🌃விண்ணுலகம் வினோதம் கண்ட திவ்யம் நீ👸

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


அகரம் என்ற ஓசையுடன் பூவுலகில் உதித்தாய்

ஆதவனாய் விண்ணுலகை விடியச்செய்கிறாய்

இசையாய் இல்லத்தில் வளம் வந்து

என புன்சிரிப்புடன் புன்னகைத்தாய்

உள்ளம் நெகிழ சான்றோரிடம் பழகி

ஊற்றாய் அன்பை கொடுத்து மகிழ்கிறாய்

எதிலும் சங்கடம் காட்டாமல்

ஏழ்மை என திகலும் கோபத்தில்

என்ற பெண்ணழகுடன்

ஒற்றை விழி பார்வையால்

ஓயாமல் கண்களை சிமிட்டுகிறாய்

ஔதசியம்(பால்) போல் மனம் கொண்டவளே

*******************

-கவிஞனின் கவியாய் பூத்து

-ஙங்கலந்தன(கடவுளைப்பற்றி) நம்பிக்கை கொண்டு

-சலங்கையாய் புன்னகை சேர்க்கிறாயே மற்றவரிடத்தில்

-ஞமலி(மயில்) போல் அழகுக்கு அழகாய் பிறந்தாய்

-டம்பம்(ஆடம்பரம்) இல்லா வஸ்திரத்தில் ஜொலிக்கிறாய்

-இ(ண)க்கம் கொண்ட மனதால் மனம் ஈர்க்கிறாய்

-தமிழ் மொழி கொண்ட உன் நாமம் அழகு

-நல்வாழ்த்துக்களால் நீ மேன்மை அடைவாய் கண்மணியே

-பசுமையான பேச்சினில் உள்ளம் குளிர வைத்தாயே

-மனை(வீடு) போல் அடைக்கலம் தருகிறாய்

-யவனன் போல் நீ வீரமுடன் திகழவேண்டும்டா

-ரம்மியமான பொழுதுகளாக மறைகின்றாய்

-லட்சியம் என்ற ஒன்றை மனதில் கொள்ளாத சிறுபிள்ளையடி நீ

-வஞ்சகம் இல்லா பண்பை மேற்கொள்கிறாய்யே

-கு(ழ)ந்தை முகம் கொண்டு குலைந்து செல்கிறாய்

-க(ள)ம் கண்டு சிந்தனை செய்கிறாய்

-ம(ற)தி வேண்டும் என்று வேண்டி செல்கிறாய்

-ம(ன)ம் சிறக்க மனம் குளிர வேண்டுகிறேன்

உனக்காக நான்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro