தீண்டல் 32

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng




நித்யா அறைந்ததும் என்ன நடக்கின்றது என்று புரியாமல் வருண் நிட்க அப்போதுதான் அவன் செய்த தவறு புரிய

"ஓஹ் ஷிட்"என்று தன் கையை பக்கத்தில் இருந்த டேபிளில் அடித்தவன் நித்யாவை பாவமாக ஒரு பார்வை பார்க்க அவளோ என்னவென்றே சொல்ல முடியாத மனநிலையில் உடனே அவர்களின் அறைக்குள் ஓடினால்.தான் செய்த தவறை உணர்ந்தவன் விருட்டென அவர்களின் அறைக்குள் சென்று கையில் தனது ஆடையையும் ,அவனது கப்போர்ட்டை கலைத்து அதில் இருந்த சிறிய பேக்கையும் எடுத்தவன் நித்யாவின் முகத்தை பார்க்க முடியாமல் தன் பெற்றோரின் அறைக்குள் தஞ்சமானான்.

இங்கு நித்யாவின் மனநிலையோ காற்றில் ஆடும் கார்குழல் போல அங்குமிங்கும் அமைதி இன்றி ஆடியது.அவள் மனமோ வருண் மீது கோபம் கொள்ளவில்லை என்றாலும் அவன் ஏன் இப்படி தனது சேலையை இழுத்தான்,அதுவும் தன்னை அவன் செல்லமாக "டி" போட்டு தன்னை முதன் முதலாக நக்கல் செய்து பேசியதையும் எண்ணியவளுக்கு எதுவுமே புரியவில்லை.

இருந்தாலும் அந்த நேரத்தில் என்ன செய்வது என்று புரியாமல் வருணை அறைந்தது லேசாக வருத்தத்தை தந்தாலும் அவன் எப்படி என் சேலையை இழுத்து என்னை அப்படி நிட்கவைக்க முடியும் என்று மனதுக்குள் எண்ணியவளை அவளது மனச்சாட்சி 'ஏண்டி அவன் உன் புருசன் தானே..சாரிய மட்டும் உருவினான்னு சந்தோசப்படுவியா' என்று கலாய்க்க தன் மனசாட்சியை கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக இருக்கும்படி கூறினால். காலையில் தன் தாய்வீட்டிற்கு சென்றவள் அவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் சென்றதால் அமிர்தமும் வாசுகியும் தங்கள் தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தது அவளுக்கு அவர்களின் வீட்டிற்கு சென்ற பின்பே தெரிந்தது.

அறையை விட்டு வெளியில் வந்தவள் நேரத்தை பார்க்க இரவு 8 மணி என்று காட்டியது.காலையில் இருந்து எதுவும் பெரிதாக சாப்பிடாததால் அவளுக்கு பசி வயிற்றைக்கிள்ளியது.

வெளியில் வந்து வருணை தேடியவள் அவன் இன்னும் தன் தாய் தந்தையரின் அறையை விட்டு வெளிவராததால் பசியில் ஏதாவது செய்து சாப்பிடலாம் என கிட்சனுக்குள் சென்றாள். வருண் செய்திருந்த ஏதோ பெயர் தெரியாத டிஷ் கண்ணில பட அதை எடுத்து உண்டால்.நித்யாவுக்கோ மிகவும் ஆச்சரியமாக இருந்தது ,வருண் இவ்வளவு அருமையாக சமைத்திருந்தது. பசி அகோரத்தில் வைத்திருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டவள் கடைசியில்தான் பார்த்தால் வருணுக்கு எதுவுமே இல்லை என்று.சரி முதலில் அவன் அறையை விட்டு வெளியில் வரட்டும் என்று காத்திருந்தவளுக்கு 10 மணி ஆகியும் அவன் வராததால் மெதுவாக அவன் இருந்த அறைக்கதவை தட்டி

"வருண் இருக்கீங்களா.சாப்பிடாம தூங்காதீங்க..சாரி நான் ஏதோ கோவத்துல அடிச்சிட்டேன்"என்று கூறியவளை அவளது புத்தி 'ஏண்டி குரங்கு.உன் சேலைய பிடிச்சு இழுத்தது அவன்.நீ எதுக்கு சாரி கேட்குற.அவன் ஏதாச்சும் ஒரு வார்த்தை சொன்னானா?' என்று எரியிர நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய தன் புத்தியின் பக்கம் சாய்ந்து நித்யா, அவர்களின் அறைக்குள் சென்றால்.

காலையில் எழுந்து கிட்சன் வந்தவள் அங்கு எல்லாமே தாறுமாறாக இருப்பதை பார்த்து 'பய புள்ள இரவு நமக்கு தெரியாம வந்து உருட்டி பிரட்டி இருக்கான்.வரட்டும் இன்னைக்கு அவனுக்கு ' என்று மனதுக்குள் அர்ச்சித்துக்கொண்டவள் அவனுக்கும் சேர்த்து சமையல் செய்து காத்திருந்தால்.ஆனால் நள்ளிரவு கடந்தும் அவன் வரவில்லை.

நித்யாவுக்கு மிகவும் பயமாக போய்விட்டது.தன்னால்தான் வருண் இப்படி ஆனானோ என்று கவலைப்பட்டது மட்டுமில்லாமல் யாரிடமும் இது பற்றி பேசவும் முடியவில்லை.கணவன் தன் சேலையை பிடித்து இழுத்ததற்கு தான் அவனை அறைந்ததாக கூறினால் எல்லோரும் இவளைத்தான் திட்டுவார்கள் என்று தெரியும்.இரவு ஒரு மணியாகும் போது வந்த வருண் ,சோபாவில் உட்கார்ந்து தன் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்த டீவியை கவனிக்காமல் ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்த நித்யாவின் முகத்தை பார்க்க தைரியமில்லாமல் அவனின் பெற்றோரின் அறைக்குள் செல்ல முற்பட்டவனை நித்யா

"வருண் ப்ளீஸ்,இப்படி பண்ணாதீங்க.நான் நேத்தைக்கு நடந்த எதையுமே பேசல்ல.வீட்டுல நீங்களும் நானும் மட்டும்தான் இருக்கோம்.இரண்டு பேரும் பேசிக்கலன்னாக்கூட பரவாயில்லை .போங்க போய் நம்ம ரூம்ல தூங்குங்க.ஒருவேலை நாளைக்கு அத்தையும் மாமாவும் திடீரென வந்துட்டாங்கன்னா அப்போ நீங்க அவங்க ரூம்ல தூங்கறத பார்த்து அவங்க கவலைப்படவேண்டாம்"என்றவளிடம்

"சரி"என்று ஒரு வார்த்தை மட்டும் கூறி அவர்களின் அறைக்குள் சென்றான்.கட்டிலில் ஆளுக்கு ஒரு பக்கம் தூங்க நித்யாவுக்கு தூங்கி 2வது நிமிடத்திலேயே நித்ராதேவி அவளை ஆட்கொண்டால்.இடையில் ஏதோ சத்தம் கேட்டு முழிப்பு வர அப்பொழுது பக்கத்தில் வருண் இல்லாததை கவணித்தவள் 'இந்த இரவுல இவன் எங்க போனான்.த்ரில்லர் மூவிய விட இவனோட விசயம் பெரிய சீக்ரட்டா இருக்கே 'என்று நினைத்துக்கொண்டு வெளியில் வர டைனிங்க் டேபிலில் உட்கார்ந்து கொண்டு அவன் கையில் எதையோ வைத்து மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தவனை

'சரி பய புள்ள இங்கதான் இருக்கான்.காலைல அவன்கிட்ட சுமூகமா பேசி ஏன் அப்படி நடந்துகிட்டான்னு கேட்கனும்' என்று மனதுக்குள் நினைத்தவள் அப்படியே தூங்கி போனால்.

காலையில் எழுந்த போது வருண் இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தவள் சத்தமிடாமல் கப்போர்ட்டை திறந்து அவளது ஆடைகளை எடுத்து குளித்து ,காலை உணவை செய்து முடித்தவள் வருணை எழுப்பலாம் என செல்ல அவனோ குளித்துமுடித்து சத்தமில்லாமல் வீட்டை விட்டு சென்றிருந்தான்.

'ம்ம்ச்ச்ச்.இவன் ஒருத்தன்,சொல்லாம கொல்லாம ஓடிடுறான். இருடா மவனே இன்னைக்கு உனக்கு இருக்கு ' என்று மனதுக்குள் நினைத்தாள்.சிறிது நேரத்தில் காலிங்க் பெல்லை யாரோ அடிக்க யாராக இருக்கும் என்று சென்று பார்த்தவள்

"ஹேய் அனு,,சந்துரு .வட் அ சர்ப்ரைஸ்.சொல்லாம வந்திருக்கீங்க"என்று கூற அனுவோ

"ஏண்டி வீட்டுக்கு வந்தவங்கள உள்ள கூப்பிட மாட்டியா?"என்று கேட்க

"சாரி அனு,,உன்ன கண்ட சந்தோசத்துல எல்லாத்தையும் மறந்துட்டேன்.உள்ள வாங்க"என்று இருவரையும் அழைத்தவள் இருக்கையில் உட்காருமாறு கூறிவிட்டு காலை உணவுக்காக தான் செய்திருந்தவற்றை உடனே டைனிங்க் டேபிலில் வைத்து

"நீங்க ரெண்டு பேரும் முதல்ல சாப்பிட்டு அதுக்கு அப்புறமா என்ன வேணா பேசலாம்"என்றவளை அனு

"இல்லடி.அதுக்கெல்லாம் நேரமில்ல,எங்களுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சா,அதான் எல்லோருக்கும் பத்திரிகை கொடுக்கலாம்னு வந்தோம்"என்று கூற நித்யா

"அடி சக்கை,அப்போ சாதனா வெடிங்க் முடிஞ்சதா?"என்று கேட்டவளை

"இல்லப்பா 2 கல்யாணமும் ஒண்ணாதான் நடக்க போகுது" என்றாள்.சந்துரு உடனே

"நித்யா எங்களுக்கு சாப்பிட நேரமில்ல.நாங்க இன்னும் நிறைய இடத்துக்கு போகனும்.சோ கண்டிப்பா கல்யானத்துக்கு பேமிலியோட வரணும்.ஆமா உன் ஹஸ்பன்ட் இல்ல?"என்றவனை முறைத்தவள்

"ஹஸ்பண்ட் வெளில போய் இருக்காருப்பா,அப்புறம் நாங்க எல்லோரும் கல்யாணதுக்கு வரணும்னா முதல்ல வெச்சிருக்குற ப்ரேக்பாஸ்ட்ட சாப்பிட்டு கிளம்புங்க ஓக்கே.."என்றவளை எதிர்த்து பேசமுடியாமல் டைனிங்க் டேபிளில் உட்காரவைக்க சந்துரு இருந்த கதிரைக்குள் கீழே ஏதோ இன்ஜெக்சனும் ஒரு சிறிய பாட்டிலும் இருப்பதை பார்த்தவன் அதை கையில் எடுத்து பார்க்க நித்யா

"நேத்தைக்கு ஹஸ்பண்ட் ஏதோ சுகமில்லைனு நைட் ஊசி போட்டுகிட்டு இருந்தாருப்பா.கொடுங்க அத"என்று வாங்க எத்தனித்தவளை சந்துரு

"நித்யா ,அனுதான் உனக்கு ப்ரெண்ட்.ஆனா நான் உன்ன என் சொந்த தங்கச்சியாதான் நினைக்குறேன்.நீ இப்போ ஒரு உண்மைய சொல்லு.உன் மெரேஜ் லைப் சந்தோசமா போகுதா?"என்று கேட்டவனை அனு

"டேய் என்னடா பேசுற.அவ சந்தோசமாத்தான் இருக்குறான்னு அவ முகத்தை பார்த்தாலே தெரியல "என்று அனு கூற

"ஏய் அவசரக்குடுக்கை.கொஞ்சம் உன் திருவாய மூடு.நித்யா பதில் சொல்லட்டும்.சொல்லு நித்யா ,நீ உன் மெரேஜ் லைப் சந்தோசமா வாழ்றியா" என்று கேட்டவனை நித்யா இதுவரை அடக்கி வைத்திருந்த மனப்பாரம அனைத்தையும் தான் அருணை காதலித்ததிலிருந்து ,கரணுடனான திருமணம் தடைப்பட்டுன், வருணை திருமணம் செய்தது வரை அனைத்தையும் அவர்களிடம் கொட்டினால்.

சந்துருவுக்கு கோவம் வந்து டேபிளில் தன்கையை ஓங்கி அடித்தவன்

"இந்த குடும்பம் மொத்தமா சேர்ந்து உன்ன நல்லா ஏமாத்திருக்காங்க நித்யா"என்றவனை

"Mind your tounge சந்துரு.என்ன பேசுரீங்க.என்ன ரொம்ப சந்தோசமாதான் வெச்சிருக்காங்க"என்றவளை

"போதும் நித்யா நிறுத்து.இது என்ன ஊசி தெரியுமா?"என்றவனை நித்யாவும் அனுவும் ஒன்று சேர்ந்து

"என்ன ஊசி" என்று நடுங்கும் குரலில் கேட்டவர்களுக்கு அவன் அளித்த பதிலால் நித்யாவுக்கு உலகமே இருட்டானது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro