தீண்டல் 33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"என்ன சொல்ர சந்துரு,அது போதை மருந்தா?அப்போ அவரு கை எல்லாம் இருக்குற தழும்பு , ஊசி போட்டு வந்ததுதானா?ஓஹ் கடவுளே பாவம் அவரு.காதலிச்ச பொண்ண மறக்க முடியாம இப்படி தன் வாழ்க்கைய கெடுத்துக்கிறாரே"என்று புலம்பியவலை அனு சமாதானம் செய்தால்.

சந்துரு அனுவின் அண்ணனுக்கு கால் செய்து அவனுக்கும் அனுவுக்கும் இன்று கொஞ்சம் வேலை இருப்பதால் நாளை அவர்களின் பத்திரிகைகளை கொடுப்பதாக கூறிவிட்டு நித்யாவை பார்த்து

"நித்யா நீங்க சொல்ரத பார்த்தா கண்டிப்பா வருண் ரொம்ப நாளா இதை பாவிக்கிற மாதிரி தெரியுது.அதுவும் இவரு பாவிக்கிற இந்த மருந்து கஞ்சா,அபின் மாதிரி ஈசியா ரிக்கவர் ஆகுற மருந்து மாதிரியும் தெரியல.வருண் யூஸ் பண்ற மருந்துல இருந்து அவர் வெளிவர வைக்கிறது ரொம்ப கஷ்டமான காரியம்.உன்ன பயமுறுத்த இத நான் சொல்லல.நீ இந்த மருந்தோட தன்மைகளை தெரிஞ்சிக்கனும்னுதான் சொன்னேன்"என்றவனை நித்யா

"சந்துரு,நீங்க ஒரு டாக்டரா சொல்லுங்க.வருண குணப்படுத்த முடியுமா? முடியாதா?"என்றவளை

"முடியாதது என்று எதுவுமே இல்ல நித்யா.ஆனா இங்க ப்ராப்ளம் என்னன்னா வருண் ஏன் இப்படி ஆனாருன்னு தெரிஞ்சிக்கனும்.அது தெரியாம நம்ம எதுவுமே பண்ண முடியாது.சோ நீ கொஞ்சம் வருணோட டயரிஸ் இல்ல அவரு லவ் பண்ண அந்த பொண்ணோட டீட்டைல்ஸ் கலக்ட் பண்ண முடியுமான்னு பாரு.அது கிடைச்சா நம்ம வேலை கொஞ்சம் ஈசியா முடியும் .நான் ஈசியான்னு சொன்னது குணப்படுத்துறத இல்ல,root cause என்னான்னு நம்மலால ஐடிண்டிபை பண்ண முடிஞ்சதுன்னா நம்ம further அஹ் steps எடுக்கலாம்.இல்ல இன்னொரு வழியும் இருக்கு.ஆனா இப்போ நீங்க இரண்டு பேரும் இருக்குற நிலமைல அது சரி வருமான்னு தெரியல"என்றவனை

"என்ன சந்துரு சொல்லுங்க"என்றால் நித்யா..அதற்கு சந்துரு கொஞ்சம் யோசித்து விட்டு

"சொல்ரேன்னு தப்பா எடுத்துக்காத ,எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல.ஆனா ஒரு டாக்டரா சொல்ரேன்.வருணுக்கு உன்மேல இண்ட்றஸ்ட் வர வை.நான் சொல்ல வர்றது புரியும்னு நினைக்கிறேன்.அவரு மைண்ட் செட் சேஞ்ச் பண்ணா கூட அவர இதுல இருந்து காப்பாத்திடலாம்.ஆனா அதுக்கு முதல்ல அவரோட டோசேஜ் தெரிஞ்சிக்கனும்"என்றான்.நித்யா எதையோ யோசித்து முடிவெடுத்தவளாக

"சரி சந்துரு நீங்க ரெண்டு பேரும் போய் உங்க கல்யாண வேலைகள பாருங்க.இதை நான் இனி ஹேண்டில் பண்ணிக்குறேன்.ஆனா தயவு செஞ்சி யாரிடமும் இதைப்பத்தி பேச வேணாம் ப்ளீஸ்.எனக்கு ஏதும் உதவி தேவைன்னா உங்க கிட்ட கேட்கிறேன்"என்று கூறியவளை இருவரும் எதுவுமே பேசாமல் நித்யாவை தனிமையில் விட்டு சென்றனர்.

அவர்கள் இருவரும் சென்றதும் நித்யாவுக்கு ஏன் என்று தெரியாமலேயே அழுகை வந்தது.நேரம் கடந்தது கூட தெரியாமல் அழுதவள் திடீரென்று எழுந்து தங்களின் அறைக்குள் சென்றவள் கோபத்துடன் வருணின் கப்போர்ட்டை திறந்து ,இருக்கும் எல்லாவற்றையும் கீழே போட்டால்.அப்போதுதான் அவளுக்கு ஒன்று ஞாபகம் வந்தது ,சில நேரங்களில் வருண் தனியாக இருக்கும் போது ஒரு நோட்புக்கை வைத்துக்கொண்டு கிறுக்கிக் கொண்டிருப்பதை.அந்த நோட்புக் கிடைத்தால் ஏதாவது ஒன்று தெரியும் என்று தேடியவள் அதை கண்டு எடுத்த பொழுது அவளது போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.வருண்தான் தான் வர லேட் ஆகும் என்றும் அவளை சாப்பிடுமாறும் மெசேஜ் செய்திருந்தான்.அதுவும் நல்லதுதான் என நினைத்தவள் அந்த நோட்புக்கை திறந்தாள்...

முதல் பக்கமே LKG பசங்க ஓவியம் ஒன்னு வரைந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு பெண்ணின் ஓவியம் வரைந்து இருந்தது.அதன் கீழே "என் இதய ஓசை சையனாவுக்காக" என்று எழுதி அவனின் கை எழுத்தை இட்டிருந்தான்...

அந்த நோட்புக் 2005 இல் இருந்து எழுதப்பட்டு இருந்தது .சில வருடங்களில் ஒரு 3 அல்லது 4 பக்கமும் சில வருடங்களில் அதிகமாகவும் இருந்தது.எல்லாமே அவன் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை மட்டும் எழுதி இருந்தான்.இனி அவனின் குறிப்பு புத்தகத்தில் இருந்து......

டிசம்பர் 26-2004

சுனாமி..எங்கள் எல்லோரின் வாழ்க்கையையும் புரட்டி போட்ட நாள். கடலுக்கு தந்தையுடன் மீன்பிடிக்க சென்ற என் தோழன் எங்கே என்று தெரியவில்லை...

இந்த நாள்தான் நான் நாட்குறிப்பு எழுத காரணமானது..

இவை எல்லாம் தனக்கு தேவை இல்லை என நினைத்த நித்யா பக்கங்களை புரட்ட வந்து நின்றதோ 2010இல்...

இன்றைக்கு மேட்சில் நான் 50 ரன் அடிச்சா கண்டிப்பா எனக்கு தமிழ்நாட்டு ஸ்டேட் டீம்ல இடம் கிடைச்சிடும் .அப்படியே கொஞ்சம் நல்லா ஆடினா IPL ல் கு போயிடலாம்...

அடுத்த பக்கத்தில்

ச்சே அடியே நீ எங்கடி இருந்த இவ்லோ நாளா?காதல்னாலே ரொம்ப கலாய்ப்பேன்.அதுவும் கண்டதும் காதல்னா.சொல்லவே தேவை இல்ல.ஆனா நானே கண்டதும் காதல்ல விழுவேன்னு நினைக்கல்லயே சையனா...

எவ்வளவு அழகான பெயர்.நிலவு போன்றவள்.உன் நிலவு போன்ற முகத்தை கண்டுதாண்டி இன்னைக்கு முதல் பால்ல அவுட் ஆனேன்.எல்லோருக்குமே தெரியும் அந்த பால் நான் எப்பவுமே சிக்சர் அடிப்பேன்னு.ஆனா இன்னைக்கு எப்படி அவுட் ஆனேன்னு நினைக்குறியா?உன்ன கண்டதும் எனக்கு வேற எதுவுமே தோனல.உன்ன மிஸ் பண்ணிட கூடாதுன்னு அவுட் ஆகி பெவிலியன் வந்துட்டேன் சையனா.......

இதை படித்தவளுக்கு சிரிப்பு வர 'ஹ்ம்ம் சையனா ..நல்ல பேருதான்.ரொம்ப அழகா இருப்பா போல..பையன் தன்னோட கிரிக்கட்டையே மறந்துட்டு அவள பார்க்க போய் இருக்கான்னா ஆளு சூப்பராதான் இருப்பா போல..ஆனா இந்த பசங்களுக்கு எப்படித்தான் அழகான பொண்ணுங்கள பார்த்ததும் காதல் வருதோ தெரியலப்பா'என்று மனதுக்குள் நினைத்தவள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள்...

சையனா ,இனிமே நான் உன்கூட பேச போறது இந்த நோட்புக்லதான்.ஏண்டி கடங்காரி,என்னடா இவன் கடங்காரினு சொல்ரானேன்னு பார்க்குறியா.என் இதயத்த கடன் வாங்கிட்டு போன நீ இன்னும் திருப்பி தரல்லயே.என் செல்ல மங்கி...

சையனா காலேஜ்ல நாந்தான் டாப்பர்.எனக்கு மைக்ரோசாப்ட்ல ஜாப் கிடைச்சிருக்கு.ஆனா நான் போகல்லடி .நான் போனா உன்ன பார்க்க முடியாதே..

அதன் பின் ஒன்றுமே எழுதாமல் இருந்தது....2015ல் மறுபடி எழுதப்பட்டிருந்தது..

நான் என்ன பாவம் பண்ணேன் சையனா..வாழ்க்கைல எல்லாமே என் இஷ்டபடி பண்ணேனே.நான் ஒன்னும் நல்லவன்லாம் கிடையாது..என் லைப்ல நிறைய க்ரஷ் இருந்திருக்கு.ஆனா நான் காதலிச்சது உன்ன மட்டும்தான்.ஆனா என் காதல உன்கிட்ட சொல்லாமலே அழியப்போகுதுன்னு நினைக்கிறப்போ மனசு வலிக்குதுடி..

உன்ன நினைக்கவும் முடியாம மறக்கவும் முடியாம நான் படுற அவஸ்த்தை எனக்கு மட்டும்தான்டி தெரியும்.உன்ன என்னோட மகாராணியா வெச்சி பார்த்துக்கணும்னு நினைச்சேன்.ஆனா விதி வேற மாதிரி பண்ணிடிச்சி.நான் போறேன் சையனா.இனிமே உன்ன பார்க்க நான் வரமாட்டேன்.நான் எங்க இருந்தாலும் என் மனசுல நீ மட்டும்தான் இருப்ப.என் இதயத்துல சிம்மாசனம் போட்டு நீ உட்கார்ந்துட்டேன்னு நான் சொல்லமாட்டேன்..ஏன்னா என் இதயமே நீ தான்.நீ இல்லாத இந்த பூமில எனக்கு வாழவே இஷ்டமில்லடி.இருந்தாலும் உனக்கு வரப்போறபவன் கூடிய சீக்கிரத்துல உன்ன விட்டு போயிடனும் .அந்த நேரத்துல உனக்கு ஆறுதலா நான் இருந்து உன்ன கண் இமைக்குல வெச்சி பார்த்துக்கனும்..ஆனா இது எல்லாம் நடந்தா உன் மனசு வருத்தப்படும்னு தெரியும்.உன் மனசு வருத்தப்பட்டாலும் பரவாயில்லை.உன் மனசுல இருக்குற காயங்களுக்கு மருந்தா நான் இருந்து அத சுகமாக்கிடுவேன்.

என்ன பார்த்த சுய நலவாதியா தெரியுதா?நானும் சாதாரன ஆம்பளதான்.அழகான பொண்ணான உன்ன பார்த்தவுடனே காதலிச்சேன்..நீ எனக்கு இல்லைன்னு தெரிஞ்ச பிறகு எப்படி சரி உன்ன அடையனும் என்று நினைக்குற சராசரி சுயநலம் பிடிச்ச ஆம்பளதான்..

கொஞ்ச நேரம் அந்த புத்தகத்தை மூடியவள் கண்மூடி தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றால்.

'வருண் எவ்வளவு அழகா அந்த பொண்ண காதலிச்சிருக்காருரு..அந்த பொண்ணுக்கு கொடுத்து வைக்கல.இருந்தாலும் வருண் நீ கேடிடா..அதுவும் அந்த பொண்ண கட்டிக்கப்போறவன் அவள விட்டு போகனும்னு ,அதுக்கு அப்புறமா அந்த இடத்துக்கு நீ வரணும்னு ப்ளான் பண்ண பாரு.உன்ன எதால அடிக்கிறது..'என்று சிரித்தவள் சரி இனி வருணை எப்படி இந்த கெட்ட பழக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வரலாம் என யோசிக்கலானாள்..

--------
short story.. ஆனா ரொம்ப அழகா இருக்கு.indumathib உண்டை ஆண் சிசு வதை..கண்டிப்பாக படியுங்கள். மிகவும் அழகாக உள்ளது.. ஒரு அத்தியாயம்தான்.
https://my.w.tt/l2c59cMcHM

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro