அவனைப் பார்த்து புலம்பிக் கொண்டிருந்தவள் தன்னருகே ஒரு ஜீவன் வந்து நின்றதைக் கூட கண்டு கொள்ளவில்லை...

"எம்மா எல்லோ சுடிதார்...ரொம்ப நேரமா உன்னை கூப்பிடுறேனே....காது இங்க இருக்கா??இல்லை வாடகைக்கு விட்டுட்டியா???"அந்த புதியவள் கேட்க....

ஆஆஆஆன் என திருத்திருவென முழித்துக் கொண்டிருந்தாள்....

"யம்மா...நான் பொண்ணு தான்...என்னமோ பசங்க உன்னை கூப்பிட்டு ரேக் பண்ணுற மாதிரில நீ பில்டப் கொடுக்கிற"

"அய்யோ இவ வேற....நானே இவ எப்போ வந்தா...நான் இவ்ளோ நேரம் லாலிபாப் பத்தி பேசுனத கேட்டாளா இல்லையானு தெரியாம முழிக்கிற...அது தெரியாம மொக்கைப் போட்டுட்டு இருக்கா"என மனதில் அவளை அர்ச்சித்தாள்......

"நான் என்ன எல்லோ சுடியா போட்டுருக்கேன்" எனக் கேட்க...

"எங்க ஊருல இததான் எல்லோனு சொல்லுவாங்க...ஒருவேளை உங்க ஊருல இத பிங்க்னு சொல்லுவாங்களோ" என கலாய்க்க...

"சிரிப்பு வரல...."மேஹா கூற...

"ஈஈஈஈஈ....நான் சிரிச்சுக்கிறேன்"என்றவள்

"ஐம் நந்து...நந்தினி...எம்.பி.ஏ ஜாய்ன் பன்னிருக்கேன்...கிளாஸ் எங்கே இருக்குனு தெரியல....அதான் உன்கிட்ட கேட்கலானு வந்தேன்"எனக் கூறி கை நீட்ட....

அவள் கைகளைத் தட்டி விட்டவள்....
"நான்...மேஹா...சேம் எம்.பி.ஏ...எனக்கு கிளாஸ் தெரியும்....பட் "அவள் நிறுத்த...

"முதல் நாள்...பர்ஸ்ட் ஹார் கிளாஸ் போணுமா??அதான யோசிக்குற மச்சி"என்க....

"ஈஈஈஈ அதேதான் மச்சி...வா கேண்டீன் போவாம் "என இருவரும் கேண்டீன் செல்ல.....

அங்கே வாசலில் மனோ நின்றிருப்பதைக் கண்டவள் சடன் பிரேக் போட்டு  நின்றாள்......

அவளையும் மனோவையும் மாத்தி மாத்தி பார்த்துக் கொண்டிருந்தவள்
"மச்சி நீ ஏண்டி நீ அவர முழுங்குற மாதிரி பார்க்கிற" என நந்து கேட்க....

"ஒன்னுல்லயே"என்று கூறியவள்....

யு டர்ன் போட்டு திரும்பி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்....

"மச்சி....கேண்டீன் டி...அய்யோ சமோசா போச்சே டி....இந்த காலேஜ்ல பஜ்ஜி,போண்டாலாம் நல்லாருக்கும்னு சொன்னாங்க டி...."

"அப்போ நீ படிக்க இந்த காலேஜ் வரல...."

"ஈஈஈஈஈஈ......"என்று நந்து இழிக்க....

"யாரோ உனக்கு தப்பான இன்பர்மேஷன் குடுத்திருக்காங்க...."

"உனக்கெப்படி டி தெரியும்...."

"நான் பி.இ இங்கே தான் பண்ணுனேன் டி..."

"ஓஓஓ.....அப்போ நல்லா இருக்காதா??"முகத்தை பாவமாக வைத்துக் கொண்டே கேட்க...

அதைப் பார்த்து சிரித்தவள்...."நல்லா தான் இருக்கும்....நம்ம பிரேக்ல போலாம்...இப்போ கிளாஸ்க்கு போவோம் "என அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்....(பின்ன வரமாட்டனு அடம்பிடிச்சா இழுத்துட்டு தான் போகணும்😝)

வகுப்பினுள் இருவரும் நுழைய....
மயான அமைதி நிலவியது...(யாருமே இல்லப்பா😂)

நந்து உடனே அவளை முறைக்க மேஹா வேறு எங்கோ பார்ப்பது போல் திரும்பிக் கொண்டாள்....

"யாரோ என்கிட்ட....கிளாஸ்க்கு எல்லாரும் வந்துருப்பாங்க நாம தான் லேட்னு சொன்னாங்க"எனக் கூறிக் கொண்டே மேஹாவை முறைக்க...

"ஆமா யாரு அது"அவள் சிரித்துக் கொண்டே கேட்க.....

அவள் தன் கைகளை ஆயுதமாக்கி அவளை வெலுத்து வாங்கினாள்....

"அய்யோ வலிக்குதுடி போதும் டி..."அவள் அடிகளை வாங்கிக் கொண்டே கத்த....

"என்ன மா இங்க சத்தம்"

"என்னடி டெரரா மிமிக்ரி பண்ணுற" என இருவரும் ஒரே மாதிரி கோரஸ் பாட

"அப்போ நீ இல்லையா...."இருவரும் ஒரே டைலாக் பேசிக் கொண்டு திரும்ப
அங்கு ஆசிரியர் இவர்களை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தார்...

உங்களுக்கு கிளாஸ் இங்கே இல்லை
..... அங்கே இருக்கு என அவர் கூற.....
சரி சரி என வேகமாக தலையை ஆட்டியவர்கள் அதே வேகத்தில் அவரையும் கடந்து சென்றனர்...

தண்ணீர் குடிக்க நின்றவர்கள் குடித்து கொண்டு வகுப்பிற்கு வழி தெரியாமல் முழிக்க....

"அதோ அவங்க கிட்ட கேட்கலாம்டி" என நந்து கூற
"ஹலோ மேம்....குட் மார்னிங்...எம்.பி.ஏ கிளாஸ் எங்கே இருக்கு??"எனக் கேட்க

அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர்
"நானும் அங்கே தான் போறேன் வாங்க போலாம்"எனக் கூறி நடக்க ஆரம்பித்தார்....

"மேம் உங்க நேம் ஸ்னேகா தானே??"என மேஹா கேட்க..

"இல்லையே...ஏன் அப்படி கேட்கிற"

"ஈஈஈஈ...உங்க ஸ்மைல் கியூட்டா இருக்கு"அவள் சிரிக்க...

"ஓஓஓ...அப்போ மேம் இனிமேல் புழுங்கலரிசி டி..."என நந்து கூறினாள்....

அவர் முறைக்க....

"ஈஈ....டங்க் ஸ்லிப் ஆகிடுத்து....புன்னகை அரசி"எனக் கூறிக் கொண்டு இருவரும் சிரிக்க...

அவருக்கும் இவர்களைப் பார்க்க சிரிப்பு தான் வந்தது....
இவர்களுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்....

"மேம் நீங்க எவ்ளோ ஸ்வீட்...எவ்ளோ கியூட்..."என மேஹா கூற

"இப்போ எதுக்கு இப்படி ஐஸ் வைக்கிற"

"நாங்க கிளாஸ் தெரியாம வேற கிளாஸ்குள்ள இருந்தோம்...அப்போ கருப்பா ஒரு உருவம் வந்துச்சு.....திட்டி வெளியே அனுப்பிடுச்சு....என்ன ஒரு வாய்ஸ்....அது சவுண்ட் சரோஜா மேம்" என மேஹா கூற
"இல்லை மேம் அது வண்டலூர் வனஜா" எனக் கூறிக் கொண்டு நந்து உதட்டைப் பிதுக்க....

அவர் சிரிக்க ஆரம்பித்து விட்டார்..
"ஏன் மேம் சிரிக்கிறீங்க"என மேஹா கேட்க

"அந்த கருப்பு உருவமே நான் தான்"
எனக் கூறியவர் வகுப்பறையினுள் நுழைந்து விட்டார்....

திருத்திருவென முழித்தவர்கள் உள்ளே செல்ல.....

மேஹா வேகமாக கடைசி பென்ச்சிற்கு நகர....
நந்து முதல் பென்ச்சில் அமர்ந்து கொண்டாள்....

எங்கே பின்னாடி ஒரு ஜீவன் வருமே காணோம் என திரும்பிப் பார்க்க...
நந்து அவளைப் பார்த்து சிரித்தாள்....

"என் சரித்திரத்துலயே முதல் முறை டி...முதல் பென்ச்ல உட்காருர"முறைத்துக் கொண்டு அமர....

"பெருமைப் படு டி.....முதல் பென்ச் இல்லை...பர்ஸ்ட் டெஸ்க்"என நந்து இழிக்க....

"எப்படி டி...இவ்ளோ கேவலமா உன்னால மட்டும் மொக்கை போட முடியுது??"

"விடு டி...பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்டா நானே இருந்துக்குறேன் இப்படி மொக்கை போடுறதுல" எனக் கூறியவள் ஆசிரியரைப் பார்க்க ஆரம்பித்தாள்.....

"என்னடி மேம்அ சைட் அடிக்கிறியா??"
என மேஹா கேட்க....
"பாரேன்...கிளாஸ்ல எல்லாரும் மொக்கையா இருக்காங்க....மேம்அ பாரு டி....புன்னகை அரசி டி..."என்க

"அய்யோ" என தலையில் அடித்தவள் அமைதியானாள்....

"ஹாய் பிரண்ட்ஸ்....நான் நர்ஜூ...
உங்க டியூட்டர்....அட்டெண்டன்ஸ் இன்சார்ஜ் நான் தான்...பி.இ ல பன்ன முடியாத வாலுத்தனத்தை இங்கே பன்னலாம்னு நினைக்காதீங்க....அப்புறம் அவ்வளவு தான்"எனக் கூறியவர் எல்லார் முகத்தையும் பார்த்து விட்டு....

சிரித்துக் கொண்டே"அப்படிலாம் சொல்லவே மாட்டேன்....எவ்ளோ என்ஜாய் பண்ண முடியுமோ அவ்ளோ என்ஜாய் பண்ணுங்க....எனக்கு பிராப்ளம் வராம பார்த்துக்கோங்க அது போதும்"எனக் கூற

"மச்சி " "மச்சி"என மேஹா நந்துவின் கையை மெதுவாக வருட.....

நெளிந்து கொண்டே...."என்னடி பாய் பிரண்ட் பண்ணுற வேலையெல்லாம் நீ பார்க்கிற" எனக் கூறிச் சிரித்தாள்.

"ச்ச்ச்சி...."என்றவள்....."உன் ஆளு எப்போ அம்பி...எப்போ அந்நியன் ...எப்போ ரெமோனு தெரியலடி"என மேஹா கேட்க...

"உனக்கு அந்நியன்....அவங்களுக்கு அம்பி....எனக்கு ரெமோ"என அவள் சிரித்துக் கொண்டே கூறினாள்....

"உன்னல்லாம்" தலையில் அடித்துக் கொண்டவள் தன்னவனை நினைக்க ஆரம்பித்தாள்....

"உங்க நேம் அப்புறம் உங்களுக்கு பிடிச்சதெல்லாம் சொல்லுங்க"எனக் கூறியவர் நந்துவின் அருகில் அமர்ந்து கொண்டு பின்னாடி உள்ள மாணவர்களைப் பார்த்தபடி திரும்பி அமர்ந்து கொண்டார்.....

அவர் வந்து அருகில் அமர்ந்ததை நம்பாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் நந்து....

மாணவர்கள் அனைவரும் கூறி முடிக்க...
மாணவர்களில் கடைசியாக ஒருவன் எழுந்து
"ஐம் அருண்....ஐம் பிரம் கந்தர்வகோட்டை.....எனக்கு கவிதை எழுத ரொம்ப பிடிக்கும்....

நீ தலைசாய்த்து சிரிக்கும்
உன் கன்னக்குழி சிரிப்பில் உன் இதழ் மட்டும் இன்றி
என் மனதும் அழகாய்
மலர்கிறது......

உங்கள பார்த்ததும் எனக்கு தோணுச்சு...ஐ லைக் யுவர் ஸ்மைல் மேம்...தென் ஐ லைக் யு மேம்"எனக் கூறிக் கொண்டு அமர....
அனைவரும் ஆஆஆஊஊஊ எனக் கத்த இரு விழிகள் மட்டும் கண்களாலே அவனை எரித்துக் கொண்டிருந்தது..(நம்ம நந்து தான்)

மாணவிகளும் ஒவ்வொருத்தராக கூறி முடிக்க.....
அடுத்து நந்து எழுந்தாள்....
"ஐம் நந்தினி...நந்து...கோயம்புத்தூர் பொண்ணு....எனக்கு பேசுறது பிடிக்கும்..பேசுறது தான் பிடிக்கும்...பேசுறது மட்டும் தான் பிடிக்கும்" எனக் கூற
"மேடைப் பேச்சாளரா??"எனக் கேட்க

"ஈஈஈஈஈ....பிரண்ட்ஸ் கூட பேசுறது மேம்"

"ஹாஹா வாலு...."

"உங்க கூடயும் பேச ரெடி மேம் "அவள் சிரிக்க....
அவரும் சிரித்தார்...

இப்போது அருணை முறைத்துக் கொண்டே
"எனக்கு உங்க ஸ்மைல் ரொம்ப பிடிக்கும் மேம்...நீங்க புன்னகை அரசி...
ஐ லவ் யு மேம்...என்றவள்

ரோஜாக்கள் பல
புன்னகையால்
பூத்துக் குலுங்குவதை
உன்னில் காண்கிறேன்
என் புன்னகையரசியே

எனக் கூற

சிரித்துக் கொண்டே "நைஸ்..."என ஆசிரியர் கூற சிரித்துக் கொண்டே அவளும் அமர்ந்தாள்...

அடுத்து நீ....உனக்கு என்ன பிடிக்கும் எனக் கேட்க
"மனோ "எனக் கூறி அமைதியாகிட

அனைவரும் அவளை வியப்பாக பார்க்க
தன்னைத் தானே திட்டியவள்

"சாரி மேம்....நான் மேஹா...பொள்ளாச்சி...கவிதை எழுதுவேன் சூப்பர்னு சொல்ல முடியாது ...ஏதோ தோணும் போது கிறுக்குவேன்...அப்புறம் நல்லா சமைப்பேன்"எனக் கூறி அமர்ந்து கொள்ள

"நீ கவிதை சொல்லல...நீயும் சொல்லு மா"என ஆசிரியர் கூற

"அவன் விழிகளில் ஆயிரம் கதை பேசும் விந்தைக்காரன்....
ஆனால் வார்த்தைகளால் கொல்லும் கொலைகாரனும் அவனே....

இது வரை தோன்றாத ஒரு உணர்வு, புதுவிதமான அவஸ்தை, என் விழிகளில் தோன்றும் அவன் விழிகள் .....
இதுதான் காதலா ???....

அழகான நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் தென்றல் காற்றுடன் கூடிய சாரல் மேனியை தீண்டினால் ஏற்படும் சிலிர்ப்பை ஒவ்வொரு முறை உன்னை காணும்போதும் உணர்கிறேன்....

உன் மீதான என் காதலை நான் உணர்ந்துக்கொண்டேன்......
அது நம் காதலாய் மாறும் வரை காத்திருக்கிறேன்....

காலம் முழுவதும் என் மடியில் உன்னையும் உன் மனதில் என்னையும் சுமர்ந்தவாறு வாழ வேண்டும்....

இதுவரை வெறும் கதை பேசிய உன் கண்கள் என்று நம் காதல் கவிதைகளை பேசும்...??? "

கூறி முடிப்பதற்குள் கண்களில் கண்ணீர் முட்டிக் கொள்ள அமைதியாக அமர்ந்துகொண்டாள்....

அவளின் இந்த மாறுபாட்டைக் கண்டு கொண்டாலும் இப்போது கேட்க வேண்டாம் என நினைத்து அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டாள் நந்து....

மேஹா நந்துவின் முகத்தைப் பார்க்க
"ஒன்னுல்ல...எல்லாம் சரி ஆயிடும்"எனச் சிரிக்க

ஏனோ அவளின் இந்த செயல் அவள் சிறு வயது தோழியின் நியாபகத்தை ஏற்படுத்த அவள் தோள்மீது சாய்ந்து கொண்டாள்....



Eeee....hai bbys...upd epd irukunu sollunga?? Bore adicha athayum sollunga???

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro