10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"சரி சார், அப்படியே பண்ணிடலாம்" என்று போன் பேசிக்கொண்டே வீட்டிற்குள் வந்த ஷ்யாம் சோபாவில் உட்கார்ந்திருக்கும் வினீத்தை கண்டதும் அவனுக்கு கோபம் மலையளவு உயர்ந்தது. திருட வந்து அகப்பட்டவனை போல முழித்துக் கொண்டிருப்பவனுக்கு மீனாக்‌ஷி ஜூஸ் கொடுக்க வேகமாக வந்து அவன் கைகள் இருந்த ஜூஸை தட்டிவிட்டவன்

"ஆமா உனக்கு இப்போ ஜூஸ் ஒன்னுதான் கேடு. எங்கடா போய் தொலைஞ்ச இவ்வளவு நாளா" என்று அவன் சர்ட் காலரை பற்றி அவனை எழுப்பியவனை வினீத் எதுவும் பேசாமல் இருந்தான். உடனே மீனாக்‌ஷி பக்கம் திரும்பிய ஷ்யாம்

"மீனாக்‌ஷி நீ அம்மா ரூமுக்கு போ. இங்க எது நடந்தாலும் வெளில வரக்கூடாது" என்று கூற அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க ஷ்யாம் குரலை உயர்த்தி

"சொன்னதை செய்" என்க அவளும் பயத்தில் எதுவும் கூறாமல் நின்றவளை வினீத் கண்களால் உள்ளே செல்லும் படி கூறினான். மீனாக்‌ஷி உள் சென்றதும் வினீத்தை சரமாரியாக அடிக்க தொடங்கிய ஷ்யாம் அவன் கோபம் தீரும் வரையும் அடித்தான். ஒரு சில நிமிடங்களில் கோவிலுக்கு சென்ற மரகதம் வீட்டிற்கு வர அங்கு தனது சட்டை கிழிந்து வாயில் இரத்தம் ஒழுக நிற்கும் வினீத்தை கண்டவர்

"டேய் ஷ்யாம், என்ன பண்ணிருக்க. எதுக்கு இவன அடிச்ச" என்று கேட்க அவனோ அவர் பக்கம் திரும்பி

"அவன் ஏன் அடிச்சேன்னு உங்களுக்கு தெரியாதா? ஏதோ புதுசா கேட்குற மாதிரி கேட்குறீங்க?" என்றவனை மரகதம் எதுவும் கூற முடியாமல் இருந்தார். உடனே தன் அறைக்குள் சென்றவர் கதவின் அருகில் நின்று

"வினீத் உள்ள வா" என்றவர் மீனாக்‌ஷியை தன் அறையை விட்டு வெளியில் போகும்படி கூறினார். வினீத்தும் அவரின் அறைக்குள் செல்ல கதவை தாழிட்டார்.தன் அண்ணனின் நிலையை கண்ட மீனாக்‌ஷி ஷ்யாமிடம்

"ஏன் எங்க அண்ணாவ அடிச்சீங்க. எங்க கிட்ட காசு பணம் இல்லாம இருக்கலாம். ஆனா தன்மானம் இருக்கு. அண்ணா இல்லாதப்போ பயமா இருக்குன்னு உங்க வீட்டுல வந்து இருந்தேன். நான் உங்க வீட்டுல இருக்குறது பாரமா இருந்தா என்கிட்ட சொல்லிருக்கலாம். நான் வேற ஏதும் ஏற்பாடு செஞ்சிருப்பேன். மரகதம் அம்மாகிட்ட நான் முன்னாடியே சொன்னேன் இந்த தடவை நான் இங்க தங்கள என்று. ஆனா அவங்கதான் கேட்கல" என்று ஏதேதோ சம்பந்தம் இல்லாமல் பேசியவளை முறைத்தவன்

"என்ன லூசு மாதிரி பேசிகிட்டு இருக்க. உன் வாய மூடிகிட்டு இருக்கியா?" என்று கூற ரோசம் வந்த மீனாக்‌ஷி

"சரி என்ன லூசுன்னே நினைச்சிக்கோங்க. எங்க அண்ணன அடிக்க நீங்க யாரு. எதுக்கு அவர அடிச்சீங்க" என்று கூற சின்ன வயதில் இருந்தே இவர்கள் மூவரும் ஒன்றாக வளர்ந்திருந்தாலும் மீனாக்‌ஷி ஷ்யாமிடம் ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேச மாட்டாள். ஆனால் இன்று அவள் இப்படி பேசுவது அவனுக்கு கோபமாக இருந்த நிலமையிலும் சிரிப்பை வரவழைத்தது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாதவன்

"என்ன தெரியனும் உனக்கு இப்போ. உங்கண்ணன ஏன் அடிச்சேன்னா. அவன் என்னோட ப்ரெண்ட். உனக்கு அவன பத்தி என்ன தெரியும். சின்ன வயசுல ஏதாச்சும் பிரச்சினை வரும் போது வீட்ட விட்டு ஓடி போவான். அப்புறம் இரண்டு நாள் கழிச்சி வருவான். எங்க போறான் என்ன பண்றான்னு யாருக்குமே தெரியாது. கேட்டாலும் சொல்லமாட்டான். என்ன கொஞ்ச நாளா எந்த பிரச்சினையும் இல்லாம இருந்தான்.அவனோட லட்சியம் என்ன தெரியுமா?"என்று கேட்க அவளோ

"என்ன நல்ல இடத்துல கட்டிக்கொடுக்குறது" என்று கூற அவன் தன் தலையில் அடித்து

"நீ நிஜமாவே லூசுதான். அவனோட லட்சியம் எல்லாமே ஒரு பெஸ்ட் டைரக்டர் ஆகனும் என்றதுதான். உங்கண்ணன் முதல் படம் நல்லபடியா முடிச்ச கையோட அவன் எதிர்பார்த்த பெஸ்ட் டைரக்டர் என்ற பெயரு ஈசியா கிடைச்சது. ஆனா அத அப்படியே தக்க வெச்சிக்கனும்னா அதுக்கு ரொம்ப மெனக்கெடனும். இவன் என்ன பண்ணான், படம் முடிஞ்ச கையோட யார்கிட்டயும் எதுவுமே சொல்லாம போயிட்டான்.இப்போ இவனை நம்பி யாரு படம் கொடுப்பா இவனுக்கு" என்று கூற அவளோ மெதுவாக தலை குனிந்து

"அதெல்லாம் எங்கண்ணனோட திறமைக்கு சான்ஸ் கிடைக்கும்" என்றவளை எரிச்சல் பார்வை பார்த்தவன்

"கிடைக்கும் கிடைக்கும், உனக்கும் உங்கண்ணனுக்கும் சினிமாவுல நிலைச்சிருக்குறது ரொம்ப ஈசியான விசயம்னு தோனுதுல்ல. ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போது எங்களுக்குள்ள இருக்குற பயம் எங்களுக்குத்தான் தெரியும். படம் கொஞ்சம் சொதப்பினாலும் முன்னாடிலாம் நல்லா பேசினவங்க உடனே தூக்கி எறிஞ்சி பேச ஆரம்பிச்சிடுவாங்க.இவனுக்கு இவ்வளவு ஈசியா கிடைச்ச சான்ஸ இவனோட லூசுத்தனத்தால இழக்க போறான். நான் உங்கண்ணன்கிட்ட முன்னாடியே சொன்னேன். சினிமாவுக்கு வந்தா சில விசயங்கள விட்டுக்கொடுத்து ஆகனும்னு. குறிப்பா அவனோட இந்த பிரச்சினைக்கு பயந்து ஓடுற பழக்கத்த விட்டே ஆகனும்னு சொன்னேன். அவனும் உன்மேல சத்தியம் பண்ணித்தான் இதுக்குள்ள வந்தான். ஆனா இன்னைக்கு இவன் பண்ண காரியம்" என்று அழ ஆரம்பிக்க மீனாக்‌ஷி என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள். கண்களை துடைத்தவன்

"உனக்கு தெரியாது மீனாக்‌ஷி, எனக்கு வினீத்த ரொம்ப பிடிக்கும், என்ன விட எனக்கு அவன ரொம்ப பிடிக்கும். அது ஏன்னு எனக்கே தெரியாது. அவன் லைப் நல்லாருக்கனும் அதுக்காகத்தான் நான் இவ்வளவும் பண்ணேன். கோபத்துல அவன அடிச்சிட்டேன்" என்று கூற மீனாக்‌ஷிக்கு, சிறுவயதில் இருந்தே வினீத் மீது ஷ்யாம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் என்பது தெரியும் என்பதால் எதுவும் கூறாமல் நின்றாள்.

அங்கு மரகதத்தின் அறையில்,
வினீத்தின் முகத்தை பார்க்காமல் மறுபக்கம் திரும்பி நின்ற மரகதத்திடம்

" ஏதாச்சும் பேசுங்கம்மா. இப்படி என் முகத்த கூட பார்க்காம இருக்கீங்க. மனசு வலிக்குதும்மா" என்றவனை அவர்

" அம்மாவா? இது எப்போல இருந்து வினீத். நீதான் சொல்வியே வாழ்க்கைல அம்மா என்றாலும் பொண்டாட்டி என்றாலும் அது ஒன்னுதான்னு. இப்போ என்ன புதுசா என்ன அம்மான்னு சொல்ற" என்று கேட்க அவன் அமைதியாக இருப்பதை கண்டவர் மேலும்

" நான் பெத்து வளர்க்காதவன்தான். இருந்தாலும் என் கையால உனக்கு சாப்பாடு ஊட்டிருக்கேன். உங்கம்மாவ நீ அம்மான்னு கூப்பிட்டத விட என்னத்தான் நீ அம்மான்னு கூப்பிட்டிருக்க. ஆனா உனக்கு ஒரு பிரச்சினைன்னு வந்ததும் என்கிட்ட கூட சொல்லாம போயிட்டியே?" என்று ஆதங்கப்பட்டவர்

"என்னதான் நீ வாயால என்ன அம்மான்னு சொன்னாலும் நான் உன் அம்மா இல்லைதானேப்பா" என்றவரின் கண்களில் கண்ணீர் தடையின்றி வழிந்தோடியது.

மரகதம் அழுவதை காண சகிக்காதவன்

"ப்ளீஸ்மா, இப்படி வார்தைகளால கொல்லாதீங்க" என்று கூறியவனை பார்த்து

" சரி இத்தனை நாளா எங்க போன. இந்த வாட்டி என்ன ப்ராப்ளத்த பார்த்து பயந்து போன. என்வயசுக்கு மதிப்பு கொடுக்குறதா இருந்தா சொல்லு" என்றவரிடம் அவன்

" அம்மா நான் ஒரு பொண்ண காதலிச்சேம்மா, அவளுக்கு என்ன பிடிக்கலையாம். தயவு செஞ்சி அந்த பொண்ணு யாருன்னு மட்டும் கேட்காதீங்க" என்றவனை கேள்வியாக அவர் பார்க்க

"இப்போ மட்டும் ஏன் வந்தேன்னுதான்னே பார்க்குறீங்க. நான் செஞ்சது முட்டாள்தனம்னு தோனிச்சி. முன்னாடிலாம் நான் ஏதும் ப்ராப்ளம் வந்தா இப்படி அடிக்கடி காணாம போயிடுவேன். ஆனா நான் சினிமாவுக்கு வந்ததுக்கு அப்புறமா ஷ்யாம் கிட்ட சத்தியம் பண்ணேன். அவன் சினிமா இண்டஸ்ட்ரி பத்தி புட்டு புட்டு வெச்சான். நாந்தான் அவசரப்பட்டு இப்படி பண்ணிட்டேன், சாரிமா" என்றவனை மரகதம்

"வினீத் நீ லவ் பண்ணியா? யாருப்பா அது. உன்ன போய் வேணாம்னு சொல்லிருக்கா? நீ அவ யாருன்னு சொல்லு நான் போய் அவகிட்ட பேசுறேன். உன்ன மாதிரி ஒரு நல்லவன அவ மிஸ் பண்ண கூடாது " என்றவரை பார்த்து விரக்தியாக சிரித்தவன்

"காதல்ல மட்டும் தூது இருக்க கூடாதும்மா. பொண்ணுங்களுக்கு நல்லவனா இருக்குறவன விட வல்லவனா இருக்குறவனத்தான் பிடிக்கும் போல" என்றவனை அவன் வல்லவன் என்று எதைக்குறிப்பிட வருகின்றான் என்று புரிந்தது.சிம்புவின் வல்லவன் படம் வந்ததின் பின் அவர்கள் வீட்டில் எல்லா பெண்களிடம் கடலை போடும் ஆண்களை வல்லவன் என்றே விழிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

மரகதத்தின் வீட்டில் சினிமாவே வாழ்க்கையாகி இருக்க அவர்கள் வீட்டில் ஏதும் உவமையாக பேச வேண்டும் என்றால் சினி காரக்டர்கள் அல்லது சினிமா காட்சிகளையே பயன்படுத்துவது வழமை.
-------------------
ஹாய் வட்டீஸ் ,
புதிய எழுத்தாளர்கள் அறிமுகம்.

Nandhusundaram  அவர்களின் "விழிநீர் துடைப்பாயோ" நேரம் இருப்பவர்கள் அவர்களின் கதைக்கு சப்போர்ட் செய்யலாமே.

sengodi  அவர்களின் "தோழனே துனையோ" இவரும் புதிய எழுத்தாளரே. இருவரையும் நம் எழுத்து உலகுக்கு வரவேற்போம். நம் ஆதரவையும் தெரிவிப்போம்..

miru_writes  அவர்கள் , இவர் ஒரு லெஜண்ட் ரைட்டர். அவருடைய "சஞ்சனா " மற்றும் "ஆரோஹி " பட்டி தொட்டி எங்கும் கலைகட்டி பறக்கின்றது. என்னுடைய கதை படிக்கின்ற யாரும் அவரின் கதையை படிக்கவில்லை என்றால்... உடனே என்கதையை படித்து நேரத்தை வீனடிப்பதை விட்டு உடனே இவரின் கதையை படியுங்கள். கண்டிப்பாக ஏமாற்றம் அடையமாட்டீர்கள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro