வசந்தம் 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வண்ணமலர்களால் அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருக்க வாசனை திரவியத்துடன் ஊதுபத்தி மணமும் மலர்களின் வாசனையோடு கலந்து ஒரு சொல்லவொண்ணா உணர்வை தோற்றுவித்ததோடு அல்லாமல்  கைபேசியின் உதவியால் மெல்லிய இசை ஒன்று வேறு இழைந்தோட  இவையனைத்தையும் உள்வாங்கியவனின் விழிகளோ பௌர்ணமி நிலாவை ரசித்துக் கொண்டிருந்தது.

நட்பாய் தொடங்கிய விதை இன்று காதலாய் மாறி அதை அவன் தன் இணையுடன் பகிர்ந்துக் கொள்ளும் முன்னரே இன்று திருமணம் என்னும் பந்தத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

அவளிடம் காதல் மொழிகளை பேசியதில்லை,சின்னஞ்சிறு தீண்டல் இல்லை, கொஞ்சி குலாவியதில்லை,பாவையவளின் நாணத்தை கண்டதில்லை, நேரங்களை தங்கள் வீண் பேச்சுகளால் செலவிட்டதில்லை இப்படி பல...
சாதாரண காதலர்களைப் போல் அல்லாமல் அவள் தன் வாழ்வில் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றிய அடுத்த நொடியே வீட்டில் பேசி சம்மதம் வாங்கி அவள் வீட்டிலும் பேசி விட்டான்...
அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று கூற அறிய முற்படவில்லை.

இருபத்தி ஐந்து வயதில் பெற்றோர்களின் தயவு ஏதுமின்றி, வெளிநாடு என்பதை வெறும் கனவாக நினைத்தவன் இன்று வாரத்திற்கு ஒருமுறை பக்கத்து ஊருக்கு சென்று வருவது போல் தன்னை மெருகேற்றிக் கொண்டவன்...
தனக்கென்று ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவனைக் கண்டு வியந்த அவளின் பெற்றோர்களுக்கு அவனின் ஆளுமையும் , பொறுமையும் ஆச்சரியத்தைத் தான் தோற்றுவித்தது.

வேண்டாம் என்று சொல்ல ஒரு காரணமும் இல்லாது போக தங்களின் மனம் நிறைந்த புன்னகையால் தலையை அசைத்து தங்களின் சம்மதத்தை தெரிவித்தனர்.

சம்மதம் தெரிவித்ததும் திருமண வேலைகள் தொடங்க இதோ இரண்டே மாதத்தில்  அவனின் மனையாளாய் ஆகிவிட்டாள்.

கதவைத் திறந்து உள்ளே வந்தவளைக் கண்டுப் புன்னகைத்தவனின் கண்கள் இப்போது அவள் நிமிர்ந்து பார்ப்பதைக் கண்டதும் குறும்புடன் அவளை ரசிக்க ஆரம்பித்தது.

கையில் கொண்டு வந்த சொம்பை அவன் கைகளில் திணித்தவள் புடவையை தூக்கி ஒரு கைகளில் பிடித்துக் கொண்டே கதவு நன்றாக மூடியிருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு  விழிகள் இரண்டும் அவளின் துணி பையை தேட ஆரம்பித்தது.

அது கிடைத்ததும் நிம்மதியாக மூச்சுவிட்டவள் ஒரு துணியை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் ஓடினாள்.

அவள் செய்கையில் சிரித்தவன் அந்த இடத்தை விட்டு நகர வில்லை அவள் கொடுத்த பால் சொம்பையும் அசைக்க வில்லை.

வெள்ளை நிற சர்ட் மற்றும் லாங்க் பேண்ட்டில்  தன் முடியை தூக்கி கொண்டை போட்டுக்கொண்டே வந்தவள் அவனின் ஆளைத் துளைக்கும் பார்வைக் கண்டு என்ன என்பதாய் புருவத்தை உயர்த்த ஒன்றுமில்லை என தலையசைத்தவனின் பார்வையோ அவள் உடையில் சிறிது  திருப்தியின்மையை தோற்றுவித்தது.

அதைக் கண்டுகொண்டாலும் மனதிற்குள் சிரித்தவள் படுக்கையில் சென்று அமர நான் என்ன செய்றது என்ற பாவனையில் நின்றிருந்தவனை இங்கே வா என அழைத்தாள்.

முடியாது என்ற தோரணையில் அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள எழுந்து அவனருகில் சென்றவளோ அதற்கு மேல் என்ன செய்ய எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

இன்றுவரை ஏன் இந்த திருமணம் ? திடீரென்று வந்தார் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொன்னார் இப்போ பண்ணிக்கிட்டார்...அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலை இதுதான் அவள் மனதில் ஓடுவது.

அதற்கு பதில் அவன் தான் கூறவேண்டும் என நினைத்தவளும் அவனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்.

அவனருகில் அமர்ந்து பேசியிருக்கிறாள் தான், கைப்பிடித்து விளையாடியிருக்கிறாள் தான் ஆனால் காதல் துளியும் இல்லை.
அவன் அவளின் நண்பன்...
அதற்கும் மேல் அவளுக்கு பிடித்த சீனியர் அவ்வளவே!

வந்தவள் ஏதாவது கூறுவாள் என அவள் கண்களையேப் பார்த்துக் கொண்டிருக்க அவள் தான் திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தாளே!
சிரிப்பு வந்தாலும் அதை கட்டுப் படுத்திக் கொண்டு அவள் கைகளில் பால் சொம்பை திணித்தவன் அவள் தோள்பட்டையை பிடித்து தள்ளியவாறே மெத்தையில் வந்து அமர்ந்தான், அவளையும் அமரச் செய்தான்.

"ம்மம் சொல்லு என்கிட்ட என்ன கேட்கணும்?" என்று கேட்க
அந்த குரல்
கேட்டதும் ஒருவித படபடப்பு
இதயம் எகிறி குதித்துவிடுமோ என்று தோன்ற உடனே இதயத்தின் அருகில் கை வைத்தவள் அவனின் குறும்பு பார்வையைக்  கண்டு கைகளை கீழே இறக்கிக் கொண்டாள்.

"தொணத்தொணனு பேசுவ...இப்போ என்ன பேசவே மாட்டிங்கிற" என்றவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வாள் ? வாயைத் திறந்தாளே வெறும் காத்து தான் வருகிறது.

உதட்டைப் பிதுக்கியவளின் கைகளைப் பிடித்து தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன்
"நான் உனக்குப் பிடிச்ச உன் சீனியர்...எப்போவும் போல என்கூட பேசலாம், முதல்ல மொபைல்ல பேசிகிட்டோம் இப்போ நேருல அவ்வளவு தான் " என்றவனின் மூக்கில் ஒரு பஞ்ச் விடலாமா என்ற எண்ணம் வேறு தோன்றியது.

"அவ்வளவு தானா? " என்று கூறி உதட்டை சுழித்தவள் சுற்றிலும் கண்களை சுழல விட்டாள். முதலிரவிற்காக ஏற்பாடு செய்திருந்ததைக் கண்டதும்
மறுபடியும் அச்சம் வந்து தொற்றிக் கொள்ள பாவமாக அவனை ஏறிட்டவளின் பாவனையில் சிரித்தவன் "நம்ம கொஞ்சம் டைம் எடுத்துக்கலாம் சரியா? அதுக்கப்புறம் இதெல்லாம் பார்த்துக்கலாம் " என்று அவன் கூறியதும் வந்ததே அவள் முகத்தில் ஒரு புன்னகை சொக்கித்தான் போனான் அவன்.

"அப்பாடா சிரிச்சுட்டியா? சரி தூங்குறியா? ஏதாவது பேசலாமா?" என்றவனின் கேள்விக்கு தாடையில் கை வைத்து யோசித்தவள்
இப்போது கொஞ்சம் விலகி சம்மனம் போட்டு அமர்ந்துக் கொண்டாள்.

இப்போ ஓகே நான் பேச என்பது போன்ற அவள் பார்வையில் அவனும் அவளைப் போலவே அமர்ந்து ஒரு தலையணையை அவளுக்கு எடுத்துக் கொடுத்து மற்றொன்றை தன் மடியில் வைத்து சாவகாசமாக அமர்ந்து கொண்டான்.

"நீ பேசிட்டே இருப்பியே இப்போ ஏதாச்சும் பேசு " என்றவனிடம் பேச ஒன்னுமில்லையே என்பதைப் போல் அவள் உதட்டை பிதுக்க

"நீ தான் ஒரு கதாசிரியர் ஆச்சே...கதை சொல்லுறது " என்றவனின் கேலியில் முறைத்தவள் "நான் மாட்டேன் பா" என்று கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

கன்னத்திற்கு கை கொடுத்து ஏற்கனவே பார்வையிட்ட அறையை மறுபடியும் அவள் விழிகள் ஆராய ஆரம்பிக்க அதில் சலித்தவன் வலுக்கட்டாயமாக அவளைத் தன்புறம் திருப்பி சரி என்கிட்ட ஏதாச்சும் கேளு நான் சொல்லுறேன் என்று கூறினான்.

அவன் கூறியதில் பிரகாசமானவள் உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்களேன் என்று கேட்க அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் உதடுகள் தானாக முணுமுணுத்தது கேடி என்று.

அவளும் எவ்வளவோ முயற்சித்து விட்டாள் ஆனால் அவன் அந்த கதையை மட்டும் கூறமாட்டான்.
பாஸ்ட் இஸ் பாஸ்ட் என்று கூறிவிடுவான்.

இன்றும் அவன் அதையே கூற முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டவளிடம் வேறு கேள்வி கேட்க சொல்ல சிறிது  நேரம் யோசித்தவளோ உங்க க்ரஸ் பத்தி சொல்லுங்க என்று கூறி சிரித்தாள்.

அவளின் எண்ணப்படி அவனின் காதலி தான் அவனின் க்ரஸ்ஸாக இருக்கும் என நினைத்தாள்.

அவளின் அறிவை மெச்சிக் கொண்டவன் கண்களில் க்ரஸ்ஸை நினைத்து அப்படியே பளிச்சென்று மின்னல் வெட்டியது.

அதைக் கண்டவளுக்கும் ஏதோ ஆக ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தாள்.

"அவ வருணவி " என்று கூறியதும் இவள் திருத்திருவென முழிக்க நீ இல்லை டி லூசு என்றவனோ அவ அழகா இருப்பா என்று கூற முகத்தை வெட்டியவளோ ம்க்கும் என்று செருமி அப்புறம் என்பதாய் சைகை காட்டினாள்.

அவள் செயலில் சிரித்தவன் அவள் தலையை கலைத்தவாறே தன் க்ரஸ்ஸை பற்றி கூறி ஆரம்பித்தான்.



ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro