34

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மனிதன் தனக்கு பிடித்தமான விடயம் கிடைக்க அல்லது தனக்கு பிடித்தமானவர்களுக்கு ஒரு விடயம் கிடைக்க எது வேண்டுமானாலும் செய்வான். அதிக விழுக்காடு (Percentage) இப்படியான மனிதர்கள் இருப்பதே உண்மை. அதற்கு மாற்றமாக சமூக அல்லது மூண்றாம் நபரின் நலனில் அக்கறை எடுத்து தனக்கு பிடித்தமான விடயத்தை அவர்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்பவன் மகான் ஆகிவிடுகின்றான்.

ராதா ஒன்றும் மகான் கிடையாது. அதே நேரம் அவள் தனக்கு பிடித்தமானது கிடைக்க எதையும் செய்ய துணிபவ அல்ல. ஆனால் தன் தம்பிக்காக அவள் எதையும் செய்வாள் என்று க்ரிஷ்ஷிற்கு தெரியும். அதனாலேயே அவன் ரூபினி விடயத்தை ராதாவிடம் ஒப்படைத்தான். இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவன் எது கேட்டாலும் அவள் மறுக்க மாட்டாள் என்பதும் அவனுக்கு தெரியும். ஆனால் இங்குதான் ஒரு விடயத்தை க்ரிஷ் கவனிக்க மறந்தான். என்னதான் தன் தம்பி தவறு செய்திருந்தாலும் அவனுக்கு மனைவியாக ஒரு விலைமகளை ராதா ஏற்றுக்கொள்ளமாட்டாள் என்பதை அவன் புத்திக்கு தோன்றவில்லை.

ராதாவுக்கு சுரேஷின் அனுகுமுறை மிகவும் விநோதமாக இருந்தது. காரணம் க்ரிஷ் மீது அவன் என்றும் பெரிதாக கரிசனை எடுத்தது கிடையாது. அதற்கான காரணம் அவள் மீது அவன் கொண்ட கண்மூடித்தனமான காதல் என்பது அவளுக்கு தெரியும். தன் மனதுக்கு பிடித்தளின் அன்பு தனக்கு மட்டும்தான் கிடைக்க வேண்டும் என்று எந்த ஆண் நினைத்தாலும் அது அந்த பெண்ணுக்கு பெரிய கர்வத்தை கொடுக்கும். அந்த கர்வம் கொடுக்கும் சுகமே தனிதான்.

" ஏங்க, நீங்களும் ஷக்தியும் வெளியில போய் சாப்பிட ஏதும் வாங்கிட்டு வாங்க" என்று ராதா கூறினாள். தன்னையும் ஷக்தியையும் தவிர்த்து அவள் க்ரிஷ்ஷிடம் ஏதோ பேச போகின்றாள் என்பது புரிய அவர்கள் இருவரும் வெளியில் சென்றனர். மீனாக்‌ஷியும் அந்த அறையை விட்டு வெளியேற பார்க்க ராதா அவளின் கைபிடித்து அவளை அங்கேயே அமர செய்தாள். க்ரிஷ்ஷிற்கு மட்டும் தெளிவாக ஒரு விடயம் புரிந்தது. ராதா தன்னிடம் தனியாக பேசவே ஷக்தி மற்றும் சுரேஷை வெளியில் அனுப்பினாள் என்று.

" க்ரிஷ் உன் வாழ்க்கை மேல அக்கறை உள்ள முக்கியமான இரண்டு ஜீவன் என்றால் அது நானும் மீனாக்‌ஷியும்தான். நீ காணாமப்போனப்போவா இருக்கட்டும் இல்லை இப்போ உன் மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்சப்போவா இருக்கட்டும் மீனாக்‌ஷி பட்ட கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும். அவ எப்போமே உன் நல்லத மட்டும்தான் யோசிப்பா. அதனால அவள வெச்சிக்கிட்டு இத பத்தி பேசுறது நல்லதுன்னு நினைக்கிறேன்" என்று கூற அவள் ஏதோ ஒரு பெரிய விடயத்தை ஆரம்பிக்கவே இப்படி பேசுகின்றாள் என்பதை புரிந்தவன் அமைதியாக இருந்தான்.

" உனக்கு ரூபினிய எதனால பிடிச்சது என்று நான் கேட்க போறதில்ல. உனக்கு நல்லாவே தெரியும் நீ எதையும் கேட்டு மறுக்கிற நிலமையில நாங்க யாரும் இல்லைன்னு. ஆனா உன் எதிர்காலம் முழுவதும் உனக்கு துணையா ஒரு வேசிய சேர்த்துக்க போறன்னு சொல்றத ஏத்துக்க முடியல" என்று கூற ராதாவின் வேசி என்ற வார்த்தை அவனை பாதிக்க செய்தது. உடனே அவன் ராதாவை நிமிர்ந்து பார்க்க அவனின் பார்வையின் அர்த்தத்தை அறிந்தவள்

" அவள நான் நம்ம மூணு பேருக்கு வெச்சி அப்படி சொன்னதுக்கே ஐ மீன் வேசின்னு சொன்னதுக்கே
உனக்கு கஷ்டமா இருக்குள்ள. ஹ்ம்ம்.நாளைக்கு நீ வெளியில அவகூட போகும் போது அவளோட பழைய கஸ்டமர் யாரும் வந்து அவள கூப்பிட்டாலோ இல்லைன்னா அவள பத்தி தெரிஞ்ச உன் ஃப்ரண்ட்ஸ் யாரும் ' இவ ரேட்டு எவ்வளவு' அப்படின்னு கேட்டாலோ உன்னால அத எதிர்கொள்ற சக்தி இருக்கா. நீ எடுக்க போற முடிவு சாதாரணமானது கிடையாது. இது எல்லாத்தையும் உன்னால எதிர்கொள்ள முடியும்னே வெச்சிக்கலாம். உங்களுக்குள்ள ஏதும் பிரச்சினை வர்ரப்போ உன்னால அவளோட கடந்த காலத்த வெச்சி குத்திக்காட்டாம இருக்க முடியுமா? உனக்கு கோபம் வந்தா நீ என்ன பண்ணுவ, எப்படி பேசுவன்னு எனக்கு தெரியும்டா. சரி அது எல்லாத்தையும் விடு. இது எல்லாத்தையும் நீ சமாளிச்சிடுவேன்னே வெச்சிக்கலாம். உனக்கு குழந்தைகள் என்றாகி நாளைக்கு அதுங்களுக்கு அவங்களோட அம்மா கடந்த காலத்துல ஒரு வேசி என்று, சாரி க்ரிஷ் நான் அந்த வார்த்தைய பாவிச்சிதான் ஆகனும். ஏன்னா அந்த வார்த்தைய சொல்ற ஒவ்வொரு நேரமும் உன் மனசு வேதனைப்படும்னு தெரியும்.

சரி உன் குழந்தைகளுக்கு அவங்க அம்மா ஒரு வேசின்னு தெரிஞ்சா அவங்களோட மனநிலை எப்படி இருக்கும். உன்னால அவங்க கேட்க போற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? அதுக்கும் மேல திருமணம் என்பது இரண்டு பேரு மட்டும் சம்பந்த்தப்பட்டது இல்லை. இரண்டு குடும்பம் ஒன்னு சேருகின்ற சடங்கு. அவ சைட்டுல இருந்து யார் யார் வருவாங்கன்னு யோசிச்சியா. நம்ம குடும்பத்து ஆளுங்க கிட்ட இவ யாருன்னு அறிமுகம் செய்து வெக்கிறது. இப்போ இருக்குற நிலைமையில உன் வாழ்க்கை இனிமேல் ஆச்சும் நீ விரும்புற மாதிரி இருக்கனும்னு ஷக்தியும் சுரேஷும் நீ எது சொன்னாலும் ஆமா சாமி போடுவாங்க. தப்பு செஞ்ச ஷக்தி அப்படி சொல்ல நியாயம் இருக்கு. ஆனா எல்லோருக்கும் முன்னாடி சுரேஷ் ஏன் முந்திரிகொட்ட மாதிரி ஆமா சாமி போடுறார்னு தெரியல" என்றவள் க்ரிஷ்ஷை தன் அருகில் அழைத்து அவனின் கைகளை பிடித்து அழுத்திக்கொடுத்தாள்.

" இப்போ கூட உன்ன காயப்படுத்தனும்னு நான் இதெல்லாம் சொல்லலடா. உன்னோட இருக்க போற மீதி வாழ்க்கையாச்சும் சந்தோசமா இருக்கனும். அதுக்காகத்தான் இதெல்லாம் பேசுறேன். நீ இப்பவே முடிவெடுக்கனும்னு தேவை இல்ல. நல்லா யோசி. கொஞ்ச நாள் ஆற போடு. அதுக்கு அப்புறமா முடிவெடு" என்று கூற ராதா கூறியவற்றில் இருக்கும் எதார்த்தம் அவனுக்கு புரிய அவன் அமைதியாகவே இருந்தான். சிறிது நேரத்தின் பின்

" சரிக்கா, நீ சொல்ர மாதிரியே யோசிச்சி பார்க்கிறேன்" என்றவனை அணைத்தவள் அவன் நெற்றியில் முத்தமிட்டு

" இனி உன் வாழ்க்கை நல்லா இருக்க இந்த அக்கா எது வேணாலும் பண்ணுவேண்டா" என்றாள். இவர்களின் பாசத்தை பார்த்து க்ரிஷ்ஷை காதலிக்க ஆரம்பித்த மீனாக்‌ஷிக்கு மீண்டும் அவர்கள் ஒன்று சேர்ந்தது அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

இரவு உணவு உண்டபின் எல்லோரும் கலைந்து சென்றனர். ஷக்தியும் கடைசியாக மீனாக்‌ஷியிடம்

" சரி மீனாக்‌ஷி நான் போயிட்டு வர்றேன்" என்று கூற அவனை பார்த்து முறைத்தவள்

" ஆமா சார் எங்க போக போறீங்க. ஓ கனடா போகனும்ல. என்கிட்ட எதுவுமே கேட்காம உங்க இஷ்டத்துக்கு எல்லாமே பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டீங்க. ஹ்ம்ம் இந்த ப்ராப்ளத்தோட விட்டது சனியன்னு என்ன தலை முழுக பார்த்துட்டீங்கள்ள" என்று கூற ஷக்தி அவளை பார்த்தான்.

" என்ன மீனாக்‌ஷி நீ சனியன்னுலாம் பேசுற. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உன்கிட்ட கேட்காம நான் எந்த முடிவும் எடுத்ததில்லையே. அப்புறம் ஏன் இபப்டி பேசுற" என்று கேட்டான்.

" அது எல்லாத்துக்கும் சேர்த்துதான் எங்கள எல்லாம் விட்டுட்டு கனடா போக முடிவு பண்ணிட்டீங்களே. இந்த மீனாக்‌ஷி வேணும்னுதானே யாரும் செய்ய துணியாத காரியம்லாம் செஞ்சி என்ன அடைஞ்சீங்க. இப்போ ஒரு குழந்தை ஆனதும் நான் போர் அடிச்சிட்டேன்ல. சரி மிஸ்டர் ஷக்தி. நீங்க கனடாவுக்கே போங்க" என்று கூற அவன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான். அவனின் தடுமாற்றத்தை ரசித்தவள் அவன் அருகில் வந்து அவனை இறுக்கமாக அணைத்தாள்.

" என்னவிட்டுட்டு போக உனக்கு எப்படிடா மனசு வந்தது. என்ன விட்டுட்டு நீ போயிடுவியா. என்ன விட்டு போனா நான் எப்படிடா உயிரோட இருப்பேன். உடைஞ்சி போய் இருந்த எனக்கு அன்புன்னா எப்படி இருக்கும்னு திகட்ட திகட்ட கொடுத்திட்டு, இப்போ என்ன தனியா விட்டு போக எப்படிடா உனக்கு மனசு வந்திச்சி. நாந்தான் கோபத்துல அன்னைக்கு அப்படி பேசிட்டேன். ஒரு ஒழுங்கான புருசனா நீ என்ன பண்ணியிருக்கனும். எனக்கு இரண்டு அடி போட்டு ஒழுங்கா இருடின்னு சொல்லிருக்கனும். அத விட்டுட்டு நான் 'க்ரிஷ்ஷ மீட் பண்ணி என்ன வேணா பண்ணலாம்ல' என்று கேட்டப்போவ என் செவுல்ல நாலு விட்டு ஒழுங்கா வீட்டுல இருடின்னு சொல்லிருக்கனும். அதவிட்டிட்டு பெரிய தியாகி மாதிரி ' என்ன வேணா பண்ணிக்கோன்னு' விட்டு கொடுக்குறீங்க" என்றவள் அவனை காதலாக அவன் கண்களை நோக்கினாள்.

" டேய் க்ரிஷ்ஷ நான் காதலிச்சேன். அந்த வார்த்தையோட அர்த்தம் புரியுதா. காதலிச்சேன். இறந்த காலம். ஆமா அந்த காதல், காலம் எல்லாமே இறந்து போயிடிச்சி. உன்ன இப்போ நான் காதலிக்கிறேன். இது நிகழ்காலம். உன்ன விட்டு எப்படி ஷக்தி நான் இருப்பேன்" என்றவளை இப்போது ஷக்தியும் இறுக்கி அணைத்திருந்தான். தான் மனதில் இருந்தவற்றை மீனாக்‌ஷி மிக தெளிவாக ஷக்திக்கு கூறிய விதத்தில் அவன் மனது இலேசாகிவிட்டது. இதைவிட மீனாக்‌ஷிக்கு ஷக்தி எவ்வளவு முக்கியம் என்று யாராலும் கூறிவிட முடியாது. அன்றைய இரவு அவர்களுக்கு நீண்ட தூங்கா இரவாக மாற போகின்றது என்பது அவர்கள் இருவருக்குமே தெரியும்.

------------
ஹாய் வட்டீஸ்,
ஒரு சில காரணங்களால் வியாழக்கிழமை அப்டேட் வர வாய்ப்புகள் மிகவும் கம்மி. அந்த அப்டேட்டை வெள்ளிக்கிழமை போட்டுவிடுவேன்.

மேலும் இந்த கதையில் ஒரு சில அருவருக்கத்த வார்த்தைகள் மற்றும் காட்சியமைப்புக்கள் இருப்பதாக ஒரு சில வாசகர்கள் சுட்டிக்காட்டினார்கள். நானும் அதை உணர்ந்தேன். இனி வரும் கதைகளில் இப்படியானவற்றை தவிர்ந்த்து கொள்ள முயற்சிக்கின்றேன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro